சுத்தமான நாட்டு சர்க்கரை தயாரிப்பு.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் சுத்தமான கலப்படம் இல்லாத தரமான நாட்டு சர்க்கரையை தயாரித்து வருகிறார். இவரையும், இவருடைய நாட்டு சர்க்கரை தயாரிப்பு முறையை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

Start of country sugar production

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் சுத்தமான கலப்படமில்லாத தரமான நாட்டு சர்க்கரையை தயாரித்து வருவதாக கூறுகிறார்.

இவர் இவருடைய தோட்டத்தில் கரும்பு விவசாயத்தை செய்து அந்த கரும்பிலிருந்து நாட்டு சர்க்கரையை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இவர் கரும்பு விவசாயத்தை செய்து வருவதால் கரும்பை மட்டும் இவர் ஆரம்பத்தில் விற்பனை செய்து வந்ததாகவும் அதன் பிறகு நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்து விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதற்காக இவர் நாட்டு சர்க்கரை தயாரிப்பை தொடங்கியதாக கூறுகிறார்.

இவர் தயாரிக்கும் நாட்டு சர்க்கரை மிக தரமானதாக இருக்கும் எனவும் எந்த வித இரசாயனப் பொருட்களையும் இந்த நாட்டு சர்க்கரை தயாரிப்பதற்கு பயன்படுத்துவதில்லை எனவும் கூறுகிறார்.

நாட்டுச் சர்க்கரையின் பயன்கள்

கரும்பு விவசாயத்தை இவர் சிறப்பான முறையில் செய்து அதிலிருந்து சர்க்கரையை தரமான முறையில் தயாரித்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

கரும்பில் இருந்து வெள்ளை சர்க்கரையை உற்பத்தி செய்ய முடியும் எனவும் ஆனால் இவர் வெள்ளை சர்க்கரையை உற்பத்தி செய்யாமல் நாட்டு சர்க்கரையை தயாரித்து வருகிறார்.

இவ்வாறு இவர் வெள்ளை சர்க்கரையை தயாரிக்காமல் நாட்டு சர்க்கரை தயாரித்து வருவதற்கு காரணம் வெள்ளை சர்க்கரையை விட நாட்டு சர்க்கரை உடலுக்கு அதிக அளவு நன்மை அளிக்கும் என்பதால் என கூறுகிறார்.

வெள்ளை சர்க்கரையை நாம் எடுத்துக் கொள்ளும் போது சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக அளவு சர்க்கரை நோய் ஏற்பட்டு விடும் எனவும் ஆனால் நாட்டு சர்க்கரையை எடுத்துக் கொள்ளும் போது அவ்வாறு எந்தவித பாதிப்பும் இருக்காது எனவும் கூறுகிறார்.

இதன் காரணமாகவே வெள்ளை சர்க்கரையை யாரும் அதிகளவில் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக இவர் நாட்டு சர்க்கரை தயாரிப்பை செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

Type and harvest of sugarcane

கரும்பு வகைகளில் பல வகைகள் இருப்பதாகவும் அதில் இவர் 356 என்ற கரும்பு வகையை வளர்த்து வருவதாகவும், இந்த கரும்பு வகை தரமானதாகவும் மற்றும் அதிக அளவு விளைச்சலை அளிக்கும் எனவும் கூறுகிறார்.

இதுவரை இவருடைய தோட்டத்தில் இருந்து 25 லிருந்து 30 டன் அளவு கரும்பினை அறுவடை செய்து அதனை நாட்டு சர்க்கரையாக தயாரித்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

ஒரு டன் அளவு கரும்பிலிருந்து 500 இலிருந்து 600 லிட்டர் அளவு கரும்பு சாறு கிடைக்கும் எனவும், இந்த முறையில் இவர் கரும்பிலிருந்து சாறினை எடுத்து நாட்டு சர்க்கரையை தயாரித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் நாட்டு சர்க்கரையை மட்டும் தயாரித்து விற்பனை செய்யாமல் கரும்பிலிருந்து கரும்புச் சாறு எடுத்து அதனையும் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

நாட்டு சர்க்கரை தயாரிக்கும் முறை

நாட்டு சர்க்கரையை தயாரிப்பதற்கு இவர் கரும்பினை அறுவடை செய்து வந்து நாட்டு சர்க்கரை தயாரிப்பதற்கு வைத்துக் கொள்வதாக கூறுகிறார்.

இவ்வாறு நாட்டு சர்க்கரை தயாரிக்க தோட்டத்தில் இருந்து வெட்டி எடுத்து வரும் கரும்பினை டிராக்டரின் மூலம் எடுத்து வருவதாக கூறுகிறார்.

இவ்வாறு தோட்டத்தில் இருந்து அறுவடை செய்து வந்த கரும்பினை, கரும்பு பாலினை எடுக்கும் இயந்திரத்தில போட்டு கரும்பு பாலினை தனியாக எடுத்து விடுவதாக கூறுகிறார்.

இவ்வாறு கரும்பிலிருந்து எடுத்த பாலினை நாட்டு சர்க்கரை தயாரிக்கும் கொப்பரையின் அருகில் உள்ள ஒரு பாத்திரத்தில் குழாயின் மூலம் ஊற்றி வைத்துக் கொள்வதாக கூறுகிறார்.

இவ்வாறு அந்த பாத்திரத்தில் உள்ள கரும்பு பாலினை எடுத்து கொப்பரையில் ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும் எனவும், இவ்வாறு ஒரு மணி நேரம் காய்ச்சியதற்குப் பிறகு அந்தக் கரும்பு பாலில் இருந்து மட்டி தனியாக வரும் எனவும் கூறுகிறார்.

இவ்வாறு மட்டி தனியாக கரும்பு பாலில் இருந்து வருவதற்கு அதில் சிறிதளவு சுண்ணாம்பைச் சேர்க்க வேண்டும் எனவும் இவ்வாறு சேர்த்து ஒரு மணி நேரம் காய்ச்சிய பிறகு மட்டி தனியாக வந்து விடும் எனவும் கூறுகிறார்.

இவ்வாறு கரும்பு பாலில் இருந்து வரும் மட்டியை தனியாக எடுத்து அப்புறப்படுத்தி வைத்துக் கொண்டு அதன் பிறகு கரும்பு சாறினை காய்ச்சிக் கொண்டே இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

இவ்வாறு காய்ச்சிக் கொண்டே இருக்கும் போது கரும்புச்சாறு பாவு போன்ற நிலையில் மாறும் எனவும் இவ்வாறு அதுபோன்ற நிலையில் மாறும் போது அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

இவ்வாறு பாவு நிலையில் மாறும் போது அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி அதனை எடுத்து மற்றொரு கொப்பரையில் ஊற்ற வேண்டும் எனக் கூறுகிறார்.

மேலும் பாவு போன்ற நிலையில் மாறும் போது அதன் பதம் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும்,பதம் சரியாக இருக்கும் போதுதான் மற்றொரு கொப்பரையில் எடுத்து ஊற்ற வேண்டும் என கூறுகிறார்.

இவ்வாறு மற்றொரு கொப்பரையில் எடுத்து ஊற்றிய பிறகு அதனை நன்றாக தேய்க்க வேண்டும் எனவும் இவ்வாறு தேய்த்து கொண்டு இருக்கும் போது நாட்டு சர்க்கரை தயாராகி விடும் எனவும் கூறுகிறார்.

இவ்வாறு தயாரான நாட்டு சர்க்கரையை எடுத்து இவர் பேக்கிங் செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் தயாரிக்கும் நாட்டுச் சர்க்கரையில் எந்த வித ரசாயன பொருட்களையும் சேர்ப்பது இல்லை எனவும்,சுண்ணாம்பு மட்டுமே சேர்ப்பதாகவும் சுண்ணாம்பில் கால்சியம் இருப்பதால் அதனை நாட்டு சர்க்கரையில் இவர் சேர்ப்பதாக கூறுகிறார்.

வேறு எந்த ரசாயன பொருட்களையும் இவர் இந்த நாட்டு சர்க்கரை தயாரிப்பில் சேர்ப்பது இல்லை எனவும், இவருடைய நாட்டு சர்க்கரை சுத்தமான தரமான நாட்டு சர்க்கரை எனவும் கூறுகிறார்.

Sales method and profit

நாட்டு சர்க்கரையை மிக தரமானதாக உற்பத்தி செய்து அதனை இவர் விற்பனை செய்து வருவதாகவும், வெளியில் இவர் அதிக அளவில் விற்பனை செய்து வருவதாகவும், இவரிடம் நாட்டுசர்க்கரை கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கும் இவர்  நாட்டு சர்க்கரையை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் வெள்ளை சர்க்கரையை விற்பனை செய்து கிடைக்கும் லாபத்தை விட நாட்டு சர்க்கரையை விற்பனை செய்து கிடைக்கும் லாபம் அதிகமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

ஒரு கிலோ நாட்டு சர்க்கரையை இவர் 70 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும், கரும்பு குறைந்த அளவில் விளைச்சல் ஆனால் விலையை சற்று அதிகப் படுத்துவதாகவும் கூறுகிறார்.

இதுவே கரும்பு அதிகளவில் விளைச்சல் ஆனால் இவர் குறைந்த விலையிலேயே நாட்டு சர்க்கரையை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இவ்வாறு இவர் நாட்டு சர்க்கரையை  எந்த கலப்படமும் இல்லாமல் மிகத் தரமான முறையில் உற்பத்தி செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:சிறப்பான ஸ்ட்ராபெரி சாகுபடி.

Leave a Reply