பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் ஒரு பண்ணையாளர் மிகவும் சிறப்பான முறையில் பரண் மேல் போயர் மற்றும் தலைச்சேரி ஆடுகளை வளர்த்து அதன் மூலம் அதிக வருமானத்தை பெற்று வருவதாகக் கூறுகிறார். இவரையும், இவருடைய பரண் மேல் ஆடு வளர்ப்பு முறையை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
The beginning of the goat farm
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் ஒரு பண்ணையாளர் மிகவும் சிறப்பான முறையில் பரண்மேல் போயர் மற்றும் தலைச்சேரி ஆடுகளை வளர்த்து அதன்மூலம் நிறைந்து வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவர் இந்த ஆட்டுப் பண்ணையை கடந்த இரண்டு வருடங்களாக நடத்தி வருவதாகவும், ஆட்டுப் பண்ணையை தொடங்குவதற்கு முன்பு இவர் விவசாயம் செய்து வந்ததாகவும் அதன் பிறகு ஆடுகள் வளர்ப்பின் மீது ஆர்வம் வந்து பண்ணையை தொடங்கியதாக கூறுகிறார்.
மேலும் இவ்வாறு பண்ணையை தொடங்கும் போது அதனை பரண்மேல் வளர்த்தால் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்து அதிக அளவு லாபத்தை நமக்கு அளிக்கும் என்ற எண்ணத்தில் இவர் பரண் அமைத்து அதன் மேல் ஆடுகளை சிறப்பான முறையில் வளர்க்க தொடங்கியதாக கூறுகிறார்.
மேலும் இப்பொழுது இவர் போயர் மற்றும் தலைச்சேரி ஆடுகளை சிறப்பான முறையில் வளர்த்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
சிறப்பான ஆட்டுப்பண்ணை
இவருடைய ஆட்டுப்பண்ணையில் போயர் மற்றும் தலைச்சேரி ஆடு வகைகளை மிக சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும், இவைகளை இவர் மிகுந்த பராமரிப்புடன் வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் போயர் ஆடு வகைகளை ஆண் ஆடுகளாக வைத்துள்ளதாகவும் மற்றும் தலைச்சேரி ஆடுகளை பெண் ஆடுகளாக வைத்துள்ளதாகவும், இந்த இரண்டு ஆடுகளை வைத்து இனப்பெருக்கம் செய்து ஆடுகளை உற்பத்தி செய்து வளர்ந்து வருவதாகவும் கூறுகிறார்.
மற்றும் இவர் இவ்வாறு போயர் மற்றும் தலைச்சேரி ஆடுகளை கலப்பு இனப்பெருக்கம் செய்து வளர்ப்பதற்கு காரணம் இதன்மூலம் தரமான போயர் ஆடுகள் பிறக்கும் என்பதால் என கூறுகிறார்.
இப்பொழுது இவருடைய பண்ணையில் 300 ஆடுகள் வரை இருப்பதாகவும் 500 ஆடுகள் வரை கொண்டு வருவது இவருடைய இலக்கு எனவும் கூறுகிறார்.
மேலும் இவர் பரண்மேல் ஆடுகளை வளர்ப்பதால் ஆடுகளுக்கு நோய்கள் அதிக அளவில் தாக்காது எனவும் இதுவே இதனை தரையில் வளர்க்கும் போது ஆடுகளுக்கு நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார்.
Goat rearing system and fodder
தலைச்சேரி ஆடுகளை வளர்ப்பதற்கு இவர் சிறந்த பரண் அமைத்து அந்த பரண்மீது ஆடுகளை வளர்த்து வருவதாகவும், இவ்வாறு பரண்மீது ஆடுகளை வளர்ப்பதால் ஆடுகளுக்கு எந்த வித நோய்களும் ஏற்படுவதில்லை எனவும் கூறுகிறார்.
மேலும் இவர் பரண்மீது ஆடுகள் வளர்ப்பதால் ஆடுகள் நல்ல முறையில் வளர்வதாகவும், தரையில் ஆடுகளை வளர்ப்பதை விட பரண்மேல் ஆடுகள் வளர்ப்பது சிறப்பான ஒன்று எனவும் கூறுகிறார்.
மேலும் ஆடுகள் இருக்கும் பரணை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும் எனவும், இல்லையெனில் ஆடுகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு விடும் எனவும் கூறுகிறார்.
மேலும் பரணின் மீது ஆடுகள் உண்பதற்கு தீவனங்களை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு வைத்து விடுவதாகவும் அந்த பாத்திரத்தில் ஆடுகள் வந்து தீவனத்தை உண்டு கொள்ளும் எனவும் கூறுகிறார்.
மேலும் ஆடுகள் நீர் அருந்துவதற்கு ஒரு பாத்திரத்தை வைத்து இருப்பதாகவும் ஆடுகளுக்கு நீர் தேவைப்படும் போது அவை அந்த நீரினை வந்து அருந்தி கொள்ளும் எனவும் கூறுகிறார்.
காலை நேரங்களில் ஆடுகளுக்கு இவர் கடலைக்கொடியை தீவனமாக அளிப்பதாகவும் மற்றும் மதியம் மற்றும் மாலை நேரங்களில் பசுந்தீவனங்களை அளிப்பதாகவும் கூறுகிறார்.
பசுந்தீவனமாக வேலி மசாலை 60% அளித்து வருவதாகவும் மற்றும் சூப்பர் நேப்பியர் வகையை 40 சதவீதம் அளவு ஆடுகளுக்குத் தீவனமாக இவர் அளித்து வருவதாகவும் கூறுகிறார்.
புரத சத்து அதிகமாக உள்ள வேலி மசாலா, அகத்தி மற்றும் முருங்கை ஆகிய பசுந்தீவன வகைகளை இவர் தீவனமாக ஆடுகளுக்கு அளித்து வருவதாகவும் இதனால் ஆடுகள் சிறப்பான முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த பசுந்தீவன வகைகளை இவருடைய நிலத்திலேயே விளைச்சல் செய்து அதனை அறுவடை செய்து ஆடுகளுக்குத் தீவனமாக அளித்து வருவதாக கூறுகிறார்.
ஆடுகளின் இறைச்சி மற்றும் நோய் தடுப்பு முறை
போயர் மற்றும் தலைச்சேரி ஆடுகளின் இறைச்சி உண்பதற்கு மிக சுவையாக இருக்கும் எனவும்,மற்றும் இவர் இந்த ஆடுகளை பரண் மீது வைத்து ஆரோக்கியமான முறையில் வளர்ப்பதால் இதனுடைய இறைச்சியின் சுவை இன்னும் அதிக அளவில் சுவையாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
ஆனால் சிலர் தரையில் வைத்து வளர்க்கும் ஆடுகளின் இறைச்சி மட்டுமே சுவையாக இருக்கும் எனவும், பரண் மீது வைத்து வளர்க்கும் ஆடுகளின் இறைச்சி சுவையாக இருக்காது எனவும் கூறுகின்றனர் எனவும் ஆனால் இந்தக் கருத்து முற்றிலும் தவறானது எனவும் இவர் கூறுகிறார்.
மேலும் ஆடுகளை தரையில் வைத்து வளர்க்கும் போது அதனுடைய இறைச்சியின் அளவு குறைந்து விடும் எனவும் ஆனால் அதனை பரண்மீது வைத்து பராமரிப்புடன் வளர்க்கும் போது அதனுடைய இறைச்சியின் அளவு அதிகமாகவே இருக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் ஆடுகளை தரையில் வளர்க்கும்போது அவைகளுக்கு உண்ணிகள் தாக்குதல் ஏற்படுவதற்கு அதிக அளவில் வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆனால் பரண்மீது வளர்க்கும்போது உண்ணிகளின் தாக்குதல் அதிக அளவில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறுகிறார்.
மேலும் ஆடுகளுக்கு நோய்கள் ஏற்படுவதற்கு முன்பே அதனை தடுப்பதற்கு தடுப்பூசிகளை ஆடுகளுக்கு போட்டுவிட வேண்டும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த ஆடுகள் பரண்மேல் வளர்ப்பதால் இவைகளுக்கு சளி பிரச்சனை ஏற்படாது எனவும்,ppr,fmt, goat box,tt போன்ற நோய்களை தடுக்க தடுப்பூசிகளை நிச்சயமாக ஆடுகளுக்கு போட வேண்டும் எனவும் இல்லையெனில் ஆடுகள் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாகவும் கூறுகிறார்.
மேலும் இந்த ஆடுகள் பத்திலிருந்து பதினைந்து வருடங்கள் வரை உயிருடன் இருக்கும் எனவும் கூறுகிறார்.
Sales method and profit
போயர் மற்றும் தலைச்சேரி ஆடுகளை இவர் பரண்மீது வைத்து மிகுந்த பராமரிப்புடன் வளர்த்து வருவதால் அவைகளுக்கு எந்த நோய்களும் ஏற்படாமல் வளர்ந்து நல்ல சுவையான இறைச்சியை தருவதாக கூறுகிறார்.
ஆடுகளை இவர் வெளியில் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் இவருடைய பண்ணைக்கு வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கும் ஆடுகளை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
ஒரு ஆடு ஒரு லட்சம் ரூபாய் என்ற விலையில் இவர் விற்பனை செய்து வருவதாகவும்,அதிகளவில் வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து ஆடுகளை வாங்கி செல்வதாகவும் இதனால் இவர் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
ஆடுகளின் இறைச்சி சுவையாக இருப்பதினால் இறைச்சிக்காகவும் அதிகளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து ஆடுகளை வாங்கி செல்வதாக கூறுகிறார்.
மேலும் இவர் பரண்மேல் ஆடுகளை வளர்த்து அதனுடைய இறைச்சியை விற்பனை செய்தும்,ஆடுகளை விற்பனை செய்தும் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
பரண் மேல் ஆடு வளர்ப்பு முறையை இவர் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் படிக்க:அசில் கிராஸ் கோழி வளர்ப்பில் நிறைந்த லாபம்.