கிராம்பு சாகுபடியில் சிறந்த வருமானம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் கிராம்பு சாகுபடி செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கிராம்பு சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

Beginning of clove cultivation

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் கிராம்பு சாகுபடி செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவர் இவரது படிப்பை முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டே இவர் கிராம்பு சாகுபடி செய்து வருவதாகவும் கூறுகிறார்.

இந்த கிராம்பு சாகுபடியை இவருடைய தாத்தா காலங்களிலிருந்து இவருடைய குடும்பம் செய்து வருவதாகவும், தாத்தா தொடங்கிய இந்த கிராம்பு சாகுபடியை தொடர்ந்து தாமும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் கிராம்பு சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.

கடந்த 25 வருடங்களாக இவர் இந்த கிராம்பு சாகுபடியை இவருடைய தந்தைக்குப் பிறகு இவர் செய்து வருவதாகவும், கிராம்பு சாகுபடியை இப்பொழுது இவர் மிக சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

கிராம்பு சாகுபடி செய்யும் முறை

கிராம்பு சாகுபடியை இவர் மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இந்த கிராம்பு சாகுபடியை இவர் 40 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.

இந்த 40 ஏக்கர் நிலத்தில் ஆயிரம் மரங்கள் பெரிய மரங்களாக இருப்பதாகவும், இந்த ஆயிரம் மரங்களுக்கும் ஐம்பதிலிருந்து அறுபது வருடங்கள் வரை இருக்கும் என கூறுகிறார்.

மேலும் சிறிய மரங்கள் 7ல் இருந்து எட்டு வருடங்கள் ஆன மரங்கள் இருப்பதாகவும், இப்பொழுது இவர் இன்னும் கிராம்பு செடிகளை நட்டு வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

இவருடைய கிராம்பு தோட்டத்தில் மொத்தமாக 2000ல் இருந்து 2500 மரங்கள் வரை இருப்பதாகவும், இந்த அனைத்தையும் பராமரித்து கொள்வதற்கு இவர் வேலையாட்களை வைத்துள்ளதாகவும் கூறுகிறார்.

விதைகளின் மூலம் இவர் கிராம்பு செடிகளை வளர்த்து வருவதாகவும், இவருடைய ஊரில் இருந்து மட்டுமே அதிக அளவில் கிராம்பு சாகுபடி ஆவதாகவும் கூறுகிறார்.

இந்த கிராம்பு சாகுபடியை மலைப்பகுதியில் செய்தால் மட்டுமே அதிகளவில் விளைச்சல் கிடைக்கும் எனவும் சமவெளிப் பகுதிகளில் செய்தால் குறைந்த அளவில் மட்டுமே விளைச்சல் கிடைக்கும் என கூறுகிறார்.

கிராம்பு வளர்வதற்கு குளிர்ச்சியான இடம் தேவை எனவும் மற்றும் கடல் காற்று கிராம்பு செடிகளின் மீது பட்டால் கிராம்பு மரம் சிறப்பாக வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் எனவும் கூறுகிறார்.

இந்த முறையில் இருக்கும் இடங்களில் கிராம்பு சாகுபடி செய்தால் சிறப்பாக கிராம்பு மரம் வளர்ந்து சிறந்த விளைச்சலை தரும் எனவும் கூறுகிறார்.

Clove uses and medicinal properties

கிராம்பில் அதிக அளவு மருத்துவ குணம் மற்றும் பயன்கள் இருப்பதாகவும், இந்த கிராம்பை நாம் எடுத்துக் கொண்டால் நமக்கு பலவித நோய்கள் குணமாகி விடும் எனவும் கூறுகிறார்.

கிராம்பு சாகுபடியில் கிராமில் மட்டும் லாபம் கிடைக்காது எனவும் அதன் இலை மற்றும் தண்டுகளில் மூலமும் நமக்கு லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

கிராம்பு இலைகள் மசாலா தயாரிப்பதற்குப் பயன்படும் எனவும் மற்றும் கிராம்பு குச்சிகள் எண்ணெய் தயாரிக்க பயன்படும் எனவும் கூறுகிறார்.

கிராம்பில் உள்ள அனைத்தும் மருத்துவ குணங்களுக்கு பயன்பட்டு வருவதாகவும் மற்றும் கிராம்பு இல்லாத எந்த வித உணவுப் பொருட்களும் இல்லாமல் இருக்காது எனவும் கூறுகிறார்.

இது போல் கிராம்பில் பலவித பயன்கள் இருப்பதாகவும் மற்றும் கிராம்பை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

உரம் மற்றும் பராமரிப்பு முறை

கிராம்பு மரங்களுக்கு இவர் இயற்கை உரங்களை அளித்து வளர்த்து வருவதாகவும், செயற்கை உரங்கள் எதையும் இவர் அதிக அளவில் அளிப்பதில்லை எனவும் கூறுகிறார்.

கிராம்பு செடிகள் வளரும் வரை மட்டுமே இவர் உரத்தை அதிக அளவில் அளிப்பதாகவும் பெரிய மரமாக வளர்ந்த பிறகு குறைந்த அளவே உரத்தை இவர் அளித்து வருவதாக கூறுகிறார்.

மரங்களுக்கு நோய் தாக்குதல் எதுவும் அதிக அளவில் வருவதில்லை எனவும் சிறப்பான முறையில் பராமரித்து வளர்த்தால் நோய் தாக்குதல் எதுவும் வராது எனவும் கூறுகிறார்.

எந்த அளவிற்கு மரத்திற்கு நாம் சரியான பராமரிப்பினை அளிக்கிறோமோ அந்த அளவிற்கு அதிக அளவு விளைச்சல் நமக்கு கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

இவருடைய கிராம்பு தோட்டத்தை பராமரித்து கொள்வதற்கு வேலையாட்களை இவர் நியமித்து இருப்பதாகவும், அனைத்து மரங்களையும் மிக சிறப்பான முறையில் பராமரித்து இவர் வளர்த்து வருவதாக கூறுகிறார்.

ஒரு வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே கிராம்பு அறுவடை செய்ய முடியும் எனவும் மீதியுள்ள மாதங்களில் கிராம்பு மரத்தினை நன்றாக பராமரிக்க வேண்டும் என கூறுகிறார்.

கிராம்பு சாகுபடியில் முக்கியமாக பராமரிப்பு தேவை எனவும் பராமரிப்பு அதிகளவில் இருந்தால் மட்டுமே விளைச்சல் நன்றாக இருக்கும் என கூறுகிறார்.

Harvesting and watering system

கிராம்பு சாகுபடியில் இவர் வருடத்திற்கு மூன்று மாதம் மட்டுமே ஒரு மரத்தில் அறுவடை செய்வதாகவும், ஒரு மரத்தில் பூ பூத்து முழு கிராம்பாக மாறுவதற்கு ஐந்து மாதங்கள் தேவைப்படும் எனவும் கூறுகிறார்.

கிராம்பை அறுவடை செய்யும் போது முழு கிராம்பாக அறுவடை செய்ய வேண்டும் எனவும், கிராம்பில் உள்ள மொட்டு உடைந்து விட்டால் அதிக விலைக்கு விற்பனை ஆகாது எனவும் கூறுகிறார்.

எனவே கிராம்பு அறுவடை செய்யும் போது கிராம்பில் உள்ள முட்டை உடையாமல் அறுவடை செய்ய வேண்டும் எனவும், இவ்வாறு அறுவடை செய்த கிராம்பை காய வைத்து காபி கொட்டை நிறத்தில் வரும்போது விற்பனை செய்து விட வேண்டும் எனவும், கிராம்பை காயவைக்கும் போது கருப்பு நிறத்தில் மாறி விட்டால் குறைவான விலைக்கே விற்பனை ஆகும் எனவும் கூறுகிறார்.

மேலும் கிராம்பு செடிகள் பெரிய மரமாக வளரும் வரை மட்டுமே இவர் நீரினை அதிகமாக அளித்து வருவதாகவும், பெரிய மரமாக வளர்ந்த பிறகு கிராம்பு மரங்களுக்கு அதிக அளவில் நீரினை இவர் அளிப்பதில்லை எனவும் கூறுகிறார்.

கிராம்பு சாகுபடியில் பராமரிப்பு மிகவும் முக்கியமான ஒன்று எனவும் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

கிராம்பு சாகுபடியை செய்து அவற்றை இவர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வருவதாகவும், இவருடைய தோட்டத்தில் அதிக அளவில் விளைச்சல் கிடைப்பதனால் இவரிடம் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து கிராம்பு வாங்குவதாக கூறுகிறார்.

இவரிடம் அதிக வாடிக்கையாளர்கள் கிராம்பு வாங்குவதாலும் மற்றும் இவர் கிராம்பை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதாலும், இந்த கிராம்பு சாகுபடியின் மூலம் இவருக்கு சிறந்த வருமானம் கிடைத்து வருவதாக கூறுகிறார்‌.

மற்றும் இவர் இவருடைய கிராம்பு சாகுபடியை மிக சிறப்பான முறையில் எந்த வித செயற்கை உரங்களையும் அளிக்காமல் இயற்கை வழி முறைகளை மட்டுமே பின்பற்றி செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:சிறப்பான கொத்தமல்லி தழை சாகுபடி.

Leave a Reply