காளான் உற்பத்தியில் அசத்தும் இளைஞர்.

கோயம்புத்தூரை சேர்ந்த திரு இந்திரகுமார் அவர்கள் ஒரு காளான் பண்ணையை வைத்து அதனை மிகவும் சிறப்பான வகையில் செயல்படுத்தி வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய காளான் உற்பத்தியினை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

திரு இந்திரகுமார் அவர்களின் வாழ்க்கை

திரு இந்திரகுமார் அவர்களின் சொந்த ஊர் கோயம்புத்தூர் ஆகும். இவர் இங்கு ஒரு காளான் பண்ணையை வைத்து அதனை மிகச் சிறப்பான முறையில் வழிநடத்தி வருகிறார். காளான் உற்பத்தி செய்யவேண்டும் என்ற எண்ணம் இவரிடம் அதிகளவில் தோன்றி உள்ளதாகவும் இதன் காரணமாகவே காளான் உற்பத்தியை தொடங்கியதாகவும் கூறுகிறார்.

திரு இந்திரகுமார் அவர்கள் இவரின் காளான் உற்பத்தியில் மிகவும் புதிய வகை முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இவரிடம் உள்ள அனைத்து காளான்களும் மிகவும் சுவையாகவும், தரமாக வளர்த்த பட்டதாகவும் உள்ளன.

திரு இந்திரகுமார் அவர்கள் இந்த காளான் உற்பத்தியில் அதிக அளவில் வருமானத்தையும் பெற்று வருவதாகவும் கூறுகிறார். மேலும் இந்த காளான் வளர்ப்பின் இன்னும் அதிக அளவில் வருமானத்தை பெற வேண்டும் எனவும் எண்ணம் உள்ளதாகவும் கூறுகிறார்.

காளான்களை விதைக்கும் முறை

திரு இந்திரகுமார் அவர்கள் காளான் உற்பத்தியின் செயல்முறைகளை மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்.

காளான்களை உற்பத்தி செய்வதற்கு முதலில் வைக்கோல்களைை அறுத்து ஒரு பெரிய ரப்பரால் ஆன பெட்டியில்  போட்டு அதனை ஒரு 18 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும் என கூறுகிறார்.

இந்த வைக்கோல்கள் ஆனது 18 மணி நேரம் வரை உறியதற்கு பிறகு அந்த வைகோல்களில் உள்ள நீரினை வடிகட்டி விட வேண்டும் எனவும் கூறுகிறார். அவ்வாறு வடிகட்டியதற்குப் பிறகு அந்த வைக்கோல்களை வெயிலில் காய வைக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

இந்த முறையில் வெயிலில் காயவைத்த வைக்கோல்களை  எடுத்து ஒரு நெகிழிப் பையில் போட வேண்டும் எனவும் கூறுகிறார். இதை நெகிழிப் பையில் போடுவதற்கு முன்பு வைக்கோல்களை ஆடுகள், மாடுகள், கோழிகள், மனிதர்கள் போன்றவர்கள் யாரும் மிதிக்க கூடாது எனவும் கூறுகிறார்.

ஏனெனில் வைக்கோல்களை மிதித்தால் நாம் ஸ்டெர்லைட் பண்ணியது வீணாகி விடும் எனவும் திரு இந்திர குமார் அவர்கள் கூறுகிறார். அதன் பிறகு இந்த நெகிழிப் பையில் வைக்கோல்கலை போட்ட பிறகு அதன்மீது விதைகளை தூவ வேண்டும் எனவும் கூறுகிறார்.

இவ்வாறாக 5 அடுக்குகளை கொண்டு விதைகளை நெகிழிப் பையில் போட வேண்டும் எனவும் திரு இந்திரகுமார் அவர்கள் கூறுகிறார்.

மழைக்காலங்களில் இந்த வைக்கோல்களை காய வைப்பதற்கு துணிகள் துவைக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார். இதற்கு புதிய துணிகள் துவைக்கும் இயந்திரத்தை பயன்படுத்த தேவையில்லை எனவும் பழைய துணி துவைக்கும் இயந்திரத்தை வாங்கி அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் திரு இந்திரகுமார் அவர்கள் கூறுகிறார்.

இவ்வாறாக பழைய துணிகள் துவைக்கும் இயந்திரம் வாங்கினால் அவைகள் வெறும் 2500 ரூபாய் மட்டுமே இருக்கும் எனவும், இதனை மழைக்காலங்களில் மட்டுமே பயன்படுத்துவது மிகவும் சிறப்பான ஒன்று எனவும்  திரு இந்திரகுமார் அவர்கள் கூறுகிறார்.

காளான்கள் முளைக்கும் முறை

காளான்களை விதை போட்டதற்கு பிறகு அந்த நெகிழிப் பைகள் அனைத்தையும் ஒரு அறையில் கட்டி வைத்து விடுவதாக கூறுகிறார். இவ்வாறாக இந்த விதைகள் போட்ட நெகிழிப் பைகளில்  இருந்து இருபத்தியோரு நாட்களுக்கு பிறகு மொட்டுகள் சிறியதாக வளர ஆரம்பிக்கும் எனவும் கூறுகிறார்.

இவ்வாறாக முளைக்கும் சிறிய மொட்டுகள் படிப்படியாக வளர்ந்து பெரிய காளான்களாக வளரும் எனவும் திரு இந்திரகுமார் அவர்கள் கூறுகிறார். இந்த ஒரு மொட்டின் மொத்த எடையானது 160 கிராமில் இருந்து 180 கிராம் வரை இருக்கும் எனவும் கூறுகிறார்.

ஒவ்வொரு  நெகிழிப் பைகளுக்கும் இடையில் முக்கால் மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார். ஏனெனில் இந்த நெகிழிப் பைகளில் இருபத்து நான்கு துளைகளை போட்டு உள்ளதாகவும் இதனால் காளான்கள் வளர்ந்தால் அவைகள் மற்ற நெகிழிப் பைகளில் உள்ள காளான்களின் மீது முட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறுகிறார்.

இதனால் நெகிழிப் பைகளுக்கு இடையில் முக்கால் மீட்டர் இடைவெளி முக்கியமாக இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார். மேலும் காளான்கள் பறிப்பதற்கு நாம் வரும் இடங்களில் மட்டும் நாம் வரும் அளவிற்கு இடைவெளி விட்டு இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார். ஏனெனில் அப்பொழுதுதான் காளான்களை சுலபமாக பறிக்க முடியும் எனவும் திரு இந்திரகுமார் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த காளான்கள் வைத்து வளர்த்தும் அறையில் வெப்ப நிலையானது இருபத்தி எட்டு டிகிரிக்கு குறைவாகவும், ஈரப்பதம் ஆனது 80 டிகிரிக்கு அதிகமாக இருந்தால் சிறப்பாக இருக்கும் எனவும் கூறுகிறார். மற்றும் இந்த காளான்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை நீரினை தெளிப்பதாகவும் கூறுகிறார்.

இந்த நீரினை தெளிக்கும் முறையானது தென்னை மரங்களுக்கு நீரினை அளிக்கும் முறையை போன்றது என்றும் திரு இந்திரகுமார் அவர்கள் கூறுகிறார். மேலும் மழைக்காலங்களில் காளான்களுக்கு நீரினை தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறுகிறார்.

இந்த காளான்கள் விதைத்த நாள்களில் இருந்து 45 வது நாளில் ஒன்றரை கிலோ காளான்கள் வெளியில் வருவதாகவும் கூறுகிறார்.

 நோய் தடுப்பு முறை மற்றும் காளான்களை பறிக்கும் நிலை

பொதுவாக சிப்பிக் காளான்கள் என்று எடுத்துக் கொண்டாலே அவைகளுக்கு எந்தவித மருந்திணையும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறுகிறார். எந்த அளவிற்கு பண்ணையை சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நோய்கள் காளான்களை தாக்காது எனவும், மருந்து அடிப்பதை தவிர்த்துக் கொள்ளலாம் எனவும் திரு இந்திரகுமார் அவர்கள் கூறுகிறார்.

காளான்களை பறிக்கும் போது கீழே விழும் காளான்களை சுத்தம் செய்யாமல் இருந்தால் மட்டுமே பூச்சிகள், கொசுக்கள், ஈக்கள் போன்றவை வரும் எனவும் இதனால் பண்ணையை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று எனவும் கூறுகிறார்.

இந்த காளான்களை சந்தைகளில் விற்கும் போது சரியான அளவுகளில் வளர்ந்து உள்ள காளான்களை விற்பனை செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் எனவும் கூறுகிறார். ஏனெனில் சரியான அளவுகளில் வளர்ந்த காளான்கள் மட்டுமே நான்கில் இருந்து ஐந்து நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் என கூறுகிறார்.

மிகவும் பெரிய அளவில் வளர்ந்த காளான்கள் இரண்டு நாட்களிலேயே கெட்டுப் போய்விடும் எனவும் கூறுகிறார். இதனால் காளான்கள் சரியான அளவுகளில் இருக்கும் போதே பறித்துவிட வேண்டும் எனவும் திரு இந்திர குமார் அவர்கள் கூறுகிறார்.

இந்த காளான்களை பறித்து அதனை பாக்கெட் செய்ததற்குப் பிறகு அவைகள் எப்பொழுதுமே குளிர்சாதனப் பெட்டியிலேயே இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

காளான்களின் விற்பனை திறன்

திரு இந்திர குமார் அவர்கள் காளான்களை கடைகளில் விற்பனை செய்வதை விட, கடைகளுக்கு அளிக்கும் விற்பனையாளருக்கு விற்று விடுவதாக கூறுகிறார். ஏனெனில் இவ்வாறாக இவர் மொத்த காளான்களையும் ஒருவரிடமே விற்பதினால் லாபம் கிடைப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் திரு இந்திரகுமார் அவர்கள் 200 கிராம் காளான் பாக்கெட்டை மொத்த விற்பனையாளரிடம் 25 ரூபாய்க்கு அளிப்பதாகவும் கூறுகிறார். மற்றும் இவர் வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுகளில் காளான்களை பாக்கெட் செய்து அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

திரு இந்திரகுமார் அவர்களின் பண்ணையிலிருந்து ஒரு நாளைக்கு 100 கிலோ வரை காளான்களை எடுக்க முடியும் எனவும் கூறுகிறார். இவற்றை 500 லிருந்து 1000 பாக்கெட் வரை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

இந்த காளான்களை திரு இந்திரகுமார் அவர்கள் மதுரை மற்றும் தேனியில் குறைந்த அளவு விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார். ஆனால் கோயம்புத்தூரில் அதிக அளவில் முழு சந்தைப்படுத்துதல் முறையில் காளான்களை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

காளான் வளர்ப்பில் செய்யக்கூடாத தவறுகள்

பொதுவாக காளான் பண்ணைகள் என்று எடுத்துக் கொண்டாலே அதில் வைக்கோல்களும், விதைகளும் தரமாக இருந்தால் மட்டுமே போதுமானது பண்ணை ஆனது மிகவும் சிறப்பாக செயல்படும் எனவும் கூறுகிறார்.

மக்கள் அதிகமாக வைக்கோல் மற்றும் விதைகள் வாங்குவதிலேயே அதிக அளவு ஏமாற்றம் அடைந்து விடுவதாக கூறுகிறார். விதைகள் ஆனது தரமாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று எனவும் கூறுகிறார்.

மேலும் ஒரு காளான் விதைக்கும் நெகிழி பைக்கு 200 கிராம் விதைகளை மட்டுமே விதைப்பது மிகவும் நல்லது எனவும் கூறுகிறார்.பொதுவாக காளான் பண்ணை வைப்பதற்கு ஒரு குடிசை இருந்தாலே பண்ணையை மிகவும் சிறப்பாக நடத்தலாம் என கூறுகிறார்.

ஆனால் சிலர் பெரிய அளவில் அறையை கட்டி அதில் இயந்திரம் மற்றும் உலர்த்திகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த முறையில் வீண் செலவு செய்தால் பண்ணை ஆனது நஷ்டத்தையே சந்திக்க நேரும் எனவும் திரு இந்திரகுமார் அவர்கள் கூறுகிறார்.

எனவே சரியான முறையில் பண்ணை வழிநடத்தி செல்ல வேண்டும் எனவும் கூறுகிறார்.

திரு இந்திரகுமார் அவர்களின் பண்ணையின் லாபம்

திரு இந்திரகுமார் அவர்களின் பண்ணையில் மொத்தமாக 2000 காளான்களை உற்பத்தி செய்யும் நெகிழிப் பையினை கட்டியுள்ளதாக கூறுகிறார்.

இவர்கள் இந்த பண்ணையை 45 நாட்களில் நிரப்பி விட்டால் 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதாக திரு இந்திரகுமார் அவர்கள் கூறுகிறார். இது இவர்களின் சாதாரணமான லாபம் எனவும் கூறுகிறார்.

இந்த காளான் பண்ணையை அனைவராலும் செய்ய முடியும் எனவும் கூறுகிறார். உதாரணமாக மொட்டை மாடியிலோ அல்லது தோட்டங்களில் காளான் உற்பத்தியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு இவரே பண்ணையை அமைத்து தருவதாகவும் கூறுகிறார்.

மேலும் காளான் பண்ணை அமைப்பதற்கு வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை ஒரு அறையில் கட்டுப்படுத்த முடியும் எனில் காளான் பண்ணையை எங்கு வேண்டுமானாலும் அமைக்கலாம் என திரு இந்திரகுமார் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர் புதியதாக காளான் பண்ணை தொடங்க வருபவர்களுக்கு பண்ணை தொடங்குவதற்கான அறிவுரைகளை கூறுவதாகவும், அவர்களின் பண்ணையை இவரே அமைத்து தருவதாகவும் கூறுகிறார்.

திரு இந்திரகுமார் அவர்கள் இதுவரையில் இருபதிலிருந்து இருபத்தைந்து பண்ணை வரை அமைத்து கொடுத்துள்ளதாகவும் கூறுகிறார். மேலும் இவர் HU விதைகளை மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும், இதனால் எந்த புகாரும் வாடிக்கையாளரிடம் இருந்து வருவதில்லை எனவும் கூறுகிறார்.

இந்தவகை காளான்களில் புழுக்கள் ஏதும் வருவதில்லை எனவும், இதில் தண்டுகள் வீணாவதற்கு வாய்ப்பில்லை எனவும் கூறுகிறார்.

திரு இந்திரகுமார் அவர்கள் இந்த காளான் பண்ணை மிகவும் சிறப்பாக மற்றும் தரமான, தூய்மையான முறையில் நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க:அனைத்து வகை இன்குபேட்டர்களும் ஒரே இடத்தில்.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply