சேலத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் ஆக்கம் அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பின் மூலம் இயற்கை விவசாயத்தையும் மற்றும் விவசாய பொருட்களையும் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள இயற்கை விவசாய முறையை பற்றி பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
The beginning of organic farming
சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் மிகவும் சிறப்பான முறையில் இயற்கை விவசாயத்தை செய்து வருவதாகவும், இதற்கு ஒரு அமைப்பை உருவாக்கிய உள்ளதாகவும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவர்கள் இவ்வாறு பள்ளி மைதானத்தில் விவசாயத்தை செய்வதற்கு காரணம் இன்றுள்ள நிலையில் அதிக அளவில் கொரானா பரவி வருவதால், பள்ளியை நடத்த முடியாத காரணத்தால் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வேலை அளிக்கும் வகையில் இந்த இயற்கை விவசாயத்தை தொடங்கியதாக கூறுகிறார்.
இந்த முறையில் இவர்கள் பள்ளி முழுவதுமே மிகவும் சிறப்பான முறையில் இயற்கை விவசாயத்தை செய்து வருவதாகவும், இது ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறுகிறார்.
மற்றும் இவர்கள் இந்த பள்ளியில் இயற்கை விவசாயத்தை மிகவும் சிறப்பான முறையில் இயற்கையான வழிமுறைகளில் செய்து வருவதாகவும், இதனால் இவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாத்து வருவதாகவும் கூறுகிறார்.
மற்றும் இவர்கள் இதுபோன்று இயற்கை விவசாயத்தை பள்ளியில் செய்து அந்த விவசாயத்திலிரந்து கிடைக்கும் பொருளை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
ஆக்கம் அறக்கட்டளை
சேலத்தில் இயங்கி வருகின்ற இந்த தனியார் பள்ளியில் இந்த ஆக்கம் அறக்கட்டளை என்னும் அமைப்பு 2013ஆம் ஆண்டே தொடங்கப்பட்டு விட்டதாக இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை கூறுகிறார்.
மேலும் இவர்கள் இந்த அமைப்பை உருவாக்கியதற்கு காரணம் இன்றுள்ள நிலையில் நம்முடைய சுற்றுச்சூழல் ஆனது அதிக அளவில் பாதிப்படைந்து இருப்பதாகவும்,இந்த பாதிப்பை குறைப்பதற்கும்,நெகிழியை யாரும் அதிகளவில் பயன்படுத்தக் கூடாது எந்த காரணத்திற்காகவும் இந்த அமைப்பை உருவாக்கியதாக கூறுகிறார்.
மேலும் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு செயல்பாடுகளை அளித்து வருவதாகவும் அதில் ஒன்று இந்த ஆக்கம் சூழல் எனவும்,இதில் மாணவர்கள் அதிகளவில் ஆர்வத்தை கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.
இவ்வாறு இவர்கள் இந்த ஆக்கம் அறக்கட்டளை அமைப்பை மிகவும் நல்ல எண்ணத்துடன் தொடங்கி அதனை சிறப்பாக நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.
Products that have been harvested
இவர்கள் இந்தப் பள்ளியில் மிகவும் சிறப்பான முறையில் பல வகை பொருட்களை இயற்கையான முறையில் விளைச்சல் செய்து அதனை மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
இவர்கள் முதலில் செய்து வந்த விவசாயம் சீவக்காய் மற்றும் சானை பொடி பல்பொடி மற்றும் பாத்திரம் கழுவப் பயன்படும் பொடி ஆகிய வகைகளை தயாரித்து விற்பனை செய்து வந்ததாகவும்,இப்பொழுது வேறு புதிய பொருட்களை உற்பத்தி செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் மூலிகை பொருட்களை அதிக அளவு நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் எனவும் இல்லை எனில் அவற்றை தோட்டங்களில் பயிரிட்டுக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.
மேலும் இவர்கள் ஆரஞ்சு பழத்தோலை வெளி கடைகளில் வாங்கிக் கொள்வதாகவும், மற்றும் பூந்திக் கொட்டைகளை நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்வதாகவும் தலைமை ஆசிரியை அவர்கள் கூறுகிறார்.
மேலும் துளசி, கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, மருதாணி இலை மற்றும் செம்பருத்தி ஆகிய வகைகளை இவர்களுடைய பள்ளியிலேயே உற்பத்தி செய்து வருவதாகவும், மற்றும் இவற்றுடன் அமுக்கலாம் கொடி செடியினை வேராக வாங்கி வந்து நட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவை எல்லாம் அறுவடை செய்து எடுத்து வந்து நீரின் மூலம் கழுவி வெயிலில் காய வைப்பதாகவும், வெயில் மட்டுமே இவருக்கு மிக முக்கியமானது எனவும், வெயில் அதிகமாக இல்லாத சமயங்களில் செயற்கையாக எதையும் செய்வதில்லை எனவும் கூறுகிறார்.
விளைச்சல் செய்த பொருளை வைத்து பொடி தயாரிக்கும் முறை
விளைச்சல் செய்த அனைத்து பொருட்களையும் வெயிலில் நன்றாக காய வைத்த பிறகு அதனை அரைத்து பொடி செய்வதற்கு எடுத்து வந்து ஒரு இடத்தில் வைப்பதாக கூறுகிறார்.
மற்றும் இவ்வாறு விளைச்சல் செய்த பொருளை மொத்தமாக 13 பொருட்களை ஒன்றாக சேர்த்து இயந்திரத்தில் போட்டு அரைத்துப் பொடி செய்வதாகவும், இதை அரைக்கும் போது இவற்றுடன் கஸ்தூரி மஞ்சளை சேர்ப்பதாக கூறுகிறார்.
இவ்வாறு இவர்கள் இதனை அரைக்கும் போது இவற்றுடன் கஸ்தூரி மஞ்சளை சேர்ப்பதற்கு காரணம் இந்த மஞ்சளை கலந்தால் நல்ல வாசனை இருக்கும் என்பதற்காகவும்,நிறமானது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்பதற்காகவும் இதனை சேர்ப்பதாக கூறுகிறார்.
மற்றும் இவ்வாறு அரைத்த பொடியினை நன்றாக மூன்றிலிருந்து நான்கு முறை சலித்த பிறகு அவற்றை எடுத்து பேக் செய்து விடுவதாக கூறுகிறார்.
மற்றும் இவற்றையெல்லாம் சரியான முறையில் எடுத்து அரைத்து அதனை பேக் செய்யும் பொறுப்பை இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் திருமதி லதா அவர்கள் செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த வகையில் இவர் பல வகை மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து பல்பொடி மற்றும் பாத்திரம் விளக்க பயன்படும் பொடி,மேலும் இதனை போன்று பலவகை பொடிகளை தயாரித்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இப்பொழுது புதியதாக ஒரு பொடி வகையை தயாரித்து உள்ளதாகவும் அதனை தேநீரில் கலந்து குடிக்கலாம் எனவும்,இதில் இஞ்சி,மஞ்சள் மற்றும் மிளகு ஆகியவை கலந்து இருப்பதாகவும் கூறுகிறார்.
Selling method and profit
இவர்களுடைய பள்ளியில் இயற்கையான முறையில் அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்வதால் வெளிநாடுகளிலும் அதிக அளவு இந்த பொடியானது விற்பனையாகி வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர்கள் இந்தப் பொடியை தயார் செய்யும் முறையானது காகித பேப்பரின் மூலமே எனவும், அருகில் உள்ள இடங்களுக்கு இந்த பொடியை அனுப்புவது என்றால் இந்த காகிதம் மூலம் பேக் செய்யப்பட்ட பொடியை அனுப்புவதாகவும்,இதுவே வெளியில் தூரமாக அனுப்புவது என்றால் ஒரு இரும்பு டின் போன்ற சிறிய அமைப்பிலுள்ள பெட்டியில் பொடியை போட்டு அனுப்புவதாக கூறுகிறார்.
மேலும் இவர்கள் உற்பத்தி செய்யும் பொருளை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்றால் அவர்கள் இணையதளத்தின் மூலம் பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம் எனவும்,இவர்களுடைய இணையதளத்தின் பெயர் Www.aakkam eco products.com எனக் கூறுகிறார்.
மேலும் இவர்கள் செய்யும் இந்த இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொடி வகைகள் அனைத்தையும் வேறு யாராவது செய்ய வேண்டும் என்று ஆலோசனை இவர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் கற்றுத் தருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இன்றுள்ள நிலையில் இயற்கையான முறையில் எந்த கெமிக்கல் வகையையும் பயன்படுத்தாமல் மற்றும் நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாமல் தயார் செய்யப்படும் பொருளானது அதிக அளவில் பணம் உள்ள நபர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என கூறுகிறார்.
இதன் காரணமாக இவர் இதனை அளிப்பதற்காக மக்களுக்கு மிகவும் தரமான முறையில் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பொடியினை மிகக் குறைந்த விலையில் அளித்து வருவதாகவும் கூறுகிறார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்த அளவிற்கு மிக சிறப்பான முறையில் முற்றிலும் இயற்கையான அமைப்பில் மட்டுமே அனைத்து பொருட்களையும் விவசாயம் செய்து அவற்றை பொடியாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.
மேலும் படிக்க:மிகக் குறைந்த விலையில் கோழிப்பண்ணைக்கு தேவையான பொருட்கள்.