புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி என்னும் ஊரில் திரு குமரேசன் அவர்கள் பாக்கு மட்டை தட்டு உற்பத்தியை செய்து அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், பாக்கு மட்டை தயாரிப்பு முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
Mr. Kumaresan their life
திரு குமரேசன் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி என்னும் ஊரில் வசித்து வருவதாகவும், இவர் இங்கு பாக்கு மட்டை தட்டு உற்பத்தியை செய்து அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் இந்த பாக்குமட்டை தட்டு உற்பத்தியை தொடங்கியதற்கு காரணம் இன்றுள்ள நிலையில் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்தி வருவதாகவும், இதனை முடிந்த அளவிற்கு இவரால் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்காகவும் தொடங்கியதாக கூறுகிறார்.
மேலும் இவர் MBA பட்டப் படிப்பினை படித்து முடித்துவிட்டு, இந்த பாக்குமட்டை தட்டு தயாரிப்பு தொடங்கியதாகவும், இந்த தயாரிப்பில் இவருக்கு நல்ல வருமானம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இந்த பாக்கு மட்டை தட்டு ஆனது 100% மக்க கூடிய பொருள் என்பதால், இதனை பயன்படுத்துவது நமக்கு மிகவும் நன்மை எனவும், இதன் மூலம் நமது சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனவும் திரு குமரேசன் அவர்கள் கூறுகிறார்.
பாக்குமட்டை தட்டு
திரு குமரேசன் அவர்கள் இந்த பாக்கு மட்டை உற்பத்தியை தொடங்குவதற்கு முன்பு இதனைப்பற்றி இணையதளத்தின் மூலம் நன்கு அறிந்த பிறகே தொடங்கியதாகவும், இவ்வாறு இதனை பற்றி தெரிந்த பிறகு தொடங்கியதனால் இவருக்கு மிகவும் நன்மை கிடைத்திருப்பதாகவும் கூறுகிறார்.
மேலும் இந்தப் பாக்குமட்டை தட்டானது 100% மக்கும் பொருளாக இருப்பதால் இதனை நாம் பயன்படுத்தும் போது நம்முடைய சுற்று சூழலும் நாமும் பாதுகாக்கப்படுவோம் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த பாக்கு மட்டை மூலம் தட்டினை தயாரிப்பது நமக்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம் எனவும், இந்த பாக்குமட்டை தயாரிப்பின் மூலம் அதிக அளவு லாபம் கிடைக்கவில்லை என்றாலும், நம்முடைய சுற்றுச்சூழல் இதனால் பாதுகாக்கப்படும் எனவும் திரு குமரேசன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த பாக்குமட்டை தட்டு உற்பத்தியில் குறைந்தது நமக்கு தேவையான அளவு லாபம் கிடைக்கும் எனவும், இதில் நாம் உணவினை உண்ணும் போது நமது உடலுக்கு மிகவும் நன்மை கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
Production method
திரு குமரேசன் அவர்கள் இந்த பாக்குமட்டை தட்டினை மிகவும் சிறப்பான முறையில் மற்றும் மிகவும் தரமான முறையில் உற்பத்தி செய்து அதனை மக்களுக்கு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் இந்த பாக்கு மட்டையை வெளியிலிருந்து வாங்கி அதனை தனித்தனியாக எடுத்து இயந்திரத்தில் வைத்து தட்டு போன்று உருவாக்குவதாகவும், இவ்வாறு இவர் பாக்கு மட்டை வாங்கும் போது ஒரு முறைக்கு ஆயிரம் பாக்கு மட்டைகளை வாங்குவதாக கூறுகிறார்.
மேலும் இந்த பாக்குமட்டை தட்டு உற்பத்தியை அதிக அளவு இடம் உள்ள நபர்களே செய்ய முடியும் எனவும், குறைந்த அளவு இடத்தை வைத்துக்கொண்டு இந்த பாக்கு மட்டை தட்டு உற்பத்தி செய்ய முடியாது எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த பாக்கு மட்டையில் இருந்து தட்டு செய்யாமல் வைத்திருக்கக்கூடிய பாக்கு மட்டையின் மீது ஒரு நாளைக்கு 3 இல் இருந்து நான்குமுறை நீரினை தெளிக்க வேண்டும் எனவும், மற்றும் தட்டினை உருவாக்கியது போக மீதமுள்ள வீணாகிய பாக்கு மட்டையை தீயில் வைத்து எறிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த பாக்கு மட்டை தட்டினை தயாரிக்கும் முறை மிகவும் சுலபமான முறை எனவும், ஒரு பாக்கு மட்டையிலிருந்து 3 தட்டுகளை தயாரிக்க முடியும் எனவும், இந்த மூன்று தட்டுக்களும் ஒவ்வொரு அளவுகளில் இருக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவர் அதிக அளவில் இணையதளங்களில் பாக்குமட்டை தட்டு தயாரிப்பினை பார்த்து கற்றுக் கொண்டும், அதிக நிறுவனங்களில் சென்று பார்த்து அறிந்து கொண்டும் இந்த பாக்கு மட்டை தட்டு உற்பத்தியை தொடங்கியதாக கூறுகிறார்.
பாக்குமட்டை உற்பத்தியில் செய்யக்கூடாத தவறுகள்
பாக்கு மட்டை உற்பத்தியில் லட்சங்களில் வருமானத்தை பெறலாம் என அதிக நபர்கள் கூறுவார்கள் எனவும், இவ்வாறு அவர்கள் கூறுவதை முதலில் யாரும் நம்ப கூடாது எனவும் கூறுகிறார்.
மற்றும் இந்த பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் இயந்திரத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அந்த இயந்திரத்தை திரும்ப மாற்றிக்கொள்ளலாம் என இயந்திரம் வைத்துள்ள நிறுவனம் கூறும் எனவும், அவ்வாறு அவர்கள் கூறுவதும் பொய்யாகவே இருக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த இயந்திரத்தை சிறிய இடத்தில் வைத்து பாக்குமட்டை தட்டு தயாரித்து அதன் மூலம் அதிக லாபத்தை பெறலாம் என கூறுவார்கள் எனவும், ஆனால் இந்த இயந்திரத்தை நாம் சிறிய இடத்தில் வைத்து தட்டினை உற்பத்தி செய்ய முடியாது எனவும், இந்த பாக்கு மட்டை தட்டு தயாரிப்பதற்கு அதிகளவில் இடம் தேவைப்படும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த பாக்குமட்டை தட்டு தயாரிப்பு பற்றி அறியாமல் இந்த தொழிலுக்கு வருபவர்களுக்கு அதிகளவில் நஷ்டங்களே ஏற்படும் எனவும், இவர் இந்த பாக்குமட்டை தட்டு தயாரிப்பு முறையை பற்றி அறிந்து வந்ததனால் மட்டுமே இவர் இதனை நல்ல முறையில் நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இந்த பாக்கு மட்டையை ஈரத்துடன் வைத்து விட்டால் அதில் முழுவதுமே பூஞ்சை தாக்கி விடும் எனவும், இவ்வாறு பூஞ்சை தாக்கிவிட்டால் அது பயன்படாது எனவும், எனவே இந்த பாக்கு மட்டையை மிக பாதுகாப்பான முறையில் வைத்துகொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார்.
Sales method and profit
பாக்கு மட்டை தட்டை விற்பனை செய்யும் போது ஒவ்வொரு தட்டினையும் பிளாஸ்டிக் கவர் போட்டு நன்றாக மூடி, மிகவும் பாதுகாப்பான முறையிலேயே வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும் எனவும், ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விட்டால் தட்டு விற்பனை ஆகாது எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த தட்டை விற்பனை செய்யும் போது தட்டுகள் எந்த நிலையிலிருந்தாலும் வாங்கிக் கொள்ளும் வாடிக்கையாளர்களை முதலில் பார்த்து நாம் அவர்களிடம் விற்பனையை வைத்துக் கொண்டால் நமக்கு நல்ல லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவர் இந்த பாக்குமட்டையில் இருந்து ஒரு நாளைக்கு 500 தட்டுகளை உற்பத்தி செய்து வருவதாகவும், இதனால் இவருக்கு ஒரு மாதத்திற்கு 15000 வரை லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.
மற்றும் பாக்கு மட்டையை வாங்கும் போது சரியான அளவுகளில் உள்ள பாக்கு மட்டையை மட்டுமே வாங்க வேண்டும் எனவும், இவ்வாறு வாங்கினால் மட்டுமே தட்டுக்களை சரியாக நாம் உற்பத்தி செய்ய முடியும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த பாக்குமட்டை தட்டை விற்பனை செய்யும் போது தட்டினை வாங்கும் வாடிக்கையாளர்கள் குறைந்த விலைக்கு தட்டிக் கேட்பார்கள் எனவும், இவ்வாறு அவர்கள் கேட்கும் போது இவர் இந்த தட்டினை பற்றி எடுத்து சொல்லி அதனை நல்ல விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
திரு குமரேசன் அவர்கள் இந்த பாக்கு மட்டை தட்டு உற்பத்தியை மிகவும் நல்ல எண்ணத்துடன் தரமான முறையில் உற்பத்தி செய்து மக்களுக்கு அளித்து வருகிறார்.
மேலும் படிக்க:சிறப்பான தாய்லாந்து ஆட்டுப்பண்ணை.