ஈரோடு மாவட்டம் பவானியில் திரு சௌந்தர்ராஜ் என்பவர் ஒரு நாட்டு சர்க்கரை ஆலையை வைத்து நாட்டு சர்க்கரையை மிகவும் தரமான முறையில் தயாரித்து வருகிறார். அவரைப் பற்றியும், அவரின் நாட்டு சர்க்கரை ஆலையையும், அவற்றின் தயாரிப்பு முறைகளையும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
- திரு சௌந்தர்ராஜ் அவர்களின் வாழ்க்கை
- நாட்டு சர்க்கரையின் தயாரிப்பு முறை
- விற்பனைக்கு பயன்படுத்தும் சரியான நிலையிலுள்ள சர்க்கரைகளை பிரித்து எடுக்கும் முறை
- திரு சௌந்தர்ராஜ் அவர்களின் செலவே இல்லாத எரிபொருள் சிக்கனம்
- சர்க்கரைகளை பாக்கெட் செய்யும் முறை
- நாட்டு சர்க்கரையின் விற்பனை முறை
- நாட்டு சர்க்கரைகளின் வகைகள் மற்றும் விலைகள்
திரு சௌந்தர்ராஜ் அவர்களின் வாழ்க்கை
திரு சௌந்தர்ராஜ் அவர்கள் நாட்டு சர்க்கரை தயாரிப்பை மிகவும் சிறப்பான மற்றும் தரமான முறையில் செய்து வருகிறார்.
இவருடைய நாட்டு சர்க்கரை ஆலையானது ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள கூலிக்காரன்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ளதாக கூறுகிறார். திரு சௌந்தர்ராஜ் அவர்களின் சொந்த ஊரும் இதுவே ஆகும் எனவும் கூறுகிறார்.
திரு சௌந்தர்ராஜ் அவர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயின்று உள்ளதாக கூறுகிறார். இவர் இவ்வாறு பட்டப்படிப்பை முடித்து விட்டு இந்த நாட்டு சர்க்கரை தயாரிப்பை செய்து வருவதற்கு காரணம் இவருடைய தந்தை மற்றும் தாய் இந்த நாட்டு சர்க்கரை தொழிலையே இவரின் சிறுவயதில் இருந்து செய்து வந்தது காரணம் எனவும் கூறுகிறார்.
சிறுவயதில் இருந்தே இவர் இந்த நாட்டு சர்க்கரை தயாரிப்பு பார்த்து வளர்ந்ததால் இவருக்கும் இந்த நாட்டு சர்க்கரை தொழிலை செய்யலாம் என்ற எண்ணம் வந்ததாகம் கூறுகிறார். மேலும் இவர் படித்த வேலைக்கு செல்வதற்கு விருப்பமில்லை எனவும் இந்த நாட்டு சர்க்கரை தொழிலே இவருக்கு மிகவும் பிடித்து உள்ளதாகவும் கூறுகிறார்.
இதனால் இவர் இந்த நாட்டு சர்க்கரை தயாரிப்பை மிகவும் சிறப்பாகவும் மற்றும் தரமாகவும் தயாரித்து வருவதாக கூறுகிறார்.
நாட்டு சர்க்கரையின் தயாரிப்பு முறை
திரு சௌந்தர்ராஜ் அவர்கள் இந்த நாட்டு சர்க்கரை தயாரிப்பை மிகவும் சிறப்பாக செய்து வருகிறார். இந்த நாட்டு சர்க்கரையின் தயாரிப்பு முறையானது, முதலில் கரும்பிலிருந்து சாறு எடுக்கும் இயந்திரத்தின் மூலம் கரும்புச்சாறுகளை ஒரு டன் உள்ள ஒரு இரும்பு பெட்டியில் நிரப்பி விடுவதாக கூறுகிறார்.
மேலும் இந்த கரும்புச்சாறுகள் ஆனது கரும்புச்சாறு கடைகளில் வெள்ளை நிறங்களில் இருக்கும் எனவும் கூறுகிறார். ஆனால் இந்த கரும்புச் சாற்றின் உண்மையான நிறம் கருமை நிறமாகும் எனவும் கூறுகிறார்.
மேலும் கரும்புச் சாறுகளை சரியான அளவுகளில் வைத்திருந்தால் தான் சர்க்கரையானது சரியான பதத்தில் இருக்கும் எனவும் கூறுகிறார். மற்றும் இந்த கரும்பு சாறினை இரும்பு பெட்டியில் தொடர்ந்து 2 மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு கரும்பு சாறினை கொதிக்க வைக்கும் போது நீராவி வரும் எனவும், இதை வைத்து சர்க்கரை ஆனது தயாராகும் நிலையை அடைந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளலாம் எனவும் திரு சௌந்தர்ராஜ் அவர்கள் கூறுகிறார்.
மேலும் சர்க்கரையானது சரியான பதத்திற்கு வருவதற்கு எண்ணெய் ஊற்றுவதாக கூறுகிறார்.இந்த கரும்பு சாறானது சரியான அளவு பதத்தை பெற்று விட்டால் அதனை இறக்கி வைத்து விடுவதாக கூறுகிறார்.
மேலும் இந்த கரும்பு சாறு கொதிக்கும் போது அதனுள் சுண்ணாம்பை போட வேண்டும் எனவும் கூறுகிறார். இந்த சுண்ணாம்பு போடுவதற்கு காரணம் சர்க்கரையானது உதிரி உதிரியாக வருவதற்கு எனவும் கூறுகிறார். இந்த சுண்ணாம்பை கரும்பு பாவில் போடவில்லை எனில் அது கூல் போல் மாறிவிடும் எனவும் கூறுகிறார்.
சில இடங்களில் நாட்டுச் சர்க்கரையில் எதுவும் சேர்த்துவது இல்லை என கூறுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறுவது முற்றிலும் பொய்யாக மட்டுமே இருக்கும் என திரு சௌந்தர்ராஜ் அவர்கள் கூறுகிறார். ஆனால் நாட்டுச் சர்க்கரையில் சுண்ணாம்பு முக்கியமாக சேர்த்து இருப்பார்கள் எனக் கூறுகிறார். இவ்வாறு எதுவும் சேர்க்காமல் சர்க்கரையை தயாரித்தால் அது கூல் போல் ஆகிவிடும் என கூறுகிறார்.
மேலும் சர்க்கரையானது சரியான அமைப்பில் இருக்காது எனவும் கூறுகிறார். எனவே இதில் சுண்ணாம்பு சேர்க்க வேண்டும் எனவும் திரு சௌந்தர்ராஜ் அவர்கள் கூறுகிறார்.
மேலும் கரும்புச்சாறு ஆனது கொதிக்கும்போது வரும் நீராவி வெளியில் வந்தால்தான் சர்க்கரை சத்து சரியான அளவில் கிடைக்கும் எனவும் கூறுகிறார். இந்த சர்க்கரையானது தயாராவதற்கு இரண்டு மணி நேரம் தேவைப்படுவதாக கூறுகிறார். இவ்வாறு நீராவி வந்த பிறகு அதில் எண்ணெய் ஊற்றி அந்த நீராவியை குறைத்து சர்க்கரையை தயாரித்துக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.
இந்த தேங்காய் எண்ணெய் ஊற்றும் போது பாவானது தீயாமல் இருக்கும் எனவும் கூறுகிறார். மேலும் இவரின் வேலையாள் ஒருவர் இந்த பதத்தை சரியான அளவில் பார்த்து சர்க்கரையை தயாரித்து வருவதாக கூறுகிறார். இதில் மூன்று பத முறைகள் உள்ளன எனவும் கூறுகிறார்.
அதில் ஒன்று வெள்ளைப் பதம், மற்றொன்று சர்க்கரை பதம், மேலும் அச்சு பதம் ஆகிய மூன்று பத முறைகள் ஆகும். இந்த கரும்பு பாவில் கடலெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றலாம் எனவும் கூறுகிறார். ஆனால் கடலை எண்ணெய் ஊற்றினால் நல்லமணமாக இருக்கும் எனவும் திரு சௌந்தர்ராஜ் அவர்கள் கூறுகிறார்.
விற்பனைக்கு பயன்படுத்தும் சரியான நிலையிலுள்ள சர்க்கரைகளை பிரித்து எடுக்கும் முறை
திரு சௌந்தர்ராஜ் அவர்கள் சர்க்கரை பாவில் சரியான பதம் வந்தவுடன் அதனை ஒரு பெட்டியில் ஊற்ற வேண்டும் எனவும் கூறுகிறார். அவ்வாறு ஊற்றிய பிறகு சிறிது நேரம் அதனை ஆற வைத்து அதனை ஒரு முக்கால் மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு அவைகள் ஆறியவுடன் அந்த சர்க்கரையில் உள்ள கட்டிகளை உடைப்பதற்கு ஒரு இயந்திரத்தை பயன்படுத்துவதாகவும் கூறுகிறார். மேலும் சர்க்கரைகளை மெலிதாக அரைப்பதற்கு ஒரு இயந்திரத்தை பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் சர்க்கரையில் உள்ள பெரிய கட்டிகளை அகற்றுவதற்கு சர்க்கரைகளை சலிப்பதாகவும் கூறுகிறார். இவ்வாறு சலித்ததில் இருந்து கிடைக்கும் பெரிய சர்க்கரை கட்டிகளை மீண்டும் மெலிதாக அரைத்து விடுவதாக கூறுகிறார்.
ஒரு டன் கரும்பு சாறிலிருந்து 100 கிலோ சர்க்கரை மட்டுமே கிடைக்கும் எனவும் கூறுகிறார். மற்றவைகள் அனைத்தும் ஆவியாகிவிடும் என திரு சௌந்தர்ராஜ் அவர்கள் கூறுகிறார்.
திரு சௌந்தர்ராஜ் அவர்களின் செலவே இல்லாத எரிபொருள் சிக்கனம்
திரு சௌந்தர்ராஜ் அவர்கள் இந்த நாட்டு சர்க்கரையை தயாரிப்பதற்கு எரிபொருள் செலவே இல்லாத ஒரு சிறப்பான முறையை பின்பற்றி வருகிறார்.
திரு சௌந்தர்ராஜ் அவர்கள் நாட்டு சர்க்கரையை தயாரிப்பதற்கு கரும்பு சக்கைகளை வெயிலில் காய வைத்து அது நன்றாக காய்ந்த பிறகு அடுப்பு எரிப்பதற்காக பயன்படுத்தி வருவதாக கூறுகிறார். இந்த முறையில் இவர் எரிபொருள் சிக்கனத்தை மிகவும் சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.
அடுப்பு எரிப்பதற்காக மற்ற மரக்கட்டைகள் மற்றும் வேறு சில எரிபொருட்களை பயன்படுத்தினால் நிச்சயமாக செலவுகள் அதிக அளவில் ஏற்படும் எனவும், இதன் காரணமாகவே திரு சௌந்தர்ராஜ் அவர்கள் இந்த சுலபமான எரிபொருள் முறையினை பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.
இந்த முறையினால் திரு சௌந்தரராஜ் அவர்களுக்கு லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
சர்க்கரைகளை பாக்கெட் செய்யும் முறை
திரு சௌந்தர்ராஜ் அவர்கள் இன்று தயாரித்த சர்க்கரைகளை இன்றே பாக்கெட் செய்யக்கூடாது என கூறுகிறார். ஏனெனில் சர்க்கரையில் சூடு அதிகமாக இருக்கும் எனவும், அவ்வாறு சூடாகவே பாக்கெட் செய்தால் சர்க்கரையானது கூல் போல் ஆகிவிடும் எனவும் கூறுகிறார்.
எனவே சர்க்கரையை ஒரு நாளுக்கு நன்றாக காயவைத்து அதன்பின் பாக்கெட் செய்தால் சிறப்பாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
திரு சௌந்தர்ராஜ் அவர்கள் இந்த நாட்டு சர்க்கரைகளை அரை கிலோ, ஒரு கிலோ, 5 கிலோ, 10 கிலோ மற்றும் 30 கிலோ அளவுகளில் பாக்கெட் செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த நாட்டு சர்க்கரைகளை பாக்கெட் செய்வதற்கு ஒரு சிறப்பான பாக்கெட் செய்யும் இயந்திரத்தையும் பயன்படுத்தி வருகிறார். இந்த இயந்திரத்தில் அனைத்து கிலோக்களில் உள்ள சர்க்கரை பாக்கெட்களை பாக்கெட் செய்து வருவதாக திரு சௌந்தரராஜ் அவர்கள் கூறுகிறார்.
நாட்டு சர்க்கரையின் விற்பனை முறை
திரு சௌந்தர்ராஜ் அவர்கள் இந்த நாட்டு சர்க்கரை விற்பனையை பார்சல் முறையில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். இதனை இந்தியா முழுவதும் பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.
வாடிக்கையாளர்கள் கேட்கும் இடங்களுக்கு இவர் நாட்டுச் சர்க்கரைகளை பார்சல் முறையில் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார். அனைத்து இடங்களுக்கும் இவர் சுலபமான போக்குவரத்து முறையில் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
திரு சௌந்தர்ராஜ் அவர்கள் இந்த பார்சல் முறையினை பயன்படுத்துவதற்கு காரணம் இதன் மூலம் குறைந்த அளவில் செலவாகும் எனவும், அதிக அளவில் வருமானம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
ஆனால் இந்த நாட்டு சர்க்கரை விற்பனையை கொரியர் முறையில் விற்பனை செய்து வந்தால் அதிக அளவு பணம் செலவாகும் எனவும் கூறுகிறார். மேலும் இவர் கொரியர் முறையில் விற்பனை செய்வதற்கு முயற்சி செய்து கொண்டு வருவதாகவும்கூறுகிறார்.சரியான செலவில் கொரியர் முறை அமைந்துவிட்டால் இந்த முறையிலேயே சர்க்கரையை விற்பனை செய்யும் எண்ணம் உள்ளதாகவும் கூறுகிறார்.
நாட்டு சர்க்கரைகளின் வகைகள் மற்றும் விலைகள்
திரு சௌந்தர்ராஜ் அவர்கள் நாட்டுச் சர்க்கரை போன்று மூலிகை நாட்டுச் சர்க்கரையும் தயாரித்து வருகிறார்.
இந்த மூலிகை நாட்டு சர்க்கரையில் மொத்தமாக ஒன்பது பொருட்கள் கலந்து உள்ளதாக கூறுகிறார். அவைகள் நாட்டு சர்க்கரை, அதிமதுரம், திருநீற்றுப்பச்சை, சுக்கு, ஏலக்காய், துளசி, வால் மிளகு, கடுக்காய், வெற்றிலை போன்றவைகளை இதில் பயன்படுத்தி உள்ளதாகவும் திரு சௌந்தர்ராஜ் அவர்கள் கூறுகிறார்.
இந்த அனைத்தையும் இவர்கள் கைகளாலே தயாரித்து அவற்றை சர்க்கரையில் பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார். மேலும் இவரிடம் சுக்கு, மிளகு மட்டும் சேர்த்த நாட்டு சர்க்கரை உள்ளதாகவும் கூறுகிறார்.
இவ்வாறாக இவர் மூன்று சர்க்கரை வகைகளை தயாரித்து வருவதாகவும் கூறுகிறார். இந்த மூன்று வகை நாட்டு சர்க்கரைகளுக்கும் அரை கிலோவிலிருந்து 30 கிலோ வரை பாக்கெட் செய்து விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
திரு சௌந்தர்ராஜ் அவர்கள் சுக்கு மற்றும் மிளகு சேர்த்த நாட்டு சர்க்கரை ஒரு கிலோவை 60 ரூபாய்க்கும், மூலிகை நாட்டு சர்க்கரை ஒரு கிலோவை நூறு ரூபாய்க்கும், மற்றும் சாதாரண நாட்டுச் சர்க்கரையை 55 ரூபாய்க்கும் அளித்து வருவதாக கூறுகிறார். மேலும் மக்கள் அனைவரும் நாட்டு சர்க்கரையையே அதிகமாக வாங்குவதாகவும் கூறுகிறார்.
திரு சௌந்தர்ராஜ் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த நாட்டு சர்க்கரை தயாரிப்பை இவ்வாறு சிறப்பான முறையில் கொண்டு வந்துள்ளதாகவும் கூறுகிறார்.
மேலும் படிக்க:குதிரை பண்ணையில் சிறந்த லாபம்.