தேனீ வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் என்னும் கிராமத்தில் ஒரு விவசாயி தேனீ வளர்ப்பை மிகச் சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் நிறைந்த லாபத்தை பெற்று வருகிறார். இவரையும் இவருடைய தேனி வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

தேனீ பண்ணையாளரின் வாழ்க்கை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் தேனீ வளர்ப்பை செய்து அதன் மூலம் நிறைந்த லாபத்தை பெற்று வருகிறார்.

இவருடைய தந்தை விவசாயம் செய்து வந்து கொண்டிருந்ததாகவும் இவருக்கு தேனீ வளர்ப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு தேனீ வளர்ப்பை தொடங்கி இப்பொழுது மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

இவர் இந்த தேனீ வளர்ப்பை கடந்த 11 வருடங்களாக செய்து வருவதாகவும், தேனீ வளர்க்கும் முறையை பற்றி மதுரை கல்லூரியில் கற்றுக் கொண்டதாகவும் கூறுகிறார்.

மேலும் தேனீ வளர்ப்பை பற்றி நன்கு அறிந்து கொண்ட பிறகு தேனீ வளர்ப்பை தொடங்க வேண்டும் எனவும், தேனீ வளர்க்கும் முறையை பற்றி அறியாமல் தேனீ வளர்ப்பை தொடங்குவது நஷ்டத்தை ஏற்படுத்தும் எனவும் கூறுகிறார்.

Breeding method of bees

தேனி பண்ணையை இவர் கடந்த 11 வருடங்களாக நடத்தி வருவதாகவும் ஆரம்பத்தில் இரண்டு தேனீப் பெட்டிகள் வைத்து தேனீ வளர்ப்பை செய்து கொண்டு இருந்தவர் இப்பொழுது ஆயிரம் தேனீப் பெட்டிகள் வரை வைத்து தேனீ வளர்ப்பை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் தேனீக்களை பிடிக்கும் முறையை பற்றி நன்கு அறிந்து கொண்டு மலைகளிலுள்ள தேனீக்களைப் பிடித்து வந்து வளர்த்து அதிலிருந்து அதிக அளவு தேனீக்களை உற்பத்தி செய்து உள்ளதாக கூறுகிறார்.

தேனீப் பெட்டிகளை இவரே உருவாக்கி தேனீக்களை வளர்த்து வருவதாகவும், இவ்வாறு தேனீப் பெட்டியை உருவாக்கும் போது தேனீக்கள் சில வகை மரங்களில் மட்டுமே இருக்கும் எனவும் இவ்வாறு இருக்கும் மர வகைகளை பார்த்து தேனீ பெட்டிகளை உருவாக்க வேண்டும் என கூறுகிறார்.

ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை 30 தேனீ பெட்டிகளை வைத்து தேனீக்களை மிகச் சிறப்பான முறையில் உற்பத்தி செய்ய முடியும் எனவும், இந்த முறையிலேயே இவர் தேனீப் பெட்டிகளை உருவாக்கி அதில் தேனீக்களை வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

தேனீக்களின் வகைகள்

தேனீ வகைகளில் மொத்தமாக பல வகை தேனீக்கள் இருப்பதாகவும் அதில் இவர் கொசுத் தேனீ வளர்ப்பை அதிக அளவில் செய்து வருவதாகவும் இந்த தேனீ வளர்ப்பில் இவருக்கு நிறைந்த வருமானம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் அடுக்குத் தேனீ வகை களையும் வளர்த்து வருவதாகவும், மலைத் தேனீ மற்றும் கொம்புத் தேனீ வகைகளை நம்மால் வைத்து வளர்க்க முடியாது எனவும் ஏனெனில் அவைகள் நம்மை கொட்டி விடும் என கூறுகிறார்.

கொசுத் தேனீ என்பது மிக சிறிய தேனீ வகை எனவும், உலகிலேயே இந்தத் தேனீ வகைகள் மட்டும் தான் மிக சிறியது எனவும் இதற்கு கொட்டும் தன்மை இல்லை எனவும் கூறுகிறார்.

மற்ற தேனீ வகைகளின் தேன்களை விட இந்தத் தேனீயின் தேனில் மருத்துவ குணம் அதிகமாக இருப்பதாகவும் மற்றும் இதனுடைய தேனின் சுவை புளிப்பு கலந்த அறுசுவையுடன் இருக்கும் என கூறுகிறார்.

Medicinal properties of Mosquito honey

கொசுத் தேனீ யுடைய தேனில் அதிகளவு மருத்துவ குணம் இருப்பதாகவும், உடம்பில் உள்ள கொழுப்புகளை கரைப்பதற்கு இந்த தேன் அதிக அளவில் பயன்படும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த தேனை உண்ணும் போது ரத்தம் அதிகரிக்கும் எனவும் மற்றும் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் இந்த தேன் குணப்படுத்தி விடும் எனவும் கூறுகிறார்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை குணப்படுத்துவதற்கு பயன்படுவதாகவும், புண்களின் மீது இந்த தேனை எடுத்து வைத்து வந்தால் புண்ணானது மிக விரைவில் குணமாகிவிடும் என கூறுகிறார்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த தேனை உண்ணும் போது வயிற்றில் உள்ள குழந்தையின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் மற்றும் அறிவுத் திறன் அதிகரிக்கும் என கூறுகிறார்.

மேலும் வயதானவர்கள் இந்த தேனை உண்ணும் போது அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும், இதுபோல் இந்த தேனில் அதிகளவு மருத்துவ குணம் இருப்பதாக கூறுகிறார்.

மேலும் இந்த கொசு தேனீக்கள் அதிகமாக களைச் செடிகளில் இருந்தே தேனை எடுக்கும் எனவும் மற்றும் பலா மரம், முருங்கை மரம் ஆகிய மரங்களில் இருந்து தேன் எடுக்கும் எனவும் கூறுகிறார்.

கொசுத் தேனீயின் வாழ்வு முறை

கொசு தேனீக்கள் பெட்டிகளில் மட்டும் வாழாமல் காடுகள், மலைகள், மரக்கிளைகள், கல் இடுக்குகள் மற்றும் பொந்துகள், கட்டிடச் சுவர்கள் ஆகிய இடங்களில் வாழும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த தேனீக்கள் அதிகமாக இருட்டாக இருக்கும் இடங்களில் மட்டுமே தேன் கூடுகளை கட்டி வாழும் எனவும், வெளிச்சமாக இருக்கும் இடங்களில் இந்த தேனீக்கள் கூடு கட்டி வாழாது எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த கொசுத் தேனீ வளர்ப்பில் இவருக்கு எந்த வித பராமரிப்பு செலவும் இல்லை எனவும், பெரிய மலர்கள் மற்றும் சிறிய மலர்களிலும் இந்த தேனீக்கள் மகரந்தச் சேர்க்கை செய்யும் எனவும் கூறுகிறார்.

ஏழு வருடம் மிகக் கடினமாக உழைத்து அதன் பிறகு தான் இவர் இந்த கொசு தேனீக்கள் வளர்ப்பை மிக சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் தேனீப் பெட்டிகள் இருக்கும் இடங்களில் தண்ணீர் மற்றும் பூக்கள் அதிக அளவில் இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் இந்த முறையில் வைத்துக் கொண்டாலே தேனீக்கள் பெட்டியை விட்டு எங்கும் செல்லாது எனவும் கூறுகிறார்.

கொசுத் தேனீக்கள் அதனுடைய முட்டைகள் , மகரந்தம் மற்றும் தேனையும் தனித் தனியாக பிரித்து வைத்துக் கொள்ளும் எனவும் கூறுகிறார்.

Sales method and profit

தேனீக்கள் வளர்ப்பில் இவர் அதிக அளவில் லாபத்தை பெற்று வருவதாகவும், மிகக் கடினமான முறையில் உழைத்து இவர் இந்த அளவிற்கு தேனீ வளர்ப்பை செய்து வருவதாகக் கூறுகிறார்.

மேலும் இவர் தேனீக்களையும் விற்பனை செய்து வருவதாகவும் இவற்றுடன் தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனையும் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

கொசு தேனீயுடைய தேனில் அதிக அளவில் மருத்துவ குணம் இருப்பதால் அதிக அளவு வாடிக்கையாளர் இவரிடம் வந்து தேனை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

மேலும் இவர் கலப்படமில்லாத ஒரிஜினல் தேனை விற்பனை செய்து வருவதாகவும் ஒரு கிலோ தேனின் விலை பத்தாயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்து வருவதாகவும் இதனால் இவருக்கு நிறைந்த வருமானம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.

இந்த தேனீக்களின் ஆயுட்காலம் 90 நாட்கள் எனவும் மற்றும் இராணித் தேனீயின் ஆயுள்காலம் மூன்று வருடத்தில் இருந்து நான்கு வருடங்கள் என கூறுகிறார்.

திருப்பூர் மாவட்டத்தின் அருகில் உள்ள மூலனூர் என்னும் கிராமத்தில் வசித்து இவர் மிகவும் சிறப்பான மற்றும் இயற்கையான முறையில் தேனீ வளர்ப்பினை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:வான்கோழி வளர்ப்பில் சிறந்த வருமானம்.

Leave a Reply