பல்நோக்கு மின்கல தெளிப்பான்.

திரு ரிஷி அவர்கள் கோவை இண்டஸ்ட்ரீஸ் என்னும் ஒரு இயந்திர நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். இதில் இவர் பல வேலைகளுக்குப் பயன்படும் பல்நோக்கு மின்கல தெளிப்பானை உருவாக்கி உள்ளார். இவரைப் பற்றியும், இவருடைய இயந்திர நிறுவனத்தைப் பற்றியும், பல்நோக்கு மின்கலத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

திரு ரிஷி அவர்களின் இயந்திர நிறுவனம்

திரு ரிஷி அவர்கள் ஒரு இயந்திர நிறுவனத்தை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். மேலும் இவருடைய  நிறுவனத்தின் பெயர் கோவை இண்டஸ்ட்ரீஸ் என கூறுகிறார்.

இந்த நிறுவனத்திலேயே இவர் பல வேலைகளுக்குப் பயன்படும் ஒரு மின்கல தெளிப்பானை உருவாக்கி அதனை நல்ல முறையில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். மேலும் இவருடைய நிறுவனம் ஒரு இயந்திரம் தயாரிக்கும் நிறுவனம் என்பதால் அதிக அளவில் வேலை சுலபமாக முடிக்கும் இயந்திரங்களை உருவாக்கி உள்ளதாகவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த மின்கல தெளிப்பான் பண்ணையாளர்களுக்கும், மாடி தோட்டம் வைத்து உள்ளவர்களுக்கும் மற்றும் பெரிய அளவில் தோட்டங்கள் வைத்து உள்ளவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறுகிறார்.

மேலும் இவர் இந்த இயந்திர நிறுவனத்தை தொடங்கியதற்கு காரணம் விவசாயிகளுக்கு மிகக் குறைந்த விலையில் வேலையை சுலபமாக முடிக்கும் வகையில் இயந்திரம் ஒன்றை உருவாக்கி அளிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

Multi purpose battery sprayer

திரு ரிஷி அவர்கள் இந்த பல்நோக்கு மின்கல தெளிப்பான் ஆனது மிகவும் சிறப்பான முறையில் சுலபமான வகையில் செடிகளுக்கு மருந்தினை அடிக்க பயன்படும் என கூறுகிறார்.

மேலும் இந்த தெளிப்பான் ஆனது மின்கலத்தினால் செயல்படுவதால் மிகவும் வேகமான முறையில் மருந்தினை செடிகளுக்கு அளித்து விட முடியும் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த மின்கல தெளிப்பான் ஆனது விவசாயிகளுக்கும் மற்றும் தோட்டம் வைத்து உள்ளவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறுகிறார். மேலும் இந்த மின்கல தெளிப்பானை விவசாயிகள் வாங்கும் அளவிற்கு குறைந்த விலைக்கு அளித்து வருவதாகவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மற்றும் இந்த மின்னல தெளிப்பானை பல வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் கூறுகிறார்.

பல்நோக்கு மின்கல தெளிப்பானின் வகைகள்

திரு ரிஷி அவர்களின் இயந்திர நிறுவனத்தில் மொத்தமாக ஒன்பது வகை பல்நோக்கு மின்கல தெளிப்பானை உருவாக்கியுள்ளதாக கூறுகிறார்.

அவைகள் அரை லிட்டர் மின்கல தெளிப்பானில் இருந்து ஒரு லிட்டர், இரண்டு லிட்டர், 3 லிட்டர், 5 லிட்டர், 8 லிட்டர், 12 லிட்டர் மற்றும் 16 லிட்டர் அளவுகளில் தெளிப்பானை உருவாகியுள்ளதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இப்பொழுது தெளிப்பானை பயன்படுத்தி செடிகளுக்கு மருந்தினை அடித்துக் கொண்டிருக்கும் போது மின்கலமானது தீர்ந்துவிட்டது எனில் அதனை மீண்டும் வந்து பொருத்திக் கொண்டு மருந்தினை அடிக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறுகிறார்.

ஏனெனில் மருந்தினை செடிகளுக்கு அடித்துக் கொண்டிருக்கும் போது மின்கலமானது தீர்ந்துவிட்டது எனில் கைகளால் மருந்தினை அடிக்கும் முறையையும் இந்த தெளிப்பான் இயந்திரத்தில் பொருத்தி உள்ளதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இஞ்சின் மூலம் செயல்படும் தெளிப்பான் இயந்திரங்களையும் உருவாக்கிய உள்ளதாக கூறுகிறார். மற்றும் பெரிய பெரிய பண்ணைகளுக்கு மற்றும் தோட்டங்களுக்கு பயன்படும் தெளிப்பான் இயந்திரங்களையும் உருவாக்கியுள்ளதாக கூறுகிறார்.

மற்றும் இவரிடம் அதிக அளவில் சிறு பண்ணையாளர்களுக்கும் சிறிய தோட்டங்கள் வைத்து நடத்துபவர்களுக்கும் பயன்படும் வகையிலேயே தெளிப்பான்கள் உருவாக்கி உள்ளதாக கூறுகிறார். ஏனெனில் இவர்கள் தான் அதிக அளவில் இந்த பல்நோக்கு மின்கல தெளிப்பானை வாங்குகிறார்கள் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

Multi purpose battery sprayer operating system

திரு ரிஷி அவர்கள் ஒரு லிட்டர் தெளிப்பானை சிறிய அளவில் மாடித்தோட்டம் வைத்துள்ளவர்களுக்கும், மற்றும் நம்முடைய வீட்டு செடிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறுகிறார். இதனை கைகளாலே செயல்படுத்த முடியும் என கூறுகிறார்.

மேலும் இதை வேகமாகவும் மற்றும் குறைந்த வேகத்துடனும் செயல்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.இதனை பொதுவாக வீட்டு மாடித் தோட்டத்திற்கு மற்றும் நர்சரிக்கும் பயன்படுத்த முடியும் என கூறுகிறார்.

மற்றும் இந்த சிறிய அளவில் உள்ள தெளிப்பான்களை மாட்டின் மடிகளில் ஈக்கள் மற்றும் கொசுக்கள் வந்து கடித்தால் இந்த தெளிப்பானை கொண்டு அதனை விரட்டுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறுகிறார்.

மற்றும் 3 லிட்டர் மின்கல தெளிப்பான் ஆனது வீட்டில் உள்ள தோட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறுகிறார். மற்றும் இந்த மூன்று லிட்டர் மின்கல தெளிப்பானை போல தான் 5 லிட்டர் மற்றும் 8 லிட்டர் மின்கல தெளிப்பான்கள் செயல்படும் என கூறுகிறார்.

மேலும் இந்த மூன்று வகை தெளிப்பான்களையும் கைகளால் செயல்படுத்த முடியும் என கூறுகிறார். மேலும் அடுத்ததாக இவரிடம் இரண்டு வகைகளில் பெரிய அளவில் உள்ள மின்கல தெளிப்பான்கள் இருப்பதாக கூறுகிறார்.

இதில் இரண்டு வகை மின்கலங்கள் பயன்படுத்தபடுவதாக கூறுகிறார். அவை 12 ஓல்ட் 8 ஓம்ஸ் மற்றும் 12 ஓல்ட் 12 ஓம்ஸ் என்ற அளவுகளில் இருப்பதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார். மற்றும் இந்த தெளிப்பான்கள் உடன் நான்கு வகைகளில் மருந்தினை அடிப்பதற்கு முனைகளை கொடுப்பதாக கூறுகிறார்.

மற்றும் இந்த மின்கல தெளிப்பானை முதலில் வாங்கிய உடன் 8 மணி நேரம் இந்த தெளிப்பானுக்கு மின்தேக்கியை ஏற்ற வேண்டும் என கூறுகிறார். மற்றும் இரண்டாவது முறை இந்த தெளிப்பானுக்கு மின்தேக்கியை ஏற்றும்போது இரண்டு மணி நேரத்திலிருந்து 5 மணி நேரத்திற்குள் ஏறி விடும் என கூறுகிறார்.

மற்றும் இந்த மின்கல தெளிப்பானை பயன்படுத்தி மொத்தமாக 15 டேங்க் மருந்துகளை செடிகளுக்கு தொடர்ந்து அடிக்க முடியும் எனவும் இந்த தெளிப்பானில் மருந்தானது வேகமாகவும் மற்றும் குறைவாகவும் மருந்தினை தெளிக்கும் அளவிற்கு உருவாக்கியுள்ளதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

தெளிப்பானை பராமரிக்கும் முறை மற்றும் விற்பனை முறை

திரு ரிஷி அவர்கள் இந்த பல்நோக்கு மின்கல தெளிப்பானை பராமரிக்கும் முறையை மிகவும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

மேலும் இந்த தெளிப்பான் ஆனது மின்கலத்தினால் இயங்குவதால் இதனை செயல்படுத்தாமல் வைத்திருந்தால் தெளிப்பானானது இயங்காமல் போய்விடும் எனக் கூறுகிறார். எனவே இந்த தெளிப்பானை பத்திலிருந்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மின்தேக்கியை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.

மற்றும் இந்த தெளிப்பானில் உள்ள மின்கலத்தினை மிகவும் சுலபமான முறையில் எடுத்து மாற்றிக் கொள்ளலாம் என கூறுகிறார்.மேலும் இந்த தெளிப்பானில் மருந்தினை செடிகளுக்கு அடித்துக் கொண்டிருக்கும் போது மின்கலமானது தீர்ந்துவிட்டது எனில் இந்த தெளிப்பானை கைகளாலே செயல்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த முறையில் பண்ணையாளர்கள் மிகவும் சுலபமான முறையில் நீரினையும் மற்றும் மருந்தினையும் செடிகளுக்கு அடித்துவிட முடியும் எனக் கூறுகிறார்.

மேலும் இந்த தெளிப்பானில் மருந்தினை அடித்துக் கொண்டிருக்கும் போது நீளமான இடத்தில் மருந்து அடிக்க வேண்டும் எனில் அந்த முறையையும் இவர் இந்த தெளிப்பான் இயந்திரத்தில் அமைத்து உள்ளதாக கூறுகிறார்.

மேலும் இவற்றை நமக்கு தேவையான நேரங்களில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறுகிறார்.மற்றும் இவ்வாறு மருந்தினை செடிகளுக்கு அடித்துக் கொண்டிருக்கும் போது பேட்டரியானது தீர்ந்துவிட்டது எனில் கைகளாலும் அதனை செடிகளுக்கு சுலபமான முறையில் அடித்துவிட முடியும் என கூறுகிறார்.

மற்றும் இந்த தெளிப்பான்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது ஒரு பெட்டியில் மிகவும் பாதுகாப்பான முறையில் பேக் செய்து அனுப்புவதாக கூறுகிறார்.மேலும் அனைத்து வகை தெளிப்பான்களையும் ஒருவர் மொத்தமாக வாங்குகிறார் எனில் அவற்றையும் தனித்தனி பெட்டிகளில் மிகவும் பாதுகாப்பான முறையில் பேக் செய்து அனுப்புவதாக கூறுகிறார்.

மற்றும் அனைத்து அளவுகளில் உள்ள மின்கல தெளிப்பான் களையும் மிகவும் சுலபமான முறையில் பேக் செய்து அனுப்பி விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.மேலும் அரை லிட்டர் தெளிப்பானை பேக் செய்து அனுப்புவது மிகவும் சுலபமான ஒரு வழிமுறை என கூறுகிறார்.

திரு ரிஷி அவர்கள் இவருடைய இயந்திர நிறுவனத்தை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்.

மேலும் படிக்கசெம்மறி ஆடுகள் வளர்ப்பில் சிறந்த லாபம்.

Leave a Reply