பரண்மேல் நாய் வளர்ப்பு.

திரு சீனிவாசன் அவர்கள் வேலூரில் ஆடுகளை வைத்து வளர்க்கும் பரண்மேல் நாய்களை வைத்து மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய நாய் பண்ணையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

திரு சீனிவாசன் அவர்களின் வாழ்க்கை

திரு சீனிவாசன் அவர்கள் வேலூரில் வசித்து வருவதாகவும், இவர் இங்கு ஒரு சொந்தமான பண்ணை வைத்து நடத்தி வருவதாகவும், அந்தப் பண்ணையில் நாய்களை பரண்மேல் மிகச் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய பண்ணையில் மீன்களை மிக சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும், இந்த மீன் பண்ணையின் மூலமும் இவருக்கு அதிக அளவு லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

இவர் நாய்களை இவ்வாறு பரண்மேல் வளர்ப்பதற்கு காரணம், இவர் முதலில் பரண்மேல் ஆடுகளையே வளர்த்து வந்ததாகவும், ஆடுகள் இன்றுள்ள கொரானோ காலகட்டத்தில் அதிக அளவில் இறைச்சிக்காக விற்பனை ஆகி விட்டதால் அனைத்து ஆடுகளையும் விற்பனை செய்து விட்டதாக கூறுகிறார்.

இதன் காரணமாக இவருடைய பரண் காலியாக உள்ளது என்பதற்காக அதில் நாய்களை வளர்க்கலாம் என்ற எண்ணத்துடன் இவர் இவ்வாறு நாய்களை பரண்மேல் வளர்த்து வருவதாக கூறுகிறார்.

இவ்வாறு நாய்களை பரண்மேல் வளர்ப்பதும் மிக சிறப்பான ஒரு வழிமுறை எனவும், இதனால் அதிகளவு லாபம் கிடைக்கும் எனவும் திரு சீனிவாசன் அவர்கள் கூறுகிறார்.

Specialty caused by raising a dog on the beach

திரு சீனிவாசன் அவர்கள் இவருடைய நாய்கள் அனைத்தையும் மிக சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும், இது இவருக்கு மிக எளிய வழிமுறையாக இருப்பதாகவும் கூறுகிறார்.

நாய்களை இவ்வாறு பரண்மேல் வளர்க்கும் முறையினால் வேலை செய்யும் முறையானது மிக எளிதாக இருப்பதாகவும், மேலும் இந்த முறையில் வளர்ப்பதால் நாய்களுக்கு எந்த வித நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த நாய் வளர்ப்பினால் அதிக அளவு லாபம் கிடைக்கும் எனவும், ஆடுகள் மற்றும் மாடுகள் போன்ற கால்நடை வளர்ப்பை விட இந்த நாய்கள் வளர்ப்பில் அதிக அளவு லாபம் கிடைக்கும் எனவும் திரு சீனிவாசன் அவர்கள் கூறுகிறார்.

நாய் வளர்ப்பு முறையின் லாபம்

திரு சீனிவாசன் அவர்கள் அதிக அளவில் செலவு செய்து பரண் அமைத்து இப்பொழுது அதில் ஆடுகளுக்கு பதிலாக நாய்களை வளர்த்து வருவதாகவும், இதனால் இவருக்கு எந்தவிதத்திலும் நஷ்டம் ஏற்படவில்லை எனவும், அதிக அளவில் லாபம் கிடைப்பதாகவும் கூறுகிறார்.

இப்பொழுது ஆட்டுப்பண்ணை வளர்த்தால் அவற்றின் மூலம் ஒரு வருடம் இடைவெளி விட்டு தான் லாபம் கிடைக்கும் எனவும் ஆனால் இந்த நாய் வளர்ப்பில் ஒரு வருடத்திலேயே அதிக அளவில் லாபம் கிடைப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த நாய்கள் 60 இல் இருந்து 65 நாட்களுக்குள் குட்டி போட்டு விடுவதாகவும், இவைகள் குட்டி போட்ட 30-வது நாளிலேயே நாய்க்குட்டிகளை விற்பனை செய்து விடலாம் எனவும் திரு சீனிவாசன் அவர்கள் கூறுகிறார்.

மேலும் நாய்கள் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை குட்டி போடுவதாகவும், அதில் ஒரு முறைக்கு ஆறு குட்டிகளை போடுவதாகவும், இதுவே இரண்டு முறை போட்டால் 12 குட்டிகள் வரை நமக்கு கிடைக்கும் எனவும், இதனால் இவைகளை விற்பனை செய்தால் வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

இதுவே ஆடுகளை நாம் வளர்க்கும் போது அவை குட்டி போட்டு நன்றாக வளர்த்ததற்குப் பிறகே நாம் அதனை விற்பனை செய்து அதன்பிறகு லாபம் கிடைக்கும் எனவும், ஆனால் நாய்கள் வளர்ப்பில் நமக்கு விரைவில் லாபம் கிடைத்து விடும் எனவும் திரு சீனிவாசன் அவர்கள் கூறுகிறார்.

Types of dogs

திரு சீனிவாசன் அவர்கள் லேபர் நாய் என்ற ஒரு நாய் வகையை வளர்த்து வருவதாகவும், இந்த நாய் வகைகளை குழந்தைகள் அதிக அளவில் விரும்புவதாகவும், இந்த நாய் வகைகளே அதிக அளவில் விற்பனையாகும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த நாய் வகைகள் மிகவும் சுலபமான முறையில் அனைவரிடமும் நன்கு பழகி விடும் எனவும், இவைகளுக்கு உணவினையும் மிக சுலபமான முறையில் அளித்து விடலாம் எனவும், புதிதாக வருபவர்களிடமும் மிக சுலபமான முறையில் பழகி விடும் எனவும் கூறுகிறார்.

மற்றும் இவர் ராட்வில்லர் என்னும் ஒரு நாய் வகையை வளர்த்து வருவதாகவும், மேலும் இந்த நாய் வகைகள் மிகவும் கொடுரமாக நடந்து கொள்ளும் என கூறுவார்கள் எனவும்,ஆனால் அவ்வாறெல்லாம் இந்த நாய் வகைகள் இல்லை எனவும், நாம் வளர்க்கும் முறையை போன்றே இது வளரும் எனவும் திரு சீனிவாசன் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த நாய் வகைகளை யாரிடமும் பழக விடாமல் தனிமையில் வைத்திருந்தால் மட்டுமே அவைகள் மோசமான நடந்து கொள்ளும் எனவும், அனைவரிடமும் நன்கு பழக விட்டால் இவ்வாறு மோசமாக நடந்து கொள்ளாது எனவும் திரு சீனிவாசன் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர் ஜெர்மன் ஜெஸ்பேட் என்ற நாய் வகையை வளர்த்து வருவதாகவும், மேலும் இந்த நாய் வகைகள் அனைத்தும் அனைவரிடமும் நன்கு பழகும் எனவும், மற்றவர்களை தாக்காது எனவும் கூறுகிறார்.

மற்றும் திரு சீனிவாசன் அவர்கள் இவருடைய அனைத்துவகை நாய்களையும் மிகவும் மென்மையான முறையில் அனைவரிடமும் நல்ல முறையில் பழகும் வகையில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இந்திய நாய் வகைகளையும், மற்றும் சிபிபாரோ நாய் வகைகளை வளர்த்து வருவதாகவும், இந்த நாய் வகைகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தலாம் எனவும், இவை மிக வேகத்துடன் செயல்படும் எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் மிக சிறப்பான ஒரு நாய் வகையான முதல்ஹாவுன்ட் என்ற நாய் வகையை வளர்த்து வருவதாகவும், இந்த நாய் வகை இந்திய நாய் வகை எனவும், அதிக அளவில் இந்த நாய்களை யாரும் வளர்ப்பதில்லை எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் கன்னி என அழைக்கப்படும் நாய் வகையையும், மேலும் இந்த நாய் வகைகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தலாம் எனவும் திரு சீனிவாசன் அவர்கள் கூறுகிறார்.

நாய்களின் விற்பனை முறை மற்றும் பராமரிப்பு முறை

திரு சீனிவாசன் அவர்களுடைய நாய் பண்ணையிலுள்ள நாய்களில் அதிக அளவில் பெண் நாய்களையே அனைவரும் வாங்கி செல்வதாகவும், காரணம் அவைகள் குட்டி போட்டால் அதன் மூலம் லாபம் கிடைக்கும் என்பதற்காக எனவும் கூறுகிறார்.

மேலும் நாய்களுக்கு பொதுவாக அதிக அளவில் உனி பிடித்து விடும் எனவும், இதனால் நாய்கள் உடைய ரத்தத்தை இவைகள் அதிக அளவில் உரிந்து விடுவதாகவும், இதுபோன்று பரண்மேல் நாய்களை வளர்ப்பதால் இவ்வாறு நாய்களுக்கு உனிகள் பிடிப்பதில்லை எனவும் கூறுகிறார்.

மேலும் நாய்களுக்கு அதிக அளவில் உனிகள் பிடிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும், இவ்வாறு நாய்களுக்கு உனிகள் பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிக அவசியமான ஒன்று எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் நாய்களுக்கு தினமும் மாமிசத்துடன் கலந்து உணவை அளித்து வருவதாகவும், இந்த முறையில் உணவினை அளிப்பது மிக முக்கியமான ஒரு வழிமுறை எனவும், இந்த முறையில் உணவை அளித்து வளர்த்தால் தான் அவைகள் நன்கு வளர்ச்சியுடன் வளரும் எனவும் கூறுகிறார்.

இவ்வாறு உணவை அளிப்பதால் இவருக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரை செலவு ஆவதாகவும், மேலும் நாய்களுக்கு தடுப்பூசிகள் போடுவதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு இவர் நாய்களுக்கு தடுப்பூசி போடும் போது வாரத்திற்கு ஒரு முறை அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி போடுவதாகவும், மேலும் இவர் நாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒரே மருத்துவரின் மூலமே போட்டு வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் நாய்களின் வயிற்றில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் இல்லாமல் இருப்பதற்கு ஒரு தடுப்பு ஊசியையும் போட்டு வருவதாகவும், ஒரு தடுப்பூசி ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் எனவும், மேலும் நாய்களுக்கு உணவு அளிக்கும் செலவானது இவருக்கு ஒரு மாதத்திற்கு இருபதாயிரம் வரை செலவு ஆவதாக கூறுகிறார்.

மேலும் இவர் அதிக அளவில் பெரிய நாய்களை விட குட்டிகளைையே விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

திரு சீனிவாசன் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் பரண்மேல் இவருடைய நாய்கள் அனைத்தையும் வளர்த்து வருகிறார்.

மேலும் படிக்க:இளநீர் வெட்ட பயன்படும் இயந்திரம்.

Leave a Reply