புறா பண்ணை வளர்ப்பு.

திரு குமார் அவர்கள் சென்னையில் உள்ள பூனேரியில் ஒரு புறா பண்ணை வைத்து சிறப்பாக நடத்தி வருகிறார். அவரைப் பற்றியும் அவரின் புறா பண்ணை வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

திரு குமார் அவர்களின் வாழ்க்கை

திரு குமார் அவர்கள் சென்னையில் உள்ள பூனேரி என்னும் ஊரில் வசித்து வருகிறார். இவர் இங்கே ஒரு புறா பண்ணை வைத்து அதனை மிகச் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இந்தப் புறா பண்ணையால் இவர் அதிக அளவு பயன் பெற்றுள்ளதாக கூறுகிறார்.

பொதுவாக புறாக்கள் என்றாலே அவைகள் நமது சிறுவயதிலிருந்தே நம்முடன் பயணிக்க கூடிய ஒரு உயிரினம் என கூறுகிறார். இதனால் தான் இவருக்கு இந்த புறா பண்ணை வளர்ப்பினை தொடங்கலாம் என்ற எண்ணம் தோன்றியதாக கூறுகிறார்.

மேலும் இவருடைய பண்ணையில் மட்டும் இல்லாமல் இவருடைய வீட்டிலும் அதிக அளவு புறாக்களை வளர்த்து வருவதாக திரு குமார் அவர்கள் கூறுகிறார். மற்றும் திரு குமார் அவர்களின் முக்கிய நோக்கமானது இவருடைய பண்ணைக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஏதாவது ஒரு விலங்கை வாங்கி செல்ல வேண்டும் என்பது ஆகும் எனக் கூறுகிறார்.

இவருடைய பண்ணையில் அனைத்து விலங்குகளையும் வளர்த்து வருவதாக கூறுகிறார். வாடிக்கையாளர்கள் வாங்க வரும் உயிரினங்களின் வகை இல்லை என வாடிக்கையாளர் கூறாமல் இருக்கும் அளவிற்கு பண்ணையை  சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என திரு குமார் அவர்கள் கூறுகிறார்.

திரு குமார் அவர்களின் பண்ணையில் புறாவை தவிர கோழி வகைகள்,வாத்து வகைகள், ஆடுகள், லவ் பேர்ட்ஸ் போன்றவைகளை வளர்த்து வருவதாக திரு குமார் அவர்கள் கூறுகிறார்.

பண்ணையின் அமைப்பு

திரு குமார் அவர்கள் மிக சிறிய இடத்திலேயே மிகச் சிறப்பான முறையில் புறா வளர்ப்பினை செய்து வருகிறார். இவர் இந்தப் புறா பண்ணையின் கொட்டகைக்கும், புறாக்களின் கூண்டுகளுக்கும் அதிக அளவு செலவு செய்துள்ளதாக கூறுகிறார். மேலும் இவர் இந்தப் பண்ணையை இவருடைய சொந்த இடத்திலேயே அமைத்து உள்ளதாகவும் கூறுகிறார்.

பொதுவாக புறா வளர்ப்பிற்கு ஆடம்பரமான ஒரு பண்ணை தேவை இல்லை என திரு குமார் அவர்கள் கூறுகிறார். பேனர்களில் உள்ள கெட்டியான காகிதத்தை வைத்தே பண்ணைகளின ஓரங்களில் கட்டி பயன்படுத்தலாம் என கூறுகிறார். கூண்டுக்குள் மழை நீர் வராமல் இருந்தால் மட்டுமே புறா வளர்ப்பிற்கு போதுமானது என கூறுகிறார்.

இந்த முறையில் பண்ணை இருந்தாலே புறாக்கள் ஆனது விரும்பி பண்ணையில் இருக்கும் என திரு குமார் அவர்கள் கூறுகிறார்.திரு குமார் அவர்கள் இவருடைய பண்ணைக்கும் எந்த ஆடம்பர செலவும் செய்யவில்லை என கூறுகிறார். தேவையற்ற பொருட்களிலிருந்து பண்ணைக்கு தேவையானவைகளை இவரே செய்து கொண்டதாகவும் கூறுகிறார்.

திரு குமார் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இவருடைய பண்ணையை அமைத்து உள்ளார்.

புறாக்களின் வகைகள்

திரு குமார் அவர்கள் பண்ணையில் மொத்தமாக 50 புறாக்களை வளர்த்து வருவதாக கூறுகிறார். இந்த 50 புறாக்களில் இவரிடம் ஏழு வகை புறாக்கள் இருப்பதாக கூறுகிறார். இவரிடம் உள்ள புறாக்களில் ஃபேன்சி வகை புறாக்களை பெரும்பாலும் அதிக அளவில் இருப்பதாக கூறுகிறார்.

மேலும் இவரிடம் ஃபேன்டையில், மொஸ்கி, அமெரிக்கன் ஃபேன்டையில், இந்தியன் ஃபேன்டைல், ஆஸ்திரேலிய வகை புறா, மோதினா மற்றும் கர்ண புறா வகைகள் இருப்பதாகவும் கூறுகிறார். பொதுவாக புறாக்கள் என்றால் வெளியில் பறந்து சென்று இரையைத் தேடி விட்டு மீண்டும் கூண்டிற்கு வரும் இயல்பு உடையது எனவும் கூறுகிறார்.

ஆனால் இவரிடம் உள்ள புறாக்களில் அதிக அளவு ஃபேன்ஸி வகை புறாக்களே இருப்பதாகவும், இந்தப் புறா வகைகள் கழுகுகள் இடம் சுலபமாக சிக்கிக் கொள்ளும் இயல்பு உடையது எனவும், இதன் காரணமாக இந்த புறா வகைகளை பண்ணைக்கு உள்ளேயே வைத்து வளர்த்து வருவதாக திரு குமார் அவர்கள் கூறுகிறார்.

ஆனால் இவரிடம் உள்ள மற்ற புறா வகையான ஹோமர் புறா வகைகளையும், கர்ண புறா வகைகளையும் வெளியில் விடுவதாக கூறுகிறார். ஏனெனில் கர்ண புறா வகைகள் ஆனது கழுகின் உயரத்திற்கு பறக்கும் தன்மை உடையது. எனவே அவைகள் பருந்திடமிருந்து சுலபமாக தப்பித்து கொள்ளும் எனக் கூறுகிறார்.

மேலும் புறாக்கள் ஆனது பருந்திடம் சிக்கிக்கொண்டால் அது இயற்கை என கூறுகிறார். இயற்கை மீறி நம்மால் எதுவும் செய்ய முடியாது எனவும் திரு குமார் அவர்கள் கூறுகிறார். மற்றும் கர்ண புறா வகைகளை அதிகமாக வாடிக்கையாளர்கள் வாங்கி செல்வதாக கூறுகிறார்.

புறாக்களை வைத்து பந்தயம் நடத்தும் இடங்கள் அதிகமாக இருப்பதாகவும், அவ்வாறு புறாக்களை வைத்து பந்தயம் நடத்தும் நபர்கள் இந்த கர்ண புறா வகைகளையே அதிகமாக வாங்கி செல்வதாகவும் கூறுகிறார். அவ்வாறு புறாக்களை வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்கள் புறாக்களின் கண்களை பார்த்தே வாங்கி செல்வதாகவும் திரு குமார் அவர்கள் கூறுகிறார்.

புறாக்களை பராமரிக்கும் முறை

பொதுவாக புறாக்களுக்கு அதிக அளவில் நோய்கள் ஏற்படாது எனவும், அவ்வாறு நோய்கள் ஏற்பட்டால் அதனை மிகவும் பாதுகாப்பான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார். இல்லையெனில் புறாக்கள் ஆனது இறப்பதற்கு வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாகவும் திரு குமார் அவர்கள் கூறுகிறார்.

புறாக்களுக்கு பல வகையான நோய்கள் ஏற்படும் எனவும் கூறுகிறார். அதில் முக்கியமாக புறாக்களுக்கு வரக்கூடாதா ஒரு நோய் தலை சுத்தி நோய் என கூறுகிறார். இந்த தலை சுத்தி நோய் புறாக்களுக்கு வந்துவிட்டால் புறாக்களை குணப்படுத்துவது மிக கடினமான ஒன்று என கூறுகிறார்.

மேலும் புறாக்களுக்கு சளித் தொல்லைகள் ஏற்படும் எனவும் கூறுகிறார், இதனை நாட்டு மருந்துகள் அல்லது ஆங்கில மருந்துகள் மூலம் சரி செய்து விடலாம் எனவும், இதனால் புறாக்களுக்கு அதிக அளவு பாதிப்பு எதுவும் இருக்காது எனவும் கூறுகிறார்.

தலை சுத்தி நோய் புறாக்களுக்கு ஏற்படாமல் இருப்பதற்கு புறாக்களை வைத்திருக்கும் கூண்டையும், பண்ணையையும் தூய்மையாக வைத்திருந்தால் மட்டுமே போதுமானது எனக் கூறுகிறார். இவ்வாறு பண்ணைகள் தூய்மையாக இல்லை எனில் நிச்சயமாக புறாக்களுக்கு தலை சுத்தி நோய் ஏற்பட்டு புறாக்கள் ஆனது இறந்து விடும் என திருக்கமார் அவர்கள் கூறுகிறார்.

புறாக்களுக்கு அளிக்கும் தீவனங்கள்

திரு குமார் அவர்கள் இவருடைய புறாக்களுக்கு தீவனம் என்று எதுவும் அதிக அளவில் வாங்குவதில்லை என கூறுகிறார். ஏனெனில் இவருக்கு இப்போது அதிக அளவு வேலைகள் இருப்பதால் தீவனங்களை வாங்க செல்வதில்லை என கூறுகிறார். ஆனால் முன்பு எல்லாம் மக்காச்சோளம் போன்ற தீவனங்களை வாங்கி புறாக்களுக்கு அளித்து வந்ததாக கூறுகிறார்.

இப்பொழுது இவர் இந்த புறாக்களுக்கு கம்பு வகைகளையும், இவரின் நிலத்தில் விளைந்த அரிசி வகைகளையுமே புறாக்களுக்கு உணவாக அளித்து வருவதாக கூறுகிறார். இந்த புறாக்களுக்கு தீவனம் அளிப்பதற்கு ஒரு வாரத்திற்கு 500 ரூபாய்  செலவு செய்வதாக கூறுகிறார்.

மேலும் இவரிடம் அதிக அளவு ஃபேன்சி வகை புறாக்களே இருப்பதால் அவைகளுக்கு சத்து நிறைந்த தீவனங்களை அளிக்கவேண்டும் என்பது இவரின் எண்ணம் என கூறுகிறார். மேலும் இந்த புறாக்களுக்கு பச்சை பயிறு வகைகளையும், பட்டாணி வகைகளையும், பட்டாணி வகைகளில் வெள்ளை பட்டாணி மற்றும் கருப்பு பட்டாணி வகைகளை உடைத்து அளிப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் சிவப்பு அரிசி வகைகளையும், கோதுமைகளையும் கலந்து அளித்து வருவதாக திரு குமார் அவர்கள் கூறுகிறார். மேலும் புறாக்களை வாங்கி வளர்த்தும் வாடிக்கையாளர்கள் எவ்வாறு புறாக்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளனரோ அவ்வாறே வளர்த்தலாம் என கூறுகிறார்.

அதிக கோரிக்கைகள் உள்ள புறாக்கள் மற்றும் விலைகள்

புறா வகைகளில் அதிக அளவு கோரிக்கை உள்ள புறாக்கள் ஃபேண்டைல் வகை புறாக்களே என கூறுகிறார். இவற்றை என்றும் பசுமை மாறாத வகைகள் என கூறுகிறார். இந்த ஃபேண்டைல் வகைகளில் ஒரு வகை புறாவிற்கு உடல் முழுவதும் வெள்ளை நிறமாகவும், வாலில் மட்டும் கருப்பு மற்றும் காப்பி நிறம் கலந்த நிறத்தில் இருக்கும் என கூறுகிறார்.

மற்ற இரண்டு வகைகளில் ஒரு வகை புறா முழுவதும் காப்பி நிறத்திலும், மற்றொரு வகை புறாவானது முழுவதும் வெள்ளை நிறத்தில் இருக்கும் என கூறுகிறார். மேலும் ஒரு வகை புறாவானது உடல் முழுவதும் சாம்பல் நிறத்துடனும், மற்றொரு வகை புறாவின் தலை மட்டும் வெள்ளை நிறத்திலும், உடல் முழுவதும் கருப்பு நிறத்திலும் இருக்கும் என கூறுகிறார்.

இந்த வகை புறாக்கள் அதிக அளவு விலையில் விற்பனையாகி வருகின்றது என கூறுகிறார். மேலும் இது போன்று பல வகையில் புறாக்கள் இருப்பதாகவும் திரு குமார் அவர்கள் கூறுகிறார். மேலும் புறாக்கள் ஆனது சரியான அளவில் விற்பனை ஆவதற்கு நாம் அதனை மிகவும் பாதுகாப்பான மற்றும் சரியான முறையில் வளர்க்க வேண்டும் எனக் கூறுகிறார்.

இவ்வாறு வளர்த்தினால் மட்டுமே புறாக்கள் ஆனது அதிக அளவில் விலைபோகும் எனவும் கூறுகிறார். கேரளா மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ளவர்கள் அதிக அளவு புறா பண்ணைகளை வைத்து உள்ளதாகவும் கூறுகிறார். மேலும் இந்த புறாக்களை வைத்து பறக்கும் பந்தயம் வைத்து நடத்தி வருபவர்களும் அதிக அளவில் இருப்பதாகவும் திரு குமார் அவர்கள் கூறுகிறார்.

இவ்வாறு பந்தயத்தில் உள்ள புறாக்களை 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை விலை கூறுவார்கள் என கூறுகிறார். மேலும் புதியதாக புறா வாங்கி வளர்த்துபவர்கள் அந்த புறாவிற்கு அதிக அளவு சத்து நிறைந்த உணவுகளை அளித்து அந்தப் புறாவையும் பந்தயத்தில் பறக்க வைக்கலாம் என திரு குமார் அவர்கள் கூறுகிறார்.

இப்பொழுது கோழி வகைகளில் எவ்வாறு நாட்டுக்கோழிகளுக்கு அதிக அளவு கோரிக்கை உள்ளதோ, அதேபோல் புறா வகைகள் நாட்டுப்புறாக்களுக்கு அதிக அளவு கோரிக்கை உள்ளதாக கூறுகிறார். இந்த புறாக்கள் ஒரு ஜோடி 300 ரூபாய்க்கு விற்பனை ஆவதாக கூறுகிறார்.

மேலும் இவர் புறாக்களை சரியான புறாவுடன் இனச்சேர்க்கை செய்து வருவதாக கூறுகிறார். ஏனெனில் சரியான புறாவுடன் சேர்த்து இனச்சேர்க்கை செய்தால் தான் பிறக்கும் குட்டி புறாவானது சரியான முறையில் பிறக்கும் எனக் கூறுகிறார்.

திரு குமார் அவர்கள் இந்த புறா பண்ணை வளர்ப்பினை மிகவும் சரியான மற்றும் இயற்கை முறையில் மிக சிறப்பாக நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க:தேனீக்கள் வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

One comment

Leave a Reply