தரமான கருப்பு கவுனி நெல் விவசாயம்.

ஈரோடு மாவட்டம், கோபி வட்டத்தில் உள்ள பச்சமலை கோயில் அருகில் நித்தியானந்தன் அவர்கள் மிகவும் சத்து நிறைந்த கருப்பு கவுனி நெல் விவசாயத்தை செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய கருப்பு கவுனி விவசாய முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

கருப்பு கவுனி நெல் விவசாயத்தின் தொடக்கம்

திரு நித்தியானந்தன் அவர்கள் ஈரோடு மாவட்டம், கோபி வட்டத்தில் உள்ள பச்சமலை கோயில் அருகில் மிகவும் சத்து நிறைந்த கருப்பு கவுனி நெல் விவசாயத்தை செய்து வருவதாகவும், இவருடைய சொந்த ஊர் இதுவே ஆகும் எனவும் கூறுகிறார்.

இவர் இவரது பட்டப் படிப்பினை முடித்து விட்டு இந்த கருப்புகவுனி நெல் விவசாயத்தை தொடங்கியதாகவும், இவர் இன்ஜினியரிங் பயின்று உள்ளதாகவும் கூறுகிறார்.

பொதுவாக நோய்கள் நமக்கு வரும் பொழுது அதனை சரி செய்து கொள்வதற்கு மருந்துகளை மட்டுமே நாம் தேடுகிறோம் எனவும், ஆனால் அந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்பதை நாம் தேடுவது இல்லை எனவும் கூறுகிறார்.

எனவே இவர் நாம் உண்ணும் உணவானது தரமானதாக இருந்தால் நமக்கு எந்த வகையிலும் நோய்கள் ஏற்படாது என்பதை இவர் அறிந்து கொண்டு, கருப்பு கவுனி நெல் விவசாயத்தை தொடங்கியதாகவும் இதனை மிகவும் தரமான முறையில் விளைச்சல் செய்து வருவதாகவும் கூறுகிறார்.

Agriculture methods

திரு நித்தியானந்தன் அவர்கள் இவருடைய கருப்பு கவுனி நெல் விவசாயத்தை ஒன்பதரை ஏக்கர் நிலத்தில் செய்து வருவதாகவும், இதனை முழுவதுமே இயற்கை முறையில் உற்பத்தி செய்து வருவதாகவும் கூறுகிறார்.

விதை நெல்லை வாங்கி விதைத்து வளர்ந்த நாற்றுகளை பிடிங்கி இவரே நாற்று நட்டு வளர்த்ததாகவும், ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை நெல் தேவைப்படும் எனவும் திரு நித்தியானந்தன் அவர்கள் கூறுகிறார்.

விதை நெல்லை நிலத்தில் விதைப்பதற்கு முன்பு நல்ல தரமான முறையில் இருக்கின்ற விதை நெல்லை கண்டறிந்து அந்த விதை நெல்லை மட்டுமே விதைக்க வேண்டும் எனவும், தரம் குறைவாக இருக்கும் விதைகளை விதைத்தால் செடிகள் நல்ல முறையில் வளராது எனவும் கூறுகிறார்.

இவ்வாறு தரமான விதை நெல்களை தேர்ந்தெடுத்ததற்கு பிறகு 5 சென்ட் அளவு உள்ள நிலத்தில்  5 கிலோ விதை நெல்லை விதைக்க வேண்டும் எனவும், இவ்வாறு விதைத்த விதை நெல் நன்றாக நாற்றுகளாக வளர்ந்த பிறகு அவற்றை எடுத்து நாற்று நட வேண்டும் எனவும் கூறுகிறார்.

நெல் பயிர்களுக்கு அளிக்கும் உரங்கள்

திரு நித்தியானந்தன் அவர்கள் இவருடைய கருப்பு கவுனி நெல் பயிர்களுக்கு முற்றிலுமாக இயற்கை உரங்களையே அளித்து வருவதாகவும், இயற்கை உரங்களை அளிக்கும் போது நெல்கள் மிகவும் தரமானதாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

கருப்பு கவுனி நெல் விவசாயத்தை செய்ய பயன்படுத்திய நிலத்தை இவர் எந்த செயற்கை மருந்தை கொண்டும் உழுகவில்லை எனவும், நிலத்தை உழுவதற்கு முன்பு நிலத்தில் கொழிஞ்சி செடிகள் இருந்ததாகவும் அந்த செடிகள் மக்கிய பிறகு நிலத்தினை உழுது விவசாயத்தை தொடங்கியதாகவும் கூறுகிறார்.

விதை நெல்லை விதைத்து நாற்று வளர்ந்த நாற்பத்தி ஐந்தாவது நாளில் நாற்றுகளுக்கு தேங்காய் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, புங்கம் புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு மற்றும் எள்ளு புண்ணாக்கு ஆகிய ஐந்தையும் ஒன்றாக சம அளவில் கலந்து செடிகளுக்கு அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த ஐந்து வகை உரங்களையும் நாற்றுக்களை நிலத்தில் நட்ட பிறகு பயன்படுத்த வேண்டும் எனவும், வளர்ச்சி குறைவாக உள்ள இடங்களில் இந்த உரங்களை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் இரண்டு முறை நெல் பயிர்களுக்கு பஞ்சகாவியா மற்றும் தேமோர் கரைசலை அடித்து உள்ளதாகவும் மற்றும் ஒரு முறை இஞ்சி பூண்டு கரைசலை நெல் பயிர்களுக்கு அடித்து உள்ளதாகவும் கூறுகிறார்.

Specialization in natural agriculture

இயற்கை முறையில் விவசாயம் செய்த உணவினை நாம் உண்ணும் போது நமக்கு அதன் மூலம் அதிக அளவு சத்துக்கள் கிடைக்கும் எனவும் ஆனால் செயற்கை முறையில் விவசாயம் செய்தால் அதிலிருந்து நமக்கு எந்த வித சத்துக்களும் கிடைக்காது எனவும் கூறுகிறார்.

செயற்கை முறையில் நெல் பயிர்களை விவசாயம் செய்யும்போது அதற்கு பச்சை குருணை என்ற ஒரு மருந்தை பயன்படுத்துவார்கள் எனவும் இதனை பயன்படுத்தி நெல் பயிரை உற்பத்தி செய்து அதனை நாம் உண்ணும் போது நமக்கு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார்.

எனவே அதிக அளவில் யாரும் செயற்கை முறையில் விவசாயம் செய்யாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்து மக்களுக்கு நெல் பயிர்களை அளிக்கலாம் எனவும் திரு நித்தியானந்தன் அவர்கள் கூறுகிறார்.

நீர்ப்பாசன முறைகள்

நெல் விவசாயத்தை முழுவதுமாக செய்து முடிப்பதற்கு 25 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் எனவும், ஆனால் இந்த கருப்பு கவுனி நெல் நமக்கு மிகவும் நன்மையை அளிக்கும் எனவும் கூறுகிறார்.

நெல் பயிர்களை பொருத்தவரையில் அவைகளுக்கு அதிக அளவு தண்ணீர் தேவை இருக்கும் என்பதை நாமே புரிந்து கொண்டு கூறுகிறோம் எனவும், ஆனால் நெல் பயிர்களுக்கு அதிக அளவில் நீர் தேவையில்லை எனவும் கூறுகிறார்.

நெற்பயிர்கள் வளர்ந்து நிழல் வந்து விட்டால் அவைகளுக்கு ஏழு நாட்களுக்குப் பிறகு தண்ணீர் அளித்தால் மட்டும் போதுமானது எனவும், இதற்கு என்று அதிக அளவு நீரை இந்த நெற்பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் கூறுகிறார்.

மேலும் இவருடைய நெல் பயிர்களுக்கு இதுவரை எந்த வித நோய்களும் தாக்கியது இல்லை எனவும், ஒருமுறை மட்டுமே பச்சைப் புழு தாக்கியதாகவும் அதற்கும் இயற்கை மருந்து அடித்து இவர் சரி செய்து கொண்டதாகவும் கூறுகிறார்.

Harvest and profit

திரு நித்தியானந்தன் அவர்களுடைய கருப்பு கவுனி விவசாயத்தில் இவர் ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து இரண்டிலிருந்து இரண்டரை டன் அளவு நெற்பயிரை அறுவடை செய்து வருவதாகவும், நல்ல முறையில் விளைச்சல் ஆனால் மூன்று டன் வரை நெல் பயிரை அறுவடை செய்ய முடியும் எனவும் கூறுகிறார்.

இவ்வாறு விளைந்த நெற்கதிர்களை வரிசைகளாக மாற்றும் போது 60லிருந்து 65% வரை நல்ல அரிசி கிடைக்கும் எனவும், இது உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியது எனவும் கூறுகிறார்.

கருப்பு கவுனி அரிசியை ஒரு கிலோ 200 லிருந்து 220 ரூபாய் வரை விற்பனை செய்து வருவதாகவும், இது உடலுக்கு மிகவும் நன்மை அளித்து வருவதால் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் இந்த அரிசியை வாங்குகிறார்கள் எனவும் கூறுகிறார்.

இதில் 25 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் எனவும்,மற்ற சாதாரண அரிசிகள் எல்லாம் ஒரு கிலோ 35 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வருவதாகவும்,ஆனால் இதனுடைய விலை மட்டும் அதிகமாக விற்பனையாகும் எனவும் கூறுகிறார்.

ஏனெனில் இது இயற்கையான முறையில் விளைந்து உள்ளதாலும் மற்ற அரிசிகளை விட இந்த கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவு சத்துக்கள் இருப்பதாலும் இது அதிக விலைக்கு விற்பனையாகி வருவதாக கூறுகிறார்.

திரு நித்தியானந்தன் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இவருடைய கருப்பு கவுனி நெல் விவசாயத்தை செய்து வருகிறார்.

மேலும் படிக்க:சிறப்பான திராட்சை சாகுபடி.

2 comments

Leave a Reply