புறா வளர்ப்பில் அதிக லாபம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் ஒருவர் புறா பண்ணை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரையும் இவருடைய புறா வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

புறா பண்ணையின் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் ஒருவர் புறா பண்ணை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார்.

இவர் இந்த பண்ணையை மிகச் சிறப்பான முறையில் நடத்தி வந்து கொண்டிருந்த நிலையில் இவருக்கு வேறு ஒரு இடத்தில் வேலை கிடைத்ததன் காரணமாக இந்தப் புறா பண்ணை இவருடைய மனைவி பராமரித்துக் கொண்டு வருவதாக கூறுகிறார்.

இவருக்கு இந்த புறா பண்ணையை பற்றியும் மற்றும் பராமரிப்பு முறையைப் பற்றியும் நன்றாக தெரியும் எனவும் அதனை இவருடைய மனைவிக்கு எடுத்துக்கூறி பண்ணையை நடத்தி வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இந்த புறா பண்ணையை கடந்த ஏழு வருடங்களாக நடத்தி வருவதாகவும் இந்த புறா வளர்ப்பில் இவருக்கு அதிக லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

Types of pigeons

திருவண்ணாமலையில் உள்ள ஒரு கிராமத்தில் புறா பண்ணை நடத்தி வரும் இவருடைய புறா பண்ணையில் மொத்தமாக 50 வகைகளில் புறாக்கள் இருப்பதாகவும் அதில் 2000 புறாக்களை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் வளர்க்கும் அனைத்து புறாக்களும் அழகுக்காக மட்டுமே வளர்ப்பதாகவும் இறைச்சிக்காகவும் மற்றும் பந்தயத்திற்கும் வளர்ப்பதில்லை எனவும் கூறுகிறார்.

ஒவ்வொரு புறா வகைகளையும் ஒவ்வொரு இடத்தில் இருந்து வாங்கி வந்து ஒன்றாக சேர்த்து வளர்த்து வருவதாகவும் இந்த புறாக்களின் மூலம் இவருக்கு அதிக லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இருந்து புறாக்களை இவர் சேமித்த தாகவும் இதில் அதிகமாக தமிழ் நாடுகளில் இருந்து அதிக அளவு புறாக்களை சேமித்து உள்ளதாக கூறுகிறார்.

மேலும் இவ்வாறு சேமித்து வைத்துள்ள புறாக்களை இவர் நல்ல முறையில் வளர்த்து எந்தவித நோய்களும் தாக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் இதனால் இந்த புறாக்கள் நல்ல விலைக்கு விற்பனையாகி வருவதாக கூறுகிறார்.

புறாக்களின் வளர்ப்பு முறை

புறாக்கள் அனைத்தையும் வளர்ப்பதற்கு இவர் கூண்டுகளை அமைத்து அதில் வளர்த்து வருவதாகவும் மற்றும் அவைகள் சுதந்திரமாக இருப்பதற்கு கொட்டகை அமைத்து அதில் வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் புறாக்களை வளர்ப்பதற்கு கூண்டின் அமைப்பு மற்றும் தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை ஆகியவற்றை சரியான முறையில் கவனித்துக் கொண்டால் புறாக்கள் நல்ல முறையில் எந்தவித பாதிப்பும் இன்றி வளரும் என கூறுகிறார்.

இவர் இந்த முறையில் புறாக்களை வளர்த்து வருவதால் யாருமே வளர்க்க முடியாத அனைத்து புறாக்களையும் இவரால் வளர்த்து விற்பனை செய்ய முடிகிறது எனவும் கூறுகிறார்.

இவ்வாறு சிறப்பான முறையில் இவர் புறாக்களை வளர்த்து வருவதால் அதன் மூலம் இனப்பெருக்கம் ஆகும் புறாக்களை இவர் நல்ல முறையில் விற்பனை செய்து வருவதாகவும் இதுவரையில் இவருக்கு எந்தவித பாதிப்பும் இதில் ஏற்பட்டதில்லை எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் புறாக்களை மட்டும் வளர்க்காமல் ஒரு ஒருங்கிணைந்த பண்ணையை நடத்தி வருவதாகவும் ஆனால் முதலில் இவர் புறா-வளர்ப்பு செய்து வந்ததன் காரணமாக புறாக்களை மட்டுமே இவர் அதிக அளவில் வளர்த்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய புறா பண்ணையை ஒரு ஏக்கர் நிலத்தில் அமைத்து உள்ளதாகவும், இதில் அனைத்து வகை புறாக்களையும் இவர் மிக சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் பந்தயத்திற்கு பயன்படுத்தப்படும் புறாக்களை இவர் சந்திரமான முறையில் வளர்ப்பதாகவும் அந்தப் புறாக்கள் வெளியில் போய் சுற்றி வரும் எனவும் கூறுகிறார்.

மேலும் இவ்வாறு புறாக்களுக்கு தேவையான கூண்டுகளை அமைத்துள்ளதாகவும் ஒவ்வொரு புறாக்களுக்கும் ஒவ்வொரு அமைப்பில் கூடுகளை அமைத்து அதில் புறாக்களை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

Reproductive system and feeds

ஒவ்வொரு புறாக்களும் இரண்டு முட்டைகளை மட்டுமே இடும் எனவும் இவ்வாறு இடும் முட்டைகள் 18 நாளில் குஞ்சு பொரித்து விடும் எனவும் இவ்வாறு பொரித்த குஞ்சுகளை 30வது நாளில் தாய் புறாவிடம் இருந்து பிரித்து வெளியில் எடுத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் புறா முட்டையிட்ட மாதத்திலிருந்து அடுத்த மாதத்தில் மீண்டும் இனப்பெருக்கம் செய்து முட்டை இடும் எனவும் இந்த முறையிலேயே புறாக்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதாக கூறுகிறார்.

இரண்டு மாதத்திற்கு ஒரு ஜோடி புறாக்களை நாம் எடுக்க முடியும் எனவும் மற்றும் ஒரு வருடத்திற்கு 5லிருந்து 6 ஜோடி புறாக்களை நாம் இந்த புறா பண்ணையிலிருந்து எடுக்க முடியும் என கூறுகிறார்.

இந்த புறாக்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் தீவனத்தை அளிப்பதாகவும் மற்றும் நீரினை அளிக்கும் பாத்திரத்தை ஒரு நாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்து நீரினை அளித்து வருவதாக கூறுகிறார்.

புறாக்களுக்கு இவர் தீவனமாக இயற்கையில் வளரக்கூடிய சிறு தானியங்களை தீவனமாக அளித்து வருவதாகவும் அதில் கம்பு,கேழ்வரகு மற்றும் மக்காச்சோளம் போன்ற பல வகை தானியங்களை ஒன்றாக சேர்த்து அரைத்து தீவனமாக அளித்து வருவதாகக் கூறுகிறார்.

மேலும் புறாக்களுக்கு நோய்கள் தாக்காமல் இருப்பதற்கு புறாக்கள் அருந்தும் நீரில் மஞ்சள் மற்றும் பஞ்சகாவியா ஆகியவற்றை கலந்து அளிப்பதாகவும் இதனை புறாக்கள் அருந்துவதன் மூலம் அவைகளுக்கு எந்தவித நோய்களும் ஏற்படாது எனவும் கூறுகிறார்.

புறாக்களுக்கு இவர் அனைத்து வித சிறு தானியங்களையும் அளித்து வருவதாகவும் புறாக்கள் அனைத்து வகை சிறு தானியங்களையும் உண்ணும் எனவும் இதனை புறாக்கள் அதிக அளவில் விரும்பி உண்பதாகவும் கூறுகிறார்.

மேலும் அனைவரும் இந்த புறா பண்ணையை மிக சிறப்பான முறையில் வளர்க்க முடியும் எனவும்,புறா பண்ணை என்றால் அதனை தூய்மையாக வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று எனவும்,தூய்மையாக வைத்திருந்தால் மட்டுமே புறாக்களுக்கு எந்தவித நோய்களும் ஏற்படாது எனவும் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

புறாக்களை இவர் அழகுக்காக மட்டுமே விற்பனை செய்து வருவதாகவும் இறைச்சிக்காகவும் மற்றும் பந்தயத்திற்கும் விற்பனை செய்வது இல்லை எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் பெரிய புறாக்களை விற்பனை செய்வதில்லை எனவும் சிறிய குஞ்சுகளாக இருக்கும் புறாக்களை மட்டுமே இவர் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த புறாக்கள் 18 நாளில் முட்டையிட்டு அடுத்த 18வது நாளில் குஞ்சு பொரித்து விடும் எனவும் இவ்வாறு குஞ்சு பொரித்த புறா குஞ்சுகளை 30வது நாளில் எடுத்து விற்பனை செய்து விடுவதாக கூறுகிறார்.

மேலும் இவர் யாரிடமும் இல்லாத அரிய வகை புறாக்களை அதிகளவில் வளர்த்து வருவதால் புறாக்கள் நல்ல விலையில் விற்பனை ஆகி இவருக்கு அதிகளவில் லாபத்தை அளித்து வருவதாகவும், புறாக்களின் வகைகளைப் பொறுத்து ஒவ்வொரு புறாக்களையும் ஒவ்வொரு விலையில் விற்பனை செய்து வருவதாகவும் அதில் இவர் 500 ரூபாயிலிருந்து 20,000 ரூபாய் வரை புறாக்களை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இவர் மிக சிறப்பான முறையில் இந்த புறா வளர்ப்பை செய்து அதன் மூலம் அதிகளவு லாபத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:கோடிக்கணக்கில் லாபம் தரும் சந்தனம் மரம் வளர்ப்பு.

Leave a Reply