பெருவிடை கோழி பண்ணையில் அதிக வருமானம்

சென்னையிலிருந்து இருபத்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் நாலூர் என்னும் ஊர் உள்ளது. திரு பிரபு அவர்களும், திரு ஹரி அவர்களும் ஒன்றாக இணைந்து ஒரு கோழிப் பண்ணையை சிறப்பான முறையில் நடத்தி வருகின்றனர். அவர்களின் பண்ணையைப் பற்றி பின்வருமாறு விரிவாக காணலாம்.

பண்ணையின் தொடக்கம்

திரு பிரபு அவர்களும், திரு ஹரி அவர்களும் ஒரு தனியார் IT நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் ஒன்றாக இணைந்து பெருவிடை கோழி பண்ணையை மூன்று வருடங்களாக நடத்தி வருவதாக திரு பிரபு அவர்கள் கூறுகிறார்.

இந்த பண்ணையை பாதி நேர வேளைகளில் மட்டுமே நடத்தி வந்து இருந்ததாகவும், இப்பொழுது இவர்களுக்கு இவர்கள் பணியாற்றும் IT நிறுவனத்தில் கிடைக்கும் வருமானத்தைவிட இந்த பெருவிடை கோழிப்பண்ணையில் அதிக வருமானம் கிடைத்ததால் IT நிறுவனத்தின் வேலையை ரத்து செய்துவிட்டு இந்த பெருவிடை கோழி பண்ணையை முழு நேர வேலையாக கொண்டு அதனை சிறப்பாக நடத்தி வருவதாக திரு பிரபு அவர்கள் கூறுகிறார். இவர்கள் வெறும் பெருவிடை கோழிகளை மட்டும் வைத்து பெரிய வணிக அளவில் பண்ணையை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.

பண்ணையின் அமைப்பு மற்றும் கோழிகள்

சென்னையிலிருந்து இருபத்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் நாலூர் என்னும் ஊரில் திரு பிரபு என்பவரும், திரு ஹரி என்பவரும் ஒன்றாக இணைந்து ஒரு பெருவிடை கோழிப்பண்ணையை நடத்தி வருகின்றனர்.

இவர்களுடைய பண்ணை மொத்தமாக இரண்டு ஏக்கர் நிலத்தில் உள்ளதாகவும், அதில் ஒரு ஏக்கரை பெருவிடை கோழிகளை வளர்ப்பதற்கும், மற்றொரு ஏக்கரை பெருவிடை கோழிகளின் முட்டைகளை வளர்ப்பதற்கும், குஞ்சுகளை வளர்ப்பதற்கும் பயன்படுத்துவதாக திரு பிரபு அவர்கள் கூறுகிறார்.

இவர்களின் பண்ணையில் மொத்தமாக இரண்டாயிரம் கோழிகளுக்கு மேல் உள்ளது என கூறுகிறார். இதில் தாய்க் கோழிகளின் எண்ணிக்கை மட்டும்  ஏழுநூற்க்கு மேல் உள்ளது எனவும், மூன்று மற்றும் நான்கு மாதங்களில் வளர்ந்த கோழி குஞ்சுகள் ஐந்நூறு மற்றும் அறுநூறு எண்ணிக்கையில் உள்ளது எனவும், ஒரு மாதங்களில் வளர்ந்த கோழி குஞ்சுகள் ஏழுநூற்றுக்கு மேல் உள்ளது எனவும் திரு பிரபு அவர்கள் கூறுகிறார்.

இந்தக் கோழிகள் அனைத்தும் பெருவிடை கோழிகள் மட்டுமே ஆகும் எனவும் பெருவிடை கோழிகளை மட்டும் வளர்ப்பதே இவர்களின் குறிக்கோள் எனவும் கூறுகிறார்.

பெருவிடை கோழிகளில் இரண்டு வகைகளை வளர்ப்பதாக கூறுகிறார். அதில் ஒன்று வெப்போர் வகைகளையும், மற்றொன்று விசிறிவால் வகைகளையும் வளர்த்துவதாக கூறுகிறார்.

அதில் விசிறிவால் கோழி வகைகளை மட்டும் அதிக அளவிலும் வெப்போர் கோழி வகைகளை குறைந்த அளவிலும் வளர்த்து வருவதாக திரு பிரபு அவர்கள் கூறுகிறார். பெருவிடை கோழிகளை மட்டும் இவர்கள் வளர்த்துவதற்கு காரணம் இந்த கோழிகளை நான்கிலிருந்து ஐந்து மாதங்களுக்குள்ளே ஒன்றரை கிலோ எடையை பெறும் எனவும், இவ்வாறு ஒன்றரை கிலோவிற்கு மேல் இருந்தால் மட்டுமே வணிக ரீதியாக வருமானத்தை பெற முடியும் எனவும் கூறுகிறார்.

சிறுவிடை கோழிகளை வளர்ப்பதால் அந்தக் கோழி வகைகள் ஒன்றரை கிலோவிற்கு மேல் எடை வர ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என கூறுகிறார். இதனால் நஷ்டமே ஏற்படும் எனவும் கூறுகிறார். ஆனால் பெருவிடை கோழி வளர்ப்பில் அதிக லாபத்தை பெறலாம் எனவும் கூறுகிறார்.

பெருவிடை மற்றும் சிறுவிடை கோழிகளின் இறைச்சி ஒரே அளவான சுவையை பெற்றிருக்கும் எனவும் பெருவிடை கோழிகளின் எலும்புகள் உறுதியாக இருக்கும் எனவும் கூறுகிறார். சிறுவிடை கோழிகளின் எலும்பு மெலிசாக இருக்கும் எனவும் கூறுகிறார்.பெருவிடை கோழிகளை வளர்த்தால் தான் வணிக ரீதியாக சரியான முறையில் வளர்க்க முடியும் என்ற எண்ணத்தினால் இந்த கோழி வகைகளை வளர்ப்பதாக திரு பிரபு அவர்கள் கூறுகிறார்.

தற்பொழுது பிராய்லர் கோழிகளின் இறைச்சி அதிக அளவில் விற்பனை ஆவது இல்லை என்பதாலும் வருங்காலத்தில் நாட்டுக்கோழிகளுக்கு அதிக தேவை இருக்கும் என்ற காரணத்தாலும் இந்த நாட்டுக்கோழி வகைகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

கொட்டகையின் அமைப்பு

பண்ணை உருவாக்க கொட்டகைகள் மிக முக்கியமான ஒன்றாகும். திரு பிரபு அவர்கள் மற்றும் அவர் நண்பன் ஹரி அவர்களின் பண்ணையில் மூன்று கொட்டகைகள் அமைத்துள்ளதாகவும் ஒரு கொட்டகைக்கு நான்கு லட்சம் வரை செலவானது என திரு ஹரி அவர்கள் கூறுகிறார்.

கொட்டகைகள் வெல்டு மெஷ் போன்ற அமைப்பில் உருவாக்கி உள்ளதாகவும், அதனால் மழைக்காலங்களில் கோழிகள் பாதுகாப்பாக மேலே இருக்கும் எனவும் , இரவு நேரங்களில் கோழிகள் கொட்டகை மேல் பாதுகாப்பாக இருப்பதால் தீய உயிரினங்கள் கோழிகளை தாக்க வாய்ப்பில்லை எனவும் ஹரி அவர்கள் கூறுகிறார்.

பொதுவாக பிராய்லர் கோழிகள் தரையில் இருப்பதைப் போல நம் நாட்டுக் கோழி இனங்கள் தரையில் இருப்பதில்லை அவைகள் மரத்தின்மேல் அமரும் இயல்புடையது எனவும் அதன் காரணமாக இந்த வெல்டு மெஷ் போன்ற பாதுகாப்பான அமைப்பை உருவாக்கி உள்ளதாகவும் கூறுகிறார். இதற்குமுன் கோழிகளுக்கு பரண் போன்ற அமைப்பை உருவாக்கியதாகவும் அது சரியாக இல்லாத காரணத்தால் இந்த வெல்டு மெஷ் போன்ற அமைப்பை உருவாக்கியதாக அவர் கூறுகிறார்.

இந்த வெல்டு மெஷ் மூலம் கோழிகளின் கழிவுகள் கீழே விழுந்து விடுவதாகவும், இரவு நேரங்களில் தீய உயிரினங்கள் தாக்காதவாறு அமைந்திருப்பதாகவும் கூறுகிறார்.

இந்த வெல்டு மெஷ்யினை மூடிவிட்டால் அதிலிருந்து கோழிகளை யாராலும் எடுத்துச் செல்ல முடியாது எனவும் கோழிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் எனவும், குளிர் காலங்களிலும் கோழிகளுக்கு இந்த முறையினால் மிக பாதுகாப்பாக இருக்கும் எனவும் திரு பிரபு அவர்கள் கூறுகிறார். கொட்டகைகளின் கீழுள்ள கழிவுகளை தினமும் சுத்தம் செய்வதாகவும் கூறுகிறார்.

கோழிகள் முட்டை இடுவதற்கு சரியான அளவில் பண்ணையின் கொட்டகையை அமைத்து உள்ளனர். இவர்களிடம் நூற்றைம்பது கோழிகள் மட்டுமே தொடர்ச்சியாக முட்டைகளை அளிக்கும் என கூறுகிறார்.

இதில் கோழிகள் தொண்ணூறு சதவீதம் முட்டைகளை கொட்டகையில் முட்டையிடும் எனவும் மீதி ஒரு சதவீதம் முட்டைகள் மரத்தடியிலே அல்லது வேறு ஏதாவது இடங்களில் முட்டையிடும் எனவும் கூறுகிறார். முட்டைகளை அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரத்திற்குள் சேமித்த விடுவதாக கூறுகிறார்.

பண்ணையின் குஞ்சு கோழிகள்

பண்ணையில் உள்ள குஞ்சு கோழிகள் இருக்கும் கொட்டகைக்குள் வரும்போது பொட்டாசியம் பெர்மாங்கனேட் உள்ள நீரில் கால்களை நனைத்த பிறகே கொட்டகைக்குள் செல்லவண்டும் என கூறுகிறார்.

இவ்வாறு செய்தால் தாய்க்கோழிகளிடம் உள்ள நோய்கள் குஞ்சுக் கோழிகளை தாக்காது எனவும் கூறுகிறார். மேலும் கைகளில் டெட்டால்லை தடவி கொண்டால் தாய்க்கோழிகளிடம் உள்ள நோய் குஞ்சுக் கோழிகளை தாக்குவதற்கு வாய்ப்பில்லை எனவும் கூறுகிறார்.

பிறந்த ஒரு நாளில் உள்ள குஞ்சுகளுக்கு வெறும் நீரை மட்டும் வைப்பதாகவும் இரண்டாவது நாள் நீருடன் சேர்த்து தீவனத்தையும் வைப்பதாக கூறுகிறார். இவர்களின் பண்ணையில் பிறந்து முதல்நாள் ஆன குஞ்சுகள் மற்றும் ஒருவாரம் ஆன குஞ்சுகள் மற்றும் இரண்டு வாரம், மூன்று வாரம் ஆன கோழி குஞ்சுகளை வைத்துள்ளனர்.

பொதுவாக கோழிகள் முப்பத்து இரண்டு டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க வேண்டும் எனவும், இவருடைய பண்ணையில் ஒரு ஆட்டோமேட்டிக் டிகிரி இயந்திரத்தை பொருத்தி உள்ளதாகவும் அதில் முப்பத்து இரண்டு டிகிரி செல்சியஸ்யை குறித்து உள்ளதாகவும் அந்த இயந்திரம் சரியாக முப்பத்து இரண்டு டிகிரி செல்சியஸ் வந்தவுடன் ஆஃப் ஆகி விடுவதாகவும் பின் முப்பத்து இரண்டு செல்சியஸ் டிகிரி குறைந்த உடன் ஆன் ஆகி விடுவதாகவும் திரு பிரபு அவர்கள் கூறுகிறார்.

இதில் மின்சாரம் இல்லாத போது மின்சார விளக்கு எரிய இன்வெர்ட்டர் முறையை பயன்படுத்தி உள்ளதாகவும் கூறுகிறார்.

இந்த கோழி குஞ்சுகளுக்கு இரண்டு மாதங்கள் வரை குஞ்சுகளுக்கு அளிக்கும் தீவனத்தை மட்டுமே அளிப்பதாக கூறுகிறார்.

இந்த கோழி குஞ்சுகளுக்கு ஏழாவது நாளில் F5 யும் இருபத்தி எட்டாவது நாளில் லசோட்டோவும், இரண்டு மாதங்களில் தடுப்பூசியும் அளிப்பதாக கூறுகிறார். இந்த கோழி குஞ்சுகள் முழுவதுமாக மூன்று வாரம் முடிந்தவுடன் மேய்ச்சலுக்கு சென்றுவிடுவதாக திரு பிரபு அவர்கள் கூறுகிறார். தாய்க்கோழிகளிடம் குஞ்சுகள் வளரும்போது அவைகளுக்கு தாய் கோழிகள் உதவியாக இருக்கும் ஆனால் இன்குபேட்டரில் வைத்து வளர்த்தும் போது அவைகளுக்கு சரியான வழிகாட்டுதல் முறை இருக்காது.

அதன் காரணமாகவே இந்த கோழிக்குஞ்சுகளை மூன்று வாரங்களுக்கு பிறகு மேய்ச்சலுக்கு விடுவதாக கூறுகிறார்.

தீவனங்கள்

தீவனங்களின் இரண்டு வகைகளை பயன்படுத்துவதாகவும், அவைகள் ஒன்று எரிசக்திகாகவும், மற்றொன்று புரோட்டின் சக்திகாகவும் பயன்படுத்தி வருகின்றனர். எரிசக்திக்கு பயன்படும் தீவனங்கள் மலிவான விலைகளில் கிடைப்பதாகவும் புரோட்டின் சக்திக்கு பயன்படும் தீவனங்கள் சிறிது அதிக விலையாக இருப்பதாக கூறுகிறார்.

புரோட்டின் சக்தியாக பயன்படும் உணவுகள் கருவாடு, புண்ணாக்கு போன்ற உணவுகளை பயன்படுத்துவதாகவும் தற்போது அதற்கு மாற்றாக அசோலாவை பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் அசோலாவிற்கு மாற்றாக ஹைட்ரோபோனிக்ஸ் முறையை உருவாக்கிக் கொண்டு வருவதாக கூறுகிறார். இந்த ஹைட்ரோபோனிக்ஸ் முறையானது பசுந்தீவன முறையை போன்றது எனவும் இதில் அதிக அளவு புரோட்டின் உள்ளதாகவும் கூறுகிறார். இந்த ஹைட்ரோபோனிக்ஸ் முறை மிக சரியான முறையாக இருக்கும் எனவும் கூறுகிறார். இந்த முறையை அமைக்க ஐம்பதாயிரம் வரை செலவு செய்ததாகவும் மேலும் இருபதாயிரம் வரை செலவு  உள்ளது எனவும் கூறுகிறார்.

கோழிகள் அதிகமாக கேழ்வரகு, கம்பு, திணை போன்ற உணவு வகைகளையே அதிகமாக விரும்பி உண்ணும் எனவும் கூறுகிறார். மேலும் கோழிகளுக்கு சரியான முறையில் உணவு அளிப்பது மிக முக்கியமான ஒன்று எனவும் கூறுகிறார். கோழிகளுக்கு இயற்கை முறையிலான உணவுகளை அளிப்பதே மிக சிறப்பான ஒன்று எனவும் கூறுகிறார்.

மேலும் கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல், ராணி கட்டு போன்ற நோய்கள் ஏற்படும் அதனை தடுப்பூசியின் மூலம் குணமடைய செய்ய வேண்டும் எனவும் கூறுகிறார். கோழி வளர்ப்பில் சரியான வழிமுறையை கற்றுக்கண்டு கோழிகளை வளர்த்தால் மட்டுமே நமக்கு லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் திரு பிரபு மற்றும் திரு ஹரி ஒன்றாக இணைந்து வெறும் நாட்டுக்கோழிகளை மட்டும் வைத்து அதிக அளவில் பண்ணையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை வைத்திருப்பதாக கூறுகின்றனர்.

திரு பிரபு மற்றும் அவருடைய நண்பர் திரு ஹரி இருவரும் அவர்கள் வேலை செய்த IT நிறுவனத்தை விட இந்த பெருவிடை கோழி வளர்ப்பில் அதிக லாபத்தை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க:வெளிநாட்டில் இருந்துகொண்டே பண்ணையை சிறப்பாக நடத்தி வரும் கால்நடை மருத்துவர்.

Leave a Reply