பட்டதாரியின் சிறப்பான வெற்றிலை விவசாயம்.

திரு ராமச்சந்திரன் அவர்கள் திருக்கோவிலூரில் உள்ள கழுமரம் என்னும் கிராமத்தில் ஒரு சிறப்பான வெற்றிலை விவசாயத்தை செய்து வருகிறார். அவரைப் பற்றியும், அவருடைய வெற்றிலை விவசாயத்தைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

திரு ராமச்சந்திரன் அவர்களின் வாழ்க்கை

திரு ராமச்சந்திரன் அவர்கள் திருக்கோவிலூரில் உள்ள கழுமரம் என்னும் கிராமத்தில் வசித்து வருவதாகக் கூறுகிறார். இவர் இவரது இளங்கலை பட்டப் படிப்பினை திருவண்ணாமலையில் உள்ள சண்முகா கலைக் கல்லூரியில் பயின்று முடித்ததாக கூறுகிறார்.

மற்றும் இவரது முதுகலை பட்டப் படிப்பினை அண்ணா பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக பயின்று முடித்ததாக திரு ராமச்சந்திரன் அவர்கள் கூறுகிறார்.

மற்றும் இவர் படிப்பினை முடித்ததற்கு பிறகு ஒரு பெரிய நிறுவனத்தில் பத்து வருடங்கள் வேலை செய்து வந்ததாக கூறுகிறார். அதன் பிறகு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மீது ஆர்வம் வந்ததால் அந்த நிறுவனத்தில் உள்ள வேலையினை வேண்டாம் என்று முடிவு செய்து ராஜினாமா செய்துவிட்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டதாக கூறுகிறார்.

மேலும் இந்த நிறுவனத்தின் வேலையை ராஜினாமா செய்ததற்குப் பிறகு சொந்த ஊருக்கே திரும்பி வந்ததாக கூறுகிறார். இவ்வாறு சொந்த ஊருக்கு வந்ததற்குப் பிறகு இந்த வெற்றிலை விவசாயத்தை தொடங்கியதாகவும் திரு ராமச்சந்திரன் அவர்கள் கூறுகிறார்.

திரு ராமச்சந்திரன் அவர்கள் இந்த வெற்றிலை விவசாயத்தை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் வெற்றிலை விற்பனையை நல்ல முறையில் சந்தைப்படுத்த முடியும் என்பதற்காகவே எனக் கூறுகிறார்.

இந்த வெற்றிலை வியாபாரத்தில் மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் நல்ல வருமானம் கிடைக்கும் என கூறுகிறார். மற்ற பயிர்களை விவசாயம் செய்வதை விட இந்த வெற்றிலையை விவசாயம் செய்தால் அதிக அளவு லாபம் கிடைக்கும் என்பதற்காக இதை தேர்ந்தெடுத்ததாக திரு ராமச்சந்திரன் அவர்கள் கூறுகிறார்.

மற்றும் இவருக்கு இந்த வெற்றிலை விவசாயம் நன்றாக தெரியும் எனவும் கூறுகிறார். மேலும் இவர் மற்ற பயிர்களை விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதாகவும் கூறுகிறார். அதையும் முயற்சி செய்து கொண்டு வருவதாக திரு ராமச்சந்திரன் அவர்கள் கூறுகிறார்.

வெற்றிலை கொடியினை நடும் முறை மற்றும் வளர்ப்பு முறை

வெற்றிலை நடுவதற்கு முதலில் மண்ணினை நன்றாக ஓட்ட வேண்டும் எனக் கூறுகிறார். அவ்வாறு ஓட்டியதற்கு பிறகு மண்ணினை நன்றாக 5 லிருந்து 10 நாட்கள் வரை காய வைக்கவேண்டும் என கூறுகிறார். இவ்வாறு மண்ணானது காய்ந்ததற்கு பிறகு அதில் தண்ணீர் கட்ட வேண்டும் என கூறுகிறார்.

அதன் பிறகு மண்ணில் நல்ல சத்து வருவதற்காக தக்க பூண்டு, அவுரி, சனப்பை போன்றவற்றை போட வேண்டும் எனக் கூறுகிறார். மேலும் இதனுடன் காட்டை நன்றாக ஓட்டிய பிறகு மாட்டு சாணத்தின் உரத்தை போட்டு நன்றாக மண்ணில் கலக்கி விடவேண்டும் என கூறுகிறார்.

இவ்வாறு மாட்டு சாணத்தின் உரத்தை மண்ணில் போடுவதால் வெற்றிலை கொடியினை மண்ணில் நடுவதற்கும், வெற்றிலை கொடியானது நன்றாக வளர்வதற்கும் மிக உதவியாக இருக்கும் என திரு ராமச்சந்திரன் அவர்கள் கூறுகிறார்.

வெற்றிலை ஆனது மிகவும் பெரிய அளவுகளில் இயற்கையான முறையில் வளரும் என கூறுகிறார். மேலும் இந்த வெற்றிலை கொடிகளுக்கு எந்தவித உரமும் போட வேண்டிய அவசியமில்லை என கூறுகிறார்.

இவரின் வெற்றிலை காட்டில் உள்ள முருங்கை மரத்தின் விதைகள், அகத்தி விதைகள் மற்றும் இந்த இயற்கை அமைப்பே வெற்றிலை கொடிகளை நன்றாக வளர வைக்கும் என திரு ராமச்சந்திரன் அவர்கள் கூறுகிறார். வெற்றிலைக் கொடியினை நடும்போது காலானது நல்ல வெயில் படும் அளவிற்கு தெற்கு வடக்கில் அமைக்க வேண்டும் என கூறுகிறார்.

இவ்வாறு வெற்றிலை கொடி நடுவதற்கு காலினை எடுத்ததற்கு பிறகு அதில் முருங்கை விதை சிறிதளவும், அகத்தி விதையை அதிக அளவும் போட வேண்டும் எனக் கூறுகிறார். இவ்வாறு அகத்தி விதைகள் அதிக அளவு போடுவதற்கு காரணம் அது சிறிது காலத்திலேயே பட்டுப் போய்விடும் என்பதற்காக என கூறுகிறார்.

முருங்கை விதையை சிறிதளவு போட்டாலும் அது அதிக காலம் மிகப்பரிய அளவில் வளர்ந்து நமக்கு நன்மையை தரும் என திரு ராமச்சந்திரன் அவர்கள் கூறுகிறார். வெயிலும், நிழலும் சரியான அளவில் வெற்றிலை கொடிக்கு கிடைக்க வேண்டுமென கூறுகிறார்.

ஏனெனில் நிழல் இல்லை எனில் வெற்றிலையானது வெயிலில் பட்டு வெளுத்து விடும் என கூறுகிறார். இவ்வாறு அகத்தியம், முருங்கையும் வளர்ந்ததற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு பின் வெற்றிலை கொடியை அதன் நடுவில் நட்டு வைக்க வேண்டும் என கூறுகிறார்.

இவ்வாறு நட்டு வைத்த வெற்றிலை கொடியானது துளிர் வைப்பதற்கு இருபத்தி ஏழு நாட்கள் தேவைப்படும் என கூறுகிறார். இவ்வாறு இந்த கொடி மூன்று மாதங்களுக்குப் பின் நன்றாக வளர்ந்ததற்கு பிறகு அதன் கொடியினை அகத்தி மற்றும் முருங்கை செடியின் மீது ஏற்றி விட வேண்டும் என கூறுகிறார்.

இந்த வெற்றிலைக் கொடியில் 8 மாதங்களுக்குப் பிறகு விளைச்சல் எடுக்கலாம் என கூறுகிறார். அதன் பிறகு தொடர்ந்து விளைச்சலை எடுத்துக் கொண்டே இருக்கலாம் என திரு ராமச்சந்திரன் அவர்கள் கூறுகிறார்.

இந்த வெற்றிலையை நட்டு நான்காவது மாதத்தில் சிறிய அளவில் வெற்றிலையை எடுக்கலாம் என கூறுகிறார். ஆனால் அதிக அளவு விளைச்சலை பெறுவதற்கு ஒரு வருடம் தேவைப்படும் என கூறுகிறார். மேலும் இந்த வெற்றிலை கொடியை நாம் சரியான முறையில் பராமரித்து வந்தால் பத்திலிருந்து 12 வருடங்கள் வரை விளைச்சலை நாம் நல்ல முறையில் பெற முடியும் என கூறுகிறார்.

வெற்றிலையை தொடர்ந்து பறித்துக்கொண்டே இருக்க வேண்டும் என கூறுகிறார். இல்லையெனில் வெற்றிலை ஆனது முதிர்ந்து விடும் என கூறுகிறார்.

பொதுவான சந்தைப்படுத்துதல் உத்தி

இந்த வெற்றிலையானது அதிக அளவு மார்க்கெட்டிங் உள்ள மாதங்கள் மார்கழியில் இருந்து தை, மாசி, பங்குனி மற்றும் சித்திரை வரையில் அதிக அளவு மார்க்கெட்டிங் வெற்றிலைக்கு இருப்பதாக கூறுகிறார்.

இந்த வெற்றிலையில் ஒரு பெட்டி வெற்றிலை 600 லிருந்து 700 ரூபாய் வரை விற்பனையாகும் என கூறுகிறார். இதுவே வெற்றிலை நல்ல வெற்றிலைகளாக இருந்தால் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும் என திரு ராமச்சந்திரன் அவர்கள் கூறுகிறார்.

இதில் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் மட்டுமே குறைந்த அளவு லாபத்தை தரும் என கூறுகிறார். மற்ற மாதங்களில் சமமான அளவு லாபத்தை தந்து கொண்டே இருக்கும் என கூறுகிறார்.

வெற்றிலையின் லாபம் மற்றும் செலவு

இந்த வெற்றிலைக்கொடி விவசாயத்தை நன்றாக தெரிந்தவர்கள் மட்டுமே போட முடியும் என கூறுகிறார். புதிதாக வெற்றிலை கொடியினை விவசாயம் செய்பவர்கள் 10 சென்ட் நிலத்திலேயே விவசாயம் செய்ய வேண்டும் என கூறுகிறார்.

50 சென்டில் ஒருவர் வெற்றிலை கொடி விவசாயத்தை செய்கிறார் என்றால் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகி விடும் என திரு ராமச்சந்திரன் அவர்கள் கூறுகிறார். வெற்றிலை விவசாயத்தில் முதல் ஒரு வருடத்திற்கு லாபத்தை பெற முடியாது எனவும் ஒரு வருடத்திற்கு பின்பே லாபத்தை பெற முடியும் எனவும் கூறுகிறார்.

இப்போது அனைத்து செலவுகளும் போக ஒரு மாதத்திற்கு 15000 அதிலிருந்து 20 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் என கூறுகிறார். மேலும் இந்த வெற்றிலை வளர்ப்பினை ஒரு வருடத்திற்கு மட்டும் மிகவும் பாதுகாப்பான முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

வெற்றிலை பயிரிடக்கூடிய சரியான இடங்கள்

இந்த வெற்றிலை கொடியினை அனைத்து இடங்களிலும் வைக்கலாம் என கூறுகிறார். ஆனால் அதிக அளவு வெயில் உள்ள இடங்களில் இந்த வெற்றிலை கொடியினை வைத்து வளர்த்த கூடாது எனக் கூறுகிறார். வெயிலும், நிழலும் சமமாக உள்ள இடத்திலேயே இந்த வெற்றிலை கொடியை வளர்க்க வேண்டுமென திரு ராமச்சந்திரன் அவர்கள் கூறுகிறார்.

மேலும் வெற்றிலை கொடி உள்ள வாய்க்காலில் தண்ணீர் நின்று கொண்டே இருக்கக் கூடாது எனவும் கூறுகிறார்.அனைத்து மண் வகைகளிலும் இந்த வெற்றிலை விவசாயத்தை செய்யலாம் எனக் கூறுகிறார். களிமண் காட்டில் மட்டும் வெற்றிலை கொடியை வளர்த்துவது சிறிது கடினமாக இருக்கும் என கூறுகிறார்.

மேலும் திரு ராமச்சந்திரன் அவர்கள் இந்த வெற்றிலை கொடியினை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார். மேலும் வெற்றிலை கொடியினை வாங்கி செல்லும் வாடிக்கையாளர்கள் அதனை ஒரு நாளிலேயே நட்டு விட வேண்டும் எனக் கூறுகிறார்.

இல்லையெனில் வெற்றிலை கொடி ஆனது வாடி விடும் என திரு ராமச்சந்திரன் அவர்கள் கூறுகிறார்.

வெற்றிலை கொடி விவசாயத்தில் செய்யக்கூடாத தவறுகள்

முதலில் வெற்றிலை கொடி விவசாயத்தை ஆரம்பிக்கும்போது சில தவறுகள் ஏற்படும் எனக் கூறுகிறார். அதனை திருத்திக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

திரு ராமச்சந்திரன் அவர்கள் முதலில் வெற்றிலை விவசாயத்தை ஆரம்பிக்கும் போது அதனை பராமரிக்கும் முறையை மிக காலதாமதமாகவும், வெற்றிலையைப் பறிப்பதற்கு காலதாமத படுத்தியதாகவும் கூறுகிறார். எனவே இந்த தவறினை யாரும் செய்ய வேண்டாம் என திரு ராமச்சந்திரன் அவர்கள் கூறுகிறார்.

மேலும் வெற்றிலைக் கொடியினை அதன் பருவத்தில் பயிர் செய்தால் இன்னும் அதிக அளவு லாபத்தை பெற முடியும் எனவும் கூறுகிறார்.மேலும் அகத்தி மற்றும் முருங்கை விதைகளை போடும் போது தண்ணீரில் ஊற வைக்காமல் போட்டு விட்டதாக கூறுகிறார்.

இவ்வாறு விதையை நீரில் ஊற வைக்காமல் போடுவது மிக தவறு என கூறுகிறார். எனவே இதனை சரியாக செய்ய வேண்டும் எனவும் திரு ராமச்சந்திரன் அவர்கள் கூறுகிறார். இதேபோல் முதலில் வெற்றிலை விவசாயத்தை தொடங்குபவர்கள் 10 சென்ட் நிலத்திலெயே விவசாயம் செய்ய வேண்டும் என திரு ராமச்சந்திரன் அவர்கள் கூறுகிறார்.

அதில் அதிக அளவு லாபத்தை பெற்ற பிறகு பெரிய அளவில் வெற்றிலை விவசாயத்தை செய்யலாம் என கூறுகிறார். இந்த வெற்றிலைகள் ஆனது நல்ல காரியங்கள் மற்றும் கெட்ட காரியங்களுக்குப் பயன்படும் எனவும் கூறுகிறார். முக்கியமாக இது திருமண நிகழ்ச்சிகளில் அதிக அளவு பயன் படும் எனவும் திரு ராமச்சந்திரன் அவர்கள் கூறுகிறார்.

மேலும் வெற்றிலையை மதிப்புக்கூட்டல் முறையில் விற்பனை செய்தால் இதைவிட அதிக அளவு லாபத்தை பெறமுடியும் என கூறுகிறார். திரு ராமச்சந்திரன் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் அதிக அளவு லாபத்துடன் இந்த வெற்றிலை விவசாயத்தை இயற்கையான சூழலில் செய்து வருகிறார்.

மேலும் படிக்க:பண்ணைகளில் பால் குளிரூட்ட பயன்படும் சாதனம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

One comment

Leave a Reply