தாய்லாந்து நாட்டில் அமைந்து உள்ள பட்டாயா ஆட்டுப்பண்ணை என்னும் ஒரு பண்ணை தேனீ வளர்ப்பை மிகவும் புதிய முறையில் செய்து, அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருகின்றனர். இந்த பண்ணையை பற்றியும், தேனீ வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
Thailand bee farm
தாய்லாந்து நாட்டில் அமைந்துள்ள பட்டாயா ஆட்டுப்பண்ணை என்னும் கால்நடை பண்ணையில் தேனீ வளர்ப்பை மிகவும் சிறப்பான முறையில், புதிய வழிமுறையில் நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த தாய்லாந்து தேனீ பண்ணை பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் மற்றும் பண்ணையை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் இந்த தேனீ பண்ணை அமைந்திருக்கிறது.
மேலும் இந்த தாய்லாந்து தேனீ பண்ணை தமிழ்நாட்டில் உள்ள தேன் பண்ணையை போன்று இல்லாமல் முற்றிலும் வேறுபட்டும் மற்றும் இந்தத் தேனீ வளர்ப்பை இவர்கள் மிகவும் புதிய முறையில் நடத்தி வருகின்றனர்.
மேலும் தேனி பண்ணையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் பண்ணையை சுற்றி வரும் போது தேனீக்கள் கைகளில் வந்து அமரும் எனவும், அவ்வாறு கைகளில் வந்த அமரக்கூடிய தேனீக்களை அடிக்க வேண்டாம் எனவும் கூறுகின்றனர்.
ஏனெனில் இந்த தேனீக்கள் மனிதர்களை எந்த விதத்திலும் தாக்காது எனவும், இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் பாதுகாப்பான முறையிலேயே இருக்க முடியும் எனவும் கூறுகின்றனர்.
தேனி வளர்ப்பு முறை
தாய்லாந்து நாட்டில் உள்ள இந்த பட்ட ஆட்டுப்பண்ணையில் இருக்கக் கூடிய தேனீ பண்ணை மிகவும் சிறப்பான முறையில் இருப்பதாகவும், இதேபோல் இவர்கள் வளர்க்கக்கூடிய தேனீக்களை மிகவும் கவனமான முறையில் எந்த பாதிப்புமின்றி வளர்த்து வருவதாகவும் கூறுகின்றனர்.
மேலும் பழங்காலங்களில் எல்லாம் மலைகளிலும் மற்றும் மரங்களிலும் இருந்தும் தேன்களை நாம் எடுத்து அதனை பயன்படுத்தி வந்தோம் எனவும், இப்பொழுது செயற்கையான முறையில் தேனீ பெட்டியை வைத்து தேனை எடுத்து உபயோகித்து வருவதாகவும் கூறுகின்றனர்.
இந்த முறையிலேயே இவர்களும் தேனீப் பெட்டியை வைத்து தேனீ பூச்சிகளை வளர்த்து வருவதாகவும், இவ்வாறு வளர்க்கப்படுகின்ற தேனீக்கள் மூலம் தேனினை எடுத்து விற்பனை செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.
மேலும் இவர்கள் வளர்க்கக் கூடிய தேனீக்கள் உலகிலேயே மிகவும் சிறிய அளவில் உள்ள தேனீக்கள் எனவும், இந்த தேனீக்களின் தேன் மிகவும் சுவையாக இருக்கும் எனவும் இந்த தேனீ பண்ணையாளர் கூறுகிறார்.
மேலும் இந்த தேனீக்களின் மூலம் கிடைக்கக் கூடிய தேனின் அளவு மிகவும் குறைவானதாகவே இருக்கும் எனவும், அதே சமயம் இந்த தேனீக்களின் மூலம் கிடைக்கக் கூடிய தேன் மிகவும் தரமானதாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
The machine used to extract honey
தேன் கூட்டிலிருந்து தேன் எடுப்பதற்கு தமிழ்நாடு மற்றும் பிற பகுதிகளில் கைகளையே பயன்படுத்தி வருவதாகவும், ஆனால் இந்த தாய்லாந்து தேனி பண்ணையை வைத்துள்ள பண்ணையாளர் தேனை எடுப்பதற்கு ஒரு இயந்திரத்தை பயன்படுத்தி வருவதாக கூறுகின்றார்.
மேலும் தமிழ் நாடுகளில் கைகளால் எடுக்கக்கூடிய தேனினை ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்வார்கள் எனவும், ஆனால் இவர்கள் தேனை எடுக்கும்போது எவ்வளவு பெரிய அடை இருந்தால் கூட அதனை எடுத்து ஒரு பெரிய இயந்திரத்தில் போட்டு வைத்துக் கொள்வார்கள் என கூறுகிறார்.
மேலும் தேனி பெட்டிக்குள்ளேயே ஒரு இயந்திரத்தை வைத்து விடுவதாகவும் அந்த இயந்திரத்தில் தேனீக்கள் கூடு கட்டி விடும் எனவும், அவ்வாறு கூடு கட்டிய தேன் கூட்டினை எடுத்து ஒரு பெரிய இயந்திரத்தில் போட்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்வார்கள் எனவும் கூறுகிறார்.
மேலும் இவ்வாறு தேன் அடையை இந்த இயந்திரத்தில் போட்டு வைத்ததற்கு பிறகு அந்த அடையில் இருந்து தேனினை பிரித்து எடுப்பதற்கு இந்த இயந்திரத்தை சுற்ற வேண்டும் எனவும், இவ்வாறு இயந்திரத்தை சுற்றும் போது தேன் தானாக பிரிந்து ஒரு பாத்திரத்தில் நிரம்பி விடும் என கூறுகின்றனர்.
மேலும் தேனி பெட்டிக்கு அடியில் ஒரு மரப்பலகையில் ஆன பெட்டியை வைத்து விடுவார்கள் எனவும், அந்தப் பெட்டியை வைப்பதற்கு காரணம் அந்தப் பெட்டியின் மூலம் மகரந்தத்தை சேமித்து கொள்வார்கள் என கூறுகிறார்.
சுத்தமான தேனை கண்டறியும் முறை
பொதுவாக தமிழ் நாடுகளில் அதிக அளவில் தேன் சுத்தமான தேனா என்பதை கண்டறிவதற்கு பல வகைகளை பயன்படுத்துபவர்கள் எனவும், ஆனால் இந்த தாய்லாந்து தேன் பண்ணையாளர் தேனை சுத்தமான தேனா என்பதை கண்டறிவதற்கு மிகவும் புதிய வழிமுறையை பயன்படுத்தி வருவதாக கூறுகின்றனர்.
அதில் முதல் வகையானது ஒரு தீக்குச்சியை எடுத்து தேனில் நனைத்து தீப்பெட்டியில் பத்தினால் அந்த தீக்குச்சி எரிந்தால் தேன் சுத்தமானது எனவும், மற்றும் தீக்குச்சி எரியவில்லை என்றால் தேன் சுத்தமானது இல்லை எனவும் கண்டறிந்து கொள்ளலாம் என கூறுகின்றனர்.
மேலும் இரண்டாவது வகையானது சிறிதளவு தேனை ஒரு கரண்டியில் எடுத்து அதனை நெருப்பில் காட்டினால் அந்த தேன் எதுவும் ஆகாமல் அப்படியே இருந்தால் அது நல்ல தேன் எனவும், இதுவே அந்த தேன் கெட்டியாக மாறி விட்டால் அது கலப்படமான தேன் எனவும் கூறுகிறார்.
மற்றும் மூன்றாவது வகையானது சிறிதளவு தேனை கையில் தொட்டு அதில் மணலை முழுவதும் நிரப்பி விட்டு அதனை ஊதினால் மணல் பறந்தால் சுத்தமான தேன் இல்லை எனவும், இதுவே மணல் பறக்கவில்லை என்றால் அது சுத்தமான தேன் எனவும் கூறுகின்றனர்.
மேலும் நான்காவது வகையானது சிறிதளவு தேனினை தண்ணீரில் ஊற்றும் போது அது நேரடியாக அடியில் சென்று விட்டால் அவை நல்ல தேன் எனவும், இதுவே அந்தத் தேன் நீரில் கலந்து விட்டால் அவை கலப்படமான தேன் எனவும் கூறுகின்றனர்.
மேலும் ஐந்தாவது வகையானது சிறிதளவு தேனை எடுத்து கண்களில் ஊற்றும் போது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டால் அவை சுத்தமான தேன் இல்லை எனவும், மற்றும் சிறிதளவு தேனை எடுத்து நகத்தில் வைத்து நகத்தை திருப்பினால் தேன் கீழே விழாமல் இருந்தால் அவை சுத்தமான தேன் என கூறுகின்றனர்.
மேலும் ஒரு முட்டையை உடைத்து தேனினை ஊற்றும்போது அந்த முட்டையின் மஞ்சள்கரு கலங்கி விட்டால் அவை சுத்தமான தேன் எனவும், இதுபோன்று சுத்தமான தேனை கண்டறிவதற்கு இவர்கள் பல வழிகளை வைத்திருப்பதாக கூறுகின்றனர்.
Excellent bee medicine
அனைத்து வகை நோய்களையும் சரி செய்து கொள்வதற்கு தேனீக்களை மருத்துவத்திற்கு பயன்படுத்துவதாகவும், இந்த முறை சீனா மற்றும் தாய்லாந்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
மேலும் பல வகை நோய்களை இந்த தேனீக்கள் மூலம் குணப்படுத்த முடியும் எனவும், இந்த தேனீ மருத்துவம் தாய்லாந்தில் அதிக அளவில் இருப்பதாகவும், இதனை இவர்கள் மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.
மேலும் இவர்கள் தேனீக்களை வளர்ப்பதற்கு தேவையான உபகரணங்களை இவர்களே விற்பனை செய்து வருவதாகவும், இவற்றின் விலை மிகக் குறைவாகவே இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
தாய்லாந்தில் உள்ள இந்த பட்டாயா தேனீ பண்ணை மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாகவும், இந்த பண்ணையை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளும் இதன் மூலம் பயன் அடைந்து வருவதாகவும் கூறுகின்றனர்.
மேலும் படிக்க:தீவனப்புல் வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.