பண்ணைகளில் பால் குளிரூட்ட பயன்படும் சாதனம்.

திரு ரிஷி அவர்கள்  கோவை இன்டஸ்ட்ரீஸ் என்னும் ஒரு இயந்திர நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். இவர் இந்த இயந்திர நிறுவனத்தில் பண்ணைகளில் பால் குளிரூட்ட பயன்படும் சாதனம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இவரைப் பற்றியும், இவருடைய பால் குளிரூட்ட பயன்படும் இயந்திரத்தைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

திரு ரிஷி அவர்களின் இயந்திர நிறுவனம்

திரு ரிஷி அவர்கள் ஒரு இயந்திர நிறுவனத்தை வைத்து சிறப்பாக நடத்தி வருகிறார். இவருடைய நிறுவனத்தின் பெயர் கோவை இன்டஸ்ட்ரீஸ் என கூறுகிறார். மேலும் இவருடைய நிறுவனத்தில் பல வகையான வேலைகளை செய்ய உதவும் இயந்திரங்களை தயாரித்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இவற்றில் ஒன்றான பண்ணைகளில் பால் குளிரூட்ட பயன்படும் இயந்திரத்தைப் பற்றியே இவர் விளக்க உள்ளதாக கூறுகிறார். இந்த பால் குளிரூட்ட பயன்படும் இயந்திரம் ஆனது மிகவும் சிறப்பான வகையில் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

பல நிறுவனங்களில் இந்த பண்ணைகளில் பால் குளிரூட்ட பயன்படும் இயந்திரத்தை பெரிய அளவுகளிலேயே உருவாக்கி உள்ளதாக கூறுகிறார். ஆனால் இவருடைய நிறுவனத்தில் இந்த இயந்திரத்தை சிறிய அளவுகளில் மிக அழகாக உருவாக்கியுள்ளதாக கூறுகிறார்.

திரு ரிஷி அவர்கள் இந்த இயந்திர நிறுவனத்தை மிகவும் சிறப்பான முறையில் வழி நடத்தி வருகிறார்.

இயந்திரத்தை பயன்படுத்த தகுதியான பண்ணைகள்

இந்த பால் குளிரூட்ட பயன்படும் இயந்திரத்தை நடுத்தர அளவில் உள்ள பால் பண்ணைகளிலும், பெரிய அளவில் உள்ள பால் பண்ணைகளிலும் பயன்படுத்தலாம் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

இதில் முக்கியமாக இந்த இயந்திரம் அதிகமாக தேவைப்படும் பண்ணை ஆனது, இப்பொழுது ஒரு நிறுவனத்தில் காலையில் 200 அல்லது 300 லிட்டர் பால் வருகிறது என்றால், அதனை மாலை வரை விற்பனை செய்ய முடியவில்லை எனில் இந்த குளிரூட்டும் இயந்திரத்தில் வைத்து அதனை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என கூறுகிறார்.

எனவே இந்த வகையிலான நிறுவனங்களுக்கு இந்த இயந்திரம் அதிக அளவு தேவைப்படுவதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார். மேலும் இந்த நிறுவனத்திற்கு இந்த இயந்திரத்தின் மூலம் செலவும் மிகக் குறைவாக இருக்கும் என கூறுகிறார்.

மேலும் இவர் இந்த பால் குளிரூட்டும் இயந்திரத்தை நூறு லிட்டரிலிருந்து 3000 லிட்டர் வரை பால் வைக்கும் அளவிற்கு இயந்திரத்தை உருவாக்கி தருவதாகவும் கூறுகிறார். மேலும் 3000 த்ற்கு மேலும் பால் வைக்கும் அளவிற்கு இயந்திரத்தை உருவாக்கி தருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இன்றுள்ள நிலையில் நடுத்தர பால் பண்ணைகளிலேயே அதிக அளவில் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி வருவதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார். மேலும் இவர்கள் இந்த இயந்திரத்தை பயன்படுத்துவதனால் வேலையாட்களின் செலவு மற்றும் பிற செலவுகள் அனைத்தும் அதிக அளவில் குறைந்து விடுவதாக கூறுகிறார்.

இயந்திரத்தின் நோக்கம்

இந்த இயந்திரத்தின் முக்கிய நோக்கம் ஆனது பாலினை கெட்டுப் போகாமல் குளிரூட்டி வைப்பதே ஆகும் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார். இந்த இயந்திரத்தில் பாலினை நாற்பத்தி எட்டு மணி நேரம் வரை கெட்டுப் போகாமல் வைத்திருக்க முடியும் என கூறுகிறார்.

இந்த பால் குளிரூட்ட பயன்படும் இயந்திரமானது சர்வதேச தர நிலைப்படி மூன்று டிகிரி அல்லது நான்கு டிகிரி வரை பாலின் வெப்பநிலையை பராமரித்து வருவதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

இதுவே இந்த இயந்திரத்தின் முக்கிய நோக்கமாக செயல்பட்டு வருவதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

இயந்திரத்தில் பாலினை ஊற்றும் முறை

இந்த பாலினை குளிரூட்டும் இயந்திரத்தில் ஊற்றும் போது அதனை மிகவும் கவனமான முறையில் ஊற்ற வேண்டும் என கூறுகிறார். மேலும் இந்த இயந்திரத்தில் பால் ஊற்றும் போது அதனை இரண்டு முறைகளில் ஊற்றலாம் என கூறுகிறார்.

இந்த இயந்திரத்தில் பாலினை ஊற்றும் போது அதனை கைகளைப் பயன்படுத்தி ஊற்றலாம் எனவும், ஆட்டோமேட்டிக் இயந்திரத்தின் மூலமும் ஊற்றலாம் எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார். மேலும் இயந்திரத்தை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆட்டோமேட்டிக் முறையில் மாற்ற வேண்டும் என்றால் அதனை அமைத்து தருவதாகவும் கூறுகிறார்.

இயந்திரத்தின் அமைப்பு மற்றும் செயல்திறன்

பொதுவாக பல நிறுவனங்களில் இந்த பால் குளிரூட்ட பயன்படும் இயந்திரத்தின் அமைப்பு ஆனது வட்ட வடிவிலேயே உருவாக்கி உள்ளதாக கூறுகிறார். இவ்வாறு இயந்திரம் வட்ட வடிவமாக இருக்கும் போது அது அதிக அளவு இடத்தை நிரப்பி விடும் என கூறுகிறார்.

ஆனால் இவருடைய நிறுவனத்தில் உள்ள பால் குளிரூட்ட பயன்படும் இயந்திரம் ஆனது செவ்வக வடிவில் மிகக் கச்சிதமான அளவில் உருவாக்கி உள்ளதாக கூறுகிறார். இதனால் இந்த இயந்திரம் அதிக அளவு இடத்தை நிரப்பாது எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவ்வாறு இந்த  இயந்திரம் செவ்வக வடிவில் இருந்தாலும் அந்த இயந்திரத்தின் திறனும், செயல் திறனும் ஒரே அளவிலேயே இருப்பதாக கூறுகிறார். மேலும் பாலினை குளிர் ஊட்டுவதற்கு ஒரு இயந்திரத்தை பொருத்தி உள்ளதாகவும் கூறுகிறார்.

மற்றும் பாலின் வெப்பநிலை அளவை அறிந்து கொள்வதற்கு ஒரு சாதனத்தை பொருத்தி உள்ளதாகவும் திரு  ரிஷி அவர்கள் கூறுகிறார். மேலும் பல நிறுவனங்களில் இந்த இயந்திரத்தில் பாலினை குளிர் ஊட்டுவதற்கு காப்பர் தகடினையே பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

ஆனால் திரு ரிஷி அவர்களின் நிறுவனத்தில் பிளோ தகடினை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார். இந்த பிளோ தகடு ஆனது காப்பர் தகுதியை விட பாலினை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

இந்த இயந்திரத்தில் உள்ள பாலின் வெப்பநிலையை சரியான முறையில் வைத்துக் கொள்வதற்காகவும், பாலில் பாலடைகள் கட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காகவும் ஒரு சாதனம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மற்றும் இந்த சாதனம் கீழ் அடுக்கில் உள்ள பாலினை கெட்டி ஆகாமலும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும் என கூறுகிறார். இந்த சாதனமானது 24 மணி நேரமும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

300 லிட்டர் பாலை வைத்து இயக்குவதற்கு ஒரு டன் திறனுள்ள அமுக்கியை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார். இதையே 5 லிட்டர் பாலினை இயக்குவதற்கு ஒன்றரை டன் திறனுள்ள அமுக்கியை பயன்படுத்துவதாக கூறுகிறார்.

மேலும் இதுபோல் ஆயிரம் லிட்டர் அல்லது 2000 லிட்டர் பாலினை குளிரூட்ட பயன்படுத்தும் இயந்திரத்திற்கு அதற்கு தேவையான அளவுகளில் அமுக்கியை பயன்படுத்தலாம் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த பாலினை இயந்திரத்தில் ஊற்றி மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஆன பிறகு 4 டிகிரி செல்சியஸ் க்கு இந்த இயந்திரம் வந்துவிடும் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார். மேலும் பால் தேவைப்படும் போது அதனை எடுத்துக் கொள்வதற்கு இயந்திரத்தில் ஒரு குழாய் போன்ற அமைப்பை பொருத்தி உள்ளதாக கூறுகிறார்.

இவ்வாறு பால் தேவைப்படும் போது எல்லாம் இந்தக் குழாயின் மூலம் பாலினை சுலபமாக எடுத்துக் கொள்ளலாம் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார். மேலும் இந்த இயந்திரமானது பண்ணையாளர்களுக்கு அதிக அளவு பயனையும் ,நன்மையையும் அளிக்கும் ஒரு இயந்திரமாக இருப்பதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

இயந்திரத்தை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் மின்சார செலவு

இந்த பாலினை குளிரூட்ட பயன்படுத்தும் இயந்திரத்தின் அமுக்கி ஆனது 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என கூறுகிறார். இதில் பாலினை கெட்டி ஆகாமல் இருக்க பயன்படும் ஒரே ஒரு சாதனம் மட்டுமே 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

மற்றும் இந்த பாலினை குளிரூட்ட பயன்படும் இயந்திரத்தினால் அதிக அளவு மின்சார செலவு இருக்காது எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மற்றும் இந்த இயந்திரத்தில் பாலின் வெப்பநிலையை அறிந்து கொள்ள பயன்படும் அமுக்கி ஆனது பால் 4 டிகிரி செல்சியஸ்யை அடைந்து விட்டால் அந்த அமுக்கி ஆனது தானாகவே நின்றுவிடும் என கூறுகிறார். மற்றும் பாலின் வெப்பநிலை அளவு அதிகமாகி விட்டால் இந்த அமுக்கி ஆனது தானாகவே செயல்படும் எனவும் கூறுகிறார்.

இவ்வாறு இந்த பால் குளிரூட்ட பயன்படும் இயந்திரம் செயல்படுவதால் நமக்கு மின்சார செலவு குறைந்த அளவே இருக்கும் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார். மற்றும் இப்பொழுது அதிக அளவில் மின்சார தடை ஏற்பட்டு வருகிறது.

எனவே மின்சார தடை ஏற்படும் போது இந்த பால் குளிரூட்டும் இயந்திரத்தினை முன்னதாகவே 4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குளிரூட்டி வைத்துக்கொள்ள வேண்டும் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார். இவ்வாறு முன்னதாகவே பாதுகாப்பு முறையை செயல்படுத்தி வைத்துவிட்டால் மிக நல்லது என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

பாலினை குளிரூட்டும் திறன் மற்றும் பராமரிப்பு முறை

திரு ரிஷி அவர்கள் உருவாக்கியுள்ள இந்த பால் குளிரூட்ட பயன்படும் இயந்திரம் ஆனது மிகச் சிறப்பான வகையில் பாலினை குளிரூட்டி பாதுகாத்து வருகிறது.

மேலும் திரு ரிஷி அவர்கள் இந்த இயந்திரத்தில் பாலின் வெப்பநிலையை சரியாக பராமரித்து வைத்துக் கொள்வதற்கு ஒரு கருவியை பொருத்தி உள்ளதாக கூறுகிறார். இந்தக் கருவியானது பாலினை கெட்டுப்போகாமல் மிகப் பாதுகாப்பான முறையில் பராமரித்து கொள்வதாகவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

இந்த இயந்திரத்தில் கறந்த பாலினை நாற்பத்தி எட்டு மணி நேரம் வரை பராமரித்து வைத்துக்கொள்ள முடியும் எனவும் கூறுகிறார். இதுவே செயல்முறை பாலினை 72 மணி நேரம் வரை பராமரித்து வைத்துக் கொள்ளும் எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரமானது நூறு லிட்டருக்கு குறைவாக பாலினை வைத்து இருப்பவர்களுக்கு தேவைப்படாது என கூறுகிறார். மற்றும் இந்த இயந்திரத்தினை பராமரிப்பது மிக முக்கியமான ஒன்று என கூறுகிறார். இந்த இயந்திரத்தை சூடான நீரை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர் இந்த இயந்திரத்திற்கு ஒருவருடம் உத்தரவாதம் அளித்து வருவதாகவும் கூறுகிறார். திரு ரிஷி அவர்கள் இந்த இயந்திரத்தினை மிகவும் சிறப்பான முறையில் தரமாக தயார் செய்து அதன் மூலம் அதிக அளவு பலனை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:தூய்மையான பணங்கருப்பட்டி உற்பத்தி

4 comments

Leave a Reply