துளசி சாகுபடியில் அதிக வருமானம்.

திரு அய்யனார் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரும்பபட்டி என்னும் கிராமத்தில் துளசி விவசாயத்தை குறைந்த முதலீட்டில் செய்து அதன் மூலம் அதிக அளவு வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய துளசி சாகுபடியை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

Beginning of basil cultivation

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரும்பபட்டி என்னும் கிராமத்தில் திரு அய்யனார் அவர்கள் வசித்து வருவதாகவும், இவர் இங்கு துளசி விவசாயத்தை மிக குறைந்த முதலீட்டில் செய்து அதிக வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவர் இந்த துளசி விவசாயத்தை கடந்த 15 வருடங்களாக செய்து வருவதாகவும், இதில் இவர் குறைந்த அளவு முதலீட்டையே பயன்படுத்துவதாகவும் ஆனால் இதன் விற்பனையில் அதிகளவு லாபம் இவருக்கு கிடைப்பதாகவும் கூறுகிறார்.

சேலத்தில் மரிக்கொழுந்து செடியை வாங்க சென்றபோது அங்கு துளசி விற்பனையை சிலர் செய்து கொண்டிருந்ததாகவும், அதனை பார்த்து இவரும் விதைகளை வாங்கி வந்து துளசி சாகுபடியை தொடங்கியதாக திரு அய்யனார் அவர்கள் கூறுகிறார்.

துளசி சாகுபடி

திரு அய்யனார் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் துளசி சாகுபடி செய்து, யாரும் அதிக அளவில் செய்யாமல் இருக்கின்ற இந்த துளசி விவசாயத்தை இவர் எடுத்து செய்து மிக சிறப்பான முறையில் லாபத்தை பெற்று வருகிறார்.

ஒரு ஏக்கர் நிலத்தில் துளசி சாகுபடி செய்வதற்கு 11/2 லட்சம் நாற்றுக்கள் தேவைப்படும் எனவும், இவரே விதைகளின் மூலம் நாற்றுகளை உற்பத்தி செய்து அதனை எடுத்து பயன்படுத்திக் கொள்வதாகவும் திரு அய்யனார் அவர்கள் கூறுகிறார்.

நிலத்தை நன்றாக உழுது விட்டு ஒன்றரை அடி இடைவெளியில் நாற்றுக்களை நடவு செய்தால் நல்ல முறையில் வளரும் எனவும், இந்த முறையும் செய்தால் விளைச்சல் அதிக அளவில் இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் இந்த துளசி சாகுபடியை இயற்கையான முறையிலேயே செய்து வருவதாகவும், இதற்கு என்று இவர் எந்த செலவையும் அதிக அளவில் செய்யவில்லை எனவும், எந்த செலவையும் செய்யாமலே இவர் இதில் அதிக அளவு லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

Harvesting method

திரு அய்யனார் அவர்கள் இந்த துளசி சாகுபடியை ஒரு வருடம் செய்வதாகவும், ஒரு வருடத்திற்கு இந்த துளசி சாகுபடி செய்ய முடியும் எனவும் இதில் அதிக அளவு லாபத்தை பெற முடியும் எனவும் கூறுகிறார்.

துளசி சாகுபடி செய்து முதல் அறுவடையை ஒரு மாதத்திற்கு பிறகு செய்யலாம் எனவும் அதன் பிறகு இரண்டாவது அறுவடையை இருபதிலிருந்து இருபத்தைந்து நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம் எனவும் திரு அய்யனார் அவர்கள் கூறுகிறார்.

நாம் செடிகளுக்கு அளிக்கும் உரம் மற்றும் மருந்துகளை பொருத்து செடிகளின் வளர்ச்சி அதிக அளவில் இருக்கும் எனவும், இவ்வாறு ஒரு வருடம் வரை துளசி சாகுபடியில் விளைச்சலை எடுக்க முடியும் என கூறுகிறார்.

உரம் மற்றும் மருந்தினை அளிக்கும் முறை

துளசி செடிகள் வளர்ந்து காட்டில் களைச்செடிகள் முளைத்து விட்டால் அவற்றை நீக்கி விட வேண்டும் எனவும், இல்லையெனில் துளசி செடிகளுக்கு கிடைக்க வேண்டிய சத்துக்களை அந்த களைச்செடிகளை எடுத்துக் கொள்ளும் என கூறுகிறார்.

ஒரு அறுவடைக்கு ஒருமுறை களைச் செடிகளை நீக்கி விட வேண்டும் எனவும் இல்லையெனில் அதிக அளவு களைச்செடிகள் முளைத்து விடும் எனவும், இது துளசி செடிகள் நல்ல முறையில் வளர்வதற்கு தடையாக இருக்கும் என கூறுகிறார்.

நிலத்தில் களை வெட்டி முடித்த பிறகு செடிகளுக்கு உரத்தினை பயன்படுத்த வேண்டும் எனவும், காம்ப்ளக்ஸ், இரட்டையானா மற்றும் விஜய் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்களை செடிகளுக்கு பயன்படுத்தலாம் எனவும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகை உரத்தை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் துளசி செடிகளில் புழுக்கள் தாக்கி விடக்கூடாது என்பதற்காக மட்டுமே இவர் மருந்தினை செடிகளுக்கு அளித்து வருவதாகவும்,மற்றபடி துளசி செடிக்கு எந்த வித நோய்களும் ஏற்படாது எனவும் திரு அய்யனார் அவர்கள் கூறுகிறார்.

துளசி செடிகள் புழுக்கள் தாக்காமல் நல்ல முறையில் இருந்தால் மட்டுமே அவைகளை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவார்கள் எனவும், இல்லையெனில் துளசிகள் அதிக அளவில் விற்பனை ஆகாது எனவும் கூறுகிறார்.

Water supply system and maintenance system

துளசி சாகுபடியை செம்மண்ணில் செய்தால் மூன்று நாளைக்கு ஒருமுறை நீரினை செடிகளுக்கு விட வேண்டும் எனவும், இதுவே களிமண் காட்டில் விவசாயம் செய்தால் செடிகளுக்கு நீரினை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை விட வேண்டும் என திரு அய்யனார் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த துளசி விற்பனையில் துளசியின் விலை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விலையில் இருக்கும் எனவும், ஒரு ஏக்கர் நிலத்தில் துளசியை பயிரிடுவதற்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகும் என கூறுகிறார்.

துளசி நல்ல முறையில் விளைச்சல் ஆவதற்கு களைச் செடிகளை நீக்குவது மிக முக்கியமான ஒன்று எனவும், ஒரு அறுவடை முடிந்ததும் செடிகளுக்கு நீரினை அளித்து விட்டு களைச் செடிகள் இருந்தால் அதனை நீக்கி விட்டு துளசிச் செடிகளை நன்றாக பராமரித்து கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

மேலும் களைச் செடிகளை நீக்கி விட்டு துளசி செடிகளுக்கு உரத்தை அளிக்க வேண்டும் எனவும், எந்த அளவிற்கு களைச்செடிகள் முளைக்காமல் பாதுகாப்பு செய்கின்றோமோ அந்த அளவிற்கு துளசி செடிகள் நல்ல வளர்ச்சி பெறும் என திரு அய்யனார் அவர்கள் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

திரு அய்யனார் அவர்கள் துளசி விற்பனையை சந்தையில் விற்பனை செய்து வருவதாகவும், அதிக அளவில் துளசிகள் விற்பனையாகும் எனவும், வாடிக்கையாளர்கள் அதிக அளவில் இவரிடம் வந்து துளசியை வாங்குவதாகவும் கூறுகிறார்.

மேலும் துளசி நாற்றுக்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இவர் நாற்றுக்களை விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் துளசி விதைகளையும் இவர் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

துளசி விதைகளை வாங்கி செல்லும் வாடிக்கையாளர்களுக்கு சாகுபடி செய்யும் முறைகளைப் பற்றி கூறுவதாகவும் மற்றும் இவரே வாடிக்கையாளர்களின் தோட்டத்திற்கு சென்று துளசி விதைகளை விதைத்து தருவதாகவும் கூறுகிறார்.

துளசி சாகுபடியில் இவர் அதிக அளவு வருமானத்தை பெற்று வருவதாகவும், ஆடி மற்றும் புரட்டாசி ஆகிய மாதங்களில் துளசிகள் அதிக விலைக்கு விற்பனையாகும் எனவும் கூறுகிறார்.

துளசி சாகுபடியில் குறைந்த முதலீட்டில் அதிக அளவு வருமானத்தை பெற முடியும் எனவும், ஒரு ஏக்கர் நிலத்தில் துளசி சாகுபடியை செய்தால் ஒரு லட்சத்தில் இருந்து ஒன்றரை லட்சம் வரை லாபத்தை பெற முடியும் என திரு அய்யனார் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர் துளசிகளை சந்தைகளில் விற்பனை செய்யும் போது துளசியில் உள்ள பூவினை எடுத்து விட்டு இலையை மட்டும் விற்பனை செய்து வருவதாகவும், இந்த முறையில் விற்பனை செய்தால் அதிக அளவில் விற்பனையாகும் எனவும் கூறுகிறார்.

மற்றும் துளசி செடிகளில் அதிக அளவு மருத்துவ குணம் இருப்பதாகவும், காய்ச்சல்,இருமல் மற்றும் சளி ஆகியவைகளுக்கு இதனை பயன்படுத்தலாம் எனவும் கூறுகிறார்.

திரு அய்யனார் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் துளசி சாகுபடியை செய்து வருகிறார்.

மேலும் படிக்க:கரும்பு விவசாயத்தில் நிறைந்த லாபம்.

Leave a Reply