பட்டதாரிகளின் நாட்டுமாடு பண்ணை.

அரக்கோணம் அருகில் உள்ள நந்தி வேடந்தாங்கல் என்னும் ஊரில் திரு ஹரி அவர்களும், திரு கார்த்திக் அவர்களும் மேய்ச்சல் முறையில் ஒரு நாட்டு மாட்டு பண்ணை வைத்து சிறப்பாக நடத்தி வருகின்றனர்.இவர்களைப் பற்றியும், இவர்களுடைய நாட்டு மாட்டுப் பண்ணையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

பண்ணையின் தொடக்கம்

திரு ஹரி அவர்களும், திரு கார்த்திக் அவர்களும் அரக்கோணம் அருகில் உள்ள நந்தி வேடந்தாங்கல் என்னும் ஊரில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பட்டப் படிப்பினை முடித்துவிட்டு சொந்த ஊரிலேயே ஒரு நாட்டு மாட்டுப் பண்ணையை வைத்து சிறப்பாக நடத்தி வருவதாக கூறுகின்றனர்.

மேலும் இவர்கள் சிறுவயதிலிருந்தே கிராமப்புறங்களில் வளர்ந்து வந்ததால் இவர்களுக்கு மாட்டுப் பண்ணை வைக்கலாம் என்ற எண்ணம் இருந்து வந்ததாக திரு கார்த்திக் அவர்கள் கூறுகின்றார்.

இதன் காரணமாக இவர்கள் மாட்டுப் பண்ணையை தொடங்கலாம் என்ற எண்ணத்துடன் பண்ணையை தொடங்கியதாக கூறுகின்றனர். மேலும் இவர்களது ஊரானது வறட்சியான நிலத்தை கொண்டிருப்பதால் இவர்கள் இந்த நிலத்தில் ஜெர்சி மாடு வகைகளை வளர்க்க முடியாது என்ற எண்ணத்தால் இவர்கள் இந்த வடநாட்டின் நாட்டு மாட்டு வகைகளை வாங்கி பண்ணை அமைத்ததாக கூறுகிறார்.

இந்த வடநாட்டின் நாட்டு மாட்டின் பெயர் காங்கிரஸ் கிர் என கூறுகிறார். இந்த மாடுகள் வறட்சியான நிலத்திலும் நன்றாக வளரும் எனவும்,அத்துடன் அதிக அளவு பாலையும் தரும் எனவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர்கள் மாடுகளை இவருடைய நண்பரின் உதவியால் முதலில் ஒரு எட்டு மாடுகள் வரை வாங்கியதாக கூறுகிறார். அதன் பிறகு இவர்களே சென்று மாடுகளை வாங்கி வந்து வளர்த்து வருவதாக திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

Country cow farm On grazing system

பொதுவாக மாட்டுப்பண்ணை வைத்திருந்தால் மாடுகளுக்கு அளிக்கும் தீவனத்தின் தேவைகள் அதிக அளவில் இருக்கும் என கூறுகிறார். மேலும் இவர்கள் இந்த அனைத்து மாடுகளையும் மேய்ச்சல் முறையிலேயே வளர்த்து வருவதாக கூறுகின்றனர்.

மேலும் இவருக்கு மேய்ச்சல் நிலங்கள் அதிக அளவில் இருப்பதால் மாடுகளை மேய்ச்சல் முறையில் வளர்த்து வருவதாக கூறுகிறார். மழைக்காலங்களில் மாடுகளுக்கு மேய்ச்சல் முறையில் தீவனத்தை அளிப்பதாக கூறுகின்றார்.

மற்றும் வெயில் காலங்களில் இவருடைய நிலத்திலேயே வைக்கோல் மற்றும் பிற தீவன வகைகளை உற்பத்தி செய்து அவைகளை மாடுகளுக்கு தீவனமாக அளித்து வருவதாக திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார். மேலும் வறட்சிக் காலங்களில் மாடுகளுக்கு சத்து நிறைந்த உணவை அளித்து வருவதாக கூறுகின்றார். இல்லையெனில் மாடுகளின் உடல் எடை குறைந்துவிடும் என கூறுகின்றார்.

மேலும் இந்த மாடுகள் அனைத்தையும் காலையில் 10 மணிக்கு மேய்ச்சல் காட்டிற்கு அழைத்துச் சென்று மாலை ஐந்து மணிக்கு திரும்பி அழைத்து வருவதாக கூறுகிறார்.இவர்களுடைய பண்ணையில் இருந்து இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை மாடுகளை அழைத்து சென்று மேய்ச்சல் முறையில் தீவனம் அளித்து வருவதாக திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

மற்றும் மாடுகளை கட்டி தரையில் கட்டி வத்து வளர்ப்பதை விட இவ்வாறு மேய்ச்சல் முறையில் வளர்த்தால் தீவனச் செலவு குறையும் என கூறுகிறார். மேலும் இரவு நேரங்களில் மாடுகளுக்கு வைக்கோலை தீவனமாக அளித்து வருவதாக கூறுகிறார். ஏனெனில் இரவு நேரத்தில் வைக்கோலை தீவனமாக அளித்தால் மாடுகளுக்கு மிகவும் எளிய முறையில் செரிமானம் நடந்து விடும் என கூறுகிறார்.

மாடுகள் மேய்ச்சல் முறையில் வளர்வதால் அவைகளுக்கு எந்தவித நோயும் ஏற்படாமல் மிகவும் நலமுடன் இருப்பதாக திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார். ஆனால் மாடுகளை ஒரே இடத்தில் கட்டி வைத்தால் காய்ச்சல் மற்றும் பிற நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் மாடுகளுக்கு உளுந்தம் பருப்பு, தவிடு மற்றும் புண்ணாக்கு போன்ற தீவன வகைகளையும் அளித்து வருவதாக கூறுகிறார். இந்த தீவன வகைகளை மாடுகள் உண்பதால் நல்ல வளர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதாகவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

மாடுகளுக்கு ஏற்படும் நோய் தடுப்பு முறை

திரு கார்த்திக் மற்றும் திரு ஹரி அவர்களின் பண்ணையிலுள்ள மாடுகளுக்கு நோய்கள் அதிக அளவில் தாக்கியது இல்லை என கூறுகிறார். ஏனெனில் இவர்கள் மாடுகளுக்கு நோய்கள் ஏற்படுவதற்கு முன்பே தடுப்பூசியை போட்டு விடுவதாக கூறுகிறார்.

மேலும் மாடுகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒரு அட்டவணையை உருவாக்கி வைத்துள்ளதாக கூறுகிறார். இதில் இவர்கள் முதலில் மாடுகளுக்கு கோமாரி நோய்கள் ஏற்படாமல் இருப்பதற்கு தடுப்பூசி போட்டு விடுவதாக கூறுகிறார்.

மற்றும் சப்பை நோய், தொண்டை அடைப்பான், ஆந்திராக்ஸ் இந்த நோய்கள் அனைத்தும் மிகக் கொடூரமான நோய்கள் என கூறுகிறார். மேலும் இந்த நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்களில் வாங்கி மாடுகளுக்கு போட்டு வருவதாக திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர்களது மாட்டு வகைகளுக்கு நோய்கள் அதிகளவில் ஏற்படாது எனவும் கூறுகிறார். ஏதாவது சில சமயங்களில் மட்டும் காய்ச்சல் ஏற்படும் என கூறுகிறார்.

The structure of the farm

திரு ஹரி மற்றும் திரு ‌ கார்த்திக் அவர்களுடைய மாட்டுப் பண்ணையில் கொட்டகை அமைக்க வில்லை என திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார். இந்த மாடுகள் அனைத்தையும் மிகவும் காற்றோட்டமான நிலையில் மரத்திற்கு அடியில் கட்டி வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த மாட்டு வகைகள் வெயில் மற்றும் மழை காலங்களில் வெளியில் இருந்தாலும் எதுவும் பாதிப்பு ஏற்படாது எனக் கூறுகிறார். இப்பொழுது இவர்கள் மாடுகளுக்கு கொட்டகை அமைத்து வந்து கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு இவர்கள் கொட்டகை அமைப்பதற்கு காரணம் ஏதாவது ஒரு மாட்டிற்கு உடம்பு சரியில்லாமல் போனால் அவைகளை மிகவும் பாதுகாப்பான முறையில் பார்த்துக் கொள்வதற்கு கொட்டகை அமைத்து வருவதாக கூறுகின்றனர்.

நாட்டு மாடுகளின் பாலின் விற்பனை முறை மற்றும் லாபம்

திரு கார்த்திக் மற்றும் திரு ஹரி அவர்களுடைய நாட்டு மாட்டு பண்ணையில் ஒரு நாளைக்கு 40 லிட்டர் பால் கிடைப்பதாகக் கூறுகின்றனர். இந்த பாலை அரக்கோணம் மற்றும் திருத்தணி ஆகிய ஊர்களில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர்கள் பெங்களூர் வரை இந்த பால் விற்பனையை செய்து வருவதாக கூறுகிறார்.மேலும் பண்ணை வைத்துள்ள பணியாளர்களில் சிலர் பாலினை மதிப்புக்கூட்டல் முறையில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். ஆனால் இவர் அவ்வாறு விற்பனை செய்யாமல் வெறும் பாலினை மட்டும் விற்பனை செய்வதற்கு காரணம் இவருக்கு இந்த பால் விற்பனை யிலேயே தேவையான அளவு வருமானம் கிடைத்து விடுவதே காரணம் எனக் கூறுகிறார்.

இவர்களுடைய இந்த நாட்டு மாட்டு பண்ணை வளர்ப்பில் மாதம் 30 லிருந்து 35 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக கூறுகிறார். மேலும் இவர்கள் இந்த நாட்டு மாட்டுப் பண்ணையை இவர்கள் படித்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு தொடங்கியதாக கூறுகின்றார்.

இவ்வாறு இவர்கள் பண்ணையை தொடங்கியவுடன் இவர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை என கூறுகிறார்.மூன்று வருடம் கடினமாக உழைத்தால் மட்டுமே உழைப்பிற்கான ஊதியம் கிடைக்கும் எனவும் கூறுகிறார். இவ்வாறு இவர்கள் கடினமாக உழைத்ததால் இவர்களுக்கு இதில் அதிக அளவு லாபம் கிடைத்து வருவதாக கூறுகின்றனர்.

Highlights Of Mr.Hari and Mr. Karthik’s farm

திரு ஹரி மற்றும் திரு கார்த்திக் அவர்களின் பண்ணையில் வாடிக்கையாளர்கள் எந்த நேரத்தில் வந்து பால் கேட்டாலும் பாலினை அளித்து வருவதாக கூறுகின்றனர். மேலும் தூரமாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு கொரியர் முறையில் பாலினை விற்பனை செய்து வருவதாக கூறுகின்றனர்.

மேலும் வாடிக்கையாளர்கள் மாடுகள் மற்றும் கன்றுகுட்டிகள் வேண்டும் என்று கேட்டால் அதனையும் வாங்கி விற்பனை செய்து வருவதாக கூறுகின்றனர்.மேலும் வாடிக்கையாளர்களுக்கு பிடித்த மாடுகளை பெற்றுச் செல்லலாம் எனவும் கூறுகின்றனர்.

மேலும் இவர்கள் பாலின் மூலம் கிடைக்கும் அனைத்து உணவு வகைகளையும் உருவாக்கி விற்பனை செய்யும் எண்ணம் இருப்பதாகவும் கூறுகின்றனர்.மேலும் இவர்களுடைய மாடுகளின் வகைகளில் எந்த மாடுகளும் இதுவரையில் இறந்தது இல்லை என கூறுகின்றனர்.

திரு கார்த்திக அவர்களும், திரு ஹரி அவர்களும் இவர்களுடைய  நாட்டு மாட்டுப் பண்ணையை மேய்ச்சல் முறையில் மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க:பால் கறக்க பயன்படும் இயந்திரம்.

 

 

Leave a Reply