தரமான ஆட்டோமேட்டிக் இன்குபேட்டர் தயாரிப்பு.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் அமைந்துள்ள தனியார் ஆட்டோமேட்டிக் இன்குபேட்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை வைத்து ஒரு இளைஞர் மிகச் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய ஆட்டோமேட்டிக் இன்குபேட்டர் தயாரிக்கும் நிறுவனத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

நிறுவனத்தின் தொடக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் தனியார் ஆட்டோமேட்டிக் இன்குபேட்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.

இவர் இந்த இன்குபேட்டர் தயாரிக்கும் நிறுவனத்தை கடந்த 9 வருடங்களாக நடத்தி வருவதாகவும், இவர் கோழிப்பண்ணை வைத்திருப்பதால் முட்டைகள் பொரிப்பதற்கு இன்குபேட்டர் தேவைப்பட்டதாக கூறுகிறார்.

இவ்வாறு இன்குபேட்டர் தேவைப்பட்ட நிலையில் ஒரு நிறுவனத்தை தொடங்கலாம் என்ற எண்ணம் இவருக்கு தோன்றியதாகவும், அதன்படி ஒரு இன்குபேட்டர் தயாரிக்கும் நிறுவனத்தை முதலில் சிறிய அளவில் தொடங்கியதாக கூறுகிறார்.

இவ்வாறு சிறிய அளவில் இன்குபேட்டர் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி இப்பொழுது இவர் பெரிய அளவில் இந்த இன்குபேடடர் தயாரிக்கும் நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் வாடிக்கையாளர்கள் முட்டைகளை கொடுத்து பொரிக்க வைத்து தருமாறு கேட்டால் அந்த முறையிலும் செய்து கொடுப்பதாகவும் மற்றும் வாடிக்கையாளர் கேட்கும் அளவில் இயந்திரங்களை உருவாக்கி தருவதாகவும் கூறுகிறார்.

Importance of Incubator in poultry farm

கோழி பண்ணை வைத்து ஒரு பண்ணையாளர் நடத்துகிறார் என்றால் அவருக்கு முக்கியமாக இன்குபேட்டர் தேவைப்படும் எனவும், இன்குபேட்டர் இல்லாமல் பண்ணையை அவரால் சிறப்பாக நடத்த முடியாது எனவும் கூறுகிறார்.

கோழி பண்ணையில் இன்குபேட்டர் இல்லாமல் பண்ணையை நடத்தும் போது குறைந்த அளவே வருமானம் கிடைக்கும் எனவும், ஏனெனில் இன்குபேட்டர் இல்லையெனில் குறைந்த அளவுகளிலேயே குஞ்சுகள் இருக்குமெனவும் இதுவே இன்குபேட்டர் இருந்தால் அதிக அளவில் குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம் எனவும் கூறுகிறார்.

குறைந்த அளவில் தாய்க் கோழிகளை வைத்துக் கொண்டு அதிக அளவில் முட்டைகளை நாம் உற்பத்தி செய்ய முடியும் எனவும், இவ்வாறு குறைந்த அளவில் தாய் கோழிகளை வைத்து அதிக அளவில் முட்டைகளை தயாரிக்கும் போது நமக்கு அதிக அளவில் லாபம் கிடைக்கும் என கூறுகிறார்.

மேலும் இதுவே இங்குபேட்டர் பண்ணையிலிருந்தும் அந்த இன்குபேட்டர் தரமான இன்குபேட்டர் ஆக இல்லாமல் இருந்தால் ஒரு வருடத்தில் பண்ணையில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார்.

இங்குபேட்டரின் வகைகள் மற்றும் செயல்படும் முறை

இவருடைய நிறுவனத்தில் மொத்தமாக மூன்று வகை இன்குபேட்டரை இவர் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாகவும், அதில் கையேடு முறை இன்குபேட்டர் மற்றும் பாதி அளவு தானே இயங்கும் இன்குபேட்டர் மற்றும் முழுவதுமே தானே இயங்கும் இன்குபேட்டர் என மூன்று வகை இன்குபேட்டரை இவர் உற்பத்தி செய்து வருவதாக கூறுகிறார்.

கையேடு முறை இன்குபேட்டரில் 100 லிருந்து 150 முட்டைகளை வைக்கும் அளவிற்கு தயாரிப்பு உள்ளதாகவும், பாதியளவு தானே இயங்கும் இன்குபேட்டரில் ஐம்பதிலிருந்து 5000 முட்டைகள் வைக்கும் அளவிற்கு தயாரித்து உள்ளதாகவும் மற்றும் முழுவதுமே தானே இயங்கும் இன்குபேட்டரிலும் ஐம்பதிலிருந்து 5000 முட்டைகள் வைக்கும் அளவிற்கு தயாரித்து உள்ளதாக கூறுகிறார்.

கையேடு முறை இன்குபேட்டர் என்பது முழுவதுமே சீன பொருட்களை வைத்து தயாரிப்பதாகவும், இதில் பெட்டியை சுற்றிலும் தெர்மாகோலை பயன்படுத்தி இருப்பதாகவும், இந்த வகை இன்குபேட்டரில் நாமே முட்டைகளை கைகளால் மாற்றி வைக்கும் முறை இருக்குமெனவும், வெப்பநிலை முட்டைகளுக்கு சரியாக கிடைக்கிறதா என்பதை நாம் அடிக்கடி பரிசோதித்துக் கொண்டு இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் பெட்டியில் ஈரப்பதம் சரியாக இருக்கிறதா என்பதையும் அடிக்கடி கவனித்துக் கொண்டே இருக்க வேண்டுமெனவும், இந்த கையேடு முறை இங்குபேட்டர் சிறிய அளவில் பண்ணை வைத்துள்ளவர்களுக்கு தகுந்ததாக இருக்கும் எனக் கூறுகிறார்.

மற்றும் பாதி அளவு மட்டும் தானே இயங்கும் இன்குபேட்டரில் தண்ணீரை மட்டும் நாம் இயந்திரத்தின் உள்ளே வைக்க வேண்டிய முறை இருக்கும் எனவும், மற்ற அனைத்து செயல்களையும் அந்த இயந்திரம் தானே செய்து கொள்ளும் எனவும் கூறுகிறார்.

மேலும் முழுவதுமே தானே இயங்கும் இன்குபேட்டர் அனைத்து செயல்களையும் தானே செய்து கொள்ளும் எனவும், இயந்திரத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அலாரம் அடிக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இன்குபேட்டரில் ஏதாவது தேவைகள் வேண்டுமென்றாலும் இயந்திரம் அலாரம் அடித்து அதனை நமக்கு தெரியப்படுத்தும் எனவும் இது இந்த முழுவதுமே தானே இயங்கும் இன்குபேட்டரின் சிறப்பு எனக் கூறுகிறார்.

Standard incubator production method

இன்குபேட்டரை இவர் மிகவும் தரமான முறையில் தயாரித்து வருவதாகவும் ஏனெனில் மக்களுக்கு அளிக்கும் இன்குபேட்டர் தரமானதாக இருந்தால் தான் அவர்கள் அதிக நாட்களுக்கு அதனை பயன்படுத்த முடியும் என கூறுகிறார்.

இன்குபேட்டர் தயாரிப்பதற்கு அனைத்து பாகங்களையும் ஒரே இடத்தில் இருந்து வாங்க முடியாது எனவும், ஒவ்வொரு பாகங்களையும் தனித்தனியாக வெவ்வேறு இடத்தில் இருந்துதான் பெற முடியும் எனவும் கூறுகிறார்.

இன்குபேட்டரில் பயன்படுத்தப்படும் மோட்டார் வகைகளை குஜராத்தில் இருந்து வாங்கி வருவதாகவும் மற்றும் இன்குபேட்டரில் பயன்படுத்தப்படும் கட்டுப்படுத்திகள் அனைத்தையும் உத்திர பிரதேசத்தில் இருந்து வாங்கி வருவதாகவும் கூறுகிறார்.

மற்றும் இன்குபேட்டரில் ஒட்டும் பலகை மற்றும் பெயிண்ட் ஆகியவைகளை இவருடைய ஊரிலிருந்து வாங்குவதாகவும்,மேலும் மைக்கா முதலியவற்றை சேலத்திலிருந்து வாங்கி வருவதாகவும் கூறுகிறார்.

இன்குபேட்டரில் பயன்படுத்தப்படும் திருகுகளை சென்னையிலிருந்து வாங்குவதாகவும், அலுமினியத்தை சேலத்திலிருந்து வாங்குவதாகவும் இதுபோன்று இங்குபெட்டர் தயாரிப்பதற்கு தேவைப்படும் அனைத்து பொருட்களையும் ஒவ்வொரு இடத்தில் இருந்து தனித்தனியாக வாங்கி வந்து தயாரிப்பதாக கூறுகிறார்.

மேலும் இவர் ஒவ்வொரு பாகங்களையும் தயாரிக்கும் இடத்திற்கே சென்று வாங்கி வந்து இன்குபேட்டரை தயாரித்து வருவதாகவும்,ஏனெனில் இந்த முறையில் தரமான பொருட்களை வாங்கி வந்து தயாரித்தால் தான் இன்குபேட்டரும் தரமானதாக இருக்கும் என கூறுகிறார்.

மேலும் இன்குபேட்டரை வாங்கி செல்லும் வாடிக்கையாளர்களின் இன்குபேட்டரில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை இவரே நேரடியாக சென்று சரி செய்து கொடுத்து வருவதாக கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

இன்குபேட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இவர் இன்குபேட்டரை மிக விரைவில் வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று அளித்து வருவதாகவும்,தொலைவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கொரியர் மூலம் இன்குபேட்டரை அனுப்புவதாகவும் கூறுகிறார்.

மேலும் இன்க்பேட்டருக்கு ஒரு வருடம் உத்தரவாதத்தை இவர் அளித்து வருவதாகவும், வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப இங்குபேட்டரை இவர் தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

கையேடு முறை இன்குபேட்டரை 2,300 லிருந்து 2500 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும்,மற்றும் பாதி அளவு தானே இயங்கும் இன்குபேட்டரின் விலையும், முழுவதுமே தானே இயங்கும் இன்குபேட்டரின் விலையும் ஒவ்வொரு முறையும் மாறிக்கொண்டே இருக்கும் என கூறுகிறார்.

ஏனெனில் இயந்திரத்தின் விலைகள் அதிகரிக்கும் போது இன்குபேட்டரின் விலையும் அதிகரித்து கொண்டு இருக்கும் எனவும், இவர் மிக தரமான முறையில் இன்குபேட்டரை தயாரிப்பதால் அதிகளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து இயந்திரத்தை வாங்கி செல்வதாகவும் இதனால் இவர் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் இந்த ஆட்டோமேட்டிக் இயந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தை மிகச்சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் படிக்க:சிறப்பான முருங்கை இலை சாகுபடி.

 

Leave a Reply