வெண்பன்றி வளர்ப்பில் சிறந்த லாபம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் வெண்பன்றி வளர்ப்பினை செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வெண்பன்றி வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

வெண்பன்றி வளர்ப்பின் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் வெண்பன்றி வளர்ப்பினை செய்து அதன்மூலம் நல்ல லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் எனவும் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்புதான் இவர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பன்றி வளர்ப்பை செய்து வருவதாகவும், இவருக்கு முன்பு இவருடைய தந்தை மற்றும் இவருடைய சகோதரர் இந்த வெண்பன்றி பண்ணையை வைத்து நடத்தி வந்ததாக கூறுகிறார்.

இவருடைய தந்தை இந்த வெண்பன்றி வளர்ப்பை கடந்த பத்து வருடங்களுக்கு முன்பே தொடங்கியதாகவும் இவருக்கும் இந்த வெண் பன்றி வளர்ப்பின் மீது ஆர்வம் இருந்து வந்ததன் காரணமாகவும் இவர் வெண்பன்றி வளர்ப்பை செய்ய தொடங்கியதாக கூறுகிறார்.

இப்பொழுது இவர் இந்த வெண்பன்றி வளர்ப்பு பற்றி நன்கு அறிந்து கொண்டதாகவும், பண்ணையை சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.

White pig rearing system

வெண்பன்றி வளர்ப்பினை இவர் மிக சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், பன்றிகளை மிகுந்த பராமரிப்புடனும் நல்ல சத்து நிறைந்த உணவுகளை அளித்தும் வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் பன்றிகள் நல்ல முறையில் காற்றோட்டமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் வளர்வதற்கு பெரிய அளவிலான ஒரு கொட்டகை அமைத்து அந்தக் கொட்டகையில் பன்றிகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

இப்பொழுது இவருடைய பன்றி பண்ணையில் 300க்கும் மேற்பட்ட வெண்பன்றிகள் இருப்பதாகவும், இந்த அனைத்து பன்றிகளையும் இவர் மிகுந்த பராமரிப்புடன் பராமரித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் பல பன்றிப் பண்ணைகளில் துர்நாற்றம் அதிக அளவில் வீசும் ஆனால் இவருடைய பன்றி பண்ணையில் அந்த வித துர்நாற்றம் எதுவும் வீசுவதில்லை எனவும், பண்ணையினை மிகுந்த சுத்தமாக வைத்து பராமரித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் வளர்க்கும் வெண்பன்றிகள் ஹைபிரிட் வகை வெண்பன்றி எனவும், நாட்டுப் பன்றிகளை இவர் இவருடைய பண்ணையில் வளர்ப்பதில்லை எனவும் கூறுகிறார்.

ஏனெனில் நாட்டுப்பன்றிகளை ஒரு கொட்டகையில் அடைத்து வைத்து வளர்க்க முடியாது எனவும், ஆனால் ஹைபிரிட் வகை பன்றிகளை கொட்டகையில் அடைத்து வைத்து வளர்க்கும் போது அது சிறப்பான முறையில் வளரும் என கூறுகிறார்.

மேலும் நாட்டு பன்றிகளை நாம் கட்டி வைத்து வளர்க்கும் போது அவை நம்மை தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாகவும் மற்ற கொட்டகையில் இருந்து வெளியில் தப்பி செல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார்.

ஆனால் ஹைபிரிட் வகை பன்றிகள் இவற்றில் எதையும் செய்வதில்லை எனவும் இதன் காரணமாகவே இவர் நாட்டு பன்றிகளை வளர்க்காமல் ஹைபிரிட் வகை பன்றிகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

பராமரிப்பு முறை மற்றும் தீவனம்

பன்றிகளை வளர்த்தால் மட்டும் போதுமானதாக இருக்காது எனவும் அந்த பன்றிகளுக்கு நோய்கள் எதுவும் தாக்காமல் அதனை கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார்.

ஏனெனில் பன்றிகளுக்கு நோய் வராமல் பராமரிப்புடன் வளர்த்தால் மட்டுமே பன்றிகள் நல்ல முறையில் வளர்ந்து அதிக அளவில் லாபத்தை அளிக்கும் என கூறுகிறார்.

எனவே பன்றிகள் இருக்கும் கொட்டகையை வாரத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும் எனவும், பன்றிகளையும் வாரத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்.

பன்றிகளை இவர் வாரத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்தும் மற்றும் கொட்டகையை வாரத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்து வருவதாலும் இவருடைய பன்றிகளுக்கு நோய்கள் அதிக அளவில் தாக்குவதில்லை எனவும் கூறுகிறார்.

எனவே பன்றிகளை இந்த முறையில் பராமரித்து வளர்க்க வேண்டும் என கூறுகிறார்.

மற்றும் பன்றிகளுக்கு இவர் பசுந்தீவனங்களை அதிக அளவில் தீவனமாக அளித்து வருவதாகவும், பசுந்தீவனங்கள் உடன் சேர்த்து இவர் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை தீவனமாக அளித்து வருவதாக கூறுகிறார்.

பசுந்தீவனங்களை இவர் பன்றிகளுக்கு அதிகளவு தீவனமாக அளிப்பதினால் பன்றிகளில் இருந்து துர்நாற்றம் அதிகளவில் வருவதில்லை எனவும், பிற பன்றிப் பண்ணைகளில் பசுந்தீவனங்களை பன்றிகளுக்கு அளிக்காமல் இருப்பதன் காரணமாகவே பன்றிகளில் துர்நாற்றம் வருவதாக கூறுகிறார்.

எனவே பன்றிகளுக்கு அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் கொடுக்காமல் பசுந்தீவனங்களை அதிகமாக கொடுத்து வளர்க்க வேண்டும் எனக் கூறுகிறார்.

சூப்பர் நேப்பியர் மற்றும் பிற பசுந்தீவனங்களை மட்டுமே இவர் அதிகளவில் பன்றிகளுக்கு தீவனமாக அளித்து வருவதாகவும், மற்றும் அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகளை இவர் குறைந்த அளவிலேயே பன்றிகளுக்கு தீவனமாக அளித்து வருவதாக கூறுகிறார்.

இவ்வாறு இவர் அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் பன்றிகளுக்கும் உணவாக அளிக்காமல் பசுந்தீவனங்களை அதிக அளவில் தீவனமாக அளித்து வருவதால் பன்றிகள் விரைவில் வளர்ந்து நல்ல வருமானத்தை அளித்து வருவதாக கூறுகிறார்.

Benefits of pork

பொதுவாக பல மக்கள் பன்றி இறைச்சியை அசுத்தமாக எண்ணி அதனை உண்ண மாட்டார்கள் எனவும் ஆனால் இந்த பன்றி இறைச்சியில் பலவித நன்மைகள் இருப்பதாக இவர் கூறுகிறார்.

ஆனால் இன்றுள்ள நிலையில் அதிக மக்கள் பன்றி இறைச்சியை விரும்பி உண்பதாகவும், பன்றி இறைச்சியை நாம் உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு பலவித நன்மைகள் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

பன்றி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் இருப்பதாகவும் இது உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கும் எனவும், மற்றும் பன்றி இறைச்சியில் கொழுப்பு குறைவாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

கொழுப்பு பன்றி இறைச்சியில் குறைவாக இருப்பதினால் இதனை நாம் உண்ணும் போது நமது உடல் எடை அதிகரிக்காது எனவும், இவ்வாறு பல நன்மைகள் இந்த பன்றி இறைச்சியில் இருப்பதாக கூறுகிறார்.

அதிக அளவு மக்கள் இன்றுள்ள நிலையில் கோழி மற்றும் ஆடு இறைச்சியை விரும்பி உண்பதை விட பன்றி இறைச்சியை அதிகமாக விரும்பி உண்பதாகவும் கூறுகிறார்.

மேலும் பன்றி இறைச்சியை உண்பதன் மூலம் மூலநோய் சரியாகிவிடும் எனவும் மற்றும் இதயத்திற்கு நன்மையை அளிக்கும் எனவும், ஞாபக சக்தியை அதிகரிக்கும் எனவும் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

பன்றி இறைச்சியை இவர் கேரளாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு விற்பனை செய்து வருவதாகவும், கேரளாவில் இருந்து அதிக வாடிக்கையாளர் இவருடைய பண்ணைக்கு வந்து பன்றிகளை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

மேலும் இவரிடம் பன்றி இறைச்சியை கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கும் இறைச்சிகளை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

பன்றிகளை இவர் மிகுந்த பராமரிப்புடன் பராமரித்து வளர்ப்பதாலும் பன்றி இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதாலும் அதிகளவு வாடிக்கையாளர் இவரிடம் பன்றி இறைச்சியை வாங்கி செல்வதாகவும் இதன் மூலம் இவர் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய பன்றி பண்ணையை சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:சிறப்பான வண்ணமீன்கள் வளர்ப்பு.

Leave a Reply