வெள்ளை எலி வளர்ப்பில் சிறந்த லாபத்தை பெறும் பெரியவர்.

திரு சாமுவேல் அவர்கள் சென்னையில் உள்ள அம்பத்தூர் பாடி என்னும் ஊரில் வெள்ளை எலி வளர்ப்பின் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வெள்ளை எலி வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

Mr.Samuel Their life

திரு சாமுவேல் அவர்கள் சென்னையில் உள்ள அம்பத்தூர் பாடி என்னும் ஊரில் வசித்து வருவதாகவும், இவர் இங்கு இவருடைய வீட்டிலேயே வெள்ளை எலிகளை வளர்த்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய வீட்டின் மாடியிலும் புறா மற்றும் கோழி ஆகியவைகளை மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும், இதன் மூலம் இவருக்கு நிறைந்த லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் திரு சாமுவேல் அவர்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் இந்த வெள்ளை எலி வளர்ப்பு மற்றும், வீட்டின் மாடியில் ஒரு ஒருங்கிணைந்த பண்ணையை நடத்தி வருகிறார்.

இவர் வயதானால் கூட மற்றவர்களை சான்று இல்லாமல், தானே உழைத்து தன்னை பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருப்பதாகவும், இதன் காரணமாகவே இவர் இந்த வெள்ளை எலி வளர்ப்பை தொடங்கி அதன் மூலம் நிறைந்த லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

வெள்ளை எலி வளர்ப்பு

பொதுவாக எலிகள் வளர்ப்பை யாரும் அதிக அளவில் செய்வதில்லை, ஆனால் திரு சாமுவேல் அவர்கள் இந்த வெள்ளை எலி வளர்ப்பை அதிக அளவில் செய்து அதனை விற்பனை செய்து அதன் மூலம் நிறைந்த லாபத்தை பெற்று வருகிறார்.

திரு சாமுவேல் அவர்கள் வளர்க்க கூடிய அனைத்து வெள்ளை எலிகளையும் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் மாணவர்கள் எனவும், அவர்கள் இந்த வெள்ளை எலிகளை ஆராய்ச்சி செய்வதற்காக வாங்கி செல்வதாகவும் கூறுகிறார்.

மேலும் திரு சாமுவேல் அவர்கள் குறைந்த இடத்தில் அதிக அளவில் வெள்ளை எலிகளை வளர்த்து வருவதாகவும், இவர் இந்த வெள்ளை எலிகளில் 1500 வெள்ளை எலிகளை வளர்த்து வருவதாகவும், இந்த அனைத்து எலிகளையும் இவர் மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த வெள்ளை எலி வளர்ப்பு முறையை அதிக அளவில் யாரும் செய்யாமல் இருப்பதனால், இந்த வெள்ளை எலி வளர்ப்பின் மூலம் அதிக அளவு லாபம் கிடைக்கும் எனவும் திரு சாமுவேல் அவர்கள் கூறுகிறார்.

திரு சாமுவேல் அவர்கள் இவரிடம் உள்ள அனைத்து வெள்ளை எலிகளையும் கூண்டுகளில் வைத்து வளர்த்து வருவதாகவும், இந்த முறையில் வளர்ப்பது இவருக்கு மிகவும் சுலபமாக இருப்பதாகவும் கூறுகிறார்.

Feeds for white rats

திரு சாமுவேல் அவர்கள் இவரிடம் உள்ள அனைத்து வெள்ளை எலிகளுக்கும் மிகவும் சிறப்பான முறையில் தீவனங்களை அளித்து அதனை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

திரு சாமுவேல் அவர்கள் இவருடைய வெள்ளை எலிகளுக்கு கோழிகளுக்கு அளிக்கக் கூடிய தீவனத்தை அளித்து வருவதாகவும், மேலும் கோதுமையை ஊற வைத்து, அந்த ஊற வைத்த கோதுமையை எலிகளுக்கு தீவனமாக அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த வேக வைத்த கோதுமையை எலிகளுக்கு அளிப்பதனால் அவைகள் நல்ல முறையில் வளர்ந்து, அதிக அளவு குட்டிகளை போடுவதாகவும், நல்ல உடல் வளர்ச்சியை பெறுவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த வெள்ளை எலிகள் இருக்கக்கூடிய கூண்டிற்கு மேல் ஒரு பாட்டிலில் தண்ணீரை ஊற்றி அந்த பாட்டிலை தலைகீழாக வைத்து விடுவதாகவும், எலிகள் வந்து அந்த தண்ணீர் பாட்டிலை தொட்டால் தண்ணீர் தானாக எலிகளுக்கு கிடைத்து விடும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த வெள்ளை எலிகளுக்கு கோழிகளுக்கு வரும் நோய்கள் எதுவும் வருவதில்லை எனவும், இதற்கு காரணம் எலிகளை வளர்க்கக்கூடிய கூண்டுகளை சுத்தமாக வைத்திருப்பதே காரணம் எனவும், இதனால் எலிகள் வளர்க்கக்கூடிய கூண்டினை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று எனவும் திரு சாமுவேல் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த எலிகளை வளர்க்கும் போது அவைகளை ஒரு கூண்டில் இருந்து மற்றொரு கூண்டிற்கு மாற்றி போடக் கூடாது எனவும், அவ்வாறு மாற்றிப் போட்டால் அவைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும் எனவும், இதனால் ஒன்றை மற்றொன்றுடன் சேர்த்துப் போடக் கூடாது எனவும் கூறுகிறார்.

Breeding pattern of White mice

திரு சாமுவேல் அவர்களுடைய வெள்ளை எலிகள் மிகவும் சிறப்பான முறையில் இனப்பெருக்கம் செய்வதாகவும், அந்தக் கூண்டுகுள்ளேயே குட்டிகளை போட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் பார்த்துக் கொள்ளும் எனவும் கூறுகிறார்.

மேலும் ஒரு கூண்டிற்குள் ஐந்திலிருந்து ஆறு எலிகள் ஒன்றாக குட்டி போட்டு இருக்கிறது என்றால், அந்த குட்டிகள் அனைத்தும் ஒன்றாக ஒரு இடத்தில் இருக்கும் எனவும், அந்த குட்டிகளுக்கு அனைத்து எலிகளும் பால் கொடுக்கும் எனவும் திரு சாமுவேல் அவர்கள் கூறுகிறார்.

இந்த முறையில் இந்த வெள்ளை எலிகள் அனைத்தும் மிகவும் சிறப்பான முறையில் அவைகளின் குட்டிகளை பார்த்துக் கொள்வதாகவும், இவ்வாறு குட்டிகள் அனைத்தும் பெரிதாக வளர்ந்த பிறகு அவைகளை விற்பனை செய்து விடுவதாகவும்  கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

திரு சாமுவேல் அவர்கள் வளர்க்கக் கூடிய வெள்ளை எலிகள் அனைத்தும் குட்டி போடுவதாகவும், அந்த குட்டிகள் அனைத்தும் ஒன்றரை மாதத்தில் வளர்ந்து விடுவதாகவும், இவ்வாறு ஒன்றரை மாதத்தில் வளர்ந்த குட்டிகளை இவர் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த வெள்ளை எலிகளை அதிக அளவில் ஆராய்ச்சி செய்வதற்காகவே வாங்கி செல்வதாகவும், மற்றும் இந்த வெள்ளை எலிகளை அழகுக்காக வைப்பதற்கு வாங்கி செல்வதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு அழகுக்காக வைப்பதற்கு வாங்கி செல்லும் வாடிக்கையாளர்கள் சிறிது காலத்திற்குப் பிறகு இந்த எலிகளை திருப்பி வந்து கொடுத்து விடுவதாகவும், இவ்வாறு இவர்கள் எலிகளை திருப்பி கொண்டு வந்து தருவதற்கு காரணம் அந்த எலிகளை வளர்த்த முடியாமல் இருப்பதே காரணம் எனவும் கூறுகிறார்.

எலிகள் வளர்ப்பை நாம் செய்தால், இந்த எலிகள் வளர்ப்பின் மூலம் வேலை செய்யும் நேரம் குறைவு எனவும், மேலும் எலிகளுக்கு அளிக்கக் கூடிய தீவனச் செலவும் குறைவு எனவும், ஆனால் இந்த வெள்ளை எலிகள் வளர்ப்பின் மூலம் அதிகம் கிடைக்கும் எனவும் திரு சாமுவேல் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த வெள்ளை எலிகள் வளர்ப்பில் ஒரு மாதத்திற்கு தீவன செலவு ஆயிரம் ரூபாய் எனவும், ஒரு மாதத்தில் 300 எலிகளை இவர் விற்பனை செய்வதாகவும், இதன் மூலம் இவருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த வெள்ளை எலிகள் மூலம் இவருக்கு எந்த வித நோய்களும் இதுவரையில் ஏற்பட்டதில்லை எனவும், இந்த வெள்ளை எலிகளின் கூண்டினை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த வெள்ளை எலிகளை விற்பனை செய்யாமல் வைத்திருந்தால் அவைகள் மூன்றிலிருந்து நான்கு வருடங்கள் வரை உயிருடன் இருக்கும் எனவும் திரு சாமுவேல் அவர்கள் கூறுகிறார்.

திரு சாமுவேல் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இந்த வெள்ளை எலிகளை வளர்த்து அதன் மூலம் நிறைந்த லாபத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:வண்ண மீன்கள் வளர்ப்பில் நிறைந்த லாபம்.

Leave a Reply