உருளைக்கிழங்கு சாகுபடி மூலம் மாதம் ஐம்பதாயிரம் வருமானம்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் வசித்து வரும் திரு கௌதம் என்னும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்து அதன் மூலம் மாதம் 50 ஆயிரம் வரை லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய உருளைக்கிழங்கு சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

உருளைக்கிழங்கு சாகுபடியின் தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் வசித்து வரும் திரு கௌதம் என்னும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்து அதன் மூலம் மாதம் ஐம்பதாயிரம் வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவருடைய குடும்பம் ஒரு விவசாய குடும்பம் எனவும், காலம் காலமாக இவருடைய குடும்பம் விவசாயத்தையே செய்து வருவதாக கூறுகிறார்.

இவர் சிறு வயதில் இருக்கும் போது இருந்தே விவசாயம் செய்வதை பார்த்து வளர்ந்ததால் இவருக்கும் விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்து வந்ததாக கூறுகிறார்.

இவர் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று உள்ளதாகவும், அதற்குப் பின்பு பள்ளி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதன் காரணமாக இவர் பள்ளிக்கு செல்லவில்லை என கூறுகிறார்.

மேலும் இவருக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்ததாலும், அனைத்து விவசாய முறையைப் பற்றி இவருக்கு நன்கு தெரியும் என்ற காரணத்தினாலும் இவர் விவசாயத்தை தொடங்கியதாக கூறுகிறார்.

இப்பொழுது இவர் உருளைக்கிழங்கு சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

Method of sowing potatoes

உருளைக்கிழங்கு சாகுபடியை திரு கௌதம் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

உருளைக்கிழங்கு சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை ஆகியவற்றை போட்டு நிலத்தை நன்றாக பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தை நன்றாக பதப்படுத்தி வைத்த பிறகு எட்டு அடிக்கு பார் அமைத்து அதில் மெக்னீசியம் போன்றவற்றை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.

அதன் பிறகு விதைக்கிழங்கினை முக்கால் அடிக்கு குழி தோண்டி புதைத்து அதனை மூடி வைக்க வேண்டும் என கூறுகிறார்.

இவ்வாறு விதைக்கிழங்கினை நிலத்தில் விதைத்ததற்குப் பிறகு 15 இல் இருந்து 20 நாளுக்குள் செடி வளர தொடங்கி விடும் என திரு கௌதம் அவர்கள் கூறுகிறார்.

இவ்வாறு வளரும் உருளைக்கிழங்கு செடி இவருக்கு நல்ல விளைச்சலை அளித்து வருவதாக கூறுகிறார்.

உருளைக்கிழங்கின் பயன்கள்

உருளைக்கிழங்கில் பலவித நன்மைகள் இருப்பதாகவும் அதே போல் இதில் சில தீமைகள் இருப்பதாகவும் கூறுகிறார்.

உருளைக்கிழங்கு நமக்கு பல விதங்களில் பயன்பட்டு வருவதாகவும், உணவுகளாக இதனை சமைத்து உண்ணும் போது மிகவும் சுவையாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

உருளைக்கிழங்கை நாம் உணவில் எடுத்துக் கொண்டால் வயிற்று கோளாறுகள் மற்றும் வயிற்றுப்புண் ஆகியவை குணமடையும் என கூறுகிறார்.

மேலும் குடல் கோளாறுகள் மற்றும் இரைப்பை கோளாறுகள் உள்ளவர்கள் இந்த உருளைக்கிழங்கு சாற்றினை எடுத்துக் கொள்வது அவர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் எனக் கூறுகிறார்.

உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும் மற்றும் ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கும் இது மிகவும் நன்மை என கூறுகிறார்.

மேலும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த உருளைக்கிழங்கினை உண்ணக்கூடாது எனவும் ஏனெனில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த உருளைக்கிழங்கினை எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் அதிகமாகி விடும் என கூறுகிறார்.

முளையிட்ட உருளைக்கிழங்கை அதிகமாக உணவில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் ஏனெனில் முளையிட்ட உருளைக்கிழங்கில் நச்சுக்கள் அதிகமாக இருக்கும் என கூறுகிறார்.

இதனால் குடல் பாதையில் எரிச்சலை உண்டாக்கி குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்தி விடும் எனக் கூறுகிறார்.

இந்த முளையிட்ட உருளைக்கிழங்கினை உண்பதால் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய உபாதைகள் ஏற்படும் என கூறுகிறார்.

இதனால் முளையிட்ட உருளைக்கிழங்கை உணவில் எடுத்துக் கொள்வதை  தவிர்க்க வேண்டும் என கூறுகிறார்.

இதுபோல் உருளைக்கிழங்கில் பலவித நன்மைகள் இருப்பதாக கூறுகிறார்.

Fertilizer and maintenance method

உருளைக்கிழங்கு சாகுபடியில் இவர் அதிக அளவில் எந்த பராமரிப்பும் செய்வதில்லை எனவும், குறைந்த அளவிலேயே பராமரிப்பு முறை இருக்கும் என கூறுகிறார்.

மேலும் இந்த உருளைக்கிழங்கு சாகுபடியில் இவர் அதிகமாக செயற்கை உரங்களை பயன்படுத்துவதில்லை எனவும், குறைவாகவே செயற்கை உரங்களை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

செடி முளைத்து வளர்ந்த பின்பு அதற்கு செயற்கை உரமான கிராமோக்சோன் மற்றும் மேண்டாசிப் ஆகிய உரங்களை செடிகளுக்கு அளிப்பதாக கூறுகிறார்.

செடிகளுக்கு நோய் தாக்குதல் ஏற்படும்போது சரியான மருந்தினை செடிகளுக்கு அளித்து வருவதாகவும், இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை ஆகியவற்றையும் இவர் இந்த உருளைக்கிழங்கு சாகுபடியில் பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

மேலும் செடிகளுக்கு இடையில் இருக்கும் களை செடிகளை போக்கி நிலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

25 லிருந்து 35 வது நாளுக்குள் செடிகளின் வேரின் மீது மீண்டும் ஒருமுறை மண்ணினை போட வேண்டும் எனவும், இல்லை என்றால் கிழங்கு நிலத்தின் மேலே வளர்ந்து விடும் என கூறுகிறார்.

கிழங்கு நிலத்தின் மீது வளராமல் நிலத்தின் உள்ளே வளரும் போது மட்டுமே நல்ல விளைச்சலை நமக்கு அளிக்கும் என கூறுகிறார்.

அறுவடை மற்றும் நீரினை அளிக்கும் முறை

உருளைக்கிழங்கு சாகுபடியில் நீர் தேவை அதிகமாக இருக்காது எனவும் குறைந்த அளவிலேயே நீர் தேவை இருக்கும் என கூறுகிறார்.

உருளைக்கிழங்கு சாகுபடியில் வெயில் மற்றும் மழை ஆகிய இரண்டும் சரியான அளவு முறையில் இருக்க வேண்டும் என கூறுகிறார்.

மழை அதிகமாக பெய்யும் காலங்களில் இந்த உருளைக்கிழங்கு சாகுபடி செய்தால் உருளைக்கிழங்கு நல்ல விளைச்சலை அளிக்காது என கூறுகிறார்.

வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இந்த உருளைக்கிழங்கு செடிகளுக்கு இவர் நீரினை அளிப்பதாகவும், இவற்றுக்கு நீரினை அளிப்பதற்கு சொட்டு நீர் பாசனம் முறையை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

உருளைக்கிழங்கினை நிலத்தில் விதைத்த 120 நாட்களில் அறுவடை செய்ய தொடங்கி விடலாம் எனவும், ஏக்கருக்கு 15லிருந்து 20 டன் உருளைக்கிழங்கு கிடைக்கும் என கூறுகிறார்.

ஒரு உருளைக்கிழங்கு செடியிலிருந்து எட்டில் இருந்து பத்து உருளைக்கிழங்குகள் கிடைக்கும் என கூறுகிறார்.

Sales method and profit

உருளைக்கிழங்கு சாகுபடியை திரு கௌதம் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் செய்து அதனை சந்தைகளில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவருடைய தோட்டத்திற்கு வந்து வாடிக்கையாளர்கள் உருளைக்கிழங்கை அதிகமாக வாங்கி செல்வதாகவும், இவருடைய தோட்டத்திற்கு அருகில் உள்ள மக்களும் இவரிடம் உருளைக்கிழங்கை குறைந்த அளவில் வாங்குவதாக கூறுகிறார்.

இவருடைய உருளைக்கிழங்கு மிகவும் சுவையாகவும் மற்றும் நீண்ட நாட்கள் முளைப்பு ஏற்படாமல் இருப்பதாலும் அதிக அளவில் இவருடைய உருளைக்கிழங்கு விற்பனையாகி வருவதாக கூறுகிறார்.

இதன் மூலம் இவர் மாதம் 50 ஆயிரம் வரை லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் திரு கௌதம் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இவருடைய உருளைக்கிழங்கு சாகுபடியை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் பல தகவல்கள்:பிரண்டை சாகுபடி மூலம் மாதம் 45000 லாபம்.

Leave a Reply