தேங்காய்கள் உரிக்க பயன்படும் இயந்திரம்.

ஆட்டோ பிரிண்ட் எனும் நிறுவனம் தேங்காய் உரிப்பதற்கு பயன்படும் ஒரு இயந்திரத்தை மிக சிறப்பான மற்றும் தரமான முறையில் உருவாக்கியுள்ளனர். அந்த நிறுவனத்தைப் பற்றியும், தேங்காய் உரிக்கும் இயந்திரத்தை பற்றியும் பின்வருமாறு ஒரு கட்டுரை வடிவில் விரிவாக காணலாம்.

ஆட்டோ பிரிண்ட் நிறுவனம்

பொதுவாக தேங்காய் உரிப்பது சிறிது கடினமான வேலையாக இருக்கிறது. தொழிலாளர்கள் தேங்காய் மட்டையை உரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன. இதனால் நேரம் ஆனது வீணாகின்றன. மேலும் இந்த பழைய முறையிலான தேங்காய் உரிக்கும் இயந்திரம் சிறிது ஆபத்தானது, தேங்காய்களை உரிக்கும்போது கைகளில் கிழிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எனவே ஆட்டோ பிரிண்ட் என்னும் நிறுவனம் மிக சுலபமான வகையில் தேங்காய்களை உரிக்கும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த இயந்திரமானது மிகவும் பாதுகாப்பாகவும், அதிக விரைவில் தேங்காய்களை உரிக்கும் அளவிற்கு மிக சிறப்பான மற்றும் தரமான இயந்திரமாக உள்ளது.

இந்த ஆட்டோ பிரிண்ட் நிறுவனம் கடந்த இருபத்து ஐந்து வருடங்களாக இந்த தொழிலை செய்து வருவதாக இந்த நிறுவனத்தின் தயாரிப்பு நிபுணர் திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.

இந்த ஆட்டோ பிரிண்ட் நிறுவனமானது 1993- ல் ஒரு அச்சகம் ஆக மட்டுமே தொடங்கி இருந்ததாகவும் அதன் பிறகு இயந்திரங்களை தயாரித்து அதனை நல்ல முறையில் விற்பனை செய்து வந்துள்ளனர். இது மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வந்ததாக திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.

இப்பொழுது இந்த ஆட்டோ பிரிண்ட் நிறுவனமானது  இந்திரங்களை ஐம்பத்தி இரண்டு நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்து வருவதாகவும், பதி நாலாயிரம் இயந்திரங்களுக்கு மேல் நிறுவி உள்ளதாகவும் திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இயந்திரங்களின் நிறுவனத்தில் ஆட்டோ பிரிண்ட் நிறுவனமானது தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனமாக உள்ளது எனவும், இதன் காரணமாக ஆட்டோ பிரிண்ட் நிறுவனத்தின் சார்பாக திரு சைலந்தர் மற்றும் அவரது நிறுவனத்தில் உள்ள அனைவரும் மிகுந்த பெருமை அடைவதாகவும் கூறுகிறார்.

இந்த ஆட்டோ பிரிண்ட் நிறுவனமானது வேளாண்மை தொடர்பான தொழில்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இந்த தேங்காய் உரிக்கும் இயந்திரம் மற்றும் அது போன்ற இயந்திரங்களை உருவாக்கி வருவதாக திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.

இவர்கள் பவர் வீடர் மற்றும் இந்த தேங்காய் உரிக்கும் இயந்திரங்களை தற்பொழுது அதிக அளவு தயார் செய்து கொண்டு வருவதாக திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.

தேங்காய் உரிக்கும் இயந்திரம்

இந்த தேங்காய் உரிக்கும் இயந்திரம் ஆனது தேங்காயின் மட்டையை மட்டுமே உரிக்கும் தேங்காய்க்கு எந்த பாதிப்பும் இந்த இயந்திரத்தினால் ஏற்படாது எனவும் திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.

இந்த ஆட்டோ பிரிண்ட் நிறுவனத்தில் உள்ள தேங்காய் உரிக்கும் இயந்திரம் ஆனது ஒரு மணி நேரத்திற்கு ஐந்நூறு தேங்காய்களின் மட்டைகளை சாதாரணமாக எந்தவித பாதிப்பும் இன்றி உரித்து விடும் என திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.

இவர்களின் நிறுவனத்தில் உள்ள இந்த தேங்காய் மட்டையை உரிக்க பயன்படும் இந்த இயந்திரமானது மிகவும் சிறப்பான மற்றும் தரமான வகையில் உள்ளது.

தேங்காய் உரிக்கும் இயந்திரத்தின் தேவை மற்றும் அதற்கான காரணம்

காலம் காலமாக தேங்காய்களை கைகளாலே உரித்து வந்து கொண்டிருந்தன. அப்பொழுது வேலையாட்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது ஆனால் இன்றுள்ள நிலையில் வேலையாட்களின் எண்ணிக்கை ஆனது படிப்படியாக குறைந்து கொண்டே  வருகிறது.

மேலும் வேலையாட்களின் எண்ணிக்கை வரும் காலங்களில் குறைந்து கொண்டே வருமே தவிர அதிகரிக்காது, ஏனெனில் படிப்பறிவு அதிகமாக அதிகமாக அனைவரும் நிறுவனங்களுக்கு வேலை தேடிச் செல்கின்றன . மேலும் மக்கள் யாரும் அதிக அளவு கூலி வேலைகளுக்கு செல்வதில்லை. இதனால் வேலையாட்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மேலும் மக்கள் தொகை பெருக்கத்தால் உணவுகளில் தேவை அதிக அளவு உள்ளது. வேலையாட்களின் எண்ணிக்கை குறைந்ததால் வேலை செய்யும் நேரமும் குறைந்துள்ளது,

இதனால் இவற்றிக்கு ஒரு இயந்திரத்தை உருவாக்கினால் மட்டுமே தேவைைகள் பூர்த்தியடையும் என்பதற்காக இவர்கள் நிறுவனத்தில் இந்த தேங்காய் உரிக்கும் இயந்திரத்தை உருவாகியுள்ளதாகவும், மேலும் அது போன்ற வேறு சில இயந்திரங்களை உருவாக்கி கொண்டு வருவதாகும் திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.

அன்று தேங்காய் உரிக்கும் போது அதனுடைய கூலி ஆனது ஒரு பைசாவிலிருந்து இரண்டு பைசா அளவு மட்டுமே இருந்தது. ஆனால் இப்பொழுது உள்ள காலத்தில் தேங்காய்கள் உரிக்கும் கூலி ஆனது எம்பது பைசா அளவிற்கு உயர்ந்து விட்டது எனவும், கையேடு முறையில் செய்யும் வேலையானது விரைவில் அழிந்து போய்விடும் எனவும் திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.

ஆனால் இந்த தேங்காய்கள் உரிக்கும் இயந்திரத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு தரும் கூலி ஆனது இன்று எந்த அளவில் கூலி தருகிறோமோ அதேபோல் கூலியை பத்து வருடங்களுக்குப் பின்பும் அளிக்க முடியும் எனவும் கூறுகிறார்.

இதனை செலவு வாரியாக பார்த்தால் முப்பத்து ஐந்து பைசாவில் இருந்து முப்பத்து ஆறு பைசா அளவு மட்டுமே எனவும் இது விலை ஏற்றத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.

இயந்திரத்தின் செயல்முறை

முதலில் இயந்திரத்தின் மேல் தேங்காய்களை வரிசையாக அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அதன் பிறகு தேங்காய்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக இயந்திரத்துக்குள் நுழையும் எனவும் அதன் பிறகு தேங்காய் மட்டைகள் ஒரு வழியிலும், தேங்காய்கள் ஒரு வழியிலும் வெளியே வந்துவிடும் எனவும் திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.

மேலும் தேங்காய்கள் வெளியில் வரும்போது குடுமைகள் உடனே வெளியில் வரும் எனவும் அதனை பிரித்து எடுப்பதற்கு தேங்காய்கள் மற்றொரு வழியில் செல்வதாகவும் அந்த வழியில் இருந்து வெளியில் வரும் போது தேங்காய்கள் ஆனது குடுமைகள் இல்லாமல் வெளியில் வரும் எனவும் திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தில் தேவையற்ற குப்பைகள் எதுவும் செல்லாமல் இருக்க ஒரு அமைப்பை பொருத்தி உள்ளதாகவும் கூறுகிறார். கடைசியாக தேங்காய்கள் வெளியில் வரும்போது அந்த தேங்காய்கள் கீழே விழுந்து உடையாதவாறு ஒரு அமைப்பையும் உருவாகி உள்ளதாகவும் திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தை தள்ளுவதற்கு டயரை பொருத்தி உள்ளதாகவும், பின்புறம் இந்த இயந்திரத்தை திருப்புவதற்கு ஒரு அமைப்பையும் உருவாக்கி உள்ளதாக திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.

இந்த இயந்திரத்தில் வழக்கம்போல் சிவப்பு பட்டன் ஆனது இயந்திரத்தை நிறுத்துவதற்கும், பச்சை பட்டன் ஆனது இயந்திரத்தை செயல்படுத்தவும், நீல பட்டன் ஆனது இயந்திரத்தில் ஏதாவது தேவையற்ற பொருள் சிக்கிக்கொண்டால் அதனை எடுப்பதற்கு தலைகீழாக இயந்திரத்தை சுற்ற செய்ய பயன்படும் பட்டன் ஆகும்.

மேலும் ஒரு LED காட்டியையும் பொருத்தியுள்ளனர். இது மின்சக்தி உள்ளதா என்பதை கண்டறிவதற்கு பொருத்தப்பட்டுள்ளது.

இயந்திரத்தின் பாதுகாப்பு தன்மை

பொதுவாக ஒரு இயந்திரத்தை உருவாக்கினார் அதில் பாதுகாப்பும் அடங்கி இருக்க வேண்டும். இல்லையெனில் அந்த இயந்திரத்தின் விற்பனை அளவு குறைந்துவிடும்.

இவர்களுடைய இந்த தேங்காய் உரிக்கும் இயந்திரத்தில் உள்ள பாதுகாப்பு தன்மையானது, இயந்திரத்தை இயக்கும் நபர் நிற்கும் இடத்தில் உள்ள எந்தப் பொருளும் இரும்புகளால் ஆன பொருட்கள் இல்லை எனவும்,அனைத்து பொருள்களும் ரப்பரால் ஆன பொருட்கள் மட்டுமே எனவும் திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.

இந்த தேங்காய் உரிக்கும் இயந்திரத்தில் நம்முடைய கைகள் தெரியாமல் உள்ளே போனாலும் அதனால் எந்த பாதிப்பும் இந்த இயந்திரம் ஏற்படுத்தாது எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தில் ஒரு பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி உள்ளனர். அந்தப் பாதுகாப்பு அமைப்பு என்னவென்றால் இயந்திரங்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது அந்த பாதுகாப்பு அமைப்பிலுள்ள மூடியை எடுத்தால் இயந்திரம் தானாக நின்று விடும் எனவும், அந்த மூடியை மீண்டும் பொருத்தினால் கூட இயந்திரமானது இயங்காது எனவும், மீண்டும் இயந்திரத்தின் பட்டனை போட்டால் மட்டுமே இயந்திரம் இயங்கும் எனவும் திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்திற்கு மின்சாரம் மோட்டாரை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார். மேலும் இந்த இயந்திரத்தை தள்ளுவதற்கு டயர்களை பொருத்தி உள்ளதாகவும் கூறுகிறார். இந்த இயந்திரத்தை ஒருவர் மட்டும் சாதாரணமாக தள்ளிக் கொண்டு செல்லலாம் எனவும் கூறுகிறார்.

பொதுவாக இயந்திரங்கள் என்றாலே அதில் தேய்மானம் என்பது கண்டிப்பாக இருக்கும் எனவும், அந்த தேய்மானத்தை குறைப்பதற்கு ஒரே வழி எண்ணெய்களை இயந்திரங்களுக்கு அளிப்பது மட்டுமே எனவும் கூறுகிறார்.

மேலும் இயந்திரங்களை சுத்தம் செய்யாமல் விட்டால் அதனுடைய தோற்றமானது நல்ல முறையில் இருக்காது எனவும் கூறுகிறார். இயந்திரத்தை சுத்தம் செய்து வேலை செய்வது மிக நல்ல முறை எனவும் கூறுகிறார்.

தேங்காய் உரிக்கும் இயந்திரத்தின் தேவை அதிகம் உள்ள இடங்கள்

இந்த தேங்காய் உரிக்கும் இயந்திரம் ஆனது உணவு தொழில்கள் தொடர்பான இடங்களுக்கு மிக முக்கியமான ஒன்று எனவும், உதாரணமாக பள்ளிகள், கல்லூரிகள், உணவகங்கள், போன்ற இடங்களுக்கு மிக முக்கியமான ஒன்று எனவும் கூறுகிறார்.

காரணம் இந்த அனைத்து இடங்களுக்கும் தினமும் வழக்கமான தேவைகள் இருந்து கொண்டிருப்பதாகும். மேலும் தேங்காய் விற்பவர்கள், தேங்காய் எண்ணெய் தயாரிப்பவர்கள், மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு இந்த இயந்திரமானது மிக முக்கியமான ஒன்றாக இருக்குமெனவும் திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரம் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இயந்திரத்தை பரிசோதிக்க அனுமதி அளிப்பதாகவும் கூறுகிறார்.

ஆட்டோ பிரிண்ட் நிறுவனத்தின் தனிச்சிறப்பு

அனைத்து நிறுவனங்களில் உள்ள இயந்திரங்களை விட இந்த ஆட்டோ பிரிண்ட் நிறுவனத்தின் இயந்திரங்களையே பெருமளவு வாங்குகிறார்கள். இதற்கு காரணம் இந்த நிறுவனத்தின் இயந்திரங்களின் அளவுகளே ஆகும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தில் தேங்காய்கள் உடைவது மிகவும் குறைந்த அளவு மட்டுமே என கூறுகிறார். மேலும் இவர்களுடைய நிறுவனத்தில் உள்ள இந்த இயந்திரத்தின் சிறப்பானது இந்த இயந்திரத்தை அனைவராலும் எந்த பாதிப்புமின்றி இயக்க முடியும் எனவும் கூறுகிறார்.

மேலும் இவர்களுடன் இயந்திரங்கள் வாங்குபவர்களுக்கு அவர்கள் கேட்கும் அளவிற்கு இயந்திரத்தை இரண்டு நாட்களுக்குள் உருவாக்கித் தரும் அளவிற்கு திறன் உள்ளது எனவும் கூறுகிறார்.

ஆட்டோ பிரிண்ட் நிறுவனமானது இந்த தேங்காய் உரிக்கும் இயந்திரத்தை மிக சிறப்பான மற்றும் தரமான வகைகளில் உற்பத்தி செய்து வருகின்றன.

மேலும் படிக்க:உரங்களை தயாரிப்பதற்கு சரியான படுக்கை அமைப்பு.

 

 

 

 

 

 

 

Leave a Reply