நன்னீர் முத்து வளர்ப்பில் அதிக லாபம்.

திரு விது பாலு அவர்கள் கோயம்புத்தூரில் உள்ள சிங்கா நகர் என்னும் ஊரில் நன்னீர் முத்து வளர்ப்பை செய்து அதன் மூலம் அதிக அளவில் லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய நன்னீர் முத்து வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.




The beginning of pearl culture

கோயம்புத்தூரில் உள்ள சிங்கா நகர் என்னும் ஊரில் திரு விதுபாலு அவர்கள் வசித்து வருவதாகவும், இவர் இங்கு இவருடைய வீட்டின் மாடியில் நன்னீர் முத்து வளர்ப்பு செய்து வருவதாகவும் இதன் மூலம் அதிகளவு லாபம் கிடைப்பதாகவும் கூறுகிறார்.

திரு விது பாலு அவர்களுடைய மனைவி அக்குபஞ்சர் மருத்துவராக இருந்து வருவதாகவும், இதனால் இவர்களிடம் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்த முத்து வளர்ப்பை தொடங்கியதாகவும் கூறுகிறார்.

இந்த முத்து வளர்ப்பின் மூலம் சில முத்துக்களில் உள்ள இறைச்சியை உண்ணும் போது ஆண்மை குறைவு சரியாகும் என்பதாலும் இதனை இவர்களிடம் வரும் நோயாளிகளுக்கு கொடுத்து சரி செய்வதற்கும் இந்த முத்து வளர்ப்பை தொடங்கியதாக கூறுகிறார்.

மேலும் திரு விது பாலு அவர்களுக்கு இந்த முத்து வளர்ப்பின் மீது அதிக அளவு ஆர்வம் இருந்து வந்ததாகவும், இதனை வளர்ப்பதால் லாபம் கிடைக்கும் என்பதாலும் இதனைத் தொடங்கி இப்பொழுது சிறப்பாக நடத்தி வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இந்த முத்து வளர்ப்பைப் பற்றி பல்கலைக்கழகம் சென்று அறிந்து கொண்டதாகவும் மற்றும் குஜராத் நாட்டில் சில முத்து வளர்ப்பு செய்துவரும் பண்ணையாளர்களிடம் சென்று அறிந்து கொண்டு அதன் பிறகு இந்த முத்து வளர்ப்பை தொடங்கியதாக கூறுகிறார்.




முத்து வளர்ப்பின் சிறப்பு

முத்துக்கள் இறந்த பிறகு அதனுடைய உள்ளே இருக்கும் ஓட்டினை எடுத்து தூளாக செய்வார்கள் எனவும் இதனை முத்து தூள் என அழைப்பார்கள் எனவும், இதனை நாம் உண்ண முடியும் எனவும் இதனைப் பற்றி இவர் தற்போது படித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த முத்து தூள் நமக்கு அதிக அளவு பயனுள்ளதாக இருக்கும் எனவும்,தங்க புஷ்பத்தை நாம் உண்ணும் போது கிடைக்கும் நன்மையானது இந்த முத்து தூளினை உண்ணும் போது நமக்கு கிடைக்கும் எனவும் திரு விது பாலு அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த முத்து தூளில் இருந்து கிடைக்கும் பயன்களைப் பற்றி தற்பொழுது இவர் ஆராய்ச்சி செய்து வருவதாகவும்,இதற்கு சில மாணவர்கள் இவருக்கு உதவியாக இருப்பதாகவும் கூறுகிறார்.

முத்து தூளினை முகத்திற்கு பயன்படுத்தும் போது முகமானது பளபளப்பாக இருக்குமெனவும், மேலும் இதனை வைத்து இவர் புது முத்துக்களை உருவாகி வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் முத்துக்களை உருவாக்கும் போது நமக்கு தேவையான வடிவங்களில் அவற்றை உருவாக்கிக்கொள்ள முடியும் எனவும், இதற்கு இரண்டரை வருடம் தேவைப்படும் எனவும் திரு விது பாலு அவர்கள் கூறுகிறார்.




Pearl culture method

முத்து வளர்ப்பை தொடங்குவதற்கு முன்பு அதனைப் பற்றி நன்கு அறிந்த பிறகே தொடங்க வேண்டும் எனவும் இல்லையெனில் இந்த முத்து வளர்ப்பில் நஷ்டம் ஏற்பட்டு விடும் எனவும் கூறுகிறார்.

மீன்களை வளர்ப்பது போன்று இந்த முத்துக்களையும் வளர்த்து விடலாம் என்ற எண்ணத்துடன் எந்த பயிற்சியையும் பெறாமல் முத்து வளர்ப்பை தொடங்குவது நல்லது இல்லை எனவும் திரு விது பாலு அவர்கள் கூறுகிறார்.

திரு விது பாலு அவர்கள் முத்துக்கள் வளர்ப்பு முறையைப் பற்றி அறிந்து கொள்ள வருபவர்களுக்கு கற்றுத் தருவதாகவும்,மேலும் இவர் முத்துக்களை விற்பனை செய்யும் போது வாங்கும் வாடிக்கையாளர்கள் முத்துக்களை பற்றி அறிந்து கொண்டவரா என்பதை பற்றி தெரிந்து கொண்ட பிறகே அவருக்கு அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் சிப்பிகளை நல்ல முறையில் வளர்த்து அதிலிருந்து முத்துக்களை எடுத்து வருவதாகவும், இவ்வாறு இவர் முத்துக்களை எடுப்பதற்கு காரணம் முத்து வளர்ப்பைப் பற்றி நன்றாக அறிந்து கொண்டதே காரணம் எனவும் கூறுகிறார்.

ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் நன்னீரை ஊற்றி அதில் முத்துக்களை வளர்த்து வருவதாகவும் இந்த முத்துக்கள் சிப்பியிலுள்ள ஒரு திரவத்தின் மூலம் உருவாவதாகவும் திரு விது பாலு அவர்கள் கூறுகிறார்.

மேலும் முத்துக்கள் நீரின் உள்ளே இருக்கும் போது அதனுடைய ஆக்சிஜன் அளவு சரியாக இருப்பதற்கு மோட்டார் போன்ற அமைப்பில் ஒரு இயந்திரத்தை பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.

நீரினை அளிக்கும் முறை மற்றும் பாதுகாப்பு முறை

முத்துக்களை வளர்ப்பதற்கு குடிக்கும் நீரினை பயன்படுத்தலாம் எனவும் அல்லது போர் நீரினை பயன்படுத்தலாம் எனவும்,இந்த முத்துக்கள் வளர்வதற்கு தேவையான PH அளவு நீரில் இருக்கிறதா என்பதை பார்த்த பிறகே அந்த நீரை பயன்படுத்த வேண்டும் எனவும் திரு விது பாலு அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவைகள் வளர்வதற்கு வெப்பமாக இருக்கும் பகுதிகள் மட்டுமே பொருத்தமாக இருக்கும் எனவும்,குளிர்ச்சியாக இருக்கும் இடங்களில் இந்த முத்து வளர்ப்பு செய்ய முடியாது எனவும் கூறுகிறார்.

மேலும் குளிர்ச்சியாக இருக்கும் இடத்தில் வளர்க்கும் போது அந்த இடம் சூடாக இருப்பதற்கு ஹீட்டர் போன்ற சாதனங்களை பயன்படுத்தி இடத்தை சூடாக வைத்துக் கொண்டு முத்து வளர்ப்பு செய்யலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் குளிர் பிரதேசங்களில் வெப்ப சாதனங்கள் இல்லாமல் முத்துக்களை வளர்ப்பது என்பது முடியாத ஒரு காரியம் எனவும்,23 டிகிரி செல்சியஸ் குறைவாக வெப்பநிலை சென்று விட்டால் முத்துக்கள் நிச்சயமாக இறந்து விடும் எனவும் கூறுகிறார்.

முப்பத்திஎட்டு டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் முத்துக்களை வளர்க்கும்போது உள்ளே இருக்கும் முத்துகள் நல்ல முறையில் வளரும் எனவும் மற்றும் மேலே இருக்கும் சிப்பி மிகவும் உறுதியாக இருக்கும் எனவும் திரு விது பாலு அவர்கள் கூறுகிறார்.

Sales method and profit

முத்துக்களின் உள்ளே இருக்கும் இறைச்சியை உணவுகளாக பயன்படுத்தலாம் எனவும்,இதனை உண்பதால் நமது உடலுக்கு மிகவும் நன்மை எனவும் திரு விது பாலு அவர்கள் கூறுகிறார்.

திரு விது பாலு அவர்கள் இந்த முத்துக்களின் இறைச்சியை உணவகங்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும்,இந்த உணவகங்களில் உணவு உண்ண வரும் மக்கள் இந்த முத்து இறைச்சியை விரும்பி உண்பதாகவும் கூறுகிறார்.

இதனை உண்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நன்மையை அளிக்கும் எனவும்,இதனுடைய சுவை மிகவும் நன்றாக இருக்கும் எனவும் திரு விது பாலு அவர்கள் கூறுகிறார்.

ஒரு முத்து 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்து வருவதாகவும்,இதில் அதிகளவு மருத்துவ குணம் இருந்து வருவதாகும் இதனை அதிக அளவு வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் இதன் மூலம் அதிகளவு லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

வட்ட வடிவில் இருக்கும் முத்துக்கள் உருவாவதற்கு இரண்டரை வருடம் தேவைப்படும் எனவும்,நம்முடைய தேவைக்கு ஏற்ப முத்துக்களை வடிவமைத்துள்ள முத்துக்கள் உருவாவதற்கு ஏழிலிருந்து எட்டு மாதங்கள் ஆகும் எனவும் கூறுகிறார்.

சிப்பிகள் இறந்துவிட்டது எனில் அது இரண்டு செண்டிமீட்டர் திறந்து விடும் எனவும் இதனை வைத்து அவை இறந்து விட்டதா என்பதை அறிந்து கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.




திரு விது பாலு அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இவருடைய வீட்டின் மாடியில் நன்னீர் முத்து வளர்ப்பை செய்து வருகிறார்.

மேலும் படிக்க:தரமான கருப்பு கவுனி நெல் விவசாயம்.




(G)

Leave a Reply