குறைந்த விலையில் தரமான மாட்டுத்தீவனம்.

திரு அநூப் அவர்களும், திரு சைஜு அவர்களும் ஒன்றாக இணைந்து கோயமுத்தூரில் ஒரு மாட்டுத்தீவன ஆலையை வைத்து சிறப்பான முறையில் நடத்தி வருகின்றனர். இவர்களைப் பற்றியும், இவர்களுடைய மாட்டுத்தீவன ஆலையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

Start of Cattle feed plant

கோயம்புத்தூரில் திரு அநூப் அவர்களும், திரு சைஜு அவர்களும் ஒன்றாக இணைந்து ஒரு மாட்டுத்தீவன ஆலையை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகின்றனர்.

இவர்களிடம் உள்ள தீவனங்கள் அனைத்தும் மிகத் தரமான முறையில் தயார் செய்யப்பட்டதாக கூறுகிறார். மேலும் இந்த தீவனங்களின் விலை மிகவும் குறைவு எனவும் கூறுகின்றனர்.

திரு அநூப் அவர்கள் BCA பட்டப்படிப்பினை பயனுள்ளதாக கூறுகிறார். மற்றும் திரு சைஜு அவர்கள் B.com பட்ட படிப்பினை பயின்று உள்ளதாக கூறுகிறார். திரு அநூப் அவர்களும், திரு சைஜு அவர்களும் ஒரு மாட்டுப் பண்ணையை நடத்தி வந்ததாக கூறுகிறனர்.

இவர்கள் இவ்வாறு மாட்டுப் பண்ணை நடத்திக்கொண்டிருக்கும் போது இவர்களுக்கு தீவனத்தின் செலவு அதிக அளவில் இருந்ததாக கூறுகிறார். இதனால் தீவனத்தின் செலவை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவர்கள் இந்த மாட்டுத்தீவன ஆலையை தொடங்கியதாக கூறுகின்றனர்.

திரு அநூப் இந்த தீவனத்தை முதலில் இவர்கள் இவரின் பண்ணையில் உள்ள மாடுகளுக்கு அளித்ததாக கூறுகிறார். இந்த தீவனத்தை மாடுகளுக்கு அளித்த பிறகு அதிக அளவு பால் கிடைத்ததாக கூறுகிறார். மற்றும் தீவனத்தின் செலவு குறைந்ததாகவும் திரு அநூப் அவர்கள் கூறுகிறார்.

மற்றும் இந்த தீவனத்தை அருகிலுள்ள பண்ணையாளர்களுக்கு அளித்ததாகவும், அந்த பண்ணையாளர்கள் தீவனத்தை பற்றி நல்ல முறையில் கூறியதாகவும் கூறுகிறார். இதனால் இவர் இந்த தீவனத்தை அனைத்து இடங்களிலும் விற்பனை செய்து வந்ததாக கூறுகிறார்.

தீவனங்களை வாங்கி செல்லும் வாடிக்கையாளர்கள் மற்றவர்களிடம் கூறி அவர்களும் இவர்களிடமே வந்து வாங்கி செல்வதாக கூறுகிறார். மற்றும் இவர்களுடைய தீவனங்கள் அனைத்தும் மிகத் தரமாக உள்ளதால் அதிக அளவில் விற்பனையாவதாகவும் திரு அநூப் அவர்கள் கூறுகிறார்.

மாட்டுத்தீவனத்தில் உள்ள பொருட்கள்

திரு அநூப் அவர்களும், திரு சைஜு அவர்களும் இந்த மாட்டு தீவனத்தை மிகவும் தரமான முறையில் உற்பத்தி செய்து வருகின்றனர்.

இந்த மாட்டு தீவனத்தில் மரவள்ளி மாவு, பீர் மால்ட், மக்காச்சோளம் மற்றும் மக்காச்சோளத்தில் இருந்து வரும் தேவையற்ற சக்கைகள் மற்றும் தவிடு, உப்பு, மஞ்சத்தூள் போன்றவற்றை ஒன்றாக கலந்து இந்த தீவனத்தை தயார் செய்வதாக திரு சைஜு அவர்கள் கூறுகிறார்.

இவர்கள் இந்தத் தீவனத்தில் உப்பு மற்றும் மஞ்சள் தூளை கலக்குவதற்கு காரணம் தீவனத்தின் சுவை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மாடுகளின் வயிற்றிலுள்ள புழுக்களை நீக்க பயன்படுவதாகவும் திரு சைஜு அவர்கள் கூறுகிறார்.

இப்பொழுது அதிக அளவில் இந்த பீர் மால்டை கெமிக்கல் என மக்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த பீர் மால்ட் ஆனது அவ்வாறு கெமிக்கல் வகை இல்லை என கூறுகிறார். இது கோதுமையில் இருந்து கிடைக்கும் தேவையற்ற சக்கை மட்டுமே என திரு சைஜு அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர்கள் அளிக்கும் தீவனங்கள் மிகத் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.ஆகையால்தான் தீவனங்களை மிகவும் தரமான முறையில் தயார் செய்து வருவதாக கூறுகின்றனர்.

Fodder preparation Method and packing method

திரு அநூப் அவர்களும், திரு சைஜு அவர்களும் இந்த மாட்டுத்தீவனம் தயாரிக்கும் முறையை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர்.

இந்த மாட்டு தீவனத்தைத் தயார் செய்வதற்கு முதலில் கோதுமை தவிடை ஒரு அடுக்கு போட்டுக்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார். அதற்கு அடியில் வெள்ளை மரவள்ளி கிழங்கு மாவினை ஒரு அடுக்கும், அதன் அடியில் மக்காச்சோள சக்கையை ஒரு அடுக்கும், அதற்கு அடியில் காப்பி நிற மரவள்ளிக் கிழங்கு மாவினை ஒரு அடுக்கும் ஒன்றாக போட்டு வைத்துக் கொள்வதாக கூறுகிறார்.

மற்றும் இதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூளை கலந்து விடுவதாக திரு அநூப் அவர்கள் கூறுகிறார். இவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து தீவனமாக தயார் செய்து வருவதாக கூறுகின்றனர்.

மேலும் இவர்கள் தீவனத்தை பேக்கிங் செய்யும் முறையை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர். தீவனத்தை பேக்கிங் செய்யும் மூட்டையின் உள் ஒரு பாலிதீன் கவரை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.இவ்வாறு பாலிதீன் கவரை பயன்படுத்துவது மிக முக்கியமான ஒன்று எனவும் கூறுகிறார்.

ஏனெனில் இந்த தீவனத்தின் உள் காற்று நுழைந்து விட்டால் நிச்சயமாக பூஞ்சை தாக்கிவிடும் என திரு அநூப் அவர்கள் கூறுகிறார். எனவே இந்த தீவனத்தை காற்று நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறுகிறார். இந்த பாலிதீன் கவரை பயன்படுத்துவதால் காற்றானது தீவனத்தில் செல்லாது என கூறுகிறார்.

இவர்கள் 45 கிலோ மாட்டு தீவனத்தை பேக்கிங் செய்து மிகவும் பாதுகாப்பான முறையில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மாட்டு தீவனத்தின் சிறப்பு மற்றும் விலை

திரு அநூப் மற்றும் திரு சைஜு அவர்களின் தீவனத்தை மாடுகள் உண்பதால் பால் அதிகரிக்கும் எனவும் கூறுகின்றனர். மற்ற தீவனங்களை விட இவர்களுடைய தீவனங்களை மாடுகள் உண்பதால் 25 சதவீதம் அளவு பால் அதிகரிப்பதாக திரு சைஜு அவர்கள் கூறுகிறார்.

மற்றும் இவர்களுடைய தீவனங்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வருவதாக கூறுகிறார். இதற்கு காரணம் இவர்களுடைய தீவனத்தை மாடுகள் உண்பதால் அதிக அளவு பால் வருவதே காரணம் என திரு சைஜு அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர்களுடைய தீவனத்தின் விலையானது மிகவும் குறைந்த விலையிலேயே இருக்கும் என கூறுகின்றனர். மற்ற நிறுவனங்களின் மாட்டுத்தீவனம் ஒரு மூட்டை 1500 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்து வருவதாக கூறுகின்றனர்.

ஆனால் இவர்களுடைய நிறுவனத்தில் இந்த ஆயிரத்து 500 ரூபாயில் 5 மாட்டு தீவன மூட்டைகளை எடுத்துவிடலாம் என திரு சைஜூ அவர்கள் கூறுகிறார்.இவர்களின் மாட்டுத்தீவன ஆலையின் சிறப்பே இவர்களுடைய தீவனத்தின் தரம் என கூறுகின்றனர்.

மேலும் வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுகளில் தீவனத்தின் அளவை போட்டு தீவனத்தைத் தயார் செய்து தருவதாக கூறுகின்றனர். மற்றும் வாடிக்கையாளர்களே எந்தெந்த தீவனங்கள் வேண்டுமோ அதை கலந்து எடுத்துக்கொள்ளலாம் என கூறுகின்றனர்.

ஆனால் மற்ற நிறுவனங்களில் இவ்வாறு அனுமதிப்பதில்லை என கூறுகின்றன. இதுவும் இவர்களிடம் உள்ள ஒரு தனி சிறப்பு என கூறுகின்றனர்.

Fodder use method and sales method

இந்த மாட்டு தீவனத்தை இருபதில் இருந்து 25 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகின்றார். 25 நாட்களுக்கு மேல் இந்த தீவனத்தை பயன்படுத்தக்கூடாது என கூறுகின்றனர்.

மற்றும் இந்த தீவனத்தின் மூட்டையை நேராக நிறுத்தி வைக்க வேண்டும் என கூறுகின்றனர்.மற்றும் ஒரு தீவன முட்டையின் மேல் மற்றொரு தீவனத்தின் மூட்டையை வைக்கக் கூடாது எனவும் கூறுகின்றனர்.

மேலும் இப்பொழுது வாடிக்கையாளர்கள் தீவனத்தை கலந்து வேண்டாம் தனியாக வேண்டும் என்று கூறினால் அவ்வாறும் வருவதாக திரு சைஜு அவர்கள் கூறுகிறார்.மற்றும் அவர்களுடைய தீவனங்கள் அனைத்தும் உலர்ந்த தன்மையுடனேயே இருக்குமென கூறுகின்றனர்.

மேலும் பீர் மால்ட் 8 மற்றும் 9 ரூபாய் என்றும், மக்காச்சோளம் 11 மற்றும் 12 ரூபாய் வரை வரும் என கூறுகின்றனர்.மேலும் இவர்கள் தீவனம் தயார் செய்யப்படும் பொருட்களை கோவா மற்றும் பெங்களூர் பகுதிகளில் இருந்து பெறுவதாக கூறுகின்றனர்.

அங்கிருந்து வரும் போது தீவனம் ஆனது ஈரமாகவே வரும் எனக் கூறுகின்றனர்.இவர்கள் முடிந்தவரை இவற்றை உலர்த்துவதாக கூறுகின்றனர்.மேலும் இந்தத் தீவனத்தில் ஒரு 10% மட்டுமே ஈரம் இருக்கும் என திரு சைஜு அவர்கள் கூறுகிறார்.

மற்றும் வெயில் காலங்களில் மட்டும் தீவனத்தின் விலை சற்று அதிகமாகும் என கூறுகின்றார்.மேலும் எவ்வளவு விலை ஏறுகிறதோ அதைவிட விலை சீக்கிரம் குறைந்துவிடும் என கூறுகின்றார்.மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற அளவுகளில் தீவனத்தை எடுத்துக் கொள்ளலாம் என கூறுகின்றார்.

மற்றும் பண்ணை வைத்துள்ளவர்கள் ஒன்றாக இணைந்து இந்த தீவனத்தை எடுத்துக் கொள்ளலாம் என கூறுகின்றனர்.திரு அநூப் அவர்களும்,திரு சைஜு அவர்களும் மிக சிறப்பான முறையில் இந்த மாட்டுத்தீவனத்தை குறைந்த விலையில் தரமாக உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க:அசில் முட்டைக்கோழி பண்ணை.

Leave a Reply