மிக எளிதான பராமரிப்பில் முயல் பண்ணை.

திரு இளங்கோ என்பவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுக்கா வன்னிப்பேறு கிராமத்தில் மிக எளிதான முறையில் முயல் பண்ணை ஒன்றை சிறப்பாக நடத்திவருகிறார். அவரையும், அவர் முயல் பண்ணை பற்றியும் பின்வருமாறு ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

திரு இளங்கோ அவர்களின் வாழ்க்கை

திரு இளங்கோ அவர்கள் பிறந்து வளர்ந்தது அனைத்தும் சென்னையிலேயே, திரு இளங்கோ அவர்களின் தந்தை மற்றும் தாய் இவரின் சிறுவயதிலேயே இறந்துவிட்டதாகவும், அவரின் பாட்டியே திரு இளங்கோ அவர்களை சிறுவயதிலிருந்து வளர்த்து வந்ததாகவும், பாட்டி விவசாயம் பார்த்து இவர்களை வளர்ந்ததாகவும்,அதன்பின் திரு இளங்கோ அவர்களின் பாட்டி வேலை பார்க்க முடியாத காரணத்தால், திரு இளங்கோ அவர்கள் விவசாயம் செய்ய சென்னையிலிருந்து அவரின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுக்கா வன்னிப்பேறு கிராமத்திற்கு வந்ததாகவும், இங்கு வந்து விவசாயம் செய்ததாகவும், விவசாயம் மட்டும் செய்யவேண்டாம் என்ற எண்ணம் கொண்டு அதன்பிறகு முயல் பண்ணை ஒன்றை உருவாகியுள்ளதாகவும் திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார்.

முயல் பண்ணை

திரு இளங்கோ அவர்களிடம் மூன்றரை ஏக்கர் நிலம் உள்ளதாகவும் கூறுகிறார். ஆரம்பத்தில் அவரின் ஆசைக்காக மட்டுமே முயல்களை வளர்த்து வந்ததாகவும் அதன்பின் பெரிய அளவில் ஒரு முயல் பண்ணையை உருவாக்கியதாகவும் திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார்.

பொதுவாக கோழி, ஆடு, மீன் போன்ற பண்ணை வளர்ப்புகளைவிட முயல் வளர்ப்பு திரு இளங்கோ அவர்களுக்கு மனநிறைவும், அதிக வருமானமும் தருவதாக கூறுகிறார். முயல்கள் என்றாலே மிகுந்த சுறுசுறுப்புடன் துள்ளித் திரியும் குணமுடையது. அதனைப் பார்த்து தாமும் சுறுசுறுப்பாக இருக்கும் எண்ணம் தோன்றும் என திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார்.

இதன் காரணமாகவே முயல் பண்ணை அமைத்ததாகவும், ஆரம்ப காலத்தில் பத்து பதினைந்து முயல்களை வளரும்போதே விற்பனைக்கும், இறைச்சிக்கும் அதிக மக்கள் கேட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஒரு பண்ணையை வைத்தால் நல்ல வருமானம் வரும் என்ற எண்ணத்துடன் இந்த முயல் பண்ணையை வைத்ததாகவும் திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார்.

முயல்களின் வகைகள்

திரு இளங்கோ அவர்கள் மூன்று வகையான முயல் வகைகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு முயல் வகையான சின்சிலாவும், மற்றொரு வகையான நியூசிலாந்து ஒயிட் வகையையும், மேலும் நம் நாட்டு முயல்களின் வகைகளையும் திரு இளங்கோ அவர்கள் வளர்த்து வருகிறார். திரு இளங்கோ அவர்கள் முதன்முதலாக சென்னையில் உள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் கே வி கே என்ற பெரிய பண்ணை உள்ளது.

அந்த பண்ணையில் அங்குள்ள மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு அறிந்து கொண்டு அதன் பின் ஒரு ஐந்து முயல்களை மட்டும் வாங்கி வந்து வளர்த்ததாகவும், அம்முயல்களில் நான்கு பெண் முயல்களும், ஒரு ஆண் முயலும் இருந்ததாக திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார். ஆரம்ப காலத்தில் அவர் வாங்கிய ஐந்து முயல்களும் நியூசிலாந்து ஒயிட் முயல் வகைகள் என்று திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார். அந்த முயல்களை வைத்தே பண்ணை தொடங்கியதாகவும் கூறுகிறார்.

பொதுவாக முயல் இறைச்சி என்றாலே அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு இறைச்சி எனவே அதிக அளவில் விற்பனையாகும் என்றும் திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார்.

அதன்பிறகு திரு இளங்கோ அவர்களின் நெருங்கிய நண்பர் ஒருவர் காரைக்காலில் வசித்து வருகிறார். அவரிடமிருந்தே சின்சிலா முயல் வகைகள் கிடைத்ததாகவும், திரு இளங்கோ அவர்களின் பண்ணையில் உள்ள அனைத்து சின்சிலா முயல்களும் அவருடைய நண்பரிடம் இருந்து பெற்ற முயல்களில் இருந்தே வந்தது எனவும் திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார்.

சின்சிலா முயல்கள்

திரு இளங்கோ அவர்களின் பண்ணையில் உள்ள மூன்று வகைகளில் ஒரு ரகம் சின்சிலா ரகமாகும். இந்த சின்சிலா ரகத்தை சோவிட் சின்சிலா எனவும் அழைக்கப்படுவதாக கூறுகிறார்.

இதனை க்ரே செயின்ட் எனவும் அழைப்பதாகவும், ஆனால் சின்சிலா என்று கூறினாலே அனைவருக்கும் நன்கு தெரியும் எனவும் திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார்.

சின்சிலா இனமானது பெருமளவு எட்டிலிருந்து பத்து குட்டி வரை ஈன்றும் தன்மையுடையது எனவும், குறைந்தளவு ஒரு ஐந்து குட்டி வரை ஈன்றும் தன்மையுடையது எனவும் திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார்.

இதனுடைய குட்டிகள் பிறந்ததிலிருந்து ஒரு மாதத்திற்கு தாயிடம் பால் பருகும் எனவும் கூறுகிறார். இம் முயல்கள் வருடத்திற்கு நான்கு முறை குட்டியிடம் தன்மையுடையது எனவும் திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார். இதனுடைய உயிர் எடையானது நல்ல முறையில் உணவு அளித்து வந்தால் ஐந்து கிலோ வரை இருக்கும் எனவும் கூறுகிறார்.

நியூசிலாந்து ஒயிட்

திரு இளங்கோ அவர்களின் பண்ணையிலுள்ள இன்னொரு வகையான முயல் ஆன நியூசிலாந்து ஒயிட் பார்ப்பதற்கு மிக அழகாகவும், வெண்மையான நிறத்தில் பார்ப்பவர்களை கவரும் விதமாகவும் உள்ளது. சின்சிலா முயல்களைப் போல் இந்த நியூசிலாந்து ஒயிட் என அழைக்கப்படும் முயல் வகைகளும் எட்டிலிருந்து பத்து குட்டிகள் வரை ஈன்றும் தன்மையுடையது எனவும் திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார்.

முதன்முதலில் அவரிடம் இருந்த நியூசிலாந்து ஒயிட் எனப்படும் புயல் நோய் தாக்கிய முயலாக இருந்ததாகவும், அதன்பின் அதனுடைய நோயினை சரி செய்து பின் அந்த முயல் இருந்து பிறந்த முயல்களில் இப்பொழுது அவரிடம் அதிகமாக இருப்பதாக கூறுகிறார். இந்த முயல்களை இறைச்சிக்காகவும், வளர்ப்பதற்காகவும் அளிப்பதாக திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார்.

இந்த நியூசிலாந்து ஒயிட் முயல் வகைகளும் வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறை குட்டியிடும் தன்மையுடையது எனவும் கூறுகிறார்.

நாட்டு முயல்கள்

திரு இளங்கோ அவர்களிடம் உள்ள மூன்று முயல் வகைகளில் இரண்டு முயல் வகைகளை மேற்கண்டவாறு கண்டோம். அதில் மூன்றாவது முதல் வகையான நாட்டு முயல்களை பற்றி பின்வருமாறு காணலாம்.

இந்த முயல் வகைகளை அதிகமாக செல்லப்பிராணிகளின் கடைகளில் காணலாம் எனவும் சிறுவர்கள் இவ்வகை முயல்களையே அதிக அளவில் விரும்பி வாங்கி வளர்த்துவதாகவும் கூறுகிறார். இவ்வகை முயல்கள் இரண்டு கிலோவிற்கு மேல் வளரும் தன்மையற்றது எனவும் இது இளங்கோ அவர்கள் கூறுகிறார். இவ்வகை முயல்களும் ஐந்திலிருந்து ஆறு குட்டி வரை ஈன்றும் எனவும் திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார்.

இந்த முயல் வகைகளுக்கு பால் கொடுக்கும் தன்மை மிக குறைவு என கூறுகிறார். இந்த முயல் வகைகள் இரண்டிலிருந்து இரண்டரை கிலோ எடையை பெற்றுள்ளதாக கூறுகிறார்.

இந்த மூன்று முயல் வகைகளிலும் சின்சில்லா மற்றும் நியூசிலாந்து ஒயிட் முயல் வகைகள் ஒரு சுவையினை பெற்றிருப்பதாக கூறுகிறார்.

முயல்களின் கூண்டுகள் மற்றும் கொட்டகைகள்

முயல் வகைகளில் ஆண் முயல்கள் பெண் முயல்களின் அருகில் இருக்கக் கூடாது எனவும் திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார். இவ்வாறு தூரமாக இருந்தால் முயல்கள் நன்றாக வளரும் எனவும் கூறுகிறார்.

முயல்களின் கூண்டுகளை திரு இளங்கோ அவர்களும் அவருடைய மாமனார் அவர்களும் சேர்ந்து உருவாக்கியதாக கூறுகிறார். இதில் இவர் உருவாக்கிய கூண்டுகளில் மொத்தமாக ஐம்பது முயல்களை வைக்கும் அளவிற்கு கூண்டுகள் உள்ளதாகவும் கூறுகிறார்.

இந்த கூண்டுகளின் செலவு மொத்தமாகவே பத்தாயிரத்து ஐந்நூறு மட்டுமே செலவானதாக கூறுகிறார். இவர்களே கூண்டுகளை அமைத்ததால் கூண்டின் செலவு சிறிது குறைந்துள்ளதாக கூறுகிறார்.

மேலும் முயல்களுக்கு மரத்தாலான கூண்டுகளை வைப்பது மிகுந்த ஆபத்தான ஒன்றாகும் என கூறுகிறார்.

கொட்டைகளுக்கு அவருடைய தென்னை மரத்திலிருந்து கீற்றுகளை உபயோகித்து கொட்டகை அமைத்ததாகவும் அதில் ஐந்நூறு கீற்றுகளை மட்டுமே வெளியில் இருந்து வாங்கியதாகவும் கூறுகிறார்.

கொட்டகை களுக்கு தேவையான மரங்களையும் வெளியிலிருந்தே பெற்றதாகவும் கூறுகிறார். மொத்தமாக இந்த கொட்டகையை அமைப்பதற்கு ஐந்தாயிரம் ரூபாய் தேவைப்பட்டது எனவும் கூறுகிறார்.

முயல்களுக்கு நீர் வைக்கும் பாத்திரமும் மண்பாண்டங்களில் மட்டுமே வைப்பதாக கூறுகிறார். இந்த முயல் வகைகளுக்கு அவருடைய காட்டிலேயே வேலி மசால் போன்ற உணவு வகைகளை அளிப்பதாக கூறுகிறார். கூண்டுகளில் ஒரு முயலை மட்டுமே வைத்திருப்பதாக கூறுகிறார்.

முயல்களின் உணவு வகைகள்

திரு இளங்கோ அவர்களின் நிலங்களிலேயே முயலக்கு தேவையான உணவினை விளைவிப்பதாகவும் கூறுகிறார். அவற்றின் பெயர் முயல் மசாலா எனவும் அதனை வாரத்திற்கு இரண்டு முறை முயல்களுக்கு அளிப்பதாகவும் கூறுகிறார். இந்த முயல் மசாலாவை ஆடுகளும் மேய்ந்து விடும் எனவும் கூறுகிறார்.

இந்த முயல் மசாலாவை முயல்களுக்கு அறுத்து போடுவதாக கூறுகிறார். இந்த முயல் மசாலாவிற்கு வாரத்திற்கு ஒரு முறை நீர் அளிப்பதாக கூறுகிறார். அதன் பிறகு கோயபஸ் இருபத்து ஒன்பது மற்றும் வேலி மசாலா வகைகளையும் உற்பத்தி செய்து கொண்டுள்ளார். மேலும் முயல்களுக்கு அருகம்புல் போன்றவற்றையும் அளிப்பதாக கூறுகிறார்.

இவ்வகை புற்களை போடுவதால் முயல்களுக்கு உலர்ந்த உணவாகவும் பசுமை உணவாகவும் கிடைப்பதாக கூறுகிறார்.

மேலும் அடர்த்தி உணவுகளாக கோதுமை தவிடு, கடலைப்பொட்டு, உளுத்தம் பொட்டு, மக்காச்சோளம், கடலைப்புண்ணாக்கு போன்ற தானிய வகைகளை ஒன்றாக சேர்த்து முயல்களுக்கு உணவாக அளிப்பதாக கூறுகிறார்.

இந்த உணவினை முயல்களுக்கு நூறு கிராம் வீதம் அளிப்பதாகவும், குட்டி போட்ட முயல்களுக்கு நூற்றைம்பது கிராம் வீதம் மூலம் அளிப்பதாகவும் கூறுகிறார். இந்த உணவு வகைகளில் இவரே அதிகளவு விளைவிப்பதால் உணவுகளின் செலவு மிக குறைவாக உள்ளது எனவும் கூறுகிறார்.

மேலும் கல்யாண முருங்கை, அகத்தி போன்றவற்றை விளைவிப்பதாகவும் கூறுகிறார். முயல்களுக்கு நோய்கள் ஏற்படும் எனவும் அதனை இவர் மருந்துகளின் மூலம் குணமடைய செய்வதாகவும் கூறுகிறார்.

அந்த முயல் பண்ணையில் அதிக அளவு இவருக்கு துணையாக இவருடைய மனைவி உதவுவதாக கூறுகிறார். முயல் பண்ணையில் காலையில் ஒரு மணி நேரமும் மாலையில் ஒரு மணி நேரம் செலவழிப்பதாக கூறுகிறார்.

மேலும் கோழி வகைகளையும் திரு இளங்கோ அவர்கள் வளர்த்து வருகின்றார். கோழி வகைகளில் கருங்கோழி மற்றும் நாட்டுக்கோழி மற்றும் சிறுவடை போன்ற கோழி வகைகளையும் வளர்த்து வருகிறார். இவரிடம் மொத்தமாக ஐம்பது கோழிகள் உள்ளதாகவும் கூறுகிறார்.

மேலும் இவரிடம் பத்து ஆடுகளையும் வைத்திருப்பதாகவும் கூறுகிறார். மேலும் மாடுகள் வாங்கும் எண்ணம் உள்ளதாகவும் திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார். சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் ,திருவண்ணாமலை, போன்ற இடங்களுக்கு முயல்களை விற்பனை செய்வதாக கூறுகிறார்.

திரு இளங்கோ அவர்கள் மிக எளிமையான முறையில் இந்த முயல் பண்ணை சிறப்பாக நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க:வீட்டின் மாடியில் ஒரு அழகான மாடித்தோட்டம்.

Leave a Reply