மீன் வளர்ப்பில் நிறைந்த வருமானம்..

பண்டி காவனூர் பொன்னேரி தாலுக்கா திருவள்ளுர் மாவட்டத்தில் திரு பாலாஜி என்பவர்கள் 3 மீன் குட்டைகளை வைத்து மாதம் 50 ஆயிரம் வரை எளிதாக சம்பாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார்.

புழல் என்ற ஊரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் பெரியபாளையம் போகும் வழியில் இவருடைய இந்த தோட்டம் அமைந்துள்ளது .அவரையும் அவரின் தோட்டத்தையும் பற்றி தொகுப்பில் காணலாம்.

பாலாஜி அவர்களின் வாழ்க்கை

திரு பாலாஜி என்பவர் திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னேரி தாலுகாவில் உள்ள பண்டிகவனூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்.

இவர் பொறியியல் பட்டப் படிப்பில் இரண்டு பக்கங்களைப் படித்து அங்குள்ள ஒரு பிரபல கல்லூரியில் பொறியியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வாழ்ந்து வந்தார்.

இவருக்கு விவசாயத்தின் மேல் மற்றும் பண்ணைகளின் மேல் ஒருங்கிணைந்த பேரின்ப கொண்டதால் இவர் அவற்றை முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஒரு ஒருங்கிணைந்த மீன், கோழி, ஆட்டுப் பண்ணையைத் தொடங்கினார்.

இதற்கு முன்பு அவரது தந்தை 3 ஏக்கர் நிலப் பரப்பளவில் பல்வேறு வருடப் பயிர்களையும், தென்னை தோப்புகள் மற்றும் மாமரத் தோப்புகளையும் வைத்தார். அப்பொழுது திரு பாலாஜி அவர்கள் இந்த விவசாயத்தின் மேல் மோகம் கொள்ளவில்லை.

அப்பொழுது பாலாஜி அவரின் மனநிலை கேட்பவும், நண்பர்கள் கேலி செய்வர் என்றும் பெரிதளவு உடன்பாடு இல்லாமல் இருந்தார்.

பின்பு பல்வேறு யோசனைகளில் காலங்கள் கடந்து விட்டன. பத்து வருடங்களுக்குப் பின்பு அடுத்தது நம் வாழ்க்கையில் என்ன செய்யப் போகும் என்று எதுவும் அறியாத திரு பாலாஜி அவர்கள் யோசிக்க தொடங்கினார். வாழ்க்கையின் வேகமும் காலமும் யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை என்று அறிந்த பாலாஜி அதன்பின் வாழ்க்கையையும் வருங்காலத்தையும் யோசிக்க தொடங்கினார்.

மீன் பண்ணை தொடக்கம்

திரு பாலாஜி அவர்கள் அவரின் அப்பாவிற்கு அடுத்தது இந்த நிலத்தை என்ன செய்வது என்று தெரியாமல் பல்வேறு யோசனைங்களில் இருந்தார்.

அதன்பின் அவர் பெற்றோர் வாழ்ந்த இல்லத்தையும் அவர் வாழ்ந்த அந்த பண்ணையையும் யாருக்கும் தர மனம் இல்லாததால் அவரை அந்த நிலத்தில் ஏதாவது விவசாயம் செய்யலாம் என்று முடிவெடுத்தார்.

அதையும் மீறி அப்பண்ணையை யாருக்காவது விற்கலாம் என்று நினைத்தால் அங்குள்ள மரங்களை எல்லாம் அழித்து பெரிய கட்டிடங்கள் அமைத்து தொழிற்சாலைகள் தயாரிக்க மட்டுமே அந்நிலங்களை கேட்டனர்.

அதை ஒத்துக் கொள்ளாத திரு பாலாஜி அவர்கள் தன் தந்தை வாழ்ந்த இந்த விவசாய நிலத்தை தொழிற்சாலைகளுக்கு தரக்கூடாது என்று நினைத்து அந்த நிலங்களில் விவசாயம் செய்யலாம் என்று முன்வந்தார்.

திரு பாலாஜி அவர்களின் தந்தை தட்சிணாமூர்த்தி ஆவார். அவர் சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் ஒரு பிரபல மருத்துவராக இருந்தார். அவர் மருத்துவராக இருந்தாலும் அவருக்கும் விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட தால் அவர் இடங்களில் விவசாயம் செய்ய தொடங்கினார். அவருக்கும் இயற்கையின் மீது பேரன்பு இருந்ததால் அவரும் விவசாயத்தில் இருந்தார். அவர் மனைவியின் பெயர் வசந்தா.

திரு பாலாஜி அவர்கள் அவரின் தந்தை மற்றும் தாயின் பெயரை அடிப்படையாகக் கொண்டே ஒரு பண்ணையை ஆரம்பித்தார்.

அந்தப் பண்ணையில் இரண்டு மீன் தொட்டிகள் மற்றும் ஆடு கோழி போன்றவை முதலில் வைத்து தொடங்கினார்.

திரு பாலாஜி அவர்களின் வேலையும் விவசாயமும்

திரு பாலாஜி அவர்கள்  ஒரு பிரபல பொறியியல் கல்லூரியில் பொறியியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் இந்த கல்லூரியில் 10 வருடமாக பணியாற்றி வந்தார்.

அந்த வேலையை விட்டு அவர் வெளியேறினார். அது பலரின் கேள்வியாக இருந்தது. அந்தக் கல்லூரியில் மாதம் நாற்பதாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்.

அந்த வேலையை விட்டுவிட்டு நீ விவசாயத்தில் இறங்குகிறாய? என்று பலரும் ஏறலனமாக  தொடங்கினார்.

ஆனால் அவற்றை எதையுமே யோசிக்காமல் விவசாயத்தில் மற்றும் பண்ணை தொழிலில் இறங்கினார் திரு பாலாஜி அவர்கள்.

பண்ணையின் மேம்பாடு

திரு பாலாஜி அவர்கள் விவசாய தொழிலில் இறங்கிய பின்பு பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளும் பல்வேறு கஷ்டங்களும் ஆரம்பத்தில் எல்லோரும் போன்றும் அவரின் வாழ்க்கை கஷ்டத்தில் தொடங்கியது.

அதன்பின்பு அவர் ஒவ்வொரு இக்கட்டான சூழ் நிலைகளையும் கடந்து தனது பண்ணையில் மேம்பாடுகளை வளர்க்க ஆரம்பித்தார்.

ஒரு பண்ணையில் முதலில் ஆடு கோழி ஆகியவற்றை வளர்க்கத் தொடங்கினார். பின்பு பலபேரின் ஆலோசனையில் இணையத்தில் படித்ததை வைத்து மீன் தொட்டிகள் மீன் குட்டைகள் போன்றவற்றை தொடங்கலாம் என்று முடிவு செய்தார்.

வாழ்க்கையைப் பற்றி தெரிந்த திரு பாலாஜி அவர்கள் அவரைச்  சுற்றி உள்ளவர்களை பார்த்து தெரிந்து கொண்டவை அனைவரும் மென்பொருள் மற்றும் அரசு வேலைகளில் ஈடுபட்டு ஒரு நல்ல நிலைமைக்கு வந்து உள்ளதைக் கண்டார்.

அவர்களைப் பார்த்து நாமும் ஏதாவது சாதிக்க வேண்டும் ஆனால் விவசாயத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விவசாயத் தொழிலில் மேலும் புத்துணர்ச்சியுடனும் ஒரு தன்னம்பிக்கையுடனும் புதிதாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

விவசாயத்தில் லாபம்

விவசாயம் என்று எடுத்துக் கொண்டாலே அவை ஒரு கேவலமான தொழிலாகவும் மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உட்படும் தொழிலாகவும் மட்டுமே பார்க்கப்படுகின்றன.  அவை வெளிநாடுகளில் செய்தால் மிகப்பெரிய தொழிலாகவும் இங்கே ஆச்சரியத்துடனும் பார்க்கின்றனர்.

அதை மாற்றும் வகையில் திரு பாலாஜி அவர்கள் விவசாயத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளைச் செய்து கொண்டே இருந்தார்.

பின்பு அவர் கல்லூரியில் கற்பித்த மாணவர்களுக்கு ஒரு கட்ட சூழ்நிலையில் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அவர்களுக்கு வேலை தேடித் தரும் விதமாக பல்வேறு முயற்சிகளில் இறங்கினார். இப்போது அவர்களுக்கு தேவையானது வேலைதான் அது லாபம் கிடைத்தால் மிகவும் சந்தோஷம் என நினைத்து தான் செய்து கொண்டிருந்த விவசாயத்தைப் பற்றி பாடம் எடுக்க ஆரம்பித்தார்.

விவசாயம் ஒரு கேவலமான தொழில் என்பதை அவர் மனதில் இருந்து நீக்க பல்வேறு வழிகளில் அவர்களுக்கு பாடம் எடுத்தார்.

மேலும் விவசாயத்தில் சாதித்த பல்வேறு இளைஞர்களையும் பட்டம் பெற்ற இளைஞர்களையும் உதாரணமாக எடுத்துக்கண்டு அவர்களுக்கு புரிய வைத்து பின்பு அவர் மாணவர்களையும் விவசாயத்தில் ஈடுபட்டு விவசாய தொழிலை மேலோங்கச் செய்ய வேண்டும் என்று மற்றும் விவசாயத்தில் நமக்கு போதும் என்ற லாபம் கிடைக்கும் விதத்திலும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார்.

பண்ணையும் பாலாஜியும்

பண்ணை வைத்து தொடங்கிய பாலாஜி ஆடு கோழி ஆகியவற்றை வைத்து தொடங்கினார். பின்பு அவற்றில் போட்டியாளர்களும் அதிகம் முதலீடும் அதிகம் என்பதை அறிந்துகண்ட திரு பாலாஜி அவர்கள் அவற்றை சிறிதளவாக மாற்றிக்கொண்டு அவற்றிற்கு பதிலாக மீன் பண்ணையை இருமடங்காக மாற்றிக்கொண்டார்.

முதலில் சிறிதளவாக இரண்டு மீன் தொட்டிகளை வைத்திருந்த பாலாஜி அவர்கள் அவற்றை நன்கு அறிந்துகொண்ட பிறகு மீன்தொட்டி களையும் அவற்றிலுள்ள மீன்களையும் இருமடங்கு அதிகரித்தார்.

அவருக்கு உதவும் வகையில் அவர் மூன்று பிற தோட்டத்திற்கு அருகிலேயே பெரிய ஆறு ஒன்று இருந்தது. அவற்றிலிருந்து மீன்களையும் குஞ்சு மீன்களையும் வாங்கிக்கொண்டு வந்து அவரின் வளர்ப்பு தொட்டிகளில் வளர்க்க ஆரம்பித்தார்.

அதன் பின்பு அவற்றினை எப்படி எல்லாம் உயர்த்துவது என்று எண்ணி பல்வேறு கட்டங்களில் பல்வேறு யோசனைகளை மேற்கொண்ட பாலாஜி அவர்கள் பல்வேறு முறையில் அவற்றிற்கு சிறந்த வழிகளை செய்தார்.

அவ்வாறு மீன்களையும் மீன் தொட்டிகளையும் உயர்த்தி பெரிதளவு உற்பத்தியை தொடங்க ஆரம்பித்தார்.

பின்பு அவற்றின் உற்பத்தியை அதிகரித்து பின்னர் அவற்றிற்குத் தேவையான உணவுகளை மற்றும் அவற்றின் தீவனங்களையும் திரு பாலாஜி அவர்களால் சமாளிக்க முடியவில்லை .இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளானது மீன்களும் மீன் தொட்டிகளும்.

50க்கு 30 என்ற விகிதத்தில் 1200 சதுர அடிக்கு ஒரு பண்ணை என்று மொத்தம் இது போன்று 3 பண்ணைகள் உள்ளது. மீன் தொட்டிகளில் உள்ள மீன்களுக்கு போதுமான தீவனம் இல்லாததால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

தீவனம் பற்றாக்குறை

மீன்களுக்கு போதுமான தீவனம் இன்றி அவற்றில் உள்ள தண்ணீரில் உள்ள பாசிகளையும் அதிகம் சாப்பிடுவதால் மற்றும் கடைகளில் வாங்கி போடும் தீவனங்களாளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உட்பட்டது மீன்கள்.

இந்த பிரச்சனைகளை கட்டுப்படுத்த திரு பாலாஜி அவர்கள் ஒரு வழி வகை செய்தார். ஒரே பண்ணை அமைத்து அதில் பரண் அமைத்து கோழிகள் வளர்க்கும் முறையை மேற்கொண்டார்.

இம் முறையை பயன்படுத்துவதால் கோழிகள் தீவனங்களை உட்கொண்டு அவை செரித்த பின்பு வெளியிடும் எச்சங்களை ஒரு தொட்டியின் வாயிலாக சேகரித்து அவற்றை மீன்களுக்கு உணவாக மாற்ற முயன்றார்.

இந்த மீன்கள் அந்த உணவை எடுத்துக்கண்டு ஆரோக்கியமாகவும் உணவு பற்றாக்குறை இன்றியும் செழிப்பாக வளர ஆரம்பித்தது.

பின்பு அதன் பின் அதிக அளவு கோழிகளை வாங்கி அவற்றை கேட்டு பரண்களையும் அமைத்து அவற்றிறகேற்ப தீவனங்களையும் தயார் செய்தார்.

கோழி செரித்த பின் போடும் எச்சங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளதால் அவற்றில் மிகுந்த அளவு மீன்கள் வளரத் தொடங்கின.

நேரடி விற்பனை

இவ்வாறு செழிப்பாக வளர்க்கப்பட்ட மீன்களை விற்கலாம் என்று முயற்சி செய்யும்போது குறைந்த அளவு விலைக்கு மட்டுமே அதை வாங்கும் முன் வந்தார். அதன் பின்பு அதில் பெருமளவு வருமானம் குறைந்தது.

அதனால் இதற்கும் ஏதாவது ஒரு வழிவகை செய்யவேண்டும் என்று முயற்சி செய்து மீன்களை மொத்த விலைக்கு விற்க வேண்டாம் என்று முடிவெடுத்தார்.

மீன் வளர்ப்பில் லாபம்

மீன்கள் மொத்த விற்பனைக்கு இருப்பதால் அவற்றை அதிக அளவு லாபம் காண முடியாததால் திரு பாலாஜி அவர்கள் நேரடி விற்பனையில் இறங்கினார்.

மீன்களை மொத்த விலைக்கு விற்பதால் இடையிலுள்ள இடைத்தரகருக்கு தான் லாபம் கிடைக்கும் என்று அறிந்த திரு பாலாஜி அவர்கள் அவற்றை நாமே செய்யலாம் என்று முடிவு செய்தார்.

அவ்வாறு செய்யும்போது அவருக்கு மாதம் பெரிய அளவான லாபமும் அவரின் பண்ணைக்கு வாடிக்கையாளர்களும் அதிகமாக தொடங்கின.

இவ்வாறு செய்து லாபம் பார்க்க ஆரம்பித்த பிறகு அவருக்கு மீன் பண்ணை வளர்ப்பில் லாபமும் வாடிக்கையாளர்களும் நம்பிக்கையும் அதிகரிக்கத் தொடங்கின.

இவ்வாறு சுத்தமான மீன்கள் விற்பதால் அவரிடத்தில் நம்பிக்கையும் நாணயமும் அவ்வூர் மக்களிடையே அதிகரித்தது. அவர் நினைத்தபடி விவசாயத்தில் சாதித்து அவ்வூரில் கம்பீரமாக வலம் வருகிறார்.

இப்பொழுது அவருடைய மீன் பண்ணைகளிலிருந்து வரும் மாத வருமானமே அவருக்கு 50 ஆயிரம் ஆகும்.

அதுமட்டுமல்லாமல் அவர் வளர்த்த நாட்டுக்கோழி பண்ணையில் இருந்து மாதம் 30000 வருகிறது. இப்பொழுது இவருக்கு விவசாயத்துறையில் இருந்து மாத வருமானம் மட்டுமே 80 ஆயிரம் ஆகும். அவர் நினைத்தபடி விவசாய தொழிலில் சாதித்தார்.

மேலும் படிக்க:மாட்டுப்பண்ணை வைத்தால் மாதம்75000

 

 

Leave a Reply