இயற்கையான வழிமுறையில் வாழைப்பழம் உற்பத்தி.

சத்தியமங்கலத்தை சேர்ந்த திரு திருமூர்த்தி அவர்கள் மிகவும் இயற்கையான முறையில் வாழைப் பழங்களை உற்பத்தி செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய இயற்கையான வழிமுறையில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழங்களை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

திரு திருமூர்த்தி அவர்களின் வாழ்க்கை

திரு திருமூர்த்தி அவர்கள் சத்தியமங்கலம் என்னும் ஊரில் வசித்து வருகிறார். இவர் இங்கு வாழைமர தோப்பினை வைத்து அந்த வாழை மரங்களை மிகவும் இயற்கையான வழிமுறையில் வளர்த்து வருகிறார். மேலும் அந்த வாழை மரங்களில் இருந்து கிடைக்கும் வாழைப்பழங்களை சத்தியமங்கலத்தில் இருந்து பூனே வரை விற்பனை செய்து வருகிறார்.

திரு திரு மூர்த்தி அவர்கள் மிகவும் திறமைசாலி அவர். இவர் இந்த வாழைப்பழ விற்பனையைக் விடுத்து ஒரு ஒருங்கிணைந்த பண்ணையையும் மிக சிறப்பான முறையில் வழி நடத்தி வருவதாக கூறுகிறார். இவரின் பண்ணைக்கு தேவையான அனைத்து தேவைகளையும் இவரே பூர்த்தி செய்து கொள்வதாகவும் கூறுகிறார்.

மேலும் திரு திருமூர்த்தி அவர்கள் இவரின் பண்ணையில் விளையும் அனைத்தையும் மிகவும் இயற்கையான முறையிலேயே உற்பத்தி செய்து கொண்டு வருவதாக கூறுகிறார். இந்த முறையினால் இவர் மிகவும் மன நிறைவையும், அதிக பயனையும் பெற்றுக் கொண்டு வருவதாக கூறுகிறார்.

வாழைப்பழங்களின் வகைகள்

திரு திருமூர்த்தி அவர்களின் வாழை தோப்பில் செவ்வாழை மற்றும் கற்பூரவல்லி வகைகளை உற்பத்தி செய்து வருவதாக கூறுகிறார்.

இந்த செவ்வாழைகள் ஆனது ஆறு மாதத்திற்கு மட்டுமே இருக்கும் என கூறுகிறார். மேலும் இந்த செவ்வாழைகளுக்கு சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார். இவர் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தியதற்கு காரணம் இவரிடம் வேலையாட்கள் அதிக அளவில் இல்லாததே காரணம் என கூறுகிறார்.

சாதாரணமாக மரங்களுக்கு நீரினை பாய்ச்சுவதற்கு ஆட்கள் தேவைப்படும். ஆனால் இந்த சொட்டு நீர் பாசன முறைக்கு ஆட்கள் தேவை இல்லை என கூறுகிறார். மேலும் இந்த முறையினால் வேலை செய்யும் நேரமும் குறையும் என திரு திருமூர்த்தி அவர்கள் கூறுகிறார். மேலும் இவர் இந்த பாசன முறையை 10 வருடங்களுக்கு முன்பே செயல்படுத்தி விட்டதாக கூறுகிறார்.

மற்றும் இவர் கற்பூரவல்லி வகை வாழைப்பழங்களை குறைந்த அளவில் உற்பத்தி செய்து வருவதாக கூறுகிறார். இவர் முக்கியமாக அதிக அளவில் செவ்வாழை பழ வகைகளையே உற்பத்தி செய்து கொண்டு வருவதாக கூறுகிறார்.

வாழைப் பழங்களை வெட்டி எடுக்கும் முறை

திரு திருமூர்த்தி அவர்கள் வாழைப்பழங்களை வெட்டி எடுக்கும் முறையினை மிகவும் வேறுபட்ட முறையில் செய்து வருகிறார்.

இப்பொழுது வாழைத்தோப்பு வைத்துள்ள அனைவரும் வாழைப்பழங்களை வெட்டி எடுக்கும் போது வாழை மரத்தினை பாதியாக வெட்டி அதிலிருந்து வாழைத்தாரை எடுப்பார்கள் என கூறுகிறார். ஆனால் இவர் இவ்வாறு செய்வதில்லை என கூறுகிறார்.

இவர்வாழை மரத்தில் உள்ள இலைகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு வாழைத்தாரை மட்டும் தனியாக வெட்டி எடுத்துக் கொள்வதாக கூறுகிறார். இவர் இவ்வாறு செய்வதற்கு காரணம், இப்பொழுது ஒரு வாழைமரம் ஆனது பலன் அடைவதற்கு 12 மாதங்கள் ஆகிறது என்றால் அந்த வாழை மரத்தில் 70 சதவீதம் சத்து அப்படியே இருக்கும் என கூறுகிறார்.

எனவே இந்த வாழை மரத்தினை பாதியாக வெட்டி எடுத்து விட்டால் அந்த சத்தானது எந்தவித பயனும் இன்றி வீணாகிவிடும் என கூறுகிறார். எனவே இவர் அந்த சத்து வீணாக கூடாது என்ற காரணத்திற்காக அந்த வாழை மரத்திற்கு அருகிலேயே மற்றொரு வாழை மரத்தை வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

இவ்வாறு இவர் செய்யும் போது அந்த பெரிய வாழை மரத்தில் உள்ள சாறு, சத்து மற்றும் நீர் அனைத்தும் அந்த சிறிய வாழை மரத்திற்கு கிடைப்பதாக திரு திருமூர்த்தி அவர்கள் கூறுகிறார். இதனால் வாழை மரங்கள் ஆனது மிகவும் சிறப்பான முறையில் வளர்ந்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இந்த முறையை பின்பற்றுவதால் வாழை மரங்களுக்கு வாரத்திற்கு இரண்டு முறை நீரினை அளிக்கும் முறையை வாரத்திற்கு ஒரு முறை நீரினை அளிக்கும் முறையாக மாற்றிக் கொண்டதாக கூறுகிறார்.

மேலும் இந்தப் பெரிய வாழை மரங்களிலிருந்து சிறிய வாழை மரங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறுகிறார். ஏனெனில் ஒரு வாழை மரத்திலிருந்து வாழைத் தாரை வெட்டி எடுத்து விட்டாலே அது மனிதனின் தலையை வெட்டி எடுப்பதற்கு சமம் எனக் கூறுகிறார். இவ்வாறு தாரை வெட்டி எடுத்த மரமானது மண்ணில் இருந்து எந்த வகை சத்துக்களையும் எடுத்துக் கொள்ளாது எனவும் திரு திருமூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

இப்பொழுது வாழை தோப்பை வைத்து நடத்தி வரும் அனைவரும் வாழைதாரில் நான்கு அல்லது ஐந்து கணுக்கள் வந்துவிட்டால் அந்த வாழைத் தாரில் உள்ள வாழைபூவினை பறித்து எடுத்து விடுவார்கள் என கூறுகிறார். ஆனால் இவர் இவ்வாறு செய்வதில்லை என கூறுகிறார்.

இவர் இவ்வாறு செய்யாமல் இருப்பதற்கு காரணம் எவ்வாறு பெரிய வாழை மரத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் சிறிய வாழை மரத்திற்கு கிடைக்கிறது என்று கூறினாரோ, அதேபோல் இந்த வாழைத் தாரில் உள்ள வாழைபூவினை பறிக்காமல் அப்படியே வளர்த்தும் போது அந்தப் வாழைபூவில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வாழைப் பழங்களுக்கு கிடைப்பதாக கூறுகிறார்.

இதன் காரணமாகவே இவர் இந்த வாழைத் தாரில் உள்ள வாழைப்பூவை  பறிக்காமல் இருக்கிறார் என கூறுகிறார். மேலும் இதனால் வாழைப்பழங்கள் ஆனது மிகவும் சுவையாக இருக்கும் என கூறுகிறார். இவ்வாறு வாழைப்பழங்கள் சுவையாக இருப்பதற்கு இந்த வலைப்பூக்கள் காரணமாக இருப்பதால் அந்த வாழை பூக்களை பறிக்காமல் இருப்பதாக கூறுகிறார்.

மேலும் இவை அனைத்திலும் மிக முக்கியமான ஒரு முறையானது இவர் வாழைப்பூவினை வெட்டி எடுக்காமல் இருக்கும் போது அந்த வாழைப் பூவில் தேனீக்கள் ஆனது வந்து தேனை எடுக்கும்போது மகரந்தச் சேர்க்கை நடைபெறும் எனக் கூறுகிறார். ஆனால் வாழைப்பூவினை வெட்டி எடுத்து விட்டால் மகரந்தச் சேர்க்கை நடைபெறாது என கூறுகிறார்.

எனவே வாழைப் பூவினை வாழைப்பழங்கள் முழுமையாக வளரும் வரை வைத்திருந்தால் தேனீக்களின் மூலம் மகரந்தச் சேர்க்கை சுலபமாக நடைபெறும் எனக் கூறுகிறார். இதன் காரணமாகவே இவர் வாழைப்பூவினை பறிக்காமல் இருப்பதாக கூறுகிறார்.

செவ்வாழையின் சிறப்பு மற்றும் லாபம்

திரு திருமூர்த்தி அவர்கள் வாழைத்தோப்பு வைத்துள்ள இடங்களில் திடீர் திடீரென்று பலத்த காற்று வீசும் என கூறுகிறார். இவ்வாறு பலத்த காற்று வீசும்போது பூம்பழ வகை வாழை மரங்களும், நேந்திர பழ வகை வாழை மரங்களும் சுலபமாக சாய்ந்து விடுவதற்கு வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக கூறுகிறார்.

ஆனால் இந்த செவ்வாழை பழ வகைகள் ஆனது அவ்வாறு சாய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என கூறுகிறார். மேலும் இவர் இந்த செவ்வாழை மரங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் முறையையும் பின்பற்றுவதில்லை என கூறுகிறார். ஆனாலும் இது மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார்.

இந்த முறையே செவ்வாழை மரங்களுக்கு உள்ள சிறப்பு எனக் கூறுகிறார். இதன் காரணமாகவே இவரும் இந்த செவ்வாழை மரங்களை மட்டுமே வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மற்றும் இவரின் வாழைத்தோப்பில் உள்ள ஒரு வாழைத்தார் ஆனது சராசரியாக 10 கிலோ வரை வருவதாக கூறுகிறார். மற்றும் பொதுவாக வாழைத்தார்கள் ஆனது இவரிடம் ஆறிலிருந்து 15 கிலோ வரை வருவதாகக் கூறுகிறார்.மேலும் இவர் வாழைப் பழங்களை நேரடியாக விற்பனை செய்வதால் அதிக அளவு லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

வாழைப்பழங்களின் விற்பனை முறை

திரு திருமூர்த்தி அவர்களின் வாழைத் தோப்பில் உற்பத்தியாகும் வாழைப்பழங்கள் அனைத்தையும் தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.சென்னை, பெங்களூர் மற்றும் கர்நாடகா போன்ற இடங்களுக்கு வாழைப்பழங்கள் விற்பனையாகி வருவதாக கூறுகிறார்.

இதில் அதிகம் தூரமான இடமான பூனே வரை வாழைப் பழங்களை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.இந்த அனைத்து விற்பனை முறையையும் கொரியர் முறையிலேயே விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். மேலும் இவர் வாழைப்பழங்களை கொரியரில் அனுப்பும்போது அந்த வாழைப்பழங்கள் ஆனது அழுகிப் போகாமல் இருக்கும் அளவிற்கு உள்ள வாழைப்பழங்களையே அனுப்பி வைப்பதாக கூறுகிறார்.

மேலும் வாழைப்பழங்களை வெளியில் வைத்து விட்டாலே அது இயற்கையாகவே பழுத்து விடும் எனக் கூறுகிறார்.இதனை குளிர்சாதன பெட்டிகளில் வைக்கக் கூடாது எனவும் கூறுகிறார்.

இயற்கையான முறையில் உற்பத்தியாகும் வாழைப்பழங்கள்

திரு திருமூர்த்தி அவர்கள்  விளைவிக்கும் அனைத்து வாழைப் பழங்களையும் மிகவும் இயற்கையான முறையில் உற்பத்தி செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இவ்வாறு இயற்கையான முறையில் உற்பத்தி செய்தாலும் அந்த வாழைப்பழங்களை சந்தைக்கு அனுப்பும் போது அந்த வாழைப்பழங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அந்த பழங்களின் மீது ஒரு ரசாயனப் பொருளை கலந்து விடுவதாக கூறுகிறார். இதனால் பழங்களானது சீக்கிரமாக பழுத்து விடுவதாக கூறுகிறார்.

மேலும் இவர் வாழை மரங்களுக்கு எந்த வகை நச்சு கலந்த உரங்களையும் அளிப்பதில்லை என கூறுகிறார்.2010 லேயே இவர் இந்த நச்சு கலந்த உரங்களை இவரின் தோப்பிற்கு அளிப்பதை விட்டு விட்டதாக கூறுகிறார்.இப்பொழுது முழுவதும் இவருடைய மண்ணில் இயற்கையான முறையிலேயே பழங்களை உற்பத்தி செய்து வருவதாக கூறுகிறார்.

கெமிக்கல் மற்றும் ரசாயனம் கலந்த உரங்களை முற்றிலுமாக நிறுத்தி விட்டதாக கூறுகிறார்.பஞ்ச காவியத்தை மட்டுமே பயன்படுத்தி வருவதாக கூறுகிறார். இதைத் தவிர வேறு எந்த உரங்களையும் பயன்படுத்துவதில்லை எனவும் கூறுகிறார்.

மற்றும் இவர் பல தானிய வகைகளை வாழைப் பழ மரங்களுக்கு உரமாக அளித்து வருவதாக கூறுகிறார்.இந்த தானிய வகைகளிலிருந்தே மரங்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து விடுவதாகவும் கூறுகிறார். இவர் இவ்வாறு இயற்கை முறையில் வாழை பழங்களை உற்பத்தி செய்வதால் இவருக்கு சிறிது காலம் மட்டுமே அதிகமாக தேவைப்படுவதாக கூறுகிறார்.

ஆனால் வாழைப்பழங்களின் தரமானது மிகவும் இயற்கையான முறையில் எந்த நோயும் தாக்காது இருக்கும் என கூறுகிறார்.மேலும் இவர் இவ்வாறு வாழைப்பழங்களை இயற்கையான முறையில் உற்பத்தி செய்வதால் அதிக அளவு வாழைப் பழங்கள் விற்பனை ஆவதாக கூறுகிறார்.

மேலும் இவரிடம் வாழைப்பழம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் நேரடியாகவோ அல்லது கொரியர் முறையிலேயோ வாழைப்பழங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.திரு திரு மூர்த்தி அவர்கள் இந்த வாழைப்பழ உற்பத்தியை மிகவும் இயற்கையான முறையில் சிறப்பாக செய்து வருகிறார்.

மேலும் படிக்க:புறா பண்ணை வளர்ப்பு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply