சிறப்பான சின்ன வெங்காயம் சாகுபடி.

Spread the love

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

விவசாயின் வாழ்க்கை முறை

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவர் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று உள்ளதாகவும் இவருக்கு சிறு வயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்து வந்ததாகவும், இவருடைய குடும்பம் விவசாயக் குடும்பம் எனவும் கூறுகிறார்.

இவ்வாறு இவருடைய குடும்பம் விவசாயக் குடும்பம் என்பதால் இவர் சிறுவயதில் இருந்து இவருடைய தந்தை மற்றும் தாத்தா செய்யும் விவசாய முறைகளை பார்த்து வளர்ந்ததாக கூறுகிறார்.

பிறகு இவர் வளர்ந்ததும் விவசாயத்தை இவரும் செய்து இவருடைய பாரம்பரிய விவசாய முறையை பராமரித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் அனைத்து வகை தானிய வகைகள் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்து வந்ததாகவும், இப்பொழுது வெங்காயம் அதிக விலைக்கு விற்பனையாகி வருவதால் வெங்காயம் சாகுபடியை இவர் செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவருக்கு இந்த வெங்காயம் சாகுபடியில் அதிக ஆர்வம் இருப்பதாகவும், சின்ன வெங்காயம் சாகுபடியை இவர் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.

Small onion cultivation method

சின்ன வெங்காயம் சாகுபடியை இவர் மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், செயற்கை உரங்கள் எதையும் அதிக அளவில் அளிக்காமல் இயற்கை உரங்களை அதிக அளவில் அளித்து சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.

5 ஏக்கர் நிலத்தில் இவர் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருவதாகவும், ஐந்து ஏக்கர் நிலத்தில் உள்ள அனைத்து வெங்காய செடிகளையும் இவர் சிறப்பான முறையில் பராமரித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

விதை வெங்காயத்தை நிலத்தில் நடுவதற்கு முன்பு நிலத்தினை நன்றாக உழுது, நிலத்தில் இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை ஆகியவற்றை போட்டு நிலத்தை நன்றாக பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தினை நன்றாக பதப்படுத்தி வைத்த பிறகு விதை வெங்காயத்தை எடுத்து நிலத்தில் நட வேண்டும் எனவும், ஒவ்வொரு விதை வெங்காயத்திற்கு இடையிலும் ஒரு அடி இடைவெளி விட்டு நட வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் விதை வெங்காயத்தை வாங்கும் போது பெரிய அளவில் இருக்கும் வெங்காயத்தையும் அல்லது சிறிய அளவில் இருக்கும் வெங்காயத்தையும் வாங்கக் கூடாது எனவும் சரியான அளவில் இருக்கும் வெங்காயத்தை வாங்க வேண்டும் எனக் கூறுகிறார்.

ஏனெனில் அப்பொழுது தான் வெங்காயம் பெரிய வெங்காயமாக இல்லாமலும் சிறிய வெங்காயமாக இல்லாமலும் சரியான அளவில் நமக்குக் கிடைக்கும் என கூறுகிறார்.

மேலும் விதை வெங்காயத்தை வாங்கும் போது 70 நாளுக்கு மேல் வளர்ந்த வெங்காயத்தை அதாவது மூன்று மாதத்திற்கு மேல் வளர்ந்த வெங்காயத்தை வாங்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் விதை வெங்காயத்தை நிலத்தில் நடுவதற்கு முன்பு வெங்காயம் அழுகி உள்ளதா என்பதை பார்த்து, அழுகிய வெங்காயத்தை எடுத்து விட்டு மற்ற வெங்காயத்தினை நிலத்தில் நட வேண்டும் என கூறுகிறார்.

மற்றும் விதை வெங்காயத்தை நிலத்தில் நடுவதற்கு முன்பு நிலம் ஈரமாக இருக்க வேண்டுமெனவும் நிலத்தில் நீரை பாய்ச்சிய பிறகு விதை வெங்காயத்தை நடவேண்டும் எனவும் கூறுகிறார்.

வெங்காயத்தினை நடும் போது முழு வெங்காயத்தையும் நிலத்தில் நடக்கூடாது எனவும் பாதி வெங்காயம் வெளியில் தெரியும் அளவிற்கு விட்டு நட வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் விதை வெங்காயத்தை இந்த முறையில் நட்டு வளர்த்தால் அதிகளவில் விளைச்சல் கிடைக்கும் எனவும் இதன் மூலம் சிறந்த லாபத்தைப் நாம் பெற முடியும் எனவும் கூறுகிறார்.

உரம் மற்றும் பராமரிப்பு முறை

வெங்காய தோட்டத்திற்கு இவர் இயற்கை உரத்தினை அளித்து சாகுபடி செய்து வருவதாகவும், செயற்கை உரங்கள் எதையும் அதிகளவில் இவர் இந்த வெங்காய செடிகளுக்கு அளிப்பதில்லை எனவும் கூறுகிறார்.

இயற்கை உரங்களை அளித்து வளர்த்தாலே செடிகள் சிறப்பாக வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் எனவும், இயற்கை உரமான மாட்டுச் சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை இவற்றுடன் மக்கிய உரங்களை அளித்து வருவதாக கூறுகிறார்.

இன்றுள்ள நிலையில் அதிக விவசாயிகள் செயற்கை உரங்களை பயன்படுத்துகிறார்கள் எனவும், செயற்கை உரங்களை பயன்படுத்தாமலேயே இயற்கை உரங்களை பயன்படுத்தி சிறப்பாக விவசாயம் செய்ய முடியும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த வெங்காய சாகுபடியில் அதிகளவு பராமரிப்பு தேவை இல்லை எனவும், செடிகளுக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டால் அவற்றிற்கும் இவர் இயற்கை மருந்துகளை கொடுத்து சரி செய்து வருவதாக கூறுகிறார்.

மற்றும் வெங்காயச் செடிகளுக்கு சரியான அளவில் நீரினை மட்டும் அளித்து பராமரித்து வந்தால் போதுமானது எனவும் மற்றும் நோய் தாக்குதல் இவருடைய செடிகளுக்கு அதிகம் தாக்குவதில்லை என கூறுகிறார்.

மேலும் இவருடைய தோட்டத்தினை பராமரித்து கொள்வதற்கு இவருடைய குடும்பத்தினரும் உதவி செய்து வருவதாகவும் இதனால் இவருக்கு வேலை சுமை அதிகம் இல்லை எனவும் கூறுகிறார்.

Watering system and harvesting

வெங்காய செடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு இவர் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாகவும், விதை வெங்காயத்தை நட்ட ஒரு வாரத்தில் செடி முளைக்க தொடங்கி விடும் என கூறுகிறார்.

விதை வெங்காயத்தை நட்ட 40வது நாளில் ஒரு வெங்காயத்திலிருந்து நான்கிலிருந்து ஐந்து வெங்காயமாக உருவாகும் எனவும் கூறுகிறார்.

ஒன்றரை மாதத்திற்கு பிறகு வெங்காயத்தினை நாம் அறுவடை செய்ய தொடங்கி விடலாம் எனவும், அனைத்துப் பருவங்களிலும் சின்ன வெங்காயத்தை நாம் சிறப்பாக சாகுபடி செய்ய முடியும் எனவும் கூறுகிறார்.

மழை அதிகமாக இருக்கும் காலங்களில் மட்டும் வெங்காயத்தை சாகுபடி செய்வது சற்று கடினமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் வெங்காயத் செடிகளுக்கு அதிக அளவு நீரினை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், ஏனெனில் அதிக அளவு நீரினை செடிகளுக்கு அளித்தால் வெங்காயம் அழுகி விடும் எனக் கூறுகிறார்.

முளைப்பு வரும் வரை மட்டும் செடிகளுக்கு நீரினை அளிக்கலாம் எனவும் அதன் பிறகு வாரத்திற்கு ஒரு முறை மட்டும் செடிகளுக்கு நீர் அளித்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

வெங்காயத்தை அறுவடை செய்து இவருடைய ஊரிலுள்ள சந்தையில் இவர் வெங்காயத்தை விற்பனை செய்து வருவதாகவும், இவரிடம் வெங்காயத்தை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கும் இவர் வெங்காயத்தை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் வெங்காயத்தை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருவதால் அதிக அளவு வாடிக்கையாளர்களிடம் வந்து வெங்காயத்தை வாங்கி செல்வதாகவும் இதன் மூலம் இவர் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய சின்ன வெங்காயம் சாகுபடியை மிக சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:பள்ளி மாணவனின் சிறப்பான பால் பண்ணை.

Leave a Reply