திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகில் உள்ள காடையூர் என்னும் ஊரில் திரு அருண் அவர்கள் அவருடைய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் இவருடைய விவசாயத்திற்கு தேவையான இயந்திரத்தை வைத்து புதிய கண்டுபிடிப்பை இவரே மிக சுலபமான முறையில் உருவாக்கி உள்ளார். இவரைப் பற்றியும், இவருடைய இயந்திர கண்டுபிடிப்புகளைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
Mr. Arun’s life
திரு அருண் அவர்கள் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகில் உள்ள காடையூர் என்னும் ஊரில் விவசாயம் செய்து வருவதாக கூறுகிறார். இவர் இவருடைய விவசாய நிலத்திற்கு தேவையான இயந்திரத்தை வைத்து புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார்.
திரு அருண் அவர்கள் MBA பட்டப் படிப்பினை முடித்துவிட்டு இப்பொழுது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறுகிறார். இவர் இந்த இயந்திரங்களை புதிய முறையில் கண்டு பிடித்ததற்கு காரணம் வேலை செய்யும் நேரத்தை குறைப்பதற்கு என கூறுகிறார்.
மேலும் இவர் ஒவ்வொரு கண்டுபிடிப்பை கண்டுபிடிக்கும் போது சரியான முறையில் பார்த்து செய்ததாகவும், வேலை செய்வதற்கு சுலபமான முறையிலும் அமைத்ததாகவும் கூறுகிறார்.
மற்றும் இவருடைய கண்டுபிடிப்பை இவரின் அருகில் உள்ள பண்ணையாளர்களும் பயன்படுத்தி வருவதாக கூறுகிறார். மேலும் திரு அருண் அவர்கள் இந்த கண்டுபிடிப்பை மிகவும் சிறப்பான முறையில் உருவாக்கியுள்ளார்.
கிணற்றிலிருந்து நீரை எடுக்க பயன்படும் இயந்திரம்
திரு அருண் அவர்கள் கிணற்றிலிருந்து நீர் எடுக்க பயன்படும் இயந்திரத்தில் ஒரு கம்ப்ரசர் மற்றும் ஒரு பம்ப்பை இணைத்து உருவாக்கியுள்ளார். இவர் இவ்வாறு உருவாக்கியதற்கு காரணம் இவருடைய வயல்களுக்கு நீரினை பாய்ச்சும் போது அதிக அளவு நீர் தேவைப்படும் எனவும், இதனால் ஒரு மோட்டார் இயந்திரத்தை வைத்து அதிக அளவு நீரை எடுக்க முடியாது எனவும்,வேகமாகவும் இயந்திரத்தை பயன்படுத்த முடியாது எனவும் கூறுகிறார்.
இதன் காரணமாக இவர் இந்த ஒரு மோட்டாரில் கம்ப்ரசர் மற்றும் பைப்பை இணைத்து உள்ளதாக கூறுகிறார். இதனால் அதிக அளவு நீரை எடுக்க முடியும் எனவும், வேகமாக வேலையை செய்ய முடியும் எனவும் கூறுகிறார்.
இயந்திரத்தின் மோட்டாரில் ஒரு பெல்டை இணைத்து அதனை கம்ப்ரசர் மற்றும் பைப்பில் பொருத்தி இயக்கி வருவதாக கூறுகிறார்.
இதை உருவாக்க 2500 ரூபாய் செலவு செய்ததாக கூறுகிறார். மேலும் கம்ப்ரஸர் மற்றும் பம்ப் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியும் எனவும் கூறுகிறார். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் திரு அருண் அவர்கள் கூறுகிறார்.
மேலும் நீரினை சிறிய அளவில் செலுத்த வேண்டும் என்றால் அந்த முறையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.மேலும் மோட்டாரில் கம்ப்ரஸர் மற்றும் பைப்பை இணைக்கும் போது சரியான முறையில் பார்த்து அமைக்க வேண்டும் எனக் கூறுகிறார்.
திரு அருண் அவர்கள் இந்த கண்டுபிடிப்பை மிகவும் குறைந்த செலவில் சிறப்பாக செய்துள்ளார்.மற்றும் இவருடைய கண்டுபிடிப்பு முறைகளைப் பற்றி மற்றவர்களுக்கும் கற்றுத் தருவதாக திரு அருண் அவர்கள் கூறுகிறார்.
Sprinkler system
திரு அருண் அவர்கள் இவருடைய தீவனப் பயிருக்கு நீரினை தெளிப்பதற்கு தெளிப்பான் முறையை பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் இந்த தெளிப்பான் முறையில் நீரினை தெளிப்பதால் நேரம் ஆனது அதிக அளவில் வீணாவதாக கூறுகிறார்.
இதனால் இவர் இந்த தெளிப்பான் முறையில் நீர் வேகமான முறையில் தெளிப்பதற்கு ஒரு மோட்டாரில் கம்ப்ரஸரை இணைத்து உள்ளதாக கூறுகிறார். இந்த முறையில் நீரானது மிகவும் வேகமாகவும், குறைந்த நேரத்திலும் தீவன பயிருக்கு தெளித்து விடுவதாக கூறுகிறார். ஆனால் இந்த முறையில் நீரானது வீணாகாது எனவும் கூறுகிறார். மேலும் இந்த முறையில் நீரினை சிக்கனம் செய்து கொள்ளலாம் எனக் கூறுகிறார்.
இவர் நீர் தெளிப்பானை ஒரு நீளமான பைப் மற்றும் கல்லினை வைத்து உருவாக்கியுள்ளதாக கூறுகிறார். இவர் இந்த முறையில் உருவாக்கியதற்கு காரணம் செலவினை குறைப்பதற்கு என கூறுகிறார். மேலும் இவர் நீர்த் தெளிப்பானை உயரமாக அமைத்து உள்ளதாக கூறுகிறார்.
இந்த நீர் தெளிப்பானை குறைந்த உயரத்தில் வைத்தாலும் அதிக உயரத்தில் வைத்தாலும் நீரானது ஒரே தொலைவில் பாய்ச்சும் என கூறுகிறார். ஆனால் இந்த உயரமான நீர்த் தெளிப்பானில் நீரை பாய்ச்சும் போது அதிக அளவு நீர் தீவன பயிருக்கு கிடைக்கும் என கூறுகிறார்.
மேலும் கடையில் வாங்கும் நீர் தெளிப்பானை விட இவர் உருவாக்கிய நீர் தெளிப்பான் குறைந்த அளவு செலவாகும் எனக் கூறுகிறார். இந்த நீர்த் தெளிப்பானை அமைப்பதற்கு 500 லிருந்து 600 ரூபாய் வரை இருந்தால் மட்டுமே போதுமானது என திரு அருண் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த தெளிப்பானின் துளைகளில் நீர் வராமல் அடைத்துக் கொண்டு இருந்தால் அதனை எடுத்து சுலபமாக சரி செய்து விடலாம் எனவும் கூறுகிறார். மேலும் இதைப் பற்றி அனைவருக்கும் கற்றுத் தருவதாகவும் திரு அருண் அவர்கள் கூறுகிறார்.
மேலும் திரு அருண் அமைத்துள்ள நீர் தெளிப்பான் முறையை மிகவும் சுலபமான முறையில் அமைக்க முடியும் எனவும் கூறுகிறார். மேலும் நீரின் அளவுகள் குறைவாக உள்ள இடங்களில் இந்த நீர் தெளிப்பான் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் எனவும் கூறுகிறார்.
ஆழ்துளை கிணற்றில் இருந்து நீரை எடுக்க பயன்படும் குழாய்
திரு அருண் அவர்கள் ஆழ்துளை கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்கு பெரிய அளவில் உள்ள குழாயை பயன்படுத்தினால் நீரானது விரைவில் தீர்ந்துவிடும் என கூறுகிறார். இதன் காரணமாக இவர் ஆழ்துளை கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்கு சிறிய அளவில் உள்ள குழாயை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
இதனை பாசனத்திற்கும், கால்நடைகளுக்கும் நீரினை அளிக்க பயன்படுத்தலாம் எனவும் கூறுகிறார். மேலும் ஆள்துளை கிணற்றில் குறைந்த அளவில் நீர் இருந்தாலும் இந்த குழாயை வைத்து நீரினை எடுத்துக்கொள்ள முடியும் என கூறுகிறார்.
மேலும் இந்த முறையானது நீர் குறைவாக உள்ள இடங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என திரு அருண் அவர்கள் கூறுகிறார்.பெரிய குழாயை வைத்து நீர் எடுக்கும் போது குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் நீரை எடுக்க முடியும் என கூறுகிறார்.
ஆனால் இந்த சிறிய அளவில் உள்ள குழாயை பயன்படுத்தும்போது தொடர்ச்சியாக நம்முடைய தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு நீரை எடுத்துக்கொள்ள முடியும் என திரு அருண் அவர்கள் கூறுகிறார். மேலும் இதில் காற்று நுழைவதற்கு ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளதாகவும் கூறுகிறார்.
மேலும் இந்த குழாயில் ஒரு கம்ப்ரஸரை இணைத்து உள்ளதாக கூறுகிறார். இது குழாயில் குறைந்த அளவு நீரினை தெளிப்பதற்கும், ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியில் வரும் நீர் தூய்மையாக இருப்பதற்கும் பயன்படுவதாக கூறுகிறார்.
மேலும் இந்த முறையில் நேரமானது வீணாகாது எனவும், விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் திரு அருண் அவர்கள் கூறுகிறார்.
Automatic drinker
திரு அருண் அவர்கள் கோழிகளுக்கு நீர் வைக்கும் தானியங்கி குடிப்பான் முறையை உருவாக்கியுள்ளார். தண்ணீர் குடிக்கும் பாட்டில் மற்றும் ஒரு தட்டினை வைத்து இந்த முறையை இவர் மிக சுலபமான முறையில் உருவாக்கியுள்ளார்.
மேலும் தட்டில் நீரானது நிரம்பியவுடன் பாட்டிலில் உள்ள நீர் தானாகவே நின்று விடும் எனக் கூறுகிறார். மீண்டும் கோழிகள் நீரினை அருந்தியவுடன் நீரானது திரும்பவும் தட்டில் நிரம்பி விடுவதாக திரு அருண் அவர்கள் கூறுகிறார்.
பாட்டிலை தட்டின் நடுவில் தலைகீழாக வைத்து ஒரு நட் வைத்து டைட் செய்து கொள்ள வேண்டுமென கூறுகிறார். அதன்பிறகு நீரானது தானாகவே தட்டில் நிரம்பி விடும் என கூறுகிறார். மேலும் இதை தயாரிப்பதற்கு வெறும் 25 ரூபாய் மட்டுமே செலவு ஆகும் என கூறுகிறார்.
செலவினை குறைக்க இந்த முறையினை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறுகிறார். மேலும் திரு அருண் அவர்கள் இந்த முறையைப் பற்றி அறிந்துகொள்ள வருபவர்களுக்கு கற்றுத் தருவதாகவும் கூறுகிறார்.மேலும் இவர் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் மற்றவர்களுக்கு கற்றுத் தருவதாகவும் கூறுகிறார்.
திரு அருண் அவர்கள் மிகவும் சுலபமான முறையில் விவசாயத்திற்கு தேவையான இயந்திரத்தை வைத்து நேரத்தை குறைக்கும் அளவிற்கு புதிய கண்டுபிடிப்புகளை மிகவும் சிறப்பான முறையில் உருவாக்கியுள்ளார்.
மேலும் படிக்க:மலை அடிவாரத்தில் நாட்டுக்கோழி பண்ணை.