கிர் நாட்டு மாடு வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊத்துப்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் கிர் நாட்டு மாட்டு பண்ணையை வைத்து நடத்தி அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரையும், இவருடைய கிர் நாட்டு மாட்டு பண்ணையை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

கிர் நாட்டு மாட்டு பண்ணையின் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊத்துப்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் கிர் நாட்டு மாட்டுப் பண்ணையை வைத்து நடத்தி அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவருடைய குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் எனவும், இவர் சிறு வயதில் இருக்கும் போது இவருடைய தந்தை நாட்டு மாடுகளை வைத்து வளர்த்து வந்ததாகவும், அதன்பிறகு இவர் படிப்பதற்கு வெளியே சென்ற பிறகு நாட்டு மாடுகளை இவருடைய குடும்பத்தில் யாரும் வளர்க்கவில்லை என கூறுகிறார்.

எனவே இவர் படிப்பை முடித்து விட்டு சிறுவயதிலிருந்தே வளர்த்து வந்த நாட்டு மாடுகளை நாமும் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இவர் இந்த கிர் நாட்டு மாடுகளை மிகச் சிறப்பாக வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இன்றைய கால கட்டத்தில் நாட்டு மாடுகள் இனமானது அதிகளவில் அழிந்து கொண்டு வருவதினால் அதனை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாட்டு மாடுகள் வளர்ப்பை இவர் தொடங்கியதாக கூறுகிறார்.

Types of cows

மூன்று வகையான மாடுகளை இவருடைய பண்ணையில் வைத்து வளர்த்து வருவதாகவும், அவை கிர், சாகிவால் மற்றும் ஜெர்சி ஆகிய மாடுகள் என கூறுகிறார்.

இதில் இவர் அதிகமாக கிர் நாட்டு மாடுகளையை வைத்து வளர்த்து வருவதாகவும் ஏனெனில் இந்த வகை நாட்டு மாடுகள் அதிக அளவில் அழிந்து வரும் இனமாக இருப்பதினால் இதனை அதிகமாக வளர்ந்து வருவதாக கூறுகிறார்.

கிர் நாட்டு மாடுகள் இப்பொழுது இவரிடம் ஒரு 20 மாடுகள் இருப்பதாகவும் மற்றும் ஜெர்சி வகை மாடுகள் ஒரு 5 மாடுகள் இருப்பதாகவும், சாகிவால் மாடுகள் ஆறு மாடுகள் இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த வகை மாடுகள் அனைத்தும் வட இந்திய நாட்டு மாடுகள் எனவும், இந்த மாடுகள் அதிக அளவில் பாலை அளிக்கும் எனவும் கூறுகிறார்.

கிர் நாட்டு மாட்டின் சிறப்பு

கிர் நாட்டு மாடுகள் வளர்ப்பினை இவர் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், மற்ற வட இந்திய நாட்டு மாடுகளை தேர்ந்தெடுக்காமல் இவர் கிர் நாட்டு மாடுகளை தேர்ந்தெடுத்து வளர்ப்பதற்கு காரணம் இது நம்மிடம் இயல்பாக பழகி கொள்ளும் என்பதற்காக என கூறுகிறார்.

மேலும் இந்த கிர் நாட்டு மாடுகள் அதிக அளவு கறவை திறனை கொண்டிருப்பதாகவும், இதன் மூலம் இவருக்கு அதிக அளவு பால் கிடைப்பதாகவும் கூறுகிறார்.

இந்த மாடுகள் முதல் முறை கன்று ஈனும் போது ஒரு நாளுக்கு இவற்றிடம் இருந்து ஐந்திலிருந்து ஆறு லிட்டர் வரை பால் கிடைப்பதாகவும்,இதுவே இரண்டாவது முறை கன்று ஈனும் போது எட்டிலிருந்து பத்து லிட்டர் பால் கிடைப்பதாகவும்,மற்றும் மூன்றாவது முறை கன்று போடும்போதும் மற்றும் அதற்கு மேலும் 10 லிருந்து 15 லிட்டர் பால் கிடைப்பதாக கூறுகிறார்.

Purchasing method of gir country cows

கிர் நாட்டு மாடுகளை இவருடைய பண்ணைக்கு வாங்கி வரும்போது அதனை இவர் ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய பகுதிகளில் இருந்து வாங்கி வருவதாகவும், இவ்வாறு மாடுகளை வாங்கி வரும்போது அதனை மிகப் பாதுகாப்புடன் எடுத்து வருவதாக கூறுகிறார்.

மேலும் ஒவ்வொரு ஊரிலும் இவருக்கு தெரிந்த ஒரு நண்பர் இருப்பார் எனவும் அவரின் உதவியின் மூலம் இவர் நல்ல நாட்டு மாடுகளை வாங்கி வந்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவ்வாறு இவர் வாங்கும் நாட்டு மாடுகள் கர்ப்பமாக இருக்கும் எனவும், கர்ப்பமாக இருக்கும் நாட்டு மாடுகளை இவர் வாங்கி வளர்த்து வருவதாகவும், ஏனெனில் இந்த முறை சற்று சுலபமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் கன்று குட்டிகளுடன் மாடுகளை வாங்கி வரும்போது பாதுகாப்பான முறையில் அவைகள் பண்ணைக்கு வருவதில்லை எனவும், மாடு மற்றும் கன்றுக்கு அடிகள் பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் கூறுகிறார்.

இதன் காரணமாகவே இவர் கர்ப்பமாக இருக்கும் மாடுகளை மட்டுமே வாங்கி வளர்த்து வருவதாகவும், இவ்வாறு வாங்கிவரும் மாடுகளை மிகுந்த பாதுகாப்புடன் எடுத்து வருவதாகவும் கூறுகிறார்.

வளர்ப்பு முறை மற்றும் தீவனங்கள்

கிர் நாட்டு மாடுகளை இவர் மிகவும் பாதுகாப்பான முறையில் வாங்கி வந்து அவற்றினை சிறப்பாக வளர்த்து வருவதாகவும், இந்த மாடுகள் விரைவில் நம்முடன் பழகிக் கொள்ளும் குணத்தினை கொண்டது எனவும் கூறுகிறார்.

மேலும் மாடுகள் இருப்பதற்கு இவர் ஒரு கொட்டகையை சிறப்பான முறையில் அமைத்து அந்தக் கொட்டகையில் மாடுகளை கட்டி வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மாடுகளுக்கு இவர் பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் அடர்தீவனம் வகைகளை அளித்து வருவதாகவும், பசுந்தீவனமாக சூப்பர் நேப்பியர் வகையை அளித்து வருவதாகவும் மற்றும் உலர் தீவனமாக வைக்கோல் வகைகளை அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் அடர் தீவனமாக தவிடு மற்றும் புண்ணாக்கு ஆகிய வகைகளை மாடுகளுக்கு தீவனமாக அளித்து வருவதாகவும் அனைத்து தீவனங்களையும் மாடுகள் விரும்பி உண்பதாக கூறுகிறார்.

மேலும் இந்த மாடுகளுக்கு இதுவரையில் எந்தவித நோய்களும் அதிகமாக ஏற்பட்டதில்லை எனவும், நோய்கள் ஏற்படாமல் இருப்பதற்கு அடிக்கடி மருத்துவரின் ஆலோசனையை கேட்டு அதன்படி மாடுகளைப் பராமரித்து வருவதாக கூறுகிறார்.

மாடுகள் இருக்கும் கொட்டகையில் வெயில் அதிகமாக தாக்கக்கூடாது என்பதற்காக கொட்டகையின் மேலே தென்னங்கீற்றினை அமைத்து இருப்பதாகவும் மற்றும் கொட்டகையின் தரையில் ரப்பர் மேட்டினை போட்டு இருப்பதாகவும் கூறுகிறார்.

கொட்டகையில் முன்பு சிமெண்ட் தரையினை இவர் அமைத்து இருந்ததாகவும்,சிமெண்ட் தரையில் மாடுகள் கால்களை வைத்து உரசும்போது மாடுகளுக்கு புண்கள் ஏற்பட்டதினால் ரப்பர் மேட்டினை தரையில் போட்டு அதன் மீது மாடுகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

Breeding method and profit

கிர் மாடுகள் பிறந்து நாற்பத்தி ஐந்து மாதத்திற்கு பிறகே சினை பிடிக்கும் எனவும் நாற்பத்தி ஐந்து மாதங்களுக்கு முன்பு மாடுகளுக்கு இனப்பெருக்கம் செய்தால் சினையானது நிக்காது எனவும் கூறுகிறார்.

மேலும் நாற்பத்தி ஐந்து மாதங்களுக்குப் பிறகு மாடுகளுக்கு இனப்பெருக்கம் செய்தால் மட்டுமே குட்டிகள் நல்லமுறையில் வளரும் எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் இந்த கிர் நாட்டு மாடு பண்ணையின் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாகவும், மாடுகளின் பாலில் இருந்து நெய், பன்னீர் மற்றும் பாலாடைக்கட்டி ஆகியவற்றை உருவாக்கி அதனை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் உற்பத்தி செய்யும் அனைத்து பொருட்களும் மிக தரமானதாகவும் மற்றும் சுவையானதாகவும் இருப்பதினால் அதிகளவு வாடிக்கையாளர் இவரிடம் வந்து வாங்கி செல்வதாக கூறுகிறார்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஊத்துப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் இவர் மிகவும் சிறப்பான முறையில் கிர் நாட்டு மாட்டு பண்ணையை வைத்து நடத்தி அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:வெற்றிலை சாகுபடியில் அசத்தும் விவசாயி.

Leave a Reply