திரு விஜயகுமார் அவர்கள் அரக்கோணம் அருகிலுள்ள நந்திவேடநகல் என்னும் ஊரில் கைராலி கோழிப் பண்ணையினை வைத்து சிறப்பாக நடத்தி வருகிறார். திரு விஜயகுமார் அவர்களை பற்றியும் அவருடைய இந்த கைராலி கோழி பண்ணையையும் அந்த கோழிகளின் சிறப்புகளையும் பற்றியும் பின்வருமாறு ஒரு கட்டுரை வடிவில் விரிவாக காணலாம்.
திரு விஜயகுமார் அவர்களின் வாழ்க்கை
திரு விஜயகுமார் அவர்கள் அரக்கோணம் அருகில் உள்ள நந்திவேடநகல் என்னும் ஊரில் வசித்து வருகிறார். இவர் இந்த ஊரில் கைராலி பண்ணையினை வைத்து அந்தப் பண்ணையை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.
இந்த கைராலி கோழிகள் ஆனது மிகவும் சுறுசுறுப்பாகவும் நல்ல வளர்ச்சியுடனும் வளரும் தன்மையுடையது.
திரு விஜயகுமார் அவர்கள் 2001-ஆம் ஆண்டிலேயே காடை பண்ணையினை மிக பெரிய அளவில் செய்து வந்ததாக கூறுகிறார். இவ்வாறு 2001ஆம் ஆண்டிலேயே காடை பண்ணையினை இவ்வாறாக பெரிய அளவில் நடத்தி வந்தது மிக சிறப்பான ஒன்றாகவே தெரிகிறது.
இவ்வாறு 2001 ஆம் ஆண்டிலேயே காடை பண்ணையினை சிறப்பாக நடத்தி வந்த திரு விஜயகுமார் அவர்கள் இடையில் சில வருடங்கள் அந்தப் பண்ணை வளர்ப்பு முறையினை கைவிட்டதாக திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார்.
இவ்வாறாக இந்த காடை பண்ணையினை கை விட்டதால் இவருக்கு இந்த கைராலி கோழிப்பண்ணையினை தொடங்கலாம் என யோசனை வந்ததாக திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார்.
இந்த கைராலி கோழி பண்ணையினை திரு விஜயகுமார் அவர்கள் ஆறு மாதங்களாக சிறிது சிறிதாக கோழிகளை வாங்கி நடத்தி வருவதாக கூறுகிறார். திரு விஜயகுமார் அவர்கள் இந்த கைராலி கோழி பண்ணையினை மிக சிறப்பாக நடத்திவருகிறார்.
இந்த கோழிப்பண்ணையை இவர் நடத்தி வருவதால் இவருக்கு அதிக வருமானமும், மன நிம்மதியும் கிடைப்பதாகவும் கூறுகிறார். இந்த கைராலி கோழிகள் ஆனது மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்த இறைச்சியாகவும் இருக்கின்றன.
கைராலி கோழிகள்
திரு விஜயகுமார் அவர்கள் இந்த கைராலி கோழி பண்ணை மிக சிறப்பாக நடத்தி வருகிறார். இவரின் பண்ணையில் மொத்தமாக நூறு கோழிகளை வளர்த்து வருவதாக திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார்.
இந்தக் கோழி வகைகள் ஆனது மிகவும் சுவையாகவும் அதிக அளவு இறைச்சியை பெற்றும் இருக்கிறது. இவரிடம் உள்ள கோழிகளில் கைராலி கோழிகள் வகைகளில் மொத்தமாக 60 கோழிகள் இருப்பதாகவும், அதில் 50 கோழிகள் பெண் கோழிகள் எனவும் மீதி உள்ள 10 கோழிகள் ஆண் கோழிகள் எனவும் திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவரிடம் சிறுவிடை கோழி வகைகளில் 20 கோழி வகைகள் இருப்பதாகவும் கூறுகிறார். இந்த அனைத்து கோழிகளையும் மேய்ச்சல் முறையிலேயே வளர்த்து வருவதாக திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த கோழி வளர்ப்பு முறையில் அதிக அளவு வருமானத்தையும் பெற்று வருவதாக கூறுகிறார். இந்த கோழிகளின் முட்டைகளையும் வெளியில் விற்பனை செய்து வருவதாகவும் திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார்.
கோழிகளின் நோய் தடுப்பு முறை
பொதுவாக கோழிகள் மேய்ச்சல் முறையில் வளர்த்த பட்டால் அவைகளுக்கு நோய் தடுப்பு முறையை அதிக அளவில் பயன்படுத்தமாட்டார்கள்.
திரு விஜயகுமார் அவர்கள் பண்ணையிலும் கோழிகள் மேய்ச்சல் முறையிலேயே வளர்த்த பட்டுள்ளதால் அந்தக் கோழிகளுக்கு மிகவும் முடியாத நிலையில் மட்டுமே நோய் தடுப்பு முறையை பயன்படுத்தி வருவதாக திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார்.
மேலும் மாதத்திற்கு இரண்டு முறை மஞ்சள், துளசி மற்றும் வெற்றிலை, வேப்பங்கொழுந்து மற்றும் மிளகு ஆகிய மருத்துவ சக்து நிறைந்த பொருட்களை ஒன்றாக சேர்த்து அரைத்து அவைகளை அரிசியில் கலந்து இவர் வளர்த்தும் கோழிகளுக்கு அளிப்பதாக கூறுகிறார்.
இந்த முறை தீவனங்களை கோழிகள் உண்பதால் அவைகளுக்கு அதிக அளவில் எதிர்ப்பு சக்தி கிடைப்பதாகவும், இந்த தீவனத்தின் மூலமே கோழிகளுக்கு வரும் நோய்கள் பெருமளவு குறைந்து விடுவதாக திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார். மேலும் கோழிகள் அதிக வலுவுடனும் இருக்கும் எனவும் கூறுகிறார்.
திரு விஜயகுமார் அவர்கள் அவரின் பண்ணையில் உள்ள அனைத்து கோழிகளையும் மேய்ச்சல் முறையிலேயே வளர்த்து வருவதால் அவருடைய கோழிகளுக்கு அதிக அளவில் எந்த வித நோய்களும் தாக்குவதில்லை.
மேலும் இயற்கை தீவனங்களை உண்பதால் இந்த கோழிகளுக்கு எந்தவித நோய்களும் ஏற்பட வாய்ப்பு மிகமிக குறைவாகவே இருக்கிறது.
கோழிகளுக்கு அளிக்கும் தீவனங்கள்
திரு விஜயகுமார் அவர்கள் அவருடைய பண்ணையில் உள்ள கோழிகளுக்கு கீரை வகைகளை தீவனங்கள் ஆக அளித்து வருவதாக கூறுகிறார். இந்தக் கீரை வகைகளை சந்தைகளில் இருந்தும் இவருடைய தோட்டத்தில் இருந்தும் எடுத்து கோழிகளுக்கு தீவனமாக அளித்து வருவதாக திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார்.
இந்த கீரை வகைகளை இந்த கோழிகள் அதிக அளவில் விரும்பி உண்பதாகவும் இவர் கூறுகிறார். மேலும் இவர் அசோலாவை உற்பத்தி செய்து வருவதாகவும், அதனை கோழிகளுக்கு தீவனமாக அளிப்பதாகவும் திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார்.
மற்றும் அரிசி வகைகளையும், புண்ணாக்கு வகைகளையும் அளித்து வருவதாக கூறுகிறார். புண்ணாக்கு வகைகளை கோழிகளுக்கு அளிப்பதன் மூலம் அவைகளுக்கு புரோட்டின் சத்து அதிக அளவில் கிடைக்கும் எனவும் திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார்.
கோழிகளின் முட்டைகள்
திரு விஜயகுமார் அவர்களின் பண்ணையில் உள்ள கோழிகள் சிறிய அளவில் மட்டுமே முட்டைகள் தருவதாக கூறுகிறார். இவ்வாறு முட்டைகள் குறைந்த அளவில் கிடைக்க காரணம் பண்ணையை இவர் சில மாதங்களுக்கு முன்பு இடம் மாற்றியதே காரணம் எனவும் கூறுகிறார்.
இவரிடம் உள்ள அனைத்து கோழிகளின் முட்டைகளையும் சென்னையிலேயே அதிகமாக விற்பனை செய்து வருவதாக திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார். பொதுவாக பண்ணை முட்டைகளே அதிக விலையில் விற்பனையாகி கொண்டு வருவதால் இவரும் இந்த முட்டைகளை அந்த விலைக்கே விற்று வருவதாகவும் கூறுகிறார்.
திரு விஜயகுமார் அவர்கள் இந்த பண்ணையினை உருவாக்கியதின் எதிர்கால திட்டமே இவருடைய பண்ணையில் உள்ள மரங்களின் நிழல்களே ஆகும் எனவும் கூறுகிறார்.
இவர் நினைத்ததைப் போலவே இவருடைய பண்ணையில் உள்ள அனைத்து மரங்களும் நல்ல முறையில் வளர்ந்து அதிக நிழலை தருவதாக கூறுகிறார். இதனால் இவர் அதிகம் மகிழ்ச்சியுடனும், இவரின் இந்த எதிர்கால திட்டமானது நிறைவேறி விட்டதாகவும் திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார்.
மரங்கள் இவ்வாறு நல்லமுறையில் வளர்ந்து அதிக நிழலை தந்து உள்ளதால் கோழிகளுக்கு நல்ல முறையில் நிழல் கிடைப்பதாகவும், அந்தக் கோழிகள் நல்ல முறையில் வளர்ந்து வருவதாகவும் கூறுகிறார்.
இதனால் இன்னும் ஒரு வருடங்களுக்குள் இதைவிட நூறு மடங்கு சிறப்பான முறையில் பண்ணை நடத்த முடியும் எனவும் திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார்.
ஒரு நாளைக்கு ஐந்நூறு முட்டைகளை கொடுக்கும் அளவிற்கு கோழிகள் வந்துவிடும் எனவும் கூறுகிறார். திரு விஜயகுமார் அவர்கள் இதுவரையில் எந்த கோழிகளையும் இறைச்சிக்காக விற்பனை செய்தது இல்லை எனவும் கூறுகிறார். ஆனால் இந்த கோழிகளின் இறைச்சிகள் நல்ல சுவையாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
அதிக அளவில் முட்டை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே முட்டைகளை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். மேலும் இந்த முட்டைகளை பத்து நாட்களுக்கு வெளியில் வைக்கலாம் எனவும் இதனால் எந்த பாதிப்பும் முட்டைகளுக்கு ஏற்படாது எனவும் திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார்.
பொதுவாக நாட்டுக்கோழி முட்டைகள் என்றாலே உடலுக்கு மிக நன்மையை தரக்கூடிய ஒன்றாகும். நாட்டுக்கோழி முட்டைகளின் கரு நன்றாக இருப்பதால் முட்டையும் நன்றாகவே இருக்கும் எனவும் கூறுகிறார்.
திரு விஜயகுமார் அவர்கள் முட்டைகளை வாங்கி அந்த முட்டை பொரித்து கோழிகளாக வளர்த்துவதற்கு முட்டைகளை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு முட்டைகளை அளிப்பதில்லை எனவும் கூறுகிறார்.
பண்ணையின் அமைப்பு
திரு விஜயகுமார் அவர்கள் பண்ணையினை மிகவும் குறைந்த விலையில் மிக சிறப்பாக உருவாக்கியுள்ளார்.
திரு விஜயகுமார் அவர்கள் பண்ணையின் கொட்டகை அமைப்புகளுக்கு அதிக பணம் செலவு ஆனதால் இவர் கோழிகளை தனித்தனியாக வைப்பதற்கு எண்ணெய் பெட்டிகளை குறைந்த விலைக்கு வாங்கி அதனை ஒரு கூண்டு போல் தயார் செய்து வைத்துள்ளார்.
இந்த எண்ணெய் பெட்டிகளுக்குள் வைக்கோல் மற்றும் மண் போன்ற வகைகளை கொட்டி வைக்கலாம் எனவும் கூறுகிறார். மேலும் இந்தப் பெட்டிகளில் இருந்து கோழிகள் வெளியில் வரும்போது கால்களை கிழித்துக் கொள்ளாமல் இருப்பதற்கு வீட்டில் உள்ள ஏதாவது தேவையற்ற பைப்புகளை அந்தப் பெட்டியில் பொருத்திக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.
இதனால் கோழிகள் எந்த பாதிப்பும் இன்றி வெளியில் வரும் எனவும், இந்த முறையை பின்பற்றினால் கூண்டுகள் வாங்கும் பணத்தின் விலையை குறைக்கலாம் எனவும் கோழிகள் இந்தப் பெட்டிகளில் முட்டைகள் வைத்தாலும் அவற்றை சுலபமாக எடுத்துக் கொள்ளலாம் எனவும் திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார்.
சிறிய கோழிக்குஞ்சுகளை ஒரு கூண்டில் வைத்து வளர்த்து வருகிறார். அந்தக் கோழிக் குஞ்சுகளின் கழிவுகள் கீழே விழாமல் இருப்பதற்கு அந்த கூண்டியிலேயே இரண்டு அடுக்குகளை கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார்.
இதனால் கோழிகள் நிற்கும் இடத்தில் அதாவது முதல் அடுக்கில் எந்தவித கழிவுகளும் இருக்காது எனவும், கோழிகளின் கழிவுகள் இரண்டாவது அடுக்கில் விழுந்து விடும் எனவும் திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார். இந்த கழிவுகளை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்வதாகவும் கூறுகிறார்.
இந்த முறை மிக சிறப்பான முறை என்றும் இதனால் கழிவுகளை சுலபமாக சுத்தம் செய்து கொள்ளலாம் எனவும் கூறுகிறார். பண்ணை தொடங்கும் முன் பண்ணையில் அதிக அளவு மரங்களை வளர்ப்பது மிகவும் நல்லது எனவும் திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார்.
இந்த கைராலி கோழிகளின் முட்டைகள் நல்ல சுவையாக இருக்கும் எனவும் கூறுகிறார். சிலபேர் இந்த கோழி முட்டைகளை வாங்கி உண்பதற்கு பயம் கொண்டு உள்ளதாகவும், ஆனால் பல பேர்களிடம் இந்த முட்டைகள் நல்ல வரவேற்பை பெற்று வருவதாகவும் திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார்.
இந்த முறையில் பயம் கொண்டு முட்டைகளை வாங்குவதை விடுத்து நல்ல எண்ணத்தை கொண்டு முட்டைகளை வாங்கலாம் எனவும் இந்த முட்டை எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் திரு விஜயகுமார் அவர்கள் கூறுகிறார்.
திரு விஜயகுமார் அவர்கள் இந்த கைராலி கோழி பண்ணையினை மிக சிறப்பான முறையிலும் நல்ல இயற்கை சூழலிலும் மிக தரமான முறையில் கோழிகளை வளர்த்து வருகிறார்.
மேலும் படிக்க:அதிக அளவு புரத சத்து நிறைந்த சிறந்த கோழி தீவனம்.