வெள்ளரி உற்பத்தியில் அசத்தும் பெண்மணி.

திருமதி கனகேஸ்வரி அவர்கள் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள வேடந்தாவளம் என்னும் ஊரில் வெள்ளரி உற்பத்தியை செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வெள்ளரி உற்பத்தி முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

திருமதி கனகேஸ்வரி அவர்களின் வாழ்க்கை

கோயமுத்தூர் அருகில் உள்ள வேடந்தாவளம் என்னும் ஊரில் திருமதி கனகேஸ்வரி அவர்கள் வசித்து வருகிறார். இவருடைய சொந்த ஊர் இதுவே ஆகும் எனவும் கூறுகிறார்.

இவர் இங்கு இவருடைய ஒரு ஏக்கர் நிலத்தில் வெள்ளரி உற்பத்தியை செய்து இரண்டு மாதத்தில் 50 ஆயிரம் ரூபாய் வரை லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார். மேலும் இவர்கள் இதுபோன்று அதிக அளவு விவசாயம் செய்து வருவதாகவும் கூறுகிறார்.

தென்னை மரங்களுக்கு இடையில் வாழை மரங்களை வளர்த்து வருவதாகவும் மற்றும் இவற்றிற்கு இடையில் தான் ஊடுபயிராக வெள்ளரி செடியை வளர்த்து வருவதாக கூறுகிறார். மேலும் இந்த வெள்ளரி செடிகள் ஆனது குறுகிய காலப் பயிர் எனவும் கூறுகிறார்.

Cucumber pods

வெள்ளரி காய்களை பொதுவாக அனைத்து சிறுவர்களும் விரும்பி உண்பதாக திருமதி கனகேஸ்வரி அவர்கள் கூறுகிறார். மேலும் இந்த வெள்ளரி காய்களை  உண்பதால் உடலுக்கு மிகவும் நன்மை கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மற்றும் இந்த வெள்ளரிக் காய்களை பழுக்க வைத்து வெள்ளரி பழங்களாகவும் உண்ணலாம் எனவும் கூறுகிறார். இந்த வெள்ளரி பழங்களை நாட்டுச் சர்க்கரையில் தொட்டு உண்டால் மிகவும் சுவையாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

மற்றும் இன்றுள்ள நிலையில் அதிக அளவில் மக்கள் இந்த வெள்ளரி காய்களை உண்பது இல்லை எனக் கூறுகிறார். ஏனெனில் இந்த வெள்ளரிக்காய்களை பற்றி அவர்களுக்கு தெரியாமல் இருப்பதே காரணமாக இருக்கும் எனவும் திருமதி கனகேஸ்வரி அவர்கள் கூறுகிறார்.

மற்றும் இந்த வெள்ளரி உற்பத்தி முறை மிகவும் சுலபமான முறை எனவும் கூறுகிறார். இவற்றின் உற்பத்தியில் குறுகிய காலத்திலேயே அதிக அளவு லாபத்தை பெற முடியும் எனவும் திருமதி கனகேஸ்வரி அவர்கள் கூறுகிறார்.

வெள்ளரி உற்பத்தியின் விற்பனை முறை மற்றும் லாபம்

திருமதி கனகேஸ்வரி அவர்கள் இந்த வெள்ளரி விற்பனை முறையில் அதிக அளவு லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார். 2 மாதத்தில் ஒரு ஏக்கர் வெள்ளரிக் காய்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆவதாக கூறுகிறார்.

மற்றும் ஒரு கிலோ வெள்ளரிக் காய்கள் பத்து ரூபாய் என்று விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். மொத்த விற்பனையாளர் இடம் வெள்ளரிக் காய்களை விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் யாராவது வெள்ளரிக்காய் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் அவர்களுக்கும் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மற்றும் ஒரு ஏக்கருக்கு 10 டன் வெள்ளரிக் காய்கள் விளைச்சல் ஆவதாக கூறுகிறார். ஆனால் வெயில் காலங்களில் ஐந்திலிருந்து ஆறு டன் வெள்ளரிக் காய்கள் மட்டுமே விளைச்சல் ஆகும் என கூறுகிறார். தோராயமாக எட்டிலிருந்து 9 டன் வரை வெள்ளரிக் காய்கள் கிடைக்கும் என திருமதி கனகேஸ்வரி அவர்கள் கூறுகிறார்.

மற்றும் இந்த வெள்ளரிக் காய்கள் விற்பனையில் ஒன்றரை லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் என கூறுகிறார். மற்றும் இந்த வெள்ளரி செடிகளின் பராமரிப்பு முறை மற்றும் வேலையாட்கள் கூலி போக மீதம் 50 ஆயிரம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும் என திருமதி கனகேஸ்வரி அவர்கள் கூறுகிறார்.

மற்ற பயிர் விவசாயத்தை விட இந்த வெள்ளரி விவசாயம் மிகவும் சுலபமான ஒரு விவசாய முறை எனக் கூறுகிறார். ஏனெனில் மற்ற விவசாயத்திற்கு வேலை ஆட்கள் வரவில்லை எனில் வேலையானது தடைபடும் எனக் கூறுகிறார். ஆனால் இந்த வெள்ளரி விவசாயத்தில் வேலை ஆட்கள் வரவில்லை என்றாலும் அந்த வேலைகளை நாமே சுலபமாக செய்து முடித்துவிட முடியும் என கூறுகிறார்.

மற்றும் இந்த வெள்ளரிக்காய் விற்பனையில் வெள்ளரிக்காய்களை ஒரு நாளைக்கு பிறகு கூட சென்று விற்பனை செய்யலாம் என கூறுகிறார். இவ்வாறு ஒரு நாளுக்கு பிறகு எடுத்து சென்று விற்பனை செய்தால் கூட வெள்ளரிக்காய் நல்ல புத்துணர்ச்சியுடன் இருக்கும் எனக் கூறுகிறார்.

ஆனால் வெண்டைக்காய் மற்றும் பிற பயிர்களை இவ்வாறு ஒரு நாளைக்கு பிறகு எடுத்து செல்ல முடியாது என கூறுகிறார். ஏனெனில் அவைகளை எல்லாம் ஒரு நாளைக்கு பிறகு எடுத்து சென்றால் வாடி விடும் என திருமதி கனகேஸ்வரி அவர்கள் கூறுகிறார்.

மற்றும் இந்த வெள்ளரிக்காய்களை வாங்கி உண்ண வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிக அளவில் இருப்பதில்லை என கூறுகிறார். மற்றும் மக்கள் இந்த வெள்ளரிக்காய்களை பற்றி அறிந்து அதனை வாங்கி உண்ண வேண்டும் என கூறுகிறார்.

மேலும் திருமதி கனகேஸ்வரி அவர்களுடைய பகுதிகளில் இந்த வெள்ளரிக் காய்கள் அதிக அளவில் விற்பனையாகி வருவதாக கூறுகிறார்.இதன் காரணமாகவே இவருக்கு அதிக அளவு லாபம் கிடைத்து வருவதாகவும் திருமதி கனகேஸ்வரி அவர்கள் கூறுகிறார்.

Cultivation method of cucumber

வெள்ளரிக் காய்கள் வளர்ப்பு முறையை வெயில் மற்றும் நிழல் ஆகிய இரண்டும் கலந்த நிலையில் வளர்க்க வேண்டும் என திருமதி கனகேஸ்வரி அவர்கள் கூறுகிறார். பொதுவாக இந்த வெள்ளரிக்காய் வளர்ப்பு முறையே க்ரீன் ஹவுஸ் முறையில் வளர்த்துவார்கள் என கூறுகிறார்.

கடுமையான வெயில் இருக்கும் இடங்களில் இந்த வெள்ளரிக்காய்களை வளர்க்கக் கூடாது என திருமதி கனகேஸ்வரி அவர்கள் கூறுகிறார். மேலும் திருமதி கனகேஸ்வரி அவர்கள் இவருடைய தோட்டத்தில் தென்னை மரங்கள், வாழை மரங்கள் மற்றும் வெள்ளரி செடிகள் ஆகியவற்றை ஒன்றாக வளர்த்து வருவதாக கூறுகிறார்.

இவ்வாறு இந்த மூன்று மரம் மற்றும் செடிகளை வளர்க்கும்போது வேலை செய்யும் நேரம் ஆனது குறையும் என கூறுகிறார். செடிகளுக்கு நீர் அளிக்கும் போது அனைத்து செடிகளுக்கும் ஒன்றாக நீரை அளித்துவிட முடியும் என கூறுகிறார்.

இந்த முறையில் தென்னை மரங்களின் மகசூல் அதிக அளவில் கிடைக்கும் எனக் கூறுகிறார்.தனித்தனியாக விவசாயம் செய்வதை விட இவ்வாறு ஒன்றாக அனைத்துவித விவசாயத்தையும் செய்வது ஒரு சிறப்பான முறை என திருமதி கனகேஸ்வரி அவர்கள் கூறுகிறார்.

மற்றும் இவருடைய தோட்டத்தில் இப்போது வாழை மரங்களுக்கு நிழல் தேவை இருப்பதாக கூறுகிறார். இதனால் இப்பொழுது இவர் தென்னை மரங்களை நடுவதாக கூறுகிறார். மற்றும் இந்த வாழை மரங்களுக்கு இடையில் வெள்ளரி செடிகளை வளர்த்த வேண்டும் எனவும் கூறுகிறார்.

மற்றும் இந்த வெள்ளரிக்காய்களை அனைத்து பருவங்களிலும் பயிரிடலாம் என திருமதி கனகேஸ்வரி அவர்கள் கூறுகிறார். மேலும் இவர் ஹைபிரிட் வெள்ளரிக்காய்களை வளர்த்து வருவதாக கூறுகிறார். நாட்டுப் வெள்ளரிக்காய்களை இப்பொழுதுதான் விதைத்து உள்ளதாக கூறுகிறார்.

மேலும் இந்த வெள்ளரிக்காய்களை சரியான முறையில் பராமரித்து வந்தால் மட்டுமே சரியான விளைச்சல் கிடைக்கும் என கூறுகிறார். மற்றும் ஒரு நாளைக்கு விற்பனையாகும் வெள்ளரிக்காய்களின் அளவுகளில் மட்டுமே வெள்ளரிக்காய் களை பறித்து விற்பனை செய்ய வேண்டுமென கூறுகிறார்.

திருமதி கனகேஸ்வரி அவர்களின் வெள்ளரி தோட்டம்

திருமதி கனகேஸ்வரி அவர்கள் இவர்களுடைய வெள்ளரி தோட்டத்தினை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்.

மற்றும் வெள்ளரிக்காய் களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பிஞ்சு வெள்ளரிக்காய்களையே விரும்பி வாங்கி செல்வதாக கூறுகிறார். மேலும் அனைத்து வெள்ளரிக்காய்களும் ஒரே விலை என திருமதி கனகேஸ்வரி அவர்கள் கூறுகிறார்.

மேலும் திருமதி கனகேஸ்வரி அவர்கள் வெள்ளரிக் காய்களை மதிப்புக்கூட்டல் செய்யும் முறையை இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என கூறுகிறார். இந்த மதிப்பு கூட்டல் செய்யும் முறையை கற்றுக் கொண்டு அதனை செய்ய வேண்டும் எனவும் திருமதி கனகேஸ்வரி அவர்கள் கூறுகிறார்.

மேலும் மதிப்புக்கூட்டல் செய்தால் அதற்கு என்று ஒரு தனி அமைப்பு வேண்டும் எனவும் கூறுகிறார். மேலும் இவரும் இவருடைய கணவரும் மட்டும் இந்த வெள்ளரி வளர்ப்பை செய்து வருவதாக கூறுகிறார்.மேலும் வரும் காலங்களில் இந்த வெள்ளரிக்காய் வளர்ப்பு முறையை பெரிய அளவில் செய்ய வேண்டும் எனவும் திருமதி கனகேஸ்வரி அவர்கள் கூறுகிறார்.

திருமதி கனகேஸ்வரி அவர்கள் இவருடைய வெள்ளரிக்காய் வளர்ப்பு முறையை மிகவும் சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் அதிக லாபத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:கம்பீரமான காங்கேயம் காளை பண்ணை.

Leave a Reply