தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பட்டதாரி இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் நாட்டுக் கோழி பண்ணையை வைத்து நடத்தி வருவதாகவும், அதன் மூலம் அதிக வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய நாட்டுக்கோழி வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக காணலாம்.
Start of the country chicken farm
தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பட்டதாரி இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் நாட்டுக்கோழி பண்ணை வைத்து நடத்தி அதன் மூலம் அதிக வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு நாட்டு கோழி பண்ணையை தொடங்கியதாகவும், இவருடன் இவருடைய நண்பரும் சேர்ந்து நாட்டு கோழி பண்ணையை நடத்தி வருவதாக கூறுகிறார்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு கோழிகள் வளர்ப்பு முறையைப் பற்றிய ஒரு பாடம் வரும் எனவும், அந்தப் பாடத்தை ஒவ்வொரு முறையும் இவர் கவனிக்கும் போதும் இவருக்கும் கோழி வளர்ப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டதாக கூறுகிறார்.
இதன் காரணமாகவே கல்லூரிப் படிப்பினை முடித்த பிறகு கோழி பண்ணையை தொடங்கி விட்டதாகவும், இவருக்கு உதவியாக இவருடைய நண்பரும் இவருடன் சேர்ந்து கோழி பண்ணையை நடத்தி வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் இந்த நாட்டுக் கோழி பண்ணையை கடந்த மூன்று வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.
நாட்டுக்கோழியின் வளர்ப்பு முறை
நாட்டுக்கோழி வளர்ப்பை இவர் மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், கோழிகள் மிகப் பாதுகாப்பான முறையில் இருப்பதற்கு பெரிய அளவிலான கொட்டகை அமைத்து கொட்டகையின் உள்ளே கோழிகளை வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் இவருடைய பண்ணையில் நாட்டுக்கோழி உடன் சேர்த்து கடக்நாத் கோழி வகைகளையும் வளர்த்து வருவதாகவும், கோழி வகைகளும் அதிக அளவில் விற்பனையாகி வருவதாக கூறுகிறார்.
முதலில் நாட்டுக்கோழிகளை வெளியிலிருந்து இவர் வாங்கி வளர்த்து விற்பனை செய்து வந்ததாகவும் ஆனால் இப்பொழுது இவரே இன்குபேட்டரின் மூலம் குஞ்சுகளை பொரிக்க வைத்து வளர்தது வருவதாக கூறுகிறார்.
மற்றும் கோழிகளை மேய்ச்சல் முறையிலும் இவர் வளர்த்து வருவதாகவும், மேய்ச்சல் முறையில் கோழிகள் உணவுகளை உண்டால் அவைகளுக்கு நோய் தாக்குதல் அதிகளவில் இருக்காது எனவும் கூறுகிறார்.
கடக்நாத் கோழி வகைகளை கொட்டகையில் வைத்து இவர் வளர்ப்பதில்லை எனவும் அவை முற்றிலுமே மேய்ச்சல் முறையிலேயே வளர்ந்து வருவதாகவும், கடக்நாத் கோழி என்றால் மேய்ச்சல் முறையில் வளர்ந்தால் தான் விரைவில் வளர்ச்சியடையும் என கூறுகிறார்.
Immunization and fodder
கோழிகளுக்கு நோய்கள் ஏற்படுவதற்கு முன்பே இவர் கோழிகளுக்கு தடுப்பூசி அளித்து விடுவதாகவும், அவ்வாறு கோழிகளுக்கு நோய்கள் ஏற்பட்டால் இவர் இயற்கை மருந்துகளை அளிப்பதாகவும் கூறுகிறார்.
கோழிகளுக்கு சளி தொந்தரவு அதிகளவில் இருக்கும் எனவும் இதனை சரி செய்ய துளசி மற்றும் மிளகு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து கோழிகளுக்கு அளித்தால் சளி நோய் குணமாகிவிடும் என கூறுகிறார்.
மேலும் கோழிகள் இருக்கும் கொட்டகையில் அவைகள் தீவனத்தை எடுத்துக் கொள்வதற்கு பாத்திரத்தை வைத்துள்ளதாகவும் கோழிகளின் தேவைக்கு ஏற்ப கோழிகள் தீவனத்தை எடுத்துக் கொள்ளும் எனவும் கூறுகிறார்.
மேலும் கோழிகள் நீர் அருந்துவதற்கு நிப்பிள் மற்றும் பாத்திரத்தை பயன்படுத்தி வருவதாகவும் எதில் வேண்டுமானாலும் கோழிகள் நீரினை அருந்தி கொள்ளும் எனக் கூறுகிறார்.
மேலும் கோழிகளுக்கு இவர் இயற்கைத் தீவனங்களை அதிக அளவில் அளித்து வருவதாகவும், அகத்தி, முருங்கை மற்றும் கல்யாண முருங்கை போன்ற கீரை வகைகளை இவர் கோழிகளுக்கு தீவனமாக அளித்து வருவதாக கூறுகிறார்.
கோழிகள் மற்ற தீவனத்தை விட கீரை வகைகளை அதிக அளவில் விரும்பி உண்பதாகவும், இவற்றுடன் இவர் கம்பெனி தீவனங்களை கோழிகளுக்கு அளித்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் கோழிகள் வேகமாய் வளர்வதற்கு ஒரு சிலர் தடுப்பூசி போடுவார்கள் எனவும் ஆனால் இவருடைய கோழிகளுக்கு இவர் அதுபோன்ற எந்த வித தடுப்பூசிகளையும் அளிப்பதில்லை எனவும் கூறுகிறார்.
சாதாரண கோழிகள் வளரும் முறையிலேயே இவர் வளர்க்கும் கோழிகளை இவர் வளர்த்து வருவதாகவும்,இவருடைய கோழி பண்ணையில் உள்ள கோழிகளின் இறைச்சி மிகச் சுவையாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் கோழிகளுக்கு இவர் தானிய வகைகளையும் தீவனமாக அளித்து வருவதாகவும் கூறுகிறார்.
பண்ணையின் பராமரிப்பு முறை
கோழிகள் இருக்கும் கொட்டகையை வாரத்திற்கு ஒரு முறை அல்லது வாரத்தில் இரண்டு முறை சுத்தம் செய்துவிட வேண்டும் எனவும் இல்லையெனில் கோழிகளுக்கு நோய்கள் ஏற்பட்டு விடும் என கூறுகிறார்.
மேலும் ஒரு கோழிக்கு நோய் ஏற்பட்டால் அந்தக் கோழியை தனிமைப்படுத்தி வைத்துவிட வேண்டும் எனவும் இல்லை எனில் அந்தக் கோழியின் மூலம் அனைத்து கோழிகளுக்கும் அந்த நோய் பரவி அனைத்துக் கோழிகளும் இறப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்.
மேலும் பண்ணையை பராமரிப்பதற்கு அதிக நேரம் தேவைப்படாது எனவும், கோழிகளுக்கு தீவனம் மற்றும் நீர் அளிக்கும் போதும் மற்றும் பண்ணையை சுத்தம் செய்யும் போதும் மட்டுமே நமக்கு பண்ணையில் வேலை இருக்கும் எனவும் மற்ற சமயங்களில் பண்ணையில் எந்த வேலையும் அதிக அளவில் இருக்காது என கூறுகிறார்.
மேலும் பண்ணையில் இருபத்தி நான்கு மணிநேரமும் கோழிகளுக்குத் தீவனம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் எனவும், தீவனம் இருந்தால் தான் கோழிகள் விரைவில் வளரும் எனவும் கூறுகிறார்.
மேலும் தீவனத்தை குறைந்த அளவில் வைத்து விட்டால் கூட தீவனத்திற்காக ஒரு கோழி மற்றொரு கோழியுடன் சண்டையிட்டுக் கொள்ளும் எனவும், இவ்வாறு சண்டையிட்டால் கோழி இறப்பிற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்.
எனவே பண்ணையில் தீவனம் 24 மணி நேரமும் இருந்து கொண்டே இருக்க வேண்டுமெனவும், காலையில் ஒரு இரண்டு மணி நேரமும் மற்றும் மாலையில் ஒரு இரண்டு மணி நேரமும் மட்டுமே பண்ணையைப் பராமரித்தால் போதும் எனவும் கூறுகிறார்.
Sales method and profit
நாட்டுக்கோழி வளர்ப்பை இவர்கள் மிகச் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும், கோழிகளை இவர் வெளியில் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
இவருடைய பண்ணைக்கு கோழிகளை உயிருடன் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு கோழிகளை உயிருடன் அளித்து வருவதாகவும் மற்றும் இறைச்சி கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு கோழி இறைச்சியை அளித்து வருவதாகவும் கூறுகிறார்.
கடக்நாத் மற்றும் நாட்டுக்கோழிகளில் அதிக அளவு மருத்துவ குணம் உள்ளதால் அதிகளவு வாடிக்கையாளர்கள் இந்த கோழி இறைச்சியை விரும்பி உண்பதாகவும், இவரிடம் அதிகளவு வாடிக்கையாளர்கள் வந்து கோழிகளை வாங்கி செல்வதாகவும் கூறுகிறார்.
இதன் மூலம் இவருக்கு அதிகளவு வருமானம் கிடைத்து வருவதாகவும், கோழி வளர்ப்பை மிகச் சிறப்பான முறையில் பராமரித்து வளர்த்தால் அதன் மூலம் சிறந்த வருமானம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
90 நாளில் இருந்து 120 நாளுக்குள் கோழிகள் நல்ல வளர்ச்சி பெற்று விடும் எனவும், இந்த வளர்ச்சியை பெற்றுள்ள கோழிகளின் இறைச்சி மிக சுவையாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
தேனி மாவட்டத்தில் வசித்து வரும் இவர் இவருடைய பட்டப் படிப்பினை முடித்து விட்டு நாட்டுக்கோழி பண்ணையை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்.
மேலும் படிக்க:பண்ணை குட்டை மீன் வளர்ப்பில் சிறந்த லாபம்.