ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் தரமான பனங்கருப்பட்டி தயாரிப்பை செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய பனங்கருப்பட்டி தயாரிப்பு முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
பனங்கருப்பட்டி தயாரிப்பின் தொடக்கம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பனங்கருப்பட்டி தயாரித்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவருடைய குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் எனவும் காலம் காலமாக இவருடைய குடும்பம் விவசாயத்தை செய்து வந்ததாக கூறுகிறார்.
இதன் காரணமாக இவரும் விவசாயத்தை செய்ய தொடங்கியதாகவும் மற்றும் சிறு வயதிலிருந்தே விவசாயத்தினை பார்த்து வளர்ந்ததால் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு அதிகமாக இருந்து வந்ததாக கூறுகிறார்.
இவ்வாறு இவர் விவசாயத்தை செய்து வந்து கொண்டிருந்த போது பனங்கருப்பட்டி தயாரிப்பின் மீது இவருக்கு ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக இவர் பனங்கருப்பட்டி தயாரிப்பை தொடங்கி இப்பொழுது மிக சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் இந்த பனங்கருப்பட்டி தயாரிப்பை மிகவும் தரமான முறையில் தயாரித்து வருவதாகவும் இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறினார்.
Method of making palm jaggery
பனங்கருப்பட்டி தயாரிப்பினை இவர் மிகவும் சிறப்பான முறையில் தயாரித்து வருவதாகவும், இந்த பனங்கருப்பட்டி தயாரிப்பை இவர் மிகவும் தூய்மையான முறையில் தயாரித்து வருவதாக கூறுகிறார்.
எந்த கலப்படமும் இன்றி மிகவும் சிறப்பான முறையில் பனங்கருப்பட்டி தயாரித்து வருவதாகவும், இவருடைய பனங்கருப்பட்டியில் பல வித சத்துக்கள் நிறைந்து இருப்பதாகவும் கூறுகிறார்.
இன்றைய காலகட்டத்தில் பனங் கருப்பட்டி மற்றும் பனை வெல்லம் போன்றவற்றில் கலப்படம் அதிகமாக இருப்பதாகவும் ஆனால் அவ்வாறு எந்தவித கலப்படமும் இன்றி இயற்கை முறையில் மட்டுமே இவர் பனங்கருப்பட்டி தயாரித்து வருவதாக கூறுகிறார்.
இவருடைய தோட்டத்தில் மொத்தமாக 40 லிருந்து 50 பனைமரங்கள் இருப்பதாகவும் இந்த 50 மரங்களிலிருந்து இவர் சர்க்கரை தெழுவினை எடுத்து அதிலிருந்து பனங்கருப்பட்டி தயாரிப்பதாக கூறுகிறார்.
இன்றுள்ள காலத்தில் பனை மரங்கள் அதிகமாக அழிந்து வரும் நிலையில் இருப்பதாகவும் அதனை காப்பாற்றுவதற்காகவும், காலம் காலமாக செய்து வந்த இந்த பனங்கருப்பட்டி தொழில் கைவிடப்பட கூடாது என்பதற்காக பனங்கருப்பட்டி தயாரிப்பை செய்து வருவதாக கூறுகிறார்.
பனை மரத்தில் ஏறி அதில் இருக்கும் குருத்தினை வெட்டி அதில் பானைகளை கட்டி விட வேண்டும் எனவும், இவ்வாறு பானைகளை கட்டி விட்டால் அதில் தெழுவு நிரம்பி விடும் எனக் கூறுகிறார்.
இவ்வாறு தெழுவு கிடைத்த உடன் அதனை நன்றாக ஒரு பாத்திரத்தில் காய்ச்சி, அதனை பனங்கருப்பட்டி அச்சினில் ஊற்றி பனங்கருப்பட்டி தயாரித்து வருவதாக கூறுகிறார்.
பனங்கருப்பட்டி தயாரிப்பதற்குப் பயன்படும் அச்சினை இவர் நிலத்திலேயே தயாரித்து இருப்பதாகவும், இவ்வாறு நிலத்திலேயே அச்சுக்களை தயாரித்து மிகவும் சிறப்பான முறையில் இவர் பனங்கருப்பட்டி தயாரித்து வருவதாக கூறுகிறார்.
பனை மரத்தின் நன்மை மற்றும் பயன்கள்
பனைமரத்தில் பலவித நன்மைகள் நமக்கு இருப்பதாகவும் அதில் இருந்து பல வித பயன்கள் நமக்கு கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.
இந்த பனை மரத்தில் இருந்து நமக்கு பலவித உணவுப் வகைகள் கிடைத்து வருவதாகவும், பனை மரத்திலிருந்து நுங்கு, பதநீர் மற்றும் பதநீரில் இருந்து பனங்கருப்பட்டி ஆகிய உணவு வகைகள் கிடைப்பதாகவும், இந்த அனைத்து உணவு வகைகளும் நமது உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கும் எனவும் கூறுகிறார்.
பனை மரத்தை பொறுத்த வரையில் பனை மரத்தின் அடியில் இருந்து நுனி வரை அனைத்தும் நமக்கு பயன்படும் வகையிலேயே இருக்கும் எனவும், பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை ஓலை வீடுகளுக்கு கூரையாக பயன்படும் எனவும் மற்றும் பனை ஓலையை வைத்து பலவித கைவினைப் பொருட்கள் தயாரிக்க முடியும் எனவும் கூறுகிறார்.
பனை ஓலையில் கூடை மற்றும் விசிறி ஆகிய கைவினைப் பொருட்கள் தயாரிக்க முடியும் எனவும் ஆனால் இன்றுள்ள நிலையில் யாரும் அதிகமாக இந்த கைவினைப் பொருட்களை பயன்படுத்துவது இல்லை எனவும் கூறுகிறார்.
மேலும் பனை ஓலையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள வீட்டில் நாம் உறங்கும் போது நமக்கு மிகவும் குளிர்ச்சியை தரும் எனவும்,எவ்வளவு பெரிய மாடி வீட்டில் நாம் இருந்தாலும் இந்த குடிசை வீட்டில் இருக்கும் போது வரும் இயற்கையான சூழ்நிலை மாடி வீட்டில் இருக்காது என கூறுகிறார்.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு வகைகள் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு எனவும், இதில் பல சத்துக்கள் இருப்பதாக கூறுகிறார்.
மேலும் முகத்தில் வரும் வியர்க்குரு போன்றவற்றிற்கு இந்த நுங்கு தண்ணீரை தடவி வந்தால் வியர்க்குரு சரியாகி விடும் என கூறுகிறார்.
நுங்கு சரியான நிலையில் வெட்டாமல் விட்டால் அது மரத்திலேயே பழுத்து கீழே விழும் எனவும் இவ்வாறு கீழே விழுந்த பழத்தினை நாம் தீயினில் சுட்டு அதனை உண்ணலாம் எனக் கூறுகிறார்.
இவர் தீயில் சுட்ட பனங்பழத்தினை நாம் உண்ணும் போது அது நமக்கு ஜீரண சக்தியை அளிப்பதாகவும் மற்றும் அதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதாகவும் கூறுகிறார்.
மேலும் பனங்கொட்டைகளை நிலத்தில் விதைத்தால் அதிலிருந்து பனங்கிழங்கு நமக்கு கிடைக்கும் எனவும் இந்த பனங்கிழங்கில் சத்துக்கள் அதிகமாக இருப்பதாக கூறுகிறார்.
மேலும் பனங்கிழங்கினை அறுவடை செய்த பிறகு கிடைக்கும் பணம் கொட்டையின் உள்ளே மாவு போன்ற ஒன்று இருக்கும் எனவும் அதனையும் நாம் உணவாக எடுத்துக் கொள்ளலாம் என கூறுகிறார்.
மேலும் பனங்கொட்டைகளை மீண்டும் நிலத்தில் விதைத்தால் 15 வருடத்தில் பனை மரம் நன்றாக வளர்ந்து நமக்கு இதே போல் பலவித பயன்களை தரும் என கூறுகிறார்.
மேலும் பனைமரமும் வீடு கட்டுவதற்கு மற்றும் பலவித பயன்களுக்கும் அதிகமாக பயன்பட்டு வருவதாகவும் இது போல் பல வித பயன்கள் இந்த பனை மரத்தில் இருப்பதாக கூறுகிறார்.
எனவே பனைமரம் அழியாமல் அதனை காப்பாற்ற வேண்டியது நமது கடமை எனவும் ஏனெனில் இந்த பனை மரத்தில் பலவித நன்மைகள் நமக்குக் கிடைத்து வருவதாக கூறுகிறார்.
Sales method and profit
பனங்கருப்பட்டியை இவர் மிகவும் சிறப்பான முறையில் தயாரித்து அதில் எந்தவித செயற்கை உணவு வகைகளையும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
இவருடைய வீட்டிற்கே வந்து வாடிக்கையாளர்கள் இவருடைய பனங்கருப்பட்டியை வாங்கி செல்வதாகவும்,ஏனெனில் இவருடைய பனங்கருப்பட்டி மிகவும் சுவையாக இருக்கும் என்பதாலும் இவர் எந்த கலப்படம் இன்றி தூய்மையான முறையில் பனங்கருப்பட்டி தயாரித்து வருவதால் என கூறுகிறார்.
இதன் காரணமாக இவருடைய பனங்கருப்பட்டி அதிகமாக விற்பனையாகும் எனவும், இவருடைய ஊரில் உள்ள மக்களும் இவரிடம் வந்து பனங்கருப்பட்டி வாங்கி செல்வதாக கூறுகிறார்.
இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும் மற்றும் இவர் இவருடைய பனங்கருப்பட்டி தயாரிப்பை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் படிக்க:சிறப்பான எள் சாகுபடி.