புழுக்கள் உற்பத்தியில் சிறந்த லாபம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் கோழிகளுக்கு தீவனமாக பயன்படும் புழுக்களை உற்பத்தி செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய புழுக்கள் உற்பத்தி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

Initiation of black soldier fly worm production

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் கோழிகளுக்குத் தீவனமாகப் பயன்படும் புழுக்களை உற்பத்தி செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவர் இவரது பட்டப் படிப்பினை முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதில் இவருக்கு ஆர்வம் இல்லாத காரணத்தால் இவருடைய சொந்த ஊருக்கே திரும்பி வந்து விட்டதாக கூறுகிறார்.

இவ்வாறு சொந்த ஊருக்கு வந்த பிறகு ஊரிலேயே சுயமாக ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் கோழிப்பண்ணை ஒன்றை தொடங்கியதாகவும் அந்த பண்ணையில் உள்ள கோழிகளுக்கு சத்து நிறைந்த தீவனத்தை அளிக்க வேண்டும் என்பதற்காக இவர் புழு உற்பத்தியை தொடங்கியதாக கூறுகிறார்.

புழு உற்பத்தியை தொடங்கி அதனை இவருடைய பண்ணையில் உள்ள கோழிகளுக்கும் தீவனமாக அளித்து வருவதாகவும் மற்றும் இவரிடம் புழுக்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கும் இவர் புழுக்களை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

புழுக்கள் உற்பத்தி செய்யும் முறை

புழுக்கள் உற்பத்தியை இவர் மிகவும் சிறப்பான முறையில் தரமான உற்பத்தி செய்து வருவதாகவும், இந்த லார்வா புழுக்கள் உற்பத்தியை இவர் கடந்த 8 வருடங்களாக செய்து வருவதாக கூறுகிறார்.

முதலில் இவர் வீட்டு ஈக்கள் மற்றும் மாடுகளில் இருக்கும் ஈக்களின் மூலம் புழுக்களை உற்பத்தி செய்யலாம் என்று அதனை செய்ததாகவும் ஆனால் அதில் சரியாக புழுக்கள் கிடைக்கவில்லை எனக் கூறுகிறார்.

இதனால் விரைவில் எதிலிருந்து புழுக்கள் கிடைக்கும் என்பதை அறிந்த பிறகு black soldier fly புழுக்களை உற்பத்தி செய்ய தொடங்கியதாகவும், இந்தப் புழுக்கள் விரைவில் வளர்ந்து, நல்ல புரதச்சத்து நிறைந்த உணவுகளாக கிடைத்ததாகக் கூறுகிறார்.

இந்த புழுக்கள் முற்றிலும் மக்கும் குப்பைகளை உண்டு வளரும் எனவும், இந்த புழுக்களில் புரதச்சத்து அதிகமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

மக்கும் குப்பைகளிலிருந்து இந்த லார்வா புழுக்கள் உற்பத்தி ஆகும் எனவும், அனைத்து வகை மக்கும் குப்பைகளிலிருந்து இவர் இந்த லார்வா புழுக்களை உற்பத்தி செய்து வருவதாக கூறுகிறார்.

ஒரு பெரிய தொட்டியில் மக்கும் குப்பைகளை கொட்டி வைத்து அதனை சில நாட்களுக்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் எனவும், இவ்வாறு செய்யும் போது தானாகவே இந்த லார்வா புழுக்கள் உற்பத்தி ஆகிவிடும் என கூறுகிறார்.

இவ்வாறு உற்பத்தியான புழுக்களை இவர் இவருடைய பண்ணையில் உள்ள கோழிகளுக்கு தீவனமாக அளித்து வருவதாகவும், இந்த வகை லார்வா புழுக்களை கோழிகள் அதிகமாக விரும்பி உண்ணும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த லார்வா புழுக்களை இவர் விற்பனை செய்து வருவதாகவும், நல்ல விலைக்கு இந்த புழுக்கள் விற்பனையாகி வருவதாகவும் கூறுகிறார்.

மற்றும் இந்த லார்வா வகைகளை உற்பத்தி செய்வது மிகவும் சுலபமான முறை எனவும் அனைவரும் இந்த லார்வா புழுக்களை சுலபமாக உற்பத்தி செய்ய முடியும் எனவும் கூறுகிறார்.

Black soldier fly worm in specializes

லார்வா புழுக்களில் பலவகை சிறப்புக்கள் இருப்பதாகவும் இந்த புழுக்களில் புரத சத்து அதிக அளவில் இருக்கும் எனவும் இதனை கோழிகள் தீவனமாக எடுத்துக் கொள்வதால் விரைவில் வளர்ந்து நல்ல லாபத்தை அளிக்கும் என கூறுகிறார்.

கம்பெனி தீவனங்களை உண்ணும் கோழி மற்றும் மீன்களை விட இந்த லார்வா புழுக்களை தீவனமாக உண்ணும் கோழி மற்றும் மீன்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வளரும் எனவும் கூறுகிறார்.

இன்றுள்ள நிலையில் மனிதர்களும் இந்த லார்வா புழுக்களை உணவாக மாற்றி அதனை உண்டு வருவதாகவும், அந்த அளவிற்கு இந்த புழுக்களில் சத்துக்கள் இருப்பதாக கூறுகிறார்.

மேலும் இந்த லார்வா புழுக்களை இன்றுள்ள மக்களில் பலர் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாகவும், இந்த புழுக்கள் அதிக அளவில் விற்பனையாகி வருவதாகவும், மக்கள் அதிகமாக இந்த புழுக்களை வாங்குவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த புழுக்களை வைத்து மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்யலாம் எனவும், இந்தப் புழுக்களை தீவனத்துடன் கலந்து விற்பனை செய்யலாம் எனவும் மற்றும் இதனை சாகடித்து தூளாக செய்து விற்பனை செய்யலாம் எனவும் கூறுகிறார்.

மீன்களுக்கு இந்த புழுக்களை உயிருடன் தீவனமாக அளிக்கலாம் எனவும் மற்றும் எந்த அளவிற்கு கலோரி, கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்து நிறைந்த குப்பைகளை போட்டு புழுக்களை உற்பத்தி செய்கிறோமோ அந்த அளவிற்கு புழுக்கள் சிறப்பாகவும் புரதச்சத்து நிறைந்து இருக்கும் என கூறுகிறார்.

பன்றியின் கொழுப்பை அதிகமாக இந்த புழுக்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தினால் அதிலிருந்து புரத சத்து அதிக அளவு கிடைக்கும் எனவும் மற்றும் காய்கறிகளில் இருந்தும் அதிகமான புரதச்சத்து கிடைக்கும் என கூறுகிறார்.

சீனாவில் அதிகமாக பன்றி கொழுப்பின் மூலம் இந்த லார்வா புழுக்களை உற்பத்தி செய்து வருவதாகவும், புரத சத்து அதிகமாக உள்ள கழிவுகளை பயன்படுத்தி இந்த புழுக்களை உற்பத்தி செய்தால் அதை விட அதிக புரதச்சத்துடன் இந்த புழுக்கள் உற்பத்தி ஆகும் என கூறுகிறார்.

லார்வா புழுக்களின் தன்மைகள்

லார்வா புழுக்கள் மக்கும் குப்பைகளை விரைவில் உண்டு உருவாகும் எனவும், இந்தப் புழுக்கள் புரத சத்து அதிகமாக இருக்கும் புழுக்களாக இருக்கும் என கூறுகிறார்.

இந்த வகை புழுக்கள் கருப்பு நிறத்தில் இருந்து வெள்ளை நிறமாக மாறும் தன்மை உடையது எனவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் இதனுடைய தன்னை மற்றும் உருவத்தின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் என கூறுகிறார்.

இந்தப் புழுக்களின் மேலே இருக்கும் கருப்புத் தோலினை பாம்பு அதனுடைய சட்டையை உரிப்பதை போன்று இந்த புழுக்களும் அதனுடைய கருப்பு தோலினை உரித்து வெள்ளைத்தோலாக மாற்றிக் கொள்ளும் எனக் கூறுகிறார்.

இந்த லார்வா புழுக்களை கோழி மற்றும் மீன்களுக்கு உணவாக அளிக்கலாம் எனவும்,இந்த புழுக்களை கோழி மற்றும் மீன்கள் உண்டால் இவை நல்ல சத்துடன் வளரும் எனவும் கூறுகிறார்.

Sales method and profit

லார்வா புழுக்களை இவர் உற்பத்தி செய்து அதனை இவருடைய பண்ணையில் உள்ள கோழி மற்றும் மீன்களுக்கு உணவாக அளித்து வருவதாகவும் மற்றும் இவரிடம் புழுக்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கும் இதனை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மிகவும் தரமான முறையில் புரத சத்து அதிகமாக இருக்கும் கழிவுகளை கொண்டு இந்த லார்வா புழுக்களை இவர் உற்பத்தி செய்வதால் அதிக வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து இந்த புழுக்களை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும் மற்றும் இவருடைய இந்த லார்வா புழுக்கள் உற்பத்தியை இவர் சிறப்பாக செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் படிக்க:சிறப்பான நெல் விவசாயம்.

Leave a Reply