செல்லப்பிராணிகள் வளர்ப்பதன் மூலம் IT நிறுவனத்தை விட அதிக வருமானம் ஈட்டும் சாதனை பெண்மணி ஹேமா அவர்களை பற்றி பார்க்கலாம்.
ஹேமாவின் வாழ்க்கை தொடக்கம்
சென்னையில் உள்ள அம்பத்தூரில் வசிக்கும் திருமதி ஹேமா அவர்கள் செல்லப்பிராணிகள் வளர்ப்பதன் மூலம் மாதம் ஐ டி நிறுவனத்தை விட அதிகம் வருமானம் ஈட்டுகிறார்.
அவருக்கு இது எப்படி சாத்தியம் என்பதை பற்றி இத்தொகுப்பில் ஒரு கட்டுரையாக காணலாம்.
சென்னையில் அம்பத்தூரில் ஹேமா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகிவிட்டது. இவரது கணவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அவர் திருமணமாகி ஒரே மாதத்தில் தன தனி வீட்டிற்கு குடியேறினார். பெற்றோர்களைப் பிரிந்து மனவருத்தத்தில் தனியாக சோகத்துடன் வாழ்ந்து வந்தார். திருமதி ஹேமா அவர்கள்.
அதன்பின்பு வருத்தத்தை போக்க பல்வேறு முயற்சிகளில் அவர் கணவர் அவரது நேரங்களைச் செலவு செய்தார். சினிமாவிற்கு மற்றும் பூங்காவிற்கு சென்று அவரது மனைவியின் மனநிலையை மாற்ற பல்வேறு முயற்சிகளைச் செய்தார் அவரது கணவர்.
அப்பொழுதும் மனம் மாறாமல் தனிமையை மட்டுமே எண்ணி வருத்தமடைந்தார் திருமதி ஹேமா.
செல்லப் பிராணி வளர்ப்பு
திருமதி ஹேமா அவர்கள் தனிமையாக இருப்பதை கண்டு அவர் கணவர் மிகவும் வருத்தமடைந்தார். அதன் பின்பு திருமதி ஹேமா அவர்களின் வருத்தத்தையும் அவர் தனிமையையும் போக்க பல்வேறு முயற்சிகளைச் செய்தார்.
திருமதி ஹேமா அவர்களை மகிழ் வடைய செய்வதற்காக அவரின் கணவர் ஒரு வழி செய்தார். திருமதி ஹேமா அவர்களுக்கு ஒரு அன்பளிப்பை தந்து திருமதி ஹேமா அவர்களை மகிழ் வடைய செய்தார்.
அந்த அன்பளிப்பு ஒரு செல்லப் பிராணியான பப்பி குட்டி நாயானது இருந்தது. அதைக்கண்ட திருமதி ஹேமா அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அவையை தூக்கி கொஞ்சுவதோடு மட்டும் இல்லாமல் அவற்றை அரவணைப்பும் பேரன்பு கொண்டார்.
பின்பு அவற்றுடன் அதிக நேரம் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார். அவர் கணவர் வேலைக்கு சென்ற பின்பும் அவர் மகிழ்ச்சியாக மட்டுமே இருந்தார்.
அதற்கு தேவையான உணவு மற்றும் பால் போன்றவற்றை நேரத்திற்கு நேரம் சரியாக கொடுத்து அவற்றுடன் பேசிக்கொண்டு தன் கவலைகள் மற்றும் சந்தோஷங்கள் ஆகியவற்றை அவற்றுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தார்.
எந்த அளவு மகிழ்ச்சி என்பது திருமதி ஹேமா அவர்களுக்கே தெரியவில்லை. தனது அண்ணனின் திருமணத்தை விட அவர்கள் வளர்க்கும் அந்த பப்பியானது உயர்ந்தது என்று எண்ணினார். அதனால் அவருடைய அண்ணனின் திருமணத்திற்கு கூட செல்லவில்லை. அந்த பப்பியின் மீது பாசம் வைத்து வளர்த்து வந்துள்ளார் திருமதி ஹேமா.
கணவரின் வேலையும் வருமானமும்
திருமதி ஹேமா அவர்கள் புதிதாக திருமணமான தம்பதியினர் ஆவார். அவர்களுக்கு திருமணம் முடிந்து சுமார் இரண்டு மாதம் மட்டுமே ஆனது. அதற்குள் ஆவர் சென்னையில் குடியேறினார். இவர் தனிக்குடித்தனம் வந்த பிறகு அனைத்தையும் தனியாகவே சமாளிக்க முயன்றனர்.
மாதம் தொடங்கினாள் வீட்டு வாடகை உணவு மற்றும் இதர செலவு போன்றவைகள் இருந்தன. இதையெல்லாம் தனியாக சமாளித்து வந்துள்ளார் திருமதி அவர்களின் கணவர்.
திருமதி ஹேமா அவர்களின் கணவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு மாதம் 35 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது. அதை வைத்து வீட்டு வாடகை மற்றும் அவருடைய செலவு பெட்ரோல் செலவு மாதம் முழுவதும் உணவிற்கு மற்றும் மாத தவணை போன்றவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. இது மட்டுமில்லாமல் இடையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவற்றிற்கும் பல்வேறு விதமாக செலவும் ஆகிவிட்டது.
அதன் பின் அதை சரி செய்ய திருமதி ஹேமா அவர்கள் பெற்றோரை நாடினார். அவர்கள் சரியான சமயத்தில் போதுமான பணத்தை கட்டியதால் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து வெளியேறினார் திருமதி ஹேமா அவர்கள்.
அதன் பின்பு திருமதி ஹேமா அவர்களின் பெற்றோர்கள் சிறிது காலம் அங்குள்ள அவருடைய வீட்டில் தங்கி ஹேமா விற்கு உதவி செய்ய தொடங்கினார். அதன் பின்பு அவர்கள் பெற்றோர்களின் ஆலோசனை கூறினார்.
ஹேமா அவர்களின் பெற்றோர்கள் அங்குள்ள ஒரு தனியார் துறையில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு மாதம் 65 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்திலேயே ஹேமா மற்றும் அவருடைய கணவருக்கும் வேலை வாங்கி தருவதாக கூறினார்கள்.
அதைக்கேட்ட ஹேமா மற்றும் அவருடைய கணவர் ஆலோசினை செய்த பின்பு கூறுகிறோம் என்கிறார். அதன்பின்பு ஹேமா அவருடைய கணவரிடம் கேட்கும்போது நான் வரமுடியாது என்று கூறினார்.
அதைக்கேட்ட ஹேமா வருத்தமடைந்தார். நான் படித்தது இந்த வேலைக்கு தான் இதில் எனக்கு போகப்போக வருமானம் உயர்த்தி தரப்படும் எனக் கூறினார் திருமதி ஹேமா அவர்களின் கணவர்.
அதன் பின்பு அவர் கூறியவற்றை பெற்றோர்களிடையே கூறிய ஹேமா அவர்கள் மன வருத்தத்துடன் இருந்தார். அதன் பின்பு அதனைப் புரிந்து கொண்ட ஹேமா அவர்களின் பெற்றோர்கள் அவர்களிடம் கொஞ்சம் பணத்தை கொடுத்துவிட்டு ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்பின் ஹேமா அவர்கள் அவர்களை வழியனுப்பிவிட்டு வீடு திரும்பினார்.
தன்னம்பிக்கை உடைய ஹேமா
அதன் பின்பு சிறிது காலம் போனது வழக்கம் போல் தன்னுடைய வேலைகளை செய்து கொண்டிருந்த சேர்மா ஏதாவது ஒரு வகையில் நாம் கணவருக்கு உதவ வேண்டும் என எண்ணினார். அதன்பின்பு பல்வேறு யோசனைகளில் இருந்தார்.
அதன்பின்பு காலம் போனது பிறகு வழக்கம்போல் அவருடைய கணவருக்கு உடல்நிலை சரியான பின்பு அவர் வேலைக்கு செல்ல முடிவெடுத்தார். வழக்கம்போல் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் கனவர் ஒருநள் இரவு நேரம் கழித்து வீட்டிற்கு வந்தார்.
என்ன காரணம் என்று தெரியாமல் பல கட்டங்களில் யோசித்து கணவருக்கு அலைபேசியின் மூலம் அலைத்தும் அவர் எடுக்காமல் போனாதால் பதறிப் போனார் ஹேமா அவர்கள்.
அதன் பின்பு ஹேமா அவர்கள் கணவருடன் கலந்து பேசிய போது அவர்களுக்கு பல்வேறு பிரச்சனை உள்ளது என்பது தெரியவந்தது. அவருக்கு வரும் வருமானம் ஆனது போதிய அளவு இல்லாததால் பெரும் வருத்தம் அடைந்து கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். கடனுக்கு புதிய வட்டி செலுத்த இயலாததால் அவற்றுக்கும் வாத்தி செலுத்துவதாக இருந்தது. அதற்கு போதிய பண வசதி இல்லாததால் மனவருத்தத்துடன் இருந்தார்கள்.
அதன்பன்பு வழக்கம்போல் விடிந்தவுடன் எதையும் எண்ணாமல் வேலைக்கு சென்று விட்டார். பின்பு திருமதி ஹேமா அவர்கள் பெற்றோரிடம் கூறி இரண்டு லட்சம் ரூபாய் வாங்கினார். பின்பு அவற்றுக்கான கடன்களை செலுத்தினார்.
பிராணிகள் வளர்ப்பு
ஹேமாவின் புதிய யோசனையாக அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணியை போன்று வளர்த்து விற்கலாம் என்று எண்ணினார். அதற்கு தேவையான பணமும் அவர்களிடம் இருந்தது. பின்பு ஒரு வெளிநாட்டு நாய் ஆன ஒரு பப்பியை வாங்கினார். அது ஒரு பெண் பிராணி ஆகும்.
அதன்பின் அதுபோன்ற இன்னொரு ஆண் நாயையும் வாங்கினார்கள். அது இரண்டையும் சுமார் ஆறுமாதம் வளர்த்துப் பின் பருவ காலம் வந்தவுடன் இனம் சேர்க்கை செய்தனர். அவர் செய்த பின் அந்தப் பிராணி ஆனது கருவுற்றது.
அது போன்று மேலும் 2 பிராணிகளை வாங்கி ஆற்றின் வளர்த்து பருவ காலம் வந்தவுடன் இனச்சேர்க்கை சேர்த்து கருவுற்ற பின் வளர்த்து வந்தனர். பின்பு மேலும் 6 மாத காலம் இரண்டுமே குட்டிகள் ஈன்றது.
பராமரிப்பும் பாதுகாப்பும்
அந்த இரண்டு நாய் செல்ல நாய்கள் குட்டிகளை ஈன்றது அவற்றை நன்கு கவனித்தார்கள். அதற்கு தேவையான உணவும் அதற்குத் தேவையான சத்து நிறைந்த பொருட்களும் பல்வேறு அளிக்கப்பட்டது. காலையில் தயிர் கலந்த சாதமும் மதியம் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் மாலையில் அசைவ உணவுகள் போன்றவை அளிக்கப்பட்டன. அசைவ உணவு வகைகளில் குடல் ஈரல் மற்றும் ஆட்டுக்கால்கள் எலும்புகள் இல்லாத கறிகள் போன்றவை அளிக்கப்பட்டன.
மேலும் இரவு மனிதர்கள் சாப்பிடுவது போல் குறைவான சாப்பாடும் சப்பாத்தியும் அளிக்கப்படும். எவற்றையும் மீதம் வைக்காமல் அனைத்தையும் நன்றாக சாப்பிடும்.
மேலும் இவர்களுக்கு அனைத்து நாளுமே முட்டைகள் வைக்கப்படுகின்றன. குட்டிகளுக்கு அம்மாக்கள் இடமிருந்து போதுமான பால் வசதி இல்லாததால் குட்டிகளுக்கு தனியாகவே பால் வாங்கி அவற்றை பால் குடிக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களில் தருகின்றனர். குட்டி ஈன்ற மூன்று நாட்களில் பால் வற்றி விட்டதால் இந்த முறையை பயன்படுத்துகின்றனர்.
பின்பு குட்டிகளுக்கு தேவையான புரதங்களையும் சத்து நிறைந்த உணவுகளையும் சரியாக தருகிறார். பின்பு அவைகளுக்கு பிறந்து 45 நாட்கள் கழிந்தபின் முதல் தடுப்பூசி போடப்படுகிறது. பின்பு 90 நாட்கள் முடிவில் இரண்டாம் தடுப்பூசி போடப்படுகிறது.
இவ்வாறு செய்வதால் பிராணிகளுக்கு எந்த ஒரு பிரச்சனைகளும் இன்றி எளிதாக நன்றாக வளர நேரிடும். அதன்பின் 40 நாட்களுக்குள் ஓடி விளையாடும் அளவிற்கு அங்கு பயிற்சி அளித்து ஆர்டருக்கு தேவையான சத்து நிறைந்த உணவுகளையும் பழக்க வழக்கங்களையும் பயிற்சியளித்து பராமரித்து வருகின்றனர்.
மொத்தம் நான்கு பெரிய செல்லப் பிராணிகளும் 8 குட்டி பிராணிகளும் இவர்களிடம் ஆரம்பத்தில் இருந்தது. அதற்கு மட்டும் இவர்கள் மூன்று மாதத்திற்கு 40 ஆயிரம் செலவு செய்கிறார்கள். அதன் பின்பு அவைகளை விற்று மீண்டும் பிராணிகள் வாங்கி வளர்க்கத் தொடங்கினர்.
வருமானம் ஈட்டும் செல்லப்பிராணிகள்
அதன்பின் அவர்கள் மேலும் பல்வேறு விதமான செல்லப்பிராணிகளை வாங்கி வளர்த்து அவை ஈன்றும் குட்டிகளை விட்கும் பணியில் திருமதி ஹேமா அவர்கள் ஈடுபட்டார்.
அவர்களிடம் பல்வேறு ரகங்களில் பல்வேறுவிதமான பப்பி நாய்களும் வெளிநாட்டு வகையைச் சார்ந்த நாய்களும் வளர்க்கப்பட்டன. ஒவ்வொரு ரகங்களும் ஒவ்வொரு விதத்திற்கு விற்கப்பட்டன.
திருமதி ஹேமா அவர்களிடம் குறைந்த விலையில் இருந்து அதிக விலை வகையான பப்பி மற்றும் வெளிநாட்டு ரகங்கள் செல்லப்பிராணி நாய்கள் கிடைக்கும்.
அவர்களிடம் ஆரம்ப விலை நாய் பிராணியானது பத்தாயிரம் முதல் 50,000 வரை உள்ளது. ஆற்றிலும் இரண்டு விதமாக உள்ளது பிறந்த 45 நாட்களுக்குள் உள்ள பிராணிகள் 10,000 முதல் 30,000 வரையும் 90 நாட்கள் முடிவடைந்த இரண்டாம் தடுப்பூசி ஓட்ட நாய்கள் 40,000 முதல் 50,000 வரை விற்கப்படுகின்றன.
ஒரு வருடத்திற்கு சுமார் குறைந்தபட்சம் 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை இவர்களிடமிருந்து லாபம் காண்கிறார் திருமதி ஹேமா அவர்கள். இவற்றிலிருந்து வரும் லாபமானது அவருடைய கணவரின் ஐடி நிறுவனத்தில் இருந்து வரும் லாபத்தை விட அதிகமாக கிடைக்கிறது.
செல்லப்பிராணிகள் வளர்ப்பது பாதுகாப்பானதா?
செல்லப்பிராணிகள் வளர்ப்பது மிகவும் பாதுகாப்பானதாகும். மேலும் பிராணிகள் வளர்ப்பது நமக்கு மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும்.
மேலும் படிக்க:தமிழ்நாட்டின் பறவைகள் மற்றும் கால்நடைகளின் சொர்க்கம்