தீவனப்புல் வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.

அரக்கோணம் அருகில் உள்ள நந்தி வேடந்தாங்கல் என்னும் என்னும் ஊரில் திரு கார்த்திக் அவர்கள் மாடுகளுக்கு உணவாகப் பயன்படும்  தீவன புல் வளர்ப்பை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய தீவன புல் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

திரு கார்த்திக் அவர்களின் வாழ்க்கை

திரு கார்த்திக் அவர்கள் அரக்கோணம் அருகில் உள்ள நந்தி வேடந்தாங்கல் என்னும் ஊரில் வசித்து வருவதாகவும், இவர் இங்கு சொந்தமாக ஒரு நாட்டு மாட்டு பண்ணை வைத்து நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.

திரு கார்த்திக் அவர்கள் பட்டப்படிப்பை முடித்துவிட்டு இந்த நாட்டு மாட்டுப் பண்ணையை தொடங்கியதாகவும், இவருடன் சேர்ந்து இவருடைய நண்பர் திரு ஹரி அவர்கள் இந்த பண்ணையை நடத்தி வருவதாகவும், இவரும் பட்டப் படிப்பினை முடித்து விட்டதாக கூறுகிறார்.

மேலும் இவர் நாட்டு மாட்டு பண்ணை வைத்து நடத்தி வருவதால் அந்த பண்ணையில் உள்ள மாடுகள் அனைத்திற்க்கும் தீவனங்கள் வேண்டும் என்பதற்காக இவரே தீவன புல்லை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

இந்த தீவனப்புல் வளர்ப்பில் இவருக்கு அதிக அளவு வருமானம் கிடைத்து வருவதாகவும், மேலும் பண்ணையிலுள்ள மாடுகளுக்கு இந்த தீவனப் புல் பயன்படுவதால் இதன் மூலமும் இவருக்கு செலவுகள் குறைந்து வருவதாகவும் கூறுகிறார்.

Fodder Grass cultivation

திரு கார்த்திக் அவர்கள் இந்த தீவனப்புல் வளர்ப்பினை 5 ஏக்கர் நிலத்தில் செய்து வருவதாகவும், இதன் மூலம் இவருக்கு அதிக அளவு நன்மைகள் மற்றும் லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் நாட்டு மாட்டு பண்ணை வைத்திருப்பதால் மாடுகளுக்கு அதிக அளவு தீவனங்கள் தேவைப்படும் எனவும், இந்த தீவனத்தின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு இந்த தீவன புல் வளர்ப்பு மிகவும் உதவியாக இருப்பதாகவும் கூறுகிறார்.

மற்றும் இவருடைய பண்ணையில் உள்ள நாட்டு மாடுகள் அனைத்தும் இந்த தீவனப்புல்லினை அதிக அளவில் விரும்பி உண்பதாகவும், இதனால் இவருக்கு தீவனச் செலவு குறைவாக இருப்பதாகவும், மற்றும் இந்த தீவனப் புல்லை இவர் விற்பனை செய்து வருவதால் இதன் மூலம் இவருக்கு லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

தீவனப் புல்லின் வகைகள்

திரு கார்த்திக் அவர்கள் இவருடைய 5 ஏக்கர் நிலத்திலும் தீவனப் புல்லை வளர்த்து வருவதாகவும், இந்த தீவனப்புல் வளர்ப்பில் இவர் இரண்டு வகை தீவனப் புல்லை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

அதில் ஒருவகை BH 18 எனப்படும் தீவனப் புல் வகை எனவும், இந்த வகை புல் ஆந்திர  அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட  புல் வகை எனவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த தீவனப்புல் வகைகள் மிகவும் மென்மையாக இருக்கும் எனவும், இந்தப் புல் வகையை அறுவடை காலத்திற்கு மேல் அறுவடை செய்யாமல் இருந்தால்கூட இது மென்மையாகவே இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த தீவனப் புல் வகைகளில் புரோட்டீன் அதிக அளவில் இருப்பதாகவும், மற்றும் இந்த தீவனப்புல் வளர்ப்பில் விளைச்சல் அதிக அளவில் இருப்பதாகவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த தீவனப் புல்லை ஒருமுறை அறுவடை செய்தால் அதன் மூலம் அதிகளவு லாபம் கிடைக்கும் எனவும், இவ்வாறு அறுவடை செய்த தீவன புல் மீண்டும் துளிர் விட்டு வளரும் எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் இரண்டாவது தீவனப்புல் வகையில் நேப்பியர் புல் வகையை வளர்த்து வருவதாகவும், இதுவும் இவருக்கு அதிக அளவு லாபத்தை தருவதாகவும் கூறுகிறார்.

Planting method

BH18 என்னும் தீவனப்புல்லையும், நேப்பியர் தீவனப்புல்லையும் விளைச்சல் செய்யும் முறையும், நடவு செய்யும் முறையும் மிகவும் சுலபமான ஒரு முறையே எனவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

இந்த தீவன புல்லினை நடுவதற்கு செடியினை இவருடைய பண்ணையில் அருகிலுள்ள இவருடைய நண்பரின் பண்ணையில் வாங்கி வந்ததாகவும், இவ்வாறு வாங்கி வந்த செடியினை இவர் இவருடைய நிலத்தில் நட்டு வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் BH18 தீவனப்புல்லினை நடும் போது நான்கு அடி இடைவெளி விட்டு நட வேண்டும் எனவும், இந்த முறையில் நட்டால் தீவன புல்லினை அறுவடை செய்வதற்கு சுலபமாக இருக்கும் எனவும், மற்றும் பராமரிப்பதற்கு எளிதாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

மற்றும் நேப்பியர் வகை தீவனப் புல்லை நடும் போது 5லிருந்து 6 அடி இடைவெளி விட்டு நட வேண்டும் எனவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

Yield system and irrigation system

BH18 தீவனப் புல்லை விளைச்சல் செய்யும் போது ஒரு வருடத்திற்கு 100ரில் இருந்து 120 டன் தீவன புல்லை அறுவடை செய்ய முடியும் எனவும், மற்றும் இந்த தீவனப் புல்லினை ஒரு வருடத்திற்கு ஏழு முறை அறுவடை செய்ய முடியும் எனவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

மேலும் நேப்பியர் தீவனப்புல் ஒரு வருடத்திற்கு 200 டன் அளவில் விளைச்சல் ஆகும் எனவும்,மேலும் ஒரு சில சமயங்களில் 210 டன் அளவுகளிலும் விளைச்சல் ஆகும் எனவும் கூறுகிறார்.

மேலும் இவருடைய பகுதியில் நீரின் அளவு மிகவும் குறைவாக இருப்பதனால் இவர் இந்த 2 தீவனப்புல்லிற்கும் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த சொட்டு நீர் பாசன முறையை தீவன புல்லின் நடுவில் அமைத்து இருப்பதாகவும், இரண்டு பாதிக்கும் ஒரு சொட்டு நீர் பாசனம் மூலம் நீரினை பாய்ச்சும் முறையில் அமைத்து இருப்பதாகவும் கூறுகிறார்.

இந்த முறையில் தீவனப் புல்களுக்கு சொட்டு நீர் பாசன முறையை இவர் பயன்படுத்தி வருவதால் நீரின் செலவும் குறைவாக இருப்பதாக திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

அறுவடை செய்யும் முறை மற்றும் விற்பனை முறை

தீவனப் புல்லினை அறுவடை செய்யும்போது அவற்றை அருவாள் மூலம் அறுவடை செய்வதாகவும், இந்த முறையில் அறுவடை செய்வது மிகவும் சுலபமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் BH18 தீவன புல்லை அருவாள் மூலம் அறுவடை செய்யும்போது மிக சுலபமாக இருக்கும் எனவும், இதுவே நேப்பியர் தீவனப்புல்லை அருவாள் மூலம் அறுவடை செய்வது சற்று கடினமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

BH18 வகை தீவனப் புல்லின் ஒரு கறுணையை 50 பைசாவிற்கு விற்பனை செய்து வருவதாகவும், மற்றும் நேப்பியர் தீவன புல்லின் ஒரு கறுணையை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர் இந்த தீவனப் புல்லினை தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருவதாகவும், மேலும் தீவனப்புல் வேண்டும் என வரும் வாடிக்கையாளர்கள் இவருடைய இடத்திற்கே வந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

மற்றும் BH18 தீவனப்புல்லின் கறுணையை நான்கு நாட்கள் நடாமல் கூட வைத்திருக்கலாம் எனவும், இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறுகிறார்.

மேலும் நேப்பியர் தீவனப்புல்லின் கறுணையை தொடர்ந்து பத்து நாட்கள் கூட நடாமல் வைத்திருக்க முடியும் எனவும், இவ்வாறு நடாமல் வைத்திருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறுகிறார்.

திரு கார்த்திக் அவர்கள் இந்த தீவனப்புல் வளர்ப்பை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார்.

மேலும் படிக்க:மிக குறைந்த விலையில் வாழைமரத்தை உரமாக்கும் இயந்திரம்.

Leave a Reply