எளிய வழிமுறையில் வீட்டுத்தோட்டம்.

திரு விஜய் அவர்கள் சென்னையில் உள்ள ஆவடியில் வீட்டிலேயே சிறப்பான முறையில் ஒரு தோட்டத்தை நடத்திவருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வீட்டுத் தோட்டத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

திரு விஜய் அவர்களின் வாழ்க்கை

திரு விஜய் அவர்கள் சென்னையில் உள்ள ஆவடியில் வசித்து வருவதாகவும், இவர் இவருடைய வீட்டிலேயே மிக சிறப்பான முறையில் ஒரு தோட்டத்தை அமைத்து அதனை நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய வீட்டில் அமைத்துள்ள தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வருவதாகவும், இந்த கோழி வளர்ப்பில் இவருக்கு அதிக அளவு வருமானம் கிடைத்து வருவதாகவும் திரு விஜய் அவர்கள் கூறுகிறார்.

திரு விஜய் அவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வருவதாகவும், இவருக்கு சிறு வயதிலிருந்தே இயற்கையின் மீதும், விலங்குகளின் மீதும் அதிக அளவு ஆர்வம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக இவர் இந்த தோட்டத்தை அமைத்து அந்த தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இந்த வீட்டு தோட்டத்தை அமைக்கும் முறையையும், கோழிகளை வளர்க்கும் வளர்ப்பு முறையையும் பற்றி படித்து அறிந்து கொண்டு தொடங்கியதாக கூறுகிறார்.

Fruits and greens

திரு விஜய் அவர்கள் இவருடைய தோட்டத்தில் பல வகையான பழங்களையும் கீரைகளையும் வளர்த்து வருவதாகவும், இதனை இவர் உண்பதற்கும் மற்றும் கோழிகளுக்கும் அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் கொய்யாப்பழ செடியை வைத்து வளர்த்து வருவதாகவும், இந்த கொய்யாப்பழம் நாட்டு கொய்யா எனவும், இதனை நாம் உண்பதன் மூலம் நமக்கு அதிக அளவு சத்துக்கள் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

இவற்றுடன் அகத்திக் கீரை வகைகளை வைத்து மிகச் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும், இவ்வாறு விளைகின்ற அகத்திக்கீரையை கோழிகளுக்கு தீவனமாக அளித்து வருவதாகவும், இந்த கீரையை கோழிகள் அதிக அளவு விரும்பு உண்பதாகவும் திரு விஜய் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர் இந்த அகத்திக்கீரையை பெரிய மரமாக வளர்த்து உள்ளதாகவும், இந்த அகத்திக்கீரை மரம் அதிக அளவில் எங்கும் இருக்காது எனவும், மரமாக யாரும் அதிக அளவில் வளர்க்க மாட்டார்கள் எனவும் கூறுகிறார்.

வல்லாரைக் கீரை வகைகளை இவர் வளர்த்து வருவதாகவும் இந்த கீரை வகைகளை வளர்ப்பது மிக எளிய முறை எனவும், மேலும் இவருடைய தோட்டம் முழுவதும் கீழாநெல்லிச் செடியை வளர்த்து வருவதாகவும் இந்த செடியை கோழிகளுக்கு தீவனமாக அளித்து வருவதாகவும் மற்றும் இது மருத்துவ குணமாக கோழிகளுக்கு பயன்பட்டு வருவதாகவும் கூறுகிறார்.

வாழை மரங்களை வளர்த்து வருவதாகவும், இதுவரையில் இந்த வாழை மரத்தில் பழங்கள் காய்கவில்லை எனவும் இந்த வாழை மரத்தின் இலைகளை முயல்களுக்கு தீவனமாக அளித்து வருவதாகவும் திரு விஜய் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர் சீதாப்பழம் மரத்தை வளர்த்து வருவதாகவும், இந்த சீதாப்பழ மரத்திலிருந்து இவருக்கு அதிக அளவு காய்கள் கிடைத்துள்ளதாகவும் வருகிறார்.

மேலும் இவர் கோழி பசலை செடியையும் மிகச் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும், இந்தச் செடிகள் அனைத்து இடங்களிலும் மிக சுலபமாக வளர்ந்து விடும் எனவும் கூறுகிறார்.

குப்பை கீரை வகைகளையும், மணத்தக்காளி கீரை வகைகளையும் வளர்த்து வருவதாகவும் இந்த கீரை வகைகளை திரு விஜய் அவர்களும் பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.

செடிகளுக்கு நீரினை அளிக்கும் முறை

திரு விஜய் அவர்கள் இவருடைய தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு அனைத்திற்கும் மிக சிறப்பான முறையில் நீரினை அளித்து வருவதாகவும், எந்த செடிகளையும் வாடுவதற்கு விடுவதில்லை எனவும் கூறுகிறார்.

மேலும் திரு விஜய் அவர்கள் இவருடைய தோட்டத்தில் உள்ள அனைத்து செடிகளுக்கும் மொத்தமாக நீரை விடுவதற்கு ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளதாகவும், அவை தோட்டத்தின் மையத்தில் ஒரு பாத்தியை அமைத்து அந்தப் பாதையில் நீரை ஊற்றினால் அனைத்து செடிகளுக்கும் செல்லும் படி அமைத்து உள்ளதாக கூறுகிறார்.

மேலும் இவற்றுடன் இவர் சொட்டு நீர் பாசன முறையையும் செடிகளின் நடுவே அமைத்து உள்ளதாகவும், இதனால் செடிகளுக்கு எந்த நேரத்திலும் நீர் கிடைத்துக்கொண்டே இருக்கும் எனவும் கூறுகிறார்.

Vegetables and trees

திரு விஜய் அவர்கள் இவருடைய தோட்டத்தில் காய்கறிகளை வளர்த்து வருவதாகவும், ஆனால் இந்த காய்கறிகள் இன்னும் அதிக அளவில் வளரவில்லை எனவும், சில மாதங்களுக்கு முன்பு தான் விதைத்து இருப்பதாகவும் கூறுகிறார்.

பாவற்காய் வகைகளையும், வெண்டைக்காய், பீர்க்கங்காய் மற்றும் பிற காய்கறி வகைகளையும் வளர்த்து வருவதாகவும், மேலும் இவற்றுடன் இவர் புளிய மரத்தையும் வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

இந்தப் புளிய மரத்தை இவர் மிகவும் பெரிய மரமாக வளர்த்து உள்ளதாகவும், அந்த மரத்தில் இப்பொழுது காய்கள் காய்க்க தொடங்கி விட்டதாகவும் அந்த காய்கள் உண்பதற்கு மிகவும் சுவையாக இருப்பதாகவும் திரு விஜய் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர் கற்றாழை செடியை வளர்த்து வருவதாகவும், இவற்றுடன் நாற்றங்காய் மரத்தையும் வளர்த்து வருவதாகவும் இந்த மரத்திலிருந்து இவருக்கு காய்கள் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் கற்பூரவள்ளி செடியை வளர்த்து வருவதாகவும், இந்த கற்பூரவள்ளியை முயல்களுக்கு உணவாக அளித்து வருவதாகவும் இதனை முயல்கள் உண்ணும் போது அவைகளுக்கு சளி பிடிக்காது எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் தோட்டத்தைச் சுற்றிலும் முழுவதுமாக தென்னை மரங்களை வைத்து வளர்த்து வருவதாகவும், இந்த தென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் இளநீர் மற்றும் தேங்காய்கள் இவருக்கு மிகவும் அதிக அளவில் பயன்பட்டு வருவதாகவும் திரு விஜய் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர் பிரண்டை மற்றும் பிற மூலிகை செடிகளை வளர்த்து வருவதாகவும், பப்பாளி செடியை வளர்த்து வருவதாகவும் இந்த பப்பாளி செடி இப்பொழுதுதான் வளர்ந்து வருவதாகவும் அதில் இன்னும் காய்கள் காய்க்க வில்லை எனவும் கூறுகிறார்.

சிறப்பான கோழி வளர்ப்பு முறை

திரு விஜய் அவர்கள் இவருடைய தோட்டத்தின் ஒரு பகுதியில் கோழிகளை மிக சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும்,பெருவிடை, சிறுவிடை கோழி வகைகளையும் மற்றும் ஒரு கடக்நாத் கோழியையும் வளர்த்து வருவதாகவும்,மேலும் இந்த கோழிகளுடன் இவர் வாத்துக்களையும்,முயல்களையும் வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவருடைய தோட்டத்தில் இருக்கக்கூடிய கீரைகளையும் மற்றும் மருத்துவ குணம் நிறைந்த செடிகளையும் இந்த கோழிகள் தீவனமாக உண்டு வருவதாகவும் இதனால் கோழிகளின் உடல் நலம் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் வாத்துக்கள் சுதந்திரமாக சுற்றி திரிந்து விளையாடுவதற்கு ஒரு குட்டை போன்ற அமைப்பை உருவாகியுள்ளதாகவும்,இந்த கோழிகள் அனைத்தும் இவருடைய தோட்டத்திலுள்ள தீவனத்தை மட்டுமே உண்பதாகவும் இவருடைய வீட்டைவிட்டு கோழிகள் எங்கும் வெளியில் செல்வதில்லை எனவும் கூறுகிறார்.

திரு விஜய் அவர்கள் இவருடைய தோட்டத்தில் குருவிகள் வந்தால் அவைகள் தங்கி வசிப்பதற்கு குருவி கூடுகளை அமைத்து இருப்பதாகவும், அந்த குருவி கூட்டில் சில குருவிகள் வந்து தங்கி இருப்பதாகவும்,மேலும் இவற்றுடன் கோழிகள் வசிப்பதற்கு ஒரு கொட்டகையை மிகவும் சிறப்பான முறையில் அமைத்து இருப்பதாகவும் கூறுகிறார்.

திரு விஜய் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் வீட்டில் ஒரு தோட்டத்தை அமைத்து அதனை ஒரு இயற்கையான காடு போன்ற அமைப்பில் வளர்த்து வருகிறார்.

மேலும் படிக்க;பண்ணைகளுக்கு பயன்படுத்தப்படும் சிறப்பான தடுப்பு வலை.

Leave a Reply