கோடிக்கணக்கில் லாபம் தரும் சந்தனம் மரம் வளர்ப்பு.

பொள்ளாச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி சந்தன மரம் வளர்ப்பை செய்து அதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தை பெற்று வருகிறார். இவரையும் இவருடைய சந்தனம் மரம் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

Beginning of sandalwood cultivation

பொள்ளாச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி சந்தன மரம் வளர்ப்பை மிகச் சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தை பெற்று வருகிறார்.

இந்த விவசாயி இந்த சந்தன மரம் வளர்ப்பை கடந்த 12 வருடங்களாக வளர்த்து வருவதாகவும் இந்த மரங்கள் மிகவும் தரமானதாக வளர்க்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இவர் நிறைந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் இவரது ஊரில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு நீர் பற்றாக்குறை இருந்து வந்ததாகவும், இதனால் அதிக அளவில் விவசாயம் செய்ய முடியாத காரணத்தால் நிலம் காலியாக இருந்ததாக கூறுகிறார்.

இவ்வாறு விவசாய நிலம் எந்த விவசாயம் செய்யாமல் காலியாக இருப்பதினால் இதில் சந்தன மரத்தை நட்டு வளர்த்தால் பிற்காலத்தில் உதவும் என்பதற்காக வளர்த்ததாகவும் இதற்கு தண்ணீர் அதிகளவில் தேவையில்லை என்ற காரணத்திற்காகவும் இந்த சந்தனமர வளர்ப்பை தொடங்கியதாக கூறுகிறார்.

பாதுகாப்பு முறை

பொதுவாக சந்தன மரம் வளர்ப்பு செய்வதற்கு அதிக அளவு மக்கள் பயம் கொள்வார்கள் ஆனால் இந்த விவசாயி மிகவும் தைரியமாக 12 வருடங்களாக இந்த சந்தன மரம் வளர்ப்பை செய்து வருகிறார்.

மேலும் இன்றுள்ள நிலையிலும் சந்தனம் மரம் வளர்ப்பை செய்வதால் அதிகளவு பிரச்சனைகள் ஏற்படும் என சிலர் கூறி வருவதாகவும் ஆனால் அவ்வாறு எந்தவித பிரச்சனையும் இதுவரை ஏற்பட்டதில்லை என கூறுகிறார்.

மேலும் சந்தனம் மரத்தை பாதுகாப்பதற்கு காட்டைச் சுற்றிலும் தடுப்பு சுவர் அமைத்து இருப்பதாகவும் மற்றும் மரத்தில் கேமராக்களை பொருத்தி உள்ளதாகவும், இதனால் மரங்கள் மிக பாதுகாப்பாக இருக்கும் என கூறுகிறார்.

மேலும் காட்டினை பாதுகாப்பதற்கு இருபத்தி நான்கு மணி நேரமும் ஆட்கள் வேலைப் பார்த்து வருவதாகவும்,இந்த சந்தன மரத்தை வளர்ப்பதற்கு இவர் அனுமதி பெற்றிருப்பதாகவும் கூறுகிறார்.

Sandalwood cultivation method

இன்றுள்ள நிலையில் ஒரு சந்தன கன்று 20 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வருவதாகவும் ஆனால் இவர் பத்து வருடங்களுக்கு முன்பு சந்தன மரக்கன்றுகளை வாங்கும் போது ஒரு கன்று 100 ரூபாய்க்கு வாங்கியதாக கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய நண்பரின் ஆலோசனையின் மூலம் இந்த சந்தனம் மரம் வளர்ப்பை தொடங்கியதாகவும் அவரின் உதவியின் மூலம் சந்தன மரக் கன்றுகளை வாங்கியதாகவும் கூறுகிறார்.

ஒரு அடி ஆழத்தில் குழி தோண்டி அதில் மாட்டு சாணத்தை போட்டு விட்டு ஒரு மாதம் கழித்து கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்ததாகவும், ஒவ்வொரு மரத்திற்கும் இடையிலும் 10 அடி இடைவெளி விட்டு நட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.

ஒரு ஏக்கர் நிலத்தில் 425 சந்தன மரக் கன்றை நட்டு வளர்க்க முடியும் எனவும் இவருடைய விவசாய நிலத்தில் இவர் 2 ஏக்கர் நிலத்தில் 850 சந்தன மரங்களை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் நிலத்தின் அமைப்புக்கு ஏற்ப சந்தன மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் எனவும்,இல்லையெனில் மரங்கள் நல்ல முறையில் வளராத எனவும் இவர் இவருடைய நிலத்தின் அமைப்பிற்கு ஏற்ப சந்தன மரங்களை நட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.

சந்தன மரத்தின் வகை மற்றும் பக்க தாவரம்

சந்தனம் மரத்திலேயே பலவகையில் மரங்கள் இருப்பதாகவும் அதில் இவர் சிவப்பு சந்தன மரத்தை வளர்த்து வருவதாகவும்,இதன் மூலம் இவர் கோடிக்கணக்கில் லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

சந்தன மரம் வளர்வதற்கு அது மற்றொரு மரத்தில் இருந்து சத்துக்களை எடுத்து வரும் எனவும் அவ்வாறு சத்துக்களை எடுத்து வளர்வதற்கு பக்க தாவரமாக அகத்தி வகையை வளர்த்து வந்ததாக கூறுகிறார்.

மேலும் இரண்டு வருடங்களாக தண்ணீர் பற்றாக்குறை இருந்து வந்த காரணத்தினால் அகத்தி வகையை இவர் நடவில்லை எனவும் இப்பொழுது தண்ணீர் ஓரளவு இருப்பதன் காரணமாக இவர் அகத்திக் கீரை வகைகளை நட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.

இந்த அகத்திக் கீரைகளை இவர் வளர்த்துவரும் ஆடு மற்றும் மாடுகளுக்கு தீவனமாக அளித்து வருவதாகவும்,இந்த அகத்திக்கீரை களிடமிருந்து சத்துக்களை எடுத்து கொண்டு சந்தன மரம் நல்ல முறையில் வளர்வதாக கூறுகிறார்.

Water supplying method

சந்தன மரத்தை வளர்ப்பதற்கு அதிக அளவில் நீர் தேவைப்படாது எனவும்,மழை பெய்யும் போது கிடைக்கும் நீரின் அளவு சந்தனம் வளர்வதற்கு போதுமான அளவு நீரினை அளித்து விடும் எனவும் கூறுகிறார்.

மழை இல்லாத சமயங்களில் மட்டும் இவர் சந்தன மரத்திற்கு ஒரு மணிநேரம் நீரினை அளித்து வருவதாகவும் ஆனால் மழை பெய்யும் காலத்தில்  நீரினை அளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் கூறுகிறார்.

மேலும் சந்தன மரத்தை வளர்ப்பதற்கு இவர் VO அலுவலகத்தில் அடங்கள் செய்துள்ளதாகவும்,சந்தன மரத்தை வளர்த்து விற்பனை செய்வதில் 20 சதவீதம் அரசாங்கத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

சந்தன மரம் வளர்ப்பில் அதிக அளவில் இழப்புகள் ஏற்பட்டது இல்லை எனவும் நீர் பற்றாக் குறையின் காரணமாக சிறிய கன்றுகளாக இருக்கும் ஒரு சில கன்றுகள் இறந்து விடுவதாக கூறுகிறார்.

மேலும் சந்தன மரங்களில் ஒவ்வொரு மரங்கள் உயரமாக வளரும் எனவும் ஒவ்வொரு மரங்கள் குள்ளமாக இருக்கும் எனவும் ஆனால் மரத்தின் உயரத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என கூறுகிறார்.

மரத்தின் உயரத்தை கணக்கில் எடுத்து கொள்ளாமல் அதனுடைய வயதை கணக்கில் எடுத்துக்கொண்டு வளர்க்க வேண்டும் எனவும் இவ்வாறு வளர்க்கும்போது நிச்சயமாக சந்தனம் நமக்கு கிடைக்கும் என கூறுகிறார்.

அறுவடை முறை மற்றும் லாபம்

சந்தனமர வளர்ப்பை தொடர்ந்து 20 வருடங்கள் வரை செய்து கொண்டு இருந்தால் மட்டுமே 20 வருடத்திற்கு மீது அறுவடை செய்து விற்பனை செய்ய முடியும் என கூறுகிறார்.

மேலும் பத்து வருடங்களுக்கு முன்பு இந்த சந்தன மரம் ஒரு கிலோ 4000 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வந்ததிருந்ததாகவும், இன்றுள்ள நிலையில் ஒரு கிலோ சந்தன மரம் 15,000 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த சந்தன மரத்தை வளர்த்து 20 வருடங்களுக்குப் பிறகு அறுவடை செய்து விற்பனை செய்வதால் அந்த இருபது வருடம் வரை இதில் எந்தவித லாபமும் இல்லை எனவும்,ஆனால் நல்ல முறையில் வளர்த்து 20 வருடத்திற்கு பிறகு விற்பனை செய்யும் போது அதன் மூலம் நமக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறுகிறார்.

மேலும் இந்த சந்தன மரத்தின் விதைகளை எடுத்து விற்பனை செய்யலாம் எனவும் ஆனால் இவ்வாறு விதை எடுக்கும் மரம் 15 வருட மரமாக இருக்க வேண்டுமென கூறுகிறார்.

மேலும் இவர் மரத்திலிருந்து கீழே விழும் விதைகளை எடுத்து விற்பனை செய்து வருவதாகவும் இந்த விதைகள் ஒரு கிலோ 200 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை விலையை கொண்டிருக்கும் எனவும் கூறுகிறார்.

பொள்ளாச்சியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருந்து கொண்டு இந்த விவசாயி மிகச் சிறப்பான முறையில் சந்தன மரம் வளர்ப்பை செய்து அதன் மூலம் கோடிக்கணக்கில் லாபத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:சிறப்பான கன்னி ஆடுகள் வளர்ப்பு.

Leave a Reply