பால் கறக்க பயன்படும் இயந்திரம்.

திரு ரிஷி அவர்கள் பால் கறக்க பயன்படும் இயந்திரம் ஒன்றை உருவாக்கி மிகவும் சிறப்பான முறையில் விற்பனை செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய பால் கறக்க பயன்படும் இயந்திரத்தைப் பற்றியும் பின்வருமாறு காணலாம்.

Startup of the Machine company

திரு ரிஷி அவர்கள் ஒரு இயந்திர நிறுவனத்தை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவர் இதில் பால் கறக்க பயன்படும் இயந்திரத்தை உருவாக்கி அதனை சிறப்பான முறையில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவருடைய இயந்திர நிறுவனத்தின் பெயர் கோவை இண்டஸ்ட்ரீஸ் என கூறுகிறார். மேலும் இன்றுள்ள நிலையில் இயந்திரத்தின் தேவைகள் அதிகளவில் இருப்பதால் இந்த இந்த நிறுவனத்தை இவர் தொடங்கியதாக கூறுகிறார்.

மேலும் இவரிடம் உள்ள அனைத்து இயந்திரமும் மிக தரமானதாகவும் விலை குறைவாகவும் இருப்பதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார். திரு ரிஷி அவர்கள் இவருடைய இயந்திர நிறுவனத்தை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்.

பால் கறக்கும் இயந்திரத்தின் தேவை

இந்த பால் கறக்கும் இயந்திரத்தின் தேவையானது வேலையாட்களின் எண்ணிக்கை குறைந்த பிறகு ஏற்பட்டதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார். வேலையாட்களின் எண்ணிக்கை குறைவதன் காரணமாக வேலை செய்ய ஆட்கள் இல்லாததால் இந்த இயந்திரங்கள் ஆனது உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்.

மேலும் மாடுகளில் இருந்து நாம் கைகளால் பால் கறக்கும் போது நம் கைகளில் ஏதாவது புண்கள் ஏற்பட்டு இருந்தால் அதனால் மாடுகளுக்கு நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார். இதுவே இயந்திரத்தின் மூலம் பால் கறப்பதால் அவ்வாறு எந்தவித நோயும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

பொதுவாக இந்த பால் கறக்கும் இயந்திரத்தை பெரிய பண்ணைகளில் பயன்படுத்தி வருவதாக கூறுகிறார். ஆனால் இந்த இயந்திரத்தை சிறிய பண்ணைகளிலும் பயன்படுத்தலாம் என கூறுகிறார். மேலும் இரண்டு மாடுகள் வைத்துள்ள விவசாயிகளும் இந்த இயந்திரத்தை பயன்படுத்தலாம் என கூறுகிறார்.

திரு ரிஷி அவர்கள் இந்த பால் கறக்கும் இயந்திரத்தை சிறிய பண்ணையாளர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கி உள்ளதாக கூறுகிறார். மேலும் இவர் பெரிய பண்ணைகளும் பயன்படுத்தும் அளவிலும் இந்த பால் கறக்கும் இயந்திரத்தை உருவாக்கி உள்ளதாக கூறுகிறார்.

வாடிக்கையாளர்களுக்கு தேவையான அளவுகளில் இயந்திரத்தை வைத்து இருப்பதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

Mr.Rishi specializes in their Milking machine

திரு ரிஷி அவர்களின் இயந்திர நிறுவனத்தில் உள்ள இந்த பால் கறக்கும் இயந்திரத்தில் பால் கறப்பதால் மாடுகளுக்கு எந்தவித பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை என கூறுகிறார்.

ஆனால் இன்றுள்ள அனைத்து விவசாயிகளின் மனதிலும் பால் கறக்கும் இயந்திரத்தின் பால் கறந்தால் மாடுகளுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு விடும் என நினைத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார்.

ஆனால் இந்த பால் கறக்கும் இயந்திரத்தில் இரண்டு வகைகள் இருப்பதாக கூறுகிறார். அதில் ஒருவகை இயந்திரம் பால் கறக்கும் போது மாடுகளின் மடியினை இழுத்து பால் கறக்கும் எனக் கூறுகிறார். இதனால் மாடுகளுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்.

ஆனால் திரு ரிஷி அவர்களின் நிறுவனத்தில் உள்ள பால் கறக்கும் இயந்திரம் ஆனது மற்றொரு வகை இயந்திரம் எனக் கூறுகிறார். இந்த வகை இயந்திரங்கள் மாடுகளிலிருந்து பால் கறக்கும் போது மாடுகளின் மடியினை அழுத்தியபடி பால் கறக்கும் எனக் கூறுகிறார்.

இந்த முறை நாம் மாடுகளில் கைகளில் பால் கறப்பதை போன்று உள்ளதால் மாடுகளுக்கு இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவருடைய பால் கறக்கும் இயந்திரத்தை பயன்படுத்தும்போது மாடுகளுக்கு இதனால் எந்த ஒரு வலியும் ஏற்படாது என கூறுகிறார். மேலும் இது மாடுகளில் கன்று குட்டி பால் குடிப்பதை போன்றே மாடுகளுக்கு இருக்குமென கூறுகிறார்.

மேலும் பால் கறக்கும் போது பால் பாத்திரத்தில் நிரம்பிவிட்டால் அதை அறியும் படி இயந்திரத்தை அமைத்து உள்ளதாக கூறுகிறார். இந்த முறைகளே இவருடைய பால் கறக்கும் இயந்திரத்தில் உள்ள சிறப்புகள் எனக் கூறுகிறார்.

மேலும் இவருடைய பால் கறக்கும் இயந்திரம் கீழே விழுந்து பாதிப்பு ஏற்பட்டாலும், இயந்திரத்தில் உள்ளே இருக்கும் பம்ப் மற்றும் மோட்டாருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனக் கூறுகிறார். மற்றும் இந்த இயந்திரத்தில் அனைத்து வகை மோட்டார்களையும் அமைக்கும்படி அமைப்புகளை உருவாக்கி உள்ளதாக கூறுகிறார்.

பால் கறக்கும் இயந்திரத்தின் வகைகள் மற்றும் செயல்படும் முறை

திரு ரிஷி அவர்கள் இவருடைய நிறுவனத்தில் இந்த பால் கறக்கும் இயந்திரத்தில் இரண்டு வகைகளை தயாரித்து உள்ளதாக கூறுகிறார்.

இதில் ஒரு வகை இயந்திரம் நேனோ மில்கிங் மிசின் எனக் கூறுகிறார். இந்த இயந்திரத்தை சிறு பண்ணையாளர்களுக்கு அளித்து வருவதாக கூறுகிறார். மேலும் இந்த இயந்திரத்தில்  ஆயில் பம்ப் மற்றும் ட்ரை பம்ப் வகைகளை பயன்படுத்தியுள்ளதாக கூறுகிறார்.

இவருடைய இயந்திர நிறுவனத்தில் மட்டுமே இதை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார். மேலும் இந்த ஆயில் பம்ப் வகையை பயன்படுத்துவதால் இயந்திரத்தின் உடைய சத்தமும், வெப்பநிலையும் குறையும் என கூறுகிறார்.

மற்றொரு வகை இயந்திரம் 5 மாடுகளுக்கு பால் கறக்கும் இயந்திரம் வகை என கூறுகிறார். இந்த இயந்திரத்தை ட்ராலி வகை இயந்திரம் எனக் கூறுகிறார்.மேலும் இந்த இயந்திரத்தை பால் கறக்கும் போது எங்கு வேண்டுமானாலும் சுலபமாக நகர்த்தி கொள்ளலாம் என கூறுகிறார்.

மேலும் இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு பால் கறக்கும் இயந்திரத்தை விற்பனை செய்யும்போது அவர்களின் பண்ணைகளுக்கு சென்று பால் கறக்கும் இயந்திரத்தை பயன்படுத்தும் முறையை பற்றி தெரிவித்து விட்டு வருவதாக கூறுகிறார்.

மேலும் இவருடைய நிறுவனத்தில் உள்ள பால் கறக்கும் இயந்திரம் 20 மாடுகள் மற்றும் அதற்கு மேலும் ‌ பால் கறக்கும் என கூறுகிறார்.மேலும் இந்த இயந்திரங்கள் மின்சாரம் இல்லாத போது செயல்படுவதற்கு மோட்டாரை இயந்திரத்தில் பொருத்தி உள்ளதாக கூறுகிறார்.

Machine maintenance method And cleaning method

இந்த பால் கறக்கும் இயந்திரம் ஆயில் பம்ப் வகை என்பதால் அதில் ஆயிலை நிரப்ப வேண்டும் என கூறுகிறார். மற்றும் பால் கறந்து முடித்த பிறகு இயந்திரத்தில் உள்ள குழாய்களை சுத்தம் செய்ய வேண்டுமென கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தின் குழாய்களை சுத்தம் செய்வதற்கு இவருடைய நிறுவனமே ஒரு இயந்திரத்தை தருவதாக கூறுகிறார். ஆனால் வேறு எந்த இயந்திர நிறுவனங்களிலும் இவ்வாறு குழாய்களை சுத்தம் செய்வதற்கு இயந்திரத்தை தருவதில்லை என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த பால் கறக்கும் இயந்திரத்தை ஒவ்வொரு முறையும் பால் கறந்த பிறகு சுத்தம் செய்வது மிக சிறப்பான ஒரு வழிமுறை என கூறுகிறார்.இவ்வாறு சுத்தம் செய்வதால் மாடுகளுக்கு எந்த வித நோயும் ஏற்படாது எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

திரு ரிஷி அவர்களின் நிறுவனத்தின் சேவை மற்றும் விற்பனை முறை

திரு ரிஷி அவர்கள் இயந்திரத்தை வாங்கி செல்லும் வாடிக்கையாளர்களுக்கு இருபத்திநாலு மணிநேரமும் அவருடைய சேவையை அளித்து வருவதாக கூறுகிறார்.மேலும் இவருடைய நிறுவனத்தில் மொத்தமாக 6 சேவை மையம் இருப்பதாக கூறுகிறார்.

மேலும் வாடிக்கையாளர்களின் அனைத்து சந்தேகங்களையும் இவர் மிகவும் சிறப்பான முறையில் தீர்வு செய்து வருவதாக கூறுகிறார். மேலும் வாடிக்கையாளர்களின் இயந்திரத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இவர்கள் அங்கு சென்று இயந்திரத்தை சரி செய்து கொடுப்பதாகவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர்கள் இந்த சேவையை ஒரு வருடத்திற்கு இலவசமாக செய்து கொடுப்பதாக கூறுகிறார்.மற்றும் பம்ப் மற்றும் மோட்டார் வகைகளுக்கு ஒரு வருடம் உத்திரவாதம் அளித்து வருவதாகவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவருடைய பால் கறக்கும் இயந்திரம் மிகவும் தரமானதாக உருவாக்கப்பட்டதால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் இயந்திரத்திற்கு எதுவும் ஆகாது என கூறுகிறார். மேலும் இந்த பால் கறக்கும் இயந்திரத்தை வாடிக்கையாளர்கள் அதிக இயந்திரங்களை ஒன்றாக சேர்த்து வாங்கினால் சலுகைகள் அளித்து வருவதாக கூறுகிறார்.

திரு ரிஷி அவர்கள்  இந்த பால் கறக்கும் இயந்திரத்தை மிகவும் தரமான முறையில் உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்.

மேலும் படிக்க:ஆடம்பரமான பறவைகள் வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

Leave a Reply