காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் முதியவர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பட்டுப்புழு வளர்ப்பினை செய்து அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய பட்டுப்புழு வளர்ப்பு முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரையில் காணலாம்.
பட்டுப்புழு வளர்ப்பின் தொடக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் முதியவர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பட்டுப்புழு வளர்ப்பினை செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவருடைய குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் எனவும், சிறுவயதிலிருந்து இவர் விவசாயம் செய்வதை பார்த்து வளர்ந்து வந்ததாக கூறுகிறார்.
இவருடைய அப்பா மற்றும் தாத்தா காலத்திலிருந்தே இவருடைய குடும்பம் விவசாயத்தை செய்து வருவதால் இவரும் விவசாயத்தை செய்து வந்ததாக கூறுகிறார்.
இவ்வாறு இவர் விவசாயத்தை செய்து வந்து கொண்டிருந்த நிலையில் இவருக்கு பட்டுப்புழு வளர்ப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டதாக அதை தொடர்ந்து இவர் பட்டுப்புழு வளர்ப்பை சிறப்பான முறையில் செய்ய தொடங்கியதாக கூறுகிறார்.
இந்த பட்டுப்புழு வளர்ப்பினை இவர் கடந்த மூன்று வருடங்களாக மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவருடைய சித்தப்பா இந்த பட்டுப்புழு வளர்ப்பினை செய்து வந்ததாகவும் அதனை இவர் பார்த்த பிறகு இவருக்கும் பட்டுப்புழு வளர்ப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டதாக கூறுகிறார்.
இதன் காரணமாக இவர் பட்டுப்புழு வளர்ப்பினை தொடங்கி இப்பொழுது மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
Silkworm rearing method
பட்டுப்புழு வளர்ப்பினை இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இந்த பட்டுப்புழு வளர்ப்பில் பயன்படுத்தப்படும் அனைத்து முறைகளையும் இவர் மிக சிறப்பான முறையில் பின்பற்றி வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இந்த பட்டுப்புழு வளர்ப்பினை செய்வதற்கு அரசாங்கத்தில் இருந்து மானியம் கிடைத்து வருவதாகவும், முதலில் அரசாங்கத்தில் இருந்து 80 ஆயிரம் ரூபாய் மானியம் கிடைத்து வந்ததாகவும் இப்பொழுது ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மானியம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.
பட்டுப்புழு வளர்ப்பினை செய்வதற்கு கொட்டகையை 52 அடி நீளத்திலும், 22 அடி அகலத்தில் அமைக்கவேண்டும் எனவும் இந்த முறையில் அமைக்க வேண்டும் என்று அரசாங்கத்தில் கூறியுள்ளதாக கூறுகிறார்.
இவ்வாறு கொட்டகை அமைத்த பிறகு அரசாங்கத்திலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மானியம் அளிப்பார்கள் எனவும், இதற்கு மேல் பணம் தேவைப்படும் எனில் நம்மிடம் இருக்கும் பணத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.
பட்டுப்புழு வளர்ப்பினை செய்வதற்கு படுகைகளை 4 லிருந்து 5 அடி அகலத்தில் அமைக்க வேண்டும் எனவும் நீளம் எந்த அளவில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம் என கூறுகிறார்.
பட்டுப்புழு வளர்ப்பினை செய்வதற்கு அடுக்குகள் போன்ற அமைப்பில் படுக்கைகளை அமைக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு படுக்கைகளுக்கு இடையிலும் இரண்டு அடி இடைவெளிவிட்டு அமைக்க வேண்டும் என கூறுகிறார்.
படுக்கைகளை அடுக்குகளாக அமைக்கும் போது அதனை எவ்வளவு உயரமாக வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம் எனவும் ஆனால் ஒவ்வொரு படுக்கைகளுக்கு இடையிலும் இரண்டு அடி இடைவெளி இருக்க வேண்டும் எனக் கூறுகிறார்.
ஒவ்வொரு படுக்கைகளிலும் வலைகளை இவர் விரித்து வைத்து அதன் அடியில் புழுக்களை வளர்த்து வருவதாகவும், ஏழு நாட்கள் ஆன புழுக்களை வாங்கி வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இவ்வாறு வாங்கி வந்த புழுக்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் இலைகளை இவர் உணவாக அளித்து வருவதாகவும், நான்காவது நாள் புழுக்கள் இலைகளை உண்ணாது எனவும் கூறுகிறார்.
நான்காவது நாள் காலையில் புழுக்கள் இருக்கும் படுக்கையில் சுண்ணாம்பு கரைசலை ஊற்ற வேண்டும் எனவும் இந்த சுண்ணாம்பு கரைசலை ஊற்றும்போது பழைய இலைகளில் அசுத்தமாக இருக்கும் கிருமிகளை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும் எனக் கூறுகிறார்.
தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு புழுக்களுக்கு இலைகளைத் தீவனமாக அளித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கூறுகிறார்.
கூடு கட்டும் முறை
புழுக்களை வாங்கி வந்த முதல் நாளில் இருந்து 5 நாள் வரை புழுக்கள் நன்றாக இலைகளை உண்டு வளர்ச்சி அடைந்து விடும் என கூறுகிறார்.
புழுக்களை வாங்கி வந்த முதல் நாளில் இருந்து 14-வது நாளில் புழுக்கள் கூடுகட்ட தொடங்கி விடும் எனவும், இவ்வாறு கூடு கட்ட தொடங்கியதும் அதன் நெற்றிக்கண் வலையை எடுத்து விட்டால் நன்றாக அது கூட்டினை கட்டி விடும் எனக் கூறுகிறார்.
இவ்வாறு புழுக்கள் கூடு கட்டத் தொடங்கிய ஐந்தாவது நாளில் இருந்து 7-வது நாளுக்குள் அதனை விற்பனை செய்து விட வேண்டும் எனவும் இல்லை எனில் அவற்றின் எடை குறைந்து விடும் என கூறுகிறார்.
புழுக்களின் எடை குறைந்து விட்டால் அது குறைவான விலைக்கு விற்பனையாகும் எனவும், எனவே புழுக்கள் கூடு கட்டத் தொடங்கிய ஏழாவது நாளுக்குள் அதனை விற்பனை செய்து விட வேண்டும் என கூறுகிறார்.
புழுக்கள் கூடு கட்ட தொடங்கிய 14 நாளில் புழுக்கள் பூச்சியாக மாறி வெளியே வந்து விடும் எனவும் வெளியே வந்து விட்டால் அதிலிருந்து எந்த பயனும் நமக்கு கிடைக்காது எனக் கூறுகிறார்.
எனவே கூடுகட்ட தொடங்கிய 7 வது நாளிலேயே புழுக்களை விற்பனை செய்ய தொடங்கி விட வேண்டும் எனக் கூறுகிறார்.
Fodder and maintenance method
புழுக்களுக்கு இவர் உணவு பொருளாக இலைகளை மட்டுமே அளித்து வருவதாகவும், புழுக்களை வாங்கி வந்த முதல் 5 நாட்களுக்கு இவர் இலைகளை உணவாக அளித்து வருவதாக கூறுகிறார்.
இந்த ஐந்து நாட்களும் புழுக்கள் இலைகளை நன்றாக உண்டு வளர்ந்து கூடுகட்ட தொடங்கி விடும் எனவும், இவ்வாறு கூடுகட்ட தொடங்கிய பின்பு புழுக்களுக்கு தீவனத்தை அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது எனக் கூறுகிறார்.
இலைகளை உண்டு மட்டுமே புழுக்கள் நன்றாக வளர்ச்சியடையும் என கூறுகிறார்.
இந்த பட்டுப்புழு வளர்ப்பில் அதிக அளவில் பராமரிப்பு இருக்காது எனவும், புழுக்களுக்கு இலைகளை மட்டுமே உணவாக அளித்து விட்டு, கொட்டகையை தூய்மையாக வைத்திருந்தால் போதுமானது எனக் கூறுகிறார்.
மேலும் புழுக்கள் கூடுகட்டத் தொடங்கிய 7 வது நாளில் அதனை விற்பனை செய்ய தொடங்கி விட வேண்டும் எனவும் விற்பனை செய்யாமல் வைத்திருந்தால் புழுக்கள் பூச்சியாக மாறி எந்த பயனும் இல்லாமல் போய் விடும் எனக் கூறுகிறார்.
எனவே இந்த பராமரிப்பு முறையில் மட்டும் பராமரித்து தீவனத்தை அளித்து வளர்த்து வந்தால் புழுக்கள் நன்றாக விரைவில் வளர்ந்து விடும் எனக் கூறுகிறார்.
விற்பனை முறை மற்றும் லாபம்
பட்டுப்புழு வளர்ப்பினை இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து அதனை விற்பனை செய்து வருவதாகவும், இவர் இருக்கும் இடத்திற்கே வாடிக்கையாளர்கள் வந்து புழுக்களை வாங்கிச் செல்வதாக கூறுகிறார்.
பட்டுப்புழுக்களை இவர் மிகவும் சிறப்பான முறையிலும் உணவுகளை சரியான முறையில் அளித்து பராமரித்து வருவதால் புழுக்கள் விரைவில் வளர்ந்து வருவதாகவும் இதன் மூலம் வாடிக்கையாளர் இவரிடம் வந்து அதிகமாக பட்டுப் புழுக்களை வாங்கி செல்வதாக கூறுகிறார்.
இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும் மற்றும் இவர் இவருடைய பட்டுப்புழு வளர்ப்பினை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் படிக்க:தரமான பனங்கருப்பட்டி தயாரிப்பு.
This post is very good and Useful….👍 Uploaded on many posts,🙃