மிகக் குறைந்த விலையில் கோழிப்பண்ணைக்கு தேவையான பொருட்கள்.

கோயம்புத்தூரில் மயூரா இன்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனம் கோழி பண்ணைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்து மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தைப் பற்றியும், நிறுவனத்தில் உள்ள பொருட்களையும் அவற்றின் தயாரிக்கும் முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

Mayura industries

கோயம்புத்தூரில் மிகப் பெரிய அளவிலான கோழி பண்ணைக்கு தேவையான அனைத்து பொருட்களையும்  மிக குறைந்த விலையில் விற்பனை செய்யும் மயூரா இண்டஸ்ட்ரீஸ் என்னும் ஒரு நிறுவனம் அமைந்து உள்ளது.

இந்த மயூரா இண்டஸ்ட்ரீஸ் என்னும் இந்த நிறுவனம் கடந்த 30 வருடங்களாக இயங்கி வருவதாகவும், அதிக அளவு வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தில் வந்து பொருட்களை வாங்கிச் செல்வதாகவும் திருமதி இந்துமதி அவர்கள் கூறுகிறார்.

இந்த நிறுவனத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் கோழிப் பண்ணைகளுக்கு தேவையானதாகவும், அதே சமயத்தில் இந்த அனைத்து பொருட்களும் மிகக் குறைந்த விலையிலும் இருப்பதாகவும் இந்த மயூரா இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணியாற்றும் திருமதி இந்துமதி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த நிறுவனமானது அனைத்துப் பொருட்களையும் மிகத் தரமான முறையிலேயே தயாரித்து அதனை குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதாகவும்,இந்த பொருட்கள் அனைத்தும் கோழி பண்ணை வைத்துள்ள பண்ணையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் மற்ற நிறுவனங்களை விட இவர்கள் கோழி பண்ணைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மிகக் குறைந்த விலையிலேயே அளித்து வருவதாகவும் திருமதி இந்துமதி அவர்கள் கூறுகிறார்.

மயூரா இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிறப்பு

மயூரா இண்டஸ்ட்ரீஸ் என்னும் இந்த நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட மிகக் குறைந்த விலையில் கோழி பண்ணைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

கோழிகளுக்கு நீர் வைக்கும் குடிப்பானை மற்ற நிறுவனங்களிலோ அல்லது அமேசான் மூலமோ வாங்கினால் 600ரூபாயிலிருந்து 700 ரூபாய் வரை இருக்கும் எனவும், ஆனால் இவர்களுடைய நிறுவனத்தில் வாங்கினால் வெறும் 300 ரூபாய் மட்டுமே எனவும் கூறுகிறார்.

மேலும் இதுபோன்று இவர்களிடம் உள்ள கோழிப் பண்ணைக்கு தேவையான அனைத்து பொருட்களுமே மிகக் குறைந்த விலையே எனவும் திருமதி இந்துமதி அவர்கள் கூறுகிறார்.

தென்னிந்தியாவிலேயே முதன் முதலில் கோழி குஞ்சுகள் நீரினை அருந்துவதற்கு பயன்படும் நிப்பிள் வகைகளை இவர்களே தயாரித்ததாகவும்,மேலும் இவர்கள் இந்த அனைத்து பொருட்களையும் நேரடியாகவே விற்பனை செய்வதாகவும் கூறுகிறார்.

Products within the company

மயூரா இண்டஸ்ட்ரீஸ் என்னும் இந்த நிறுவனத்தில் கோழி பண்ணைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மிகவும் தரமான முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகின்றார்.

இதில் இவர்கள் கோழிகள் தீவனம் உண்பதற்கும் மற்றும் தண்ணீர் அருந்துவதற்கும் தேவையான பொருளை உற்பத்தி செய்து வருவதாகவும்,மற்றும் சிறு கோழி குஞ்சுகள் நீரினை அருந்துவதற்கு தேவையான பொருளையும் உற்பத்தி செய்து வருவதாக கூறுகிறார்.

மற்றும் பண்ணையின் கொட்டகை அமைப்பதற்கு தேவையான பொருளையும் உற்பத்தி செய்து வருவதாகவும்,மேலும் வெயில் காலங்களில் பண்ணை குளிர்ச்சியாக இருப்பதற்கு தேவையான ஒரு இயந்திரத்தையும் உருவாக்கி இருப்பதாகவும் கூறுகின்றார்.

மேலும் முட்டைகளை வைப்பதற்கு முட்டை அட்டையை தயாரித்து வருவதாகவும்,மற்றும் முட்டைக் கோழிகளை வளர்ப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்து வருவதாகவும் திருமதி இந்துமதி அவர்கள் கூறுகிறார்.

இவ்வாறு இவர்கள் கோழி வளர்ப்பதற்கு தேவையான மற்றும் கோழி பண்ணை அமைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் மிக தரமான முறையில் உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதாக கூறுகின்றார்.

உற்பத்தி முறை

மயூரா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இவர்கள் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் மிகவும் கவனமான முறையில் தரமாக உற்பத்தி செய்து வருவதாக திருமதி இந்துமதி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர்கள் ஒவ்வொரு பொருளையும் மிகவும் கவனமான முறையில் இவர்களே உற்பத்தி செய்து அனைத்தையும் ஒன்றாக வைத்து அதன் பின் ஒன்றாக இணைத்து உருவாக்குவதாக கூறுகிறார்.

இந்த முறையை இவர்கள் மிகவும் தரமான முறையில் இவர்களே பண்ணைக்கு தேவையான பொருளை உற்பத்தி செய்வதாலும்,மேலும் இவர்கள் கடந்த முப்பது வருடங்களாக இந்த நிறுவனத்தை நடத்தி வருவதாலும் அதிகளவு வாடிக்கையாளர்கள் இவர்களது நிறுவனத்தில் வந்து பொருட்களை வாங்கிச் செல்வதாக கூறுகிறார்.

Method of using materials

பிராய்லர் கோழிகளுக்கு நீரினை அளிப்பதற்கு பயன்படுத்தும் பொருளானது 2 லிட்டரிலிருந்து இரண்டரை லிட்டர் வரை இருப்பதாகவும்,இந்த இரண்டு பொருளையும் பிராய்லர் கோழிகள் பிறந்ததில் இருந்து பத்து நாள் வரை பயன்படுத்தலாம் என கூறுகிறார்.

மற்றும் பிராய்லர் கோழிகள் பிறந்ததிலிருந்து பதினோராவது நாளில் இருந்து நாற்பத்தி ஐந்தாவது நாள் வரை பெரிய அளவிலான தண்ணீர் குடிக்கும் பொருளை பயன்படுத்த வேண்டும் எனவும், மற்றும் பிராய்லர் கோழிகளுக்கு 45 நாள் மட்டுமே ஆயுட்காலம் என கூறுகிறார்.

மற்றும் சிறு கோழிக்குஞ்சுகளுக்கு உணவை வைக்கும் பொருளில் உணவானது அதிக அளவில் வீணாகும் எனவும்,பெரிய கோழிகளுக்கு உணவை வைக்கும் பொருளில் உணவானது அந்த அளவிற்கு வீணாகாது எனவும் கூறுகிறார்.

மேலும் சிறு கோழி குஞ்சுகளுக்கு உணவை வைக்கும் பொருளில் உணவினை கொட்டுவது சற்று கடினமாக இருக்கும் எனவும்,ஆனால் பெரிய கோழிகளுக்கு உணவை வைக்கும் பொருளில் உணவை வைப்பது மிகவும் சுலபமாக இருக்கும் எனவும் திருமதி இந்துமதி அவர்கள் கூறுகிறார்.

மேலும் பெரிய கோழிகளுக்கு நீரினை வைக்கப் பயன்படும் பொருளானது தானாகவே செயல்படும் வகையில் உருவாக்கி உள்ளதாகவும்,அதேபோல் பெரிய கோழிகள் உணவை உண்பதற்கு பயன்படுத்தும் பொருளானது கோழிகள் உணவை உண்ண உண்ண தானாகவே உணவு அந்த பொருளின் நிரம்பி விடும் என கூறுகிறார்.

மேலும் இவர்கள் கோழி முட்டைகளை சேமித்து வைப்பதற்கு முட்டை வைக்கும் அட்டையையும் மிக சிறப்பான முறையில் தயாரித்து வருவதாகவும் திருமதி இந்துமதி அவர்கள் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் பொருளின் விலை

கோயம்புத்தூரில் இயங்கி வருகின்ற இந்த மயூரா இண்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனத்தில் மட்டுமே கோழி பண்ணைக்கு தேவையான அனைத்து பொருட்களும் மிக குறைந்த விலையில் மலிவாக இருப்பதாக திருமதி இந்துமதி அவர்கள் கூறுகிறார்.

பெரிய கோழிகளுக்கு உணவினை மற்றும் நீரினை வைக்க பயன்படும் பொருளானது மற்ற நிறுவனங்களில் அல்லது அமேசான் மூலமும் வாங்கினால் 600ரூபாய் இருக்கும் எனவும் ஆனால் இவர்களிடம் வாங்கினால் வெறும் 300ரூபாய்க்கு மட்டுமே அளிப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் இதே போல் கோழிப்பண்ணைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மிகக் குறைந்த விலையிலேயே விற்பனை செய்து வருவதாகவும்,மேலும் பல்லடம்,தேனி,நாமக்கல்,கோலார் மற்றும் பெங்களூரில் உள்ள நிலமங்களா,உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் இவர்களுடைய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் இவர்களுடைய நிறுவனத்தில் கோழிப்பண்ணைக்கு ஒரு பொருள் மட்டுமே தேவை எனில் அதனைக் கூட தனியாக பெற்றுக்கொள்ளலாம் எனவும்,மேலும் வாடிக்கையாளர்கள் குறைந்த அளவில் பொருளை வாங்கினால் அதனை கொரியர் முறையில் அனுப்புவதாகவும்,மற்றும் அதிக அளவில் பொருளை வாங்கினால் அதனை பார்சல் முறையில் அனுப்புவதாகவும் கூறுகின்றார்.

கோயமுத்தூரில் மிக சிறப்பாக இயங்கி வரும் இந்த மயூரா இண்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனம் மிக சிறப்பான முறையில் கோழி பண்ணைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்து மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க:ஆட்டுப்பாலின் மூலம் குளியல் கட்டி தயாரிப்பு.

Leave a Reply