கொடைக்கானலில் இருக்கும் கவுஞ்சி என்னும் கிராமத்தில் திரு ராமசாமி அவர்கள் மலைப் பூண்டு உற்பத்தியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய மலைப்பூண்டு உற்பத்தியை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
Mr.Ramasamy their life
திரு ராமசாமி அவர்கள் கொடைக்கானலில் இருக்கும் கவுஞ்சி கிராமத்தில் வசித்து வருவதாகவும் இவர் இங்கு காலம் காலமாக மலை பூண்டு சாகுபடி மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் இவருடைய நிலத்தில் முட்டைக்கோஸ், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை சாகுபடி செய்து வருவதாகவும், இந்த மூன்றையும் இவர் குறைந்த அளவே செய்து வருவதாகவும் கூறுகிறார்.
ஆனால் அதிக அளவில் இவர் மலைபூண்டு சாகுபடியையே செய்து வருவதாகவும், இந்த மலைப் பூண்டு சாகுபடியை இவருடைய குடும்பம் காலம் காலமாக மிக சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இதனை இவர்கள் மிகவும் இயற்கையான முறையிலேயே செய்து வருவதாகவும் திரு ராமசாமி அவர்கள் கூறுகிறார்.
மேலும் திரு ராமசாமி அவர்கள் இந்த மலைப்பூண்டு சாகுபடியை கடந்த 15 வருடங்களாக செய்து வருவதாகவும், இவர் இந்த மலை பூண்டு சாகுபடி செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான தொழில் எனவும் கூறுகிறார்.
பூண்டுகளின் வகைகள்
திரு ராமசாமி அவர்கள் இரண்டு வகையில் இருக்கும் பூண்டுகளை உற்பத்தி செய்து வருவதாகவும், இந்த இரண்டு வகை பூண்டுகளுமே நல்ல முறையில் விளைச்சல் ஆகும் எனவும் கூறுகிறார்.
அதில் ஒரு வகை பூண்டானது சிங்கப்பூர் பிரதான மலைப்பூண்டு எனவும் மற்றொரு வகை மேட்டுப்பாளையம் பூண்டு வகை எனவும் இந்த பூண்டு வகையை கடந்த பத்து வருடங்களாக இவர் உற்பத்தி செய்து வருவதாகவும், இது மிக சிறப்பான முறையில் விளைச்சல் ஆவதாகவும் கூறுகிறார்.
மேலும் மேட்டுப்பாளைய வகைப் பூண்டானது சிங்கப்பூர் வகை பூண்டை விட நிறம் அதிகமாக இருக்கும் எனவும், இந்த மேட்டுப்பாளையம் பூண்டினை காட்டில் இருந்தே அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைத்து விடலாம் என கூறுகிறார்.
ஆனால் சிங்கப்பூர் வகை பூண்டினை அறுவடை செய்து வீட்டிற்கு எடுத்து சென்று பதப்படுத்தி வைத்து அதன் பிறகே விற்பனைக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் திரு ராமசாமி அவர்கள் கூறுகிறார்.
மேட்டுப்பாளையம் வகை பூண்டு அதிக விலையில் விற்பனையாகும் எனவும் ஆனால் இது மருத்துவ குணம் அதிக அளவில் இல்லை எனவும் மேலும் சிங்கப்பூர் வகை பூண்டில் மட்டுமே அதிக அளவு மருத்துவ குணம் இருப்பதாகவும் திரு ராமசாமி அவர்கள் கூறுகிறார்.
Specialty of garlic
மேட்டுப்பாளையம் வகை பூண்டினை மூன்று மாதம் வரை வைத்து உற்பத்தி செய்ய முடியும் எனவும் மூன்று மாதம் வரை இந்த பூண்டுகள் எந்த வித பாதிப்பையும் அடையாது எனவும் திரு ராமசாமி அவர்கள் கூறுகிறார்.
மேலும் சிங்கப்பூர் வகை பூண்டினை 6 இல் இருந்து 8 மாதங்கள் வரை வைத்து உற்பத்தி செய்ய முடியும் எனவும், இந்த பூண்டுகள் 8 மாதம் வரை கெட்டுப் போகாமல் மிகவும் பாதுகாப்பான முறையிலேயே இருக்கும் எனவும் கூறுகிறார்.
சிங்கப்பூர் வகை பூண்டினை உற்பத்தி செய்வது மிகவும் கடினமான ஒன்று எனவும், சிங்கப்பூர் பூண்டு வகைகளிலேயே அதிக அளவு மருத்துவ குணம் இருப்பதாகவும் இந்த பூண்டு வகைகளை மட்டுமே அதிகளவு வாடிக்கையாளர்கள் வாங்குவதாகவும் கூறுகிறார்.
மலைப் பூண்டு உற்பத்தி முறை
மலைப் பூண்டு உற்பத்தியை மலைகளில் மட்டுமே செய்ய முடியும் எனவும் வேறு எந்த இடத்திலும் இந்த பூண்டு சாகுபடி செய்ய முடியாது எனவும்,இவர் விவசாயம் செய்யும் இடம் பூண்டு விவசாயத்திற்கு மிகவும் சிறப்பான இடம் எனவும் திரு ராமசாமி அவர்கள் கூறுகிறார்.
மேலும் திரு ராமசாமி அவர்கள் இருக்கின்ற பகுதியின் கீழ் மலையில் இந்த பூண்டு விவசாயத்தை சிலர் செய்ததாகவும் ஆனால் அங்கு விவசாயம் செய்ததில் பூண்டு விவசாயம் நல்ல முறையில் வரவில்லை எனவும் கூறுகிறார்.
இவர் இருக்கின்ற மேல் மலையில் மட்டுமே இந்த பூண்டு உற்பத்தி மிகவும் சிறப்பான முறையில் கிடைக்கும் எனவும்,இதன் காரணமாக இவருக்கு இந்த பூண்டு விவசாயத்தில் அதிக அளவு ஆர்வம் வந்ததாக கூறுகிறார்.
பூண்டினை விளைவிக்கக்கூடிய மண்ணானது நயமான மண்ணாக இருக்க வேண்டும் எனவும், செம்மண்ணில் இது மிக சிறப்பான முறையில் வளரும் எனவும் மற்றும் கரிசல் மண்ணில் இந்த பூண்டு வளர்வது மிகவும் கடினம் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த பூண்டு உற்பத்தியை அனைத்து பருவ காலங்களிலும் இவர் உற்பத்தி செய்து வருவதாகவும், மேட்டுப்பாளையம் வகை பூண்டு விதையை இவர் வெளியிலிருந்து வாங்குவதாகவும் மற்றும் சிங்கப்பூர் வகை பூண்டின் விதையை இவர் உற்பத்தி செய்த பூண்டிலிருந்து எடுத்துக் கொள்வதாகவும் கூறுகிறார்.
ஒரு ஏக்கர் நிலத்தில் பூண்டு விவசாயம் செய்வதற்கு 250 கிலோ பூண்டுகள் தேவைப்படும் எனவும், சிலர் பெரிய அளவில் இருக்கும் பூண்டினை விளைச்சல் செய்வார்கள் எனவும் மற்றும் சிலர் சிறிய அளவில் இருக்கும் பூண்டினை விளைச்சல் செய்வார்கள் எனவும் திரு ராமசாமி அவர்கள் கூறுகிறார்.
Water supply system And Disease Prevention system
பூண்டினை உற்பத்தி செய்யும் போது அவற்றை மிகவும் பாதுகாப்பான முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும்,எட்டு நாட்களுக்கு ஒரு முறை இவற்றிற்கு நீரினை அளித்து வேண்டும் எனவும் திரு ராமசாமி அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த பூண்டு செடிகளில் ஈரப்பதம் சரியான முறையில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் எனவும்,இரண்டு மணி நேரம் அதிக அளவில் வெயில் அடித்தால் கூட இந்த பூண்டின் மதிப்பு குறைந்து விடும் எனவும் திரு ராமசாமி அவர்கள் கூறுகிறார்.
செடிகள் சிறியதாக இருக்கும் போதே மஞ்சள் பழுப்பு என்னும் நோய் தாக்கும் எனவும் இந்த நோய் தாக்கினால் செடிகளை பாதுகாக்க முடியாது எனவும்,எனவே இந்த நோய் வராமல் செடியினை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்று எனவும் கூறுகிறார்.
மேலும் மருந்தினை பயன்படுத்துவதன் மூலமும் எந்தவித பயனும் இல்லை எனவும்,இயற்கை சரியான முறையில் இருந்தால் எந்த பாதிப்பும் செடிகளுக்கு ஏற்படாது எனவும் திரு ராமசாமி அவர்கள் கூறுகிறார்.
பூண்டின் மருத்துவ குணம் மற்றும் விற்பனை
வாய்வு, சளி மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றை பூண்டுகள் சரி செய்து விடும் எனவும், ஒரு பூண்டினை எடுத்து எண்ணெயில் போட்டு வறுத்து அதனை எடுத்து உண்டால் வாய்வு விரைவில் சரியாகி விடும் என திரு ராமசாமி அவர்கள் கூறுகிறார்.
இவர் பூண்டினை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் நேரடி விற்பனையில் 3 மாவட்டங்களை தவிர எந்த மாவட்டத்திற்கும் பூண்டுகள் விற்பனைக்கு செல்வதில்லை எனவும், இதனால் விவசாயிகள் அதிக அளவு பாதிப்படைந்துள்ளதாக கூறுகிறார்.
மேலும் அதிக அளவு வாடிக்கையாளர்கள் சிங்கப்பூர் வகை பூண்டினையே வாங்குவதாகவும், இந்த பூண்டில் அதிக அளவு மருத்துவ குணம் உள்ளதால் அதிக வாடிக்கையாளர்கள் இதனை வாங்கி செல்வதாக திரு ராமசாமி அவர்கள் கூறுகிறார்.
திரு ராமசாமி அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் மலைப்பூண்டு சாகுபடியை செய்து வருகிறார்.
மேலும் படிக்க:சிறப்பான கருப்பு செம்மறியாடுகள் வளர்ப்பு.