திரு கணேசன் அவர்கள் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள கரடிக்கல் என்னும் கிராமத்தில் கோவைக்காய் உற்பத்தியை மிக சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய கோவைக்காய் உற்பத்தி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
திரு கணேசன் அவர்களின் வாழ்க்கை
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள கரடிக்கல் என்னும் கிராமத்தில் திரு கணேசன் அவர்கள் கோவைக்காய் உற்பத்தியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இதன் மூலம் இவர் அதிகளவு லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் இந்த கோவைக்காய் உற்பத்தியை இவருடைய நண்பரின் ஆலோசனையின் மூலம் தொடங்கியதாகவும், அதிகளவில் யாரும் உற்பத்தி செய்யாத இந்த கோவைக்காய் சாகுபடி இவர் தொடங்கி இப்பொழுது அதன் மூலம் அதிக லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் திரு கணேசன் அவர்கள் பீர்க்கங்காய் மற்றும் திராட்சை சாகுபடி செய்து வருவதாகவும், கோவைக்காய் தண்டினை கூடலூரில் இருந்து எடுத்து வந்து நட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மற்றும் இந்த கோவைக்காய் உற்பத்தியில் அதிக அளவு விளைச்சல் வருவதால் இவர் இந்த கோவைக்காய் உற்பத்தியை மிக சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், மேலும் இவர் இந்த கோவைக்காய் உற்பத்தியை பத்து வருடங்களாக செய்து வருவதாக கூறுகிறார்.
Types of Courgettes
திரு கணேசன் அவர்கள் கோவைக்காயை உற்பத்தியை மிகவும் சிறப்பான முறையில் இயற்கை வழி முறையிலேயே செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த கோவைக்காய் வகைகளில் மூன்று வகைகள் இருப்பதாகவும் அதில் இவர் நாட்டு கோவைக்காய் வகையை உற்பத்தி செய்து வருவதாகவும், இந்த நாட்டு கோவைக்காய் வகைகள் அதிக அளவு விளைச்சலை தரும் எனவும் கூறுகிறார்.
மேலும் மீதியுள்ள இரண்டு கோவைக்காய் வகைகளை இவர் உற்பத்தி செய்தது இல்லை எனவும், ஆனால் அந்த கோவைக்காய் வகைகள் அதிக அளவு விளைச்சலைத் தராது எனவும் திரு கணேசன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த நாட்டு கோவைக்காய் ஆனது அனைத்து வகை மண்களிலும் மிக சிறப்பான முறையில் வளர்ந்து விளைச்சலை தரும் எனவும், ஆனால் களிமண் காட்டில் வளர்வதற்கு வாய்ப்புகள் குறைவு எனவும் கூறுகிறார்.
கோவைக்காய் வளர்ப்பு முறை
கோவைக்காய் செடியானது தண்டுகளின் மூலமே வளரும் எனவும் இது விதைகளின் மூலம் வளராது எனவும் திரு கணேசன் அவர்கள் கூறுகிறார்.
நிலத்தில் தண்டினை நடுவதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது பதப்படுத்தி வைத்துக் கொண்டு அதில் தொழு உரத்தை போட வேண்டும் எனவும், பிறகு தண்டினை நிலத்தில் நடலாம் என கூறுகிறார்.
மேலும் இவர் தண்டனை குழி தோண்டி நட்டு இருப்பதாகவும், இவர் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்துவதனால் குழி தோண்டி தண்ணீர் விட்டு வளர்த்து வருவதாகவும், சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தாதவர்கள் வாய்க்கால் முறையில் தண்டினை நட்டு வளர்க்கலாம் என கூறுகிறார்.
மேலும் கோவைக்காய் தண்டினை 10 அடி இடைவெளி விட்டு நட வேண்டும் எனவும், நட்டு 30-வது நாளில் கொடியானது பந்தலில் ஏறி நன்றாக வளரும் என திரு கணேசன் அவர்கள் கூறுகிறார்.
கோவைக்காய் தண்டினை நடுவதற்கு முன்பே பந்தலை அமைத்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், இது முழுவதும் உணவிற்காக உற்பத்தி செய்யப்படுவதால் பந்தல் முறையில் வளர்ப்பது மிகவும் சிறப்பான முறை எனவும் கூறுகிறார்.
Yield method and harvest method
கோவைக்காய் தண்டினை நட்டு 30-வது நாளில் பந்தலில் கொடி ஏறி விடும் எனவும், இவ்வாறு ஏறும் போதே கோவைக்காய் பிஞ்சு வைக்க ஆரம்பம் செய்து விடும் எனவும் திரு கணேசன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் நிலத்திலிருந்து மேலே செல்லும் கொடியில் கணுவிற்கு கணு பிஞ்சு வைக்கும் எனவும், 60வது நாளில் கோவைக்காய் நன்றாக வளர்ந்து அதிக அளவு விளைச்சலை தரும் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு விளைந்த கோவை காய்களை இவர் கைகளின் மூலம் பறித்து அறுவடை செய்து வருவதாகவும், இந்த கோவைக்காய் உற்பத்தியின் மூலம் இவருக்கு அதிக அளவு லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இந்த கோவைக்காய் சாகுபடியில் 2 வருடம் வரை விளைச்சலை எடுக்க முடியும் எனவும், இவர் இந்த கோவைக்காய் சாகுபடியில் இரண்டு வருடம் விளைச்சலை எடுத்து வருவதாகவும் விளைச்சல் முடிந்ததும் மீண்டும் தண்டுகளின் மூலம் உற்பத்தியை தொடங்குவதாக கூறுகிறார்.
நீரினை அளிக்கும் முறை மற்றும் பராமரிப்பு முறை
திரு கணேசன் அவர்கள் இந்த கோவைக்காய் செடிகளுக்கு எட்டு நாட்களுக்கு ஒருமுறை நீரினை அளித்து வருவதாகவும், நீரினை செடிகளுக்கு அளிப்பதற்கு இவர் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.
சொட்டு நீர் பாசன முறையை அமைத்ததற்கு இவருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆனதாகவும், இரண்டு ஏக்கர் நிலத்தில் இவர் சொட்டு நீர் பாசனத்தை அமைத்து இருப்பதாகவும் இந்த பாசன முறை இவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் கூறுகிறார்.
15 நாட்களுக்கு ஒரு முறை நிலத்தில் களை எடுக்க வேண்டுமெனவும், இவ்வாறு களை எடுத்து முடித்த பிறகு செடிகளுக்கு புண்ணாக்கு மற்றும் தொழு உரத்தை அளிக்க வேண்டும் எனவும் இவ்வாறு இதனை அளித்தால் விளைச்சல் நல்ல முறையில் இருக்கும் எனவும் திரு கணேசன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவருடைய கோவைக்காய் தோட்டம் கொய்யா தோட்டத்தின் அருகில் உள்ளதால் கற்றாழை பூச்சி என்னும் நோய் கோவைக்காய் செடிகளுக்கு வரும் எனவும் மற்றபடி எந்தவித நோய்களும் இந்தச் செடிகளுக்கு வருவதில்லை எனவும் கூறுகிறார்.
இவ்வாறு ஏற்படும் இந்த நோய்க்கு இவர் மருந்தினைப் பயன்படுத்தி வருவதாகவும் ஆனால் அதிக அளவில் இதற்கு மருந்துகள் தேவை இல்லை எனவும், மழை பெய்தால் இந்த நோய் சரியாகி விடும் எனவும் கூறுகிறார்.
Benefit and profit of Courgettes
கோவைக்காய்களில் அதிக மருத்துவ குணம் இருப்பதாகவும் இதனை உண்பதன் மூலம் சர்க்கரை நோய் மற்றும் அழுத்தம் குறையும் எனவும் மற்றும் இந்த கோவைக்காயில் இயற்கையிலேயே அதிக அளவு சத்துக்கள் நிறைந்த இருப்பதாகவும் திரு கணேசன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவர் இந்த கோவைக்காய்களை சந்தைகளில் விற்பனை செய்து வருவதாகவும், இதனை உண்பதால் அதிகளவு சத்துக்கள் கிடைக்கும் என்பதால் அதிக வாடிக்கையாளர்கள் இந்த கோவைக்காய்களை வாங்குவதாகவும் கூறுகிறார்.
மேலும் திரு கணேசன் அவர்கள் கோவைக்காய் உற்பத்தியில் ஒரு வாரத்திற்கு ஒரு டன் அளவு கோவைக்காயை விளைச்சல் செய்து விற்பனை செய்து வருவதாகவும், ஒரு வாரத்தில் ஒரு டன் அளவு கோவைக்காய் விளைச்சல் ஆவதால் இதன் விற்பனையில் இவருக்கு அதிகளவு லாபம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.
கோவைக்காய் உற்பத்தியில் இவர் மாதத்திற்கு 80 ஆயிரம் ரூபாய் வரை லாபத்தை பெற்று வருவதாகவும், மேலும் இந்த கோவைக்காய் உற்பத்தியில் லாபம் அதிக அளவில் வரும் எனவும் எந்த வகையிலும் நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறுகிறார்.
திரு கணேசன் அவர்கள் மிகவும் சிறப்பாக இயற்கை முறையில் கோவைக்காய் உற்பத்தியை செய்து அதன் மூலம் அதிக அளவில் லாபத்தை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க:சிறப்பான சிறுவிடை கோழி வளர்ப்பு.