அரசின் இலவச நீர்த்தேக்க தொட்டி.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள சவுணிபாளையம் என்னும் கிராமத்தில் திரு பன்னீர்செல்வம் அவர்கள் விவசாயம் செய்வதற்கு தேவையான நீர்த்தேக்கத் தொட்டி,சொட்டுநீர் பாசனம்,நீர்மூழ்கி மோட்டார் ஆகியவற்றை அரசாங்கத்தின் மூலம் இலவசமாக பெற்று பயன்படுத்தி வருகிறார். இவரைப் பற்றியும்,அரசின் இலவச பொருட்களைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

திரு பன்னீர்செல்வம் அவர்களின் வாழ்க்கை

திரு பன்னீர்செல்வம் அவர்கள் திருப்பூர் மாவட்டம்,தாராபுரத்தில் உள்ள சவுணிபாளையம் என்னும் கிராமத்தில் வசித்து வருவதாகவும், இவருடைய சொந்த ஊர் இதுவே ஆகும் எனவும் கூறுகிறார்.

இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், விடுமுறை நாட்கள் மற்றும் வேலைகள் இல்லாத சமயங்களில் இவர் விவசாயம் செய்து வருவதாகவும், அந்த விவசாயம் செய்வதற்கு பயன்படும் நீர்த்தேக்கத் தொட்டி, சொட்டு நீர் பாசனம், நீர்மூழ்கி மோட்டார் ஆகிய அனைத்தையும் அரசாங்கத்திடமிருந்து இலவசமாக பெற்றுள்ளதாக கூறுகிறார்.

மேலும் இவர் சிறுவர்களுக்கு நடனப் பயிற்சியை அளிக்கும் வேலையையும் செய்து வருவதாகவும், மேலும் இவர் விவசாயம் செய்வதற்கு காரணம் அனைத்து இளைஞர்களும் விவசாயத்தை பற்றி அறிய வேண்டும், விவசாயத்தை செய்ய வேண்டுமென்பதற்காக எனக் கூறுகிறார்.

Government free offers

திரு பன்னீர்செல்வம் அவர்கள் இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகவும், இந்த அரசாங்கத்தின் சலுகைகள் அதிக அளவில் யாருக்கும் தெரிவதில்லை எனவும் ,அதனை பற்றி நன்றாக அறிந்து கொண்டு இவர் இந்த சலுகைகளை பெற்றதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் அரசாங்கத்திடம் இருந்து பெற்றது ஒரு பெரிய நீர் தேக்கத் தொட்டி, செடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு சொட்டு நீர் பாசன முறை மற்றும் நீர்மூழ்கி மோட்டார் ஆகிய மூன்றையும் இவர் அரசாங்கத்திடம் இருந்து இலவசமாக பெற்று அதனை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

இவற்றையெல்லாம் அரசாங்கத்திடமிருந்து இவர் இலவசமாக பெற்று அதன் மூலம் இவர் விவசாயத்தை நல்ல முறையில் செய்து, அதிக அளவு விளைச்சலை செய்து வருவதாகவும், இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் திரு பன்னீர் செல்வம் அவர்கள் கூறுகிறார்.

மானியத்தின் வகைகள்

திரு பன்னீர்செல்வம் அவர்களின் நிலம் முதலில் விவசாயம் செய்யாமல் இருந்ததாகவும், இவருடைய பெற்றோர்கள் இந்த நிலத்தில் விவசாயம் செய்யாமல் நிலத்தை வைத்திருந்ததாகவும், இவ்வாறு நிலம் விவசாயம் செய்யாமல் இருப்பதனால் இவர் விவசாயம் செய்யலாம் என்ற எண்ணத்துடன் இந்த விவசாயத்தை தொடங்கியதாகவும் கூறுகிறார்.

மேலும் இவருக்கு இந்த விவசாயத்தில் இருந்து அதிக அளவு லாபம் கிடைப்பதாகவும், மேலும் இவர் முதலில் விவசாயத்தை தொடங்கும் போது இவரிடம் அதிக அளவு பணம் இல்லாத காரணத்தால் அரசாங்கத்திடமிருந்து ஏதாவது சலுகைகள் கிடைக்கிறதா என்பதை  அறிந்து கொண்டதாக கூறுகிறார்.

இவ்வாறு விவசாயம் செய்வதற்கு அரசாங்கத்திலிருந்து சலுகைகள் கிடைப்பதை அறிந்த பிறகு அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் சலுகைகளை பெற்று இவர் விவசாயத்தை நல்ல முறையில் செய்து வந்ததாக கூறுகிறார்.

அரசாங்கம் ஒரு தோட்டத்தில் விவசாயம் செய்வதற்கு தேவையான மோட்டார்களை அளிப்பதாகவும், மற்றும் காட்டிலுள்ள நீரினை எடுப்பதற்கு போர் போடுவதற்கு உதவியாக இருந்து வருவதாகவும், மற்றும் இவ்வாறு போர் போட்ட நீரினை நிலத்திற்கு அளிப்பதற்கு தேவையான சொட்டு நீர் பாசன முறையையும் அளித்து தருவதாகவும் கூறுகிறார்.

மேலும் நீர்த்தேக்கத் தொட்டியை அமைத்துக் கொள்வதற்கும் உதவி செய்து வருவதாகவும், மற்றும் இது போன்று அதிக அளவில் அரசாங்கம் விவசாயத்திற்கு உதவி செய்து வருவதாகவும் திரு பன்னீர் செல்வம் அவர்கள் கூறுகிறார்.

Qualifications required to receive government benefits

அரசாங்கத்திடமிருந்து சலுகைகளை பெறுவதற்கு விவசாயிகள் சில தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் எனவும், அந்த தகுதிகள் இருந்தால் மட்டுமே அரசாங்கம் சலுகைகளை அந்த விவசாயிக்கு அளிக்கும் எனவும் திரு பன்னீர்செல்வம் அவர்கள் கூறுகிறார்.

அரசாங்கத்திடமிருந்து சலுகைகளைப் பெறும் விவசாயிகளிடம் சொந்தமாக நிலம் இருக்க வேண்டும் எனவும், இவ்வாறு சொந்தமாக நிலத்தை வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நீர்த்தேக்க தொட்டி, சொட்டு நீர் பாசனம், நீர்மூழ்கி மோட்டார் ஆகிய மூன்றையும் அமைத்து தருவதாகவும் கூறுகிறார்.

மேலும் விவசாயி இவருடைய நிலத்தில் நீர்த்தேக்கத் தொட்டியை மட்டும் அமைத்துக் கொள்ள முடியாது எனவும், சொட்டு நீர் பாசன முறையை இவருடைய நிலத்தில் அமைத்தால் மட்டுமே நீர்த்தேக்கத் தொட்டியை அமைத்துக்கொள்ள முடியும் எனவும் கூறுகிறார்.

மேலும் சிறிய அளவில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும் மற்றும் பெரிய அளவில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும் அரசாங்கம் ஒரே மாதிரியான சலுகைகளையே அளித்து வருவதாக திரு பன்னீர்செல்வம் அவர்கள் கூறுகிறார்.

அரசாங்க சலுகையை பெறும் முறை

அரசின் இலவச சலுகைகளை பெறுவதற்கு முதலில் உதவி வேளாண்மை அலுவலரிடம் செல்ல வேண்டும் எனவும்,இந்த உதவி வேளாண்மை அலுவலர் என்பவர் பத்து கிராமங்களுக்கு ஒரு அலுவலர் என்ற முறையில் நியமிக்கப்பட்டவராக இருப்பார் என கூறுகிறார்.

இவ்வாறு உங்கள் கிராமத்திற்கு நியமிக்கப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை சந்திக்க வேண்டும் எனவும், இவ்வாறு அவரை சந்திததற்கு பிறகு அவரிடம் அடங்கள்,சிட்டா,அரசாரு,வரைபடம், கூட்டு வரைபடம் மற்றும் சிறு குறு விவசாயச் சான்றிதழ்,ஆதார் அட்டை, புகைப்படம்,குடும்ப அட்டை ஆகிய சான்றிதல் அனைத்தையும் இவரிடம் அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

இந்தச் சான்றிதழ்கள் அனைத்தையும் அரசின் இலவச சலுகைகளை பெறுவதற்கு அளிக்க வேண்டும் எனவும்,இதனையெல்லாம் அளித்தால் அரசின் இலவச சலுகைகள் கிடைத்து விடும் எனவும் கூறுகிறார்.

Special of the free offer of the government

விவசாயி நிலத்தில் நீர்த்தேக்கத் தொட்டி,நீர்மூழ்கி மோட்டார்,நீர்ப்பாசன முறை ஆகியவற்றை இவரே சொந்தமாக அமைத்து கொண்டு அதற்கு இவர் செலவு செய்த பணத்தினை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என கூறுகிறார்.

மேலும் இந்த முறையில் இவரால் செய்ய முடியவில்லை என்றால், அரசாங்கத்திடம் இருந்து நீர்த்தேக்க தொட்டி,நீர்மூழ்கி மோட்டார் மற்றும் நீர் பாசனம் அமைப்பதற்கு தேவையான சலுகைகளைப் பெற்று அமைத்துக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் இதனை அரசாங்கமே இவருடைய விவசாயப் பண்ணைகளில் அமைத்து கொடுத்து வருவதாகவும்,இந்த முறை அரசாங்கத்திடம் உள்ள ஒரு சிறப்பான முறை எனவும் திரு பன்னீர்செல்வம் அவர்கள் கூறுகிறார்.

மேலும் அரசாங்கம் அளிக்கும் மானியத்தின் அளவில் மட்டும் நீர்த்தேக்கத் தொட்டியை அமைத்துக் கொள்ளும் எண்ணம் உள்ளவர்கள் அமைத்துக் கொள்ளலாம் எனவும், பெரிய அளவில் நீர் தேக்க தொட்டியை அமைக்க வேண்டும் என்ற  எண்ணம் உள்ளவர்கள் அரசாங்கம் அளிக்கும் மானியத்துடன் சேர்த்து சொந்தமாக இவர் பணத்தை செலவு செய்து நீர்த்தேக்க தொட்டியை அமைத்துக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த சலுகைகளை எல்லாம் பெறுவதற்கு முறையாக அனைத்து சான்றிதழ்களையும் வைத்திருந்தால் மட்டுமே போதுமானது எனவும், இவ்வாறு சரியான முறையில் சான்றிதழ்களை வைத்திருந்தால் அரசாங்கம் விரைவாக சலுகைகளை அமைத்துக் கொடுத்து விடும் எனவும் கூறுகிறார்.

மேலும் இவற்றையெல்லாம் அரசாங்கம் அளித்த தந்ததற்கு பிறகு அவற்றை ஏழு வருடம் நீங்கள் எந்த பாதிப்புமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும்,இவ்வாறு ஏழு வருடத்திற்கு பிறகு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் அதனை மாற்றி அளித்து தரும் அமைப்பு அரசாங்கத்திடம் உள்ளது எனவும் கூறுகிறார்.

திரு பன்னீர்செல்வம் அவர்கள் அரசின் இலவச சலுகைகள் மூலம் அதிக அளவு பயன் அடைந்துள்ளதாக கூறுகிறார்.

மேலும் படிக்க;தரமான வாகை மரச்செக்கு உற்பத்தி.

Leave a Reply