நெல்லின் தோலை உரிக்க பயன்படும் இயந்திரம்.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் ஒரு இளைஞர் அரிசி ஆலையில் பழங்கால கைக்குத்தல் முறையில் நெல்லை சிறப்பான முறையில் தோலுரித்து அளித்து வருவதாக கூறுகிறார். இவரையும், நெல்லை தோலுரிக்க பயன்படும் இயந்திரத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

Start of rice mill

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் ஒரு இளைஞர் அரிசி ஆலையில் பழங்கால கைக்குத்தல் முறையில் நெல்லை தோலுரித்து  வாடிக்கையாளர்களுக்கு அளித்து  வருவதாக கூறுகிறார்.

இந்த அரிசி ஆலையை இவருடைய தந்தை 1998 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வந்ததாகவும், இவர் படிப்பை முடித்துவிட்டு 2012ஆம் ஆண்டு வரை ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்து கொண்டிருந்ததாகவும் கூறுகிறார்.

இவ்வாறு இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்து கொண்டிருந்த நிலையில் தந்தைக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தனியார் வேலையை விட்டு விட்டு அரிசி ஆலையை நடத்தி வருவதாக கூறுகிறார்.

இவர் இன்ஜினியரிங் பயின்று உள்ளதாகவும், இன்ஜினியரிங் படிப்பை படித்து முடித்துவிட்டு ஆறு வருடம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக கூறுகிறார்.

நெல்லை தோலுரிக்க பயன்படும் இயந்திரம்

அரிசி ஆலையை தொடங்கும் போது ஆலையில் அனைத்து வகை நெல் அரிசியையும் உரிக்க பயன்படும் இயந்திரத்தை வைத்திருந்ததாகவும், அனைத்து வகை இயந்திரத்தையும் வைத்து நெல்லின் தோலை உரித்து அரிசியை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்ததாக கூறுகிறார்.

மேலும் அரிசி ஆலையை ஒருவர் தொடங்க வேண்டும் என்றால் நிச்சயமாக ஷெல்லர் எனப்படும் அரிசி அரைக்கும் இயந்திரத்தை வைத்திருக்க வேண்டும் என்று அரசாங்க உத்தரவு இருப்பதாக கூறுகிறார்.

இதன் காரணமாகவே இவரும் ஷெல்லர் எனப்படும் அரிசி அரைக்கும் இயந்திரத்தை வைத்திருந்ததாகவும், இவரைப் போலவே அனைத்து அரிசி ஆலைகளை வைத்திருக்கும் நபர்களும் இந்த இயந்திரத்தை வைத்திருந்ததாக கூறுகிறார்.

ஆனால் இந்த இயந்திரத்தைக் கொண்டு நெல்லில் தோலை உரிக்கும்போது அரிசியானது அதிக அளவில் உடைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும், இதனால் இந்த இயந்திரத்தை அதிகளவில் யாரும் பயன்படுத்துவதில்லை எனவும் கூறுகிறார்.

இப்பொழுது இவர் பழங்கால கைக்குத்தல் முறையில் நெல்லை தோலுரிக்கும் இயந்திரத்தை வைத்து நெல்லின் தோலை உரித்து அரிசியை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.

அரிசி உடையாமல் நல்ல தரமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், நல்ல தரமாக இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் அரிசியை வாங்குவார்கள் என்பதற்காகவும் இவர் கைக்குத்தல் முறையில் நெல்லை தோலுரிக்கும் இயந்திரத்தை தேர்ந்தெடுத்ததாக கூறுகிறார்.

Specialties and uses of the machine

பழங்கால முறையில் நெல்லை தோலுரிக்கும் இயந்திரத்தை வைத்து இவர் அரிசி ஆலையை சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.

இவருடைய இயந்திரத்தின் மூலம் நெல்லின் தோலை உரிப்பதினால் அரிசியின் தரம் மற்றும் சுவை சிறப்பாக இருப்பதினால் அதிக அளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து நெல்லின் தோலை உரித்து வாங்கி செல்வதாகவும், இதனால் இவருக்கு சிறந்த வருமானம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

பழங்கால கைக்குத்தல் முறையில் நெல்லை தோல் உரித்து அதன் அரிசியை நாம் உண்ணும் போது நமது உடலுக்கு மிகுந்த நன்மை கிடைக்கும் எனவும், இதுவே நெல்லை பாலிஸ் செய்து அந்த அரிசியை நாம் உண்ணும் போது பலவித நோய்கள் நமக்கு ஏற்படும் எனவும் கூறுகிறார்.

முதலில் இவர் பழங்கால கைக்குத்தல் முறையில் நெல்லை தோலுரிக்கும் இயந்திரத்தை வைத்து நெல்லை தோல் உரித்து அளித்து வருவது யாருக்கும் தெரியாது எனவும், சில வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் கூறி அதன் பிறகு அதிகளவில் வாடிக்கையாளர் இவரிடம் வந்து அரிசியை கொடுத்து நெல்லின் தோலை உரித்து வாங்கி செல்வதாக கூறுகிறார்.

அனைத்து வகை அரிசி களையும் இப்பொழுது இவர் கைக்குத்தல் முறையில் அரைத்து வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருவதாகவும், மேலும் இந்த இயந்திரத்தில் நெல்லை தோல் உரிக்கும் போது அரிசியானது உடைவதில்லை எனவும் இது இந்த இயந்திரத்தின் சிறப்பு எனவும் கூறுகிறார்.

மேலும் பழங்கால கைக்குத்தல் முறையில் நெல்லை தோல் உரித்து அதன் அரிசியை நாம் உண்ணும் போது அதில் இருந்து அதிக அளவு சத்துக்கள் நமக்கு கிடைக்கும் எனவும், இதுவே அரிசியை பாலிஸ் செய்து உண்ணும் போது அதிலிருந்து நமக்கு எந்த வித சத்துக்களும் கிடைக்காது எனவும் கூறுகிறார்.

இயந்திரம் செயல்படும் முறை

பழங்கால முறையில் நெல்லை தோலுரிக்கும் இயந்திரத்தில் நெல்லை தோல் உரிப்பது மிகவும் சுலபமாக இருக்கும் எனவும், இதற்கு என்று அதிக அளவு வேலைகள் நாம் செய்ய தேவை இல்லை எனவும் கூறுகிறார்.

நெல்லை இயந்திரத்தில் போட்டு இயந்திரத்தை செயல்படுத்தினால் மட்டும் போதுமானது எனவும், இவ்வாறு நெல்லை இயந்திரத்தில் போட்டு இயந்திரத்தை செயல்படுத்தினால் நெல்லின் தோல் தனியாகவும் அரிசி தனியாகவும் வெளியில் வந்து விடும் எனவும் கூறுகிறார்.

இயந்திரத்தில் இரண்டு ரப்பர் ரோலர் இருக்கும் எனவும் இந்த இரண்டும் எதிரெதிர் திசையில் சுழலும் எனவும் இவ்வாறு இயந்திரம் சுழலும் போது நெல் அதன் இடையில் சென்றால் நெல்லின் தோலானது தனியாக பிரிந்து வந்து விடும் எனவும் கூறுகிறார்.

இவருடைய ஊரில் அதிக அரிசி ஆலைகள் இருப்பதாகவும் ஆனால் அந்த அரிசி ஆலையை வைத்திருக்கும் யாரும் பழங்கால கைக்குத்தல் முறையில் நெல்லின் தோலை உரித்து அரிசியை அளிப்பது இல்லை எனவும், இவர் மட்டுமே பழங்கால முறையில் நெல்லின் தோலை உரித்து அரிசியை  அளித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் நெல்லை தோல் உரிக்கும் போது நெல்லில் உள்ள கல் மற்றும் குருணை அனைத்தும் அரிசி உடன் சேர்ந்து வரும் எனவும் இதனை இவர் மற்றொரு இயந்திரத்தில் போட்டு நெல் மற்றும் குருணையை தனியாக எடுத்து விடுவதாக கூறுகிறார்.

அனைத்து வகை அரிசியையும் இயந்திரத்தில் போட்டு அரைக்கும் போது ஒரு சில வகை அரிசி 10 கிலோ வரை மற்றொரு வகை அரிசியுடன் கலந்து விடும் எனவும், 10 கிலோ அரிசி மற்றொரு வகை அரிசியுடன் கலந்து இருக்கும் போது அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறுகிறார்.

Sales method and fees

பழங்கால கைக்குத்தல் முறையில் நெல்லிலிருந்து தோலை உரித்து எடுப்பதற்கு இவரிடம் நெல்லினை கொடுக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மிக சிறப்பான முறையில் இவர் நெல்லில் இருந்து தோலை பிரித்து எடுத்து அளித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவருடைய தோட்டத்தில் விளைந்த நெல் பயிர்களை இவர் இவருடைய அரிசி ஆலையில் உள்ள இயந்திரத்தில் போட்டு அதன் தோலினை பிரித்து எடுத்து அரிசியை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

ஒரு கிலோ அரிசியை அரைத்து கொடுப்பதற்கு இவர் நான்கு ரூபாய் கட்டணம் வாங்குவதாகவும், மேலும் இவர் நெல்லினை உரித்து அளிப்பதன் மூலமும் மற்றும் அரிசியை விற்பனை செய்வதன் மூலமும் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

6 மணி நேரத்தில் 40 மூட்டை நெல்லினை உரித்து எடுப்பதாகவும், மற்றும் இவர் இந்த அரிசி அலையை நெல்லின் தோலை பிரித்து எடுக்கும் இயந்திரத்தை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க:வீட்டின் மாடியில் சிறப்பான மீன் வளர்ப்பு.

Leave a Reply