ஆடம்பரமான பறவைகள் வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருநகர் என்னும் ஊரில் திரு சடை மூர்த்தி அவர்கள் ஒரு ஆடம்பரமான பறவைகள் வளர்ப்பை மிகவும் சிறிய இடத்தில், குறைந்த முதலீட்டில் வளர்த்து வருகிறார். இதில் இவர் அதிக அளவு வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய ஆடம்பரமான பறவைகள் வளர்ப்பைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

திரு சடை மூர்த்தி அவர்களின் வாழ்க்கை

திரு சடை மூர்த்தி அவர்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள திருநகர் என்னும் ஊரில் வசித்து வருகிறார். இவர் இங்கு சொந்தமாக ஒரு ஆடம்பரமான பறவைகள் வளர்ப்பினை செய்து வருகிறார். இவர் இந்த ஆடம்பர பறவைகளை வளர்ப்பதற்கு மிகக்குறைந்த இடத்தையும், குறைந்த முதலீட்டையும் பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

ஆனால் இந்த பறவைகள் வளர்ப்பில் இவருக்கு அதிக அளவு வருமானம் கிடைத்து வருவதாக கூறுகிறார். திரு சடை மூர்த்தி அவர்கள் சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு சிவில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்ததாகக் கூறுகிறார்.

இவர் இந்த சிவில் இன்ஜினியரிங் வேலை செய்து கொண்டிருக்கும்போது இந்த வேலையில் இவருக்கு அதிக அளவு வருமானம் கிடைக்கவில்லை எனக் கூறுகிறார்.இதன் காரணமாகவே இவருக்கு இந்த ஆடம்பர பறவைகள் வளர்ப்பை தொடங்கலாம் என்ற எண்ணம் தோன்றியதாக கூறுகிறார்.

மற்றும் திரு சடை மூர்த்தி அவர்களின் நண்பரின் ஆலோசனையின் மூலம் இந்த ஆடம்பர பறவைகள் வளர்ப்பை பற்றி தெரிந்து கொண்டதாக கூறுகிறார். இந்த ஆடம்பர பறவை வளர்ப்பில் அதிக அளவு வருமானத்தை பெறலாம் என இவர் நண்பர் கூறியதாக கூறுகிறார்.

இதனால் இவருக்கு இந்த ஆடம்பர பறவைகள் வளர்ப்பில் ஆர்வம் வந்து இதை தொடங்கி இப்பொழுது சிறப்பாக நடத்தி வருவதாக திரு சடை மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

Types and breeding patterns of fancy birds

திரு சடை மூர்த்தி அவர்கள் பின்சஸ் பறவை வகை, ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ் போன்ற பறவை வகைகளை வளர்த்து வருகிறார். இந்த பின்சஸ் பறவைகள் ஆனது மிகவும் சிறியதாக இருக்கும் என கூறுகிறார். மேலும் இந்த பறவைகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

இந்த வகை பறவைகளை வளர்ப்பதற்கு சிறிய இடமே போதுமானது எனக் கூறுகிறார். பெரிய அளவில் அகலமான இடம் இதற்கு தேவை இல்லை என கூறுகிறார். மேலும் இந்த பறவை வகைகளை பராமரிக்கும் முறை மிகவும் குறைவானதே எனக் கூறுகிறார்.

ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ் பறவை வகை வெள்ளை மற்றும் நீல நிறத்துடன் இருக்கும் என கூறுகிறார்.

இந்த ஆடம்பரமான பறவை வகைகளுக்கு அதிக அளவில் பராமரிக்கும் முறை தேவையில்லை என திரு சடை மூர்த்தி அவர்கள் கூறுகிறார். தண்ணீரும், தீவனமும் சரியான அளவில் அளித்து வந்தால் மட்டும் போதுமானது என கூறுகிறார். மேலும் இந்த பறவைகளுக்கு தீவனமாக திணை வகைகளை அளித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் பறவைகளுக்கு அளிக்கும் நீரினை தினமும் மாற்றி விடுவதாக கூறுகிறார். நீரினை தினமும் மாற்றிவிடுவது மிக சிறப்பான ஒன்று எனவும் இதனால் எந்த நோயும் தாக்குவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் திரு சடை மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

மேலும் ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ் பறவை வகைகளுக்கு தீவனமாக பட்டாணி, சுண்டல், பாசிப் பயிறு மற்றும் கம்பு தானிய வகைகளை அளித்து வருவதாக கூறுகிறார்.

அடைகாக்கும் முறை

இந்த ஆடம்பரமான பறவைகளில் பின்சஸ் பறவை வகைகளில் ஆண் பறவைகளுக்கு மூக்கு சிவப்பு நிறத்தில் இருக்கும் என கூறுகிறார். பெண் பறவைகளுக்கு மூக்கு வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் என கூறுகிறார். இந்த முறையிலேயே இவர் ஆண், பெண் பறவைகள் என்று அறிந்து கொள்வதாக கூறுகிறார்.

இந்த பறவைகளை சரியான சமயத்தில் இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என கூறுகிறார். மேலும் ஒரு ஆண் மற்றும் பெண் பறவையை ஒரு கூண்டில் விட்ட பிறகு அந்த கூண்டிற்குள் தேங்காய் நார் மற்றும் புல் போன்றவற்றை போட்டால் அந்தப் பறவைகளே கூடுகட்டி விடும் என கூறுகிறார்.

மேலும் இவைகள் கூட்டினை மிகவும் அழகான முறையில் கட்டி விடுவதாக கூறுகிறார். இவ்வாறு இவைகள் கூட்டினை கட்டி முடித்த பிறகு முட்டை வைக்க ஆரம்பம் செய்து விடும் என திரு சடை மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

இதில் ஒரு பின்சஸ் பறவை 6 முட்டை வரை முட்டைகளை இடும் என கூறுகிறார். இந்த பறவை வகைகள் முதல் நாளிலிருந்தே முட்டைகளை அடைகாக்கும் என கூறுகிறார். மேலும் இந்த பறவைகள் இரை உண்பதற்கு மட்டுமே வெளியில் வருவதாக கூறுகிறார்.

ஆனால் சில சமயங்களில் ஆண் பறவைகளே பெண் பறவைகளுக்கு இறையை எடுத்துச் சென்று அளிப்பதாக கூறுகிறார். மற்றும் ஆண் பறவைகளும் சில சமயங்களில் முட்டையை அடைகாக்கும் என திரு சடை மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

பறவைகளின் முட்டைகள் 18 நாளில் பொறித்து விடும் என கூறுகிறார்.

Sales method and profit

திரு சடை மூர்த்தி அவர்கள் இந்த பின்சஸ் பறவைகள் குஞ்சு பொறித்த 45வது நாளில் அந்த சிறு பறவையை 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். இவ்வாறு நூறு ரூபாய்க்கு விற்பனை செய்வதால் அதிக பறவைகளை விற்பனை செய்கையில் 2,000 ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக கூறுகிறார்.

மேலும் ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ் பறவை வகைகளில் ஒரு பறவை 900 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். இதுவே 3 பறவை குஞ்சுகளை விற்பனை செய்தால் 2700 ரூபாய் லாபம் கிடைக்கும் என கூறுகிறார்.

மேலும் இந்த பின்சஸ் பறவைகளுக்கு 200 ரூபாய்க்கு தீவனம் வாங்கினால், இந்த பறவையின் மூலம் 2000 ரூபாய் லாபம் கிடைக்கும் என கூறுகிறார். மேலும் இந்த ஆடம்பர பறவை வளர்ப்பில் பத்துமடங்கு லாபம் கிடைக்கும் எனவும் திரு சடை மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த பறவைகளை பராமரிப்பதற்கு ஒரு மணி நேரம் மட்டும் செலவு செய்தால் போதுமானது எனக் கூறுகிறார். இதில் அதிகளவு நேரத்தை செலவிட வேண்டிய அவசியமில்லை எனவும் கூறுகிறார்.

இந்த ஆடம்பரமான பறவை வளர்ப்பில் வாரத்திற்கு 5 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை வருமானத்தை பெறலாம் என கூறுகிறார். மேலும் பறவைகளின் அருகில் நாம் எந்த அளவிற்கு செல்லாமல் இருக்கிறோமோ அந்த அளவிற்கு பறவைகள் நன்றாக வளரும் என கூறுகிறார்.

மேலும் இந்த ஆடம்பரமான பறவைகள் விற்பனை முறையை தமிழகம் முழுவதும் செய்து வருவதாக கூறுகிறார். இவ்வாறு பறவைகளை விற்பனை செய்யும்போது அவற்றை மிகவும் பாதுகாப்பான முறையில் கூண்டில் வைத்து அனுப்புவதாக திரு சடை மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

மேலும் பறவைகளின் உடலமைப்பு மற்றும் நிறங்களை வைத்து பறவைகளை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

பறவைகளின் பாதுகாப்பு முறை மற்றும் நோய் தடுப்பு முறை

இந்த ஆடம்பரமான பறவைகளை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார். கூண்டிற்குள் உள்ள சிறு குஞ்சுகளை எறும்புகள் உண்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறார். எனவே எறும்புகள் கூண்டிற்குள் செல்லாமல் இருக்கும் படி எறும்பு மருந்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.

மற்றும் எலி தொல்லைகளுக்கு எலி மருந்து வைத்து எலிகளை கொன்று விடலாம் என கூறுகிறார். மேலும் பூனைகள் கூண்டுக்கு அருகில் வராமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

மேலும் இந்த ஆடம்பர பறவை வகைகளுக்கு இதுவரையில் எந்த வித நோயும் ஏற்பட்டது இல்லை எனக் கூறுகிறார்.எவ்வளவு தூய்மையாக கூண்டை வைத்துள்ளோமோ அந்த அளவிற்கு நோய் தாக்காது என கூறுகிறார்.மேலும் அவ்வாறு நோய் ஏற்பட்டாலும் அமாக்சிலின் என்ற மாத்திரையை பறவைக்கு அளிக்கலாம் என கூறுகிறார்.

இந்த ஆடம்பரமான பறவைகள் வளர்ப்பில் விற்பனை முறை மிகவும் சிறப்பாக இருக்கும் எனக் கூறுகிறார். அதிக அளவில் இந்த பறவை வகைகளை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வருவதாகவும் கூறுகிறார்.

திரு சடை மூர்த்தி அவர்கள் இந்த ஆடம்பரமான பறவைகள் வளர்ப்பை மிகவும் சிறிய இடத்தில்,குறைந்த முதலீட்டில் செய்து அதன் மூலம் அதிக அளவு வருமானத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:குறைந்த விலையில் தரமான மாட்டுத்தீவனம்.

Leave a Reply