கண்வல்லி கிழங்கு சாகுபடியில் நிறைந்த வருமானம்.

திரு ராஜா அவர்கள் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள கரியம்பட்டி என்னும் கிராமத்தில் கண்வல்லி கிழங்கு சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கண்வல்லி கிழங்கு சாகுபடியை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

கண்வல்லி கிழங்கு சாகுபடியின் தொடக்கம்

ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள கரியம்பட்டி என்னும் கிராமத்தில் திரு ராஜா அவர்கள் வசித்து வருவதாகவும், இவருடைய சொந்த ஊர் இதுவே ஆகும் எனவும், இவர் இங்கு கண்வல்லி கிழங்கு சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

திரு ராஜா அவர்கள் விவசாயத்தை கடந்த 15 வருடங்களாக செய்து வருவதாகவும், இவருடைய 13 வயதில் இருந்து இவருக்கு விவசாயத்தின் மீது அதிக அளவு ஆர்வம் இருந்து வந்ததாகவும், இந்த ஆர்வத்தின் காரணமாக இவர் விவசாயத்தை தொடங்கியதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த கண்வல்லி கிழங்கு சாகுபடியை கடந்த பத்து வருடங்களாக செய்து வருவதாகவும், இவருடைய ஊரில் விவசாயம் செய்யும் அனைவரும் இந்த கண்வல்லி கிழங்கு சாகுபடியை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

ஏனெனில் இந்த கண்வல்லி கிழங்கு சாகுபடியின் மூலம் அதிக அளவில் வருமானம் கிடைக்கும் என்பதாலும், இதில் அதிக அளவு மருத்துவ குணம் இருந்து வருவதால் அதிக அளவில் விற்பனையாகும் என்பதாலும் இதனை அதிக அளவில் விளைச்சல் செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் திரு ராஜா அவர்கள் வசித்து வருகின்ற இவருடைய ஊரின் பகுதியில் இந்த கண்வல்லி கிழங்கு நல்ல முறையில் வளரும் என்ற காரணத்தாலும் இவர் இந்த கண்வல்லி கிழங்கு சாகுபடியை தொடங்கியதாக கூறுகிறார்.

Specialization of gloriosa

திரு ராஜா அவர்கள் இந்த கண்வல்லி கிழங்கு சாகுபடியை 4 ஏக்கர் நிலத்தில் மிக சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் வரை செலவு ஆனதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு 5 லட்சம் வரை செலவு ஆனாலும் அதை விட அதிக அளவு வருமானம் இந்த கண்வல்லி கிழங்கு சாகுபடியில் இருந்து நமக்கு கிடைக்கும் எனவும் திரு ராஜா அவர்கள் கூறுகிறார்.

பருத்தி மற்றும் புகையிலை போன்ற பயிர் வகைகளை பணப்பயிர் என்று அழைப்பார்கள் எனவும், அதேபோல் இந்த கண்வல்லி கிழங்கை பணப்பயிர் என்று அழைப்பார்கள் என கூறுகிறார்.

கண்வல்லி கிழங்கு விதைகளை விற்பனை செய்வதன் மூலம் அதிக அளவில் வருமானம் கிடைக்கும் எனவும், இவர் இந்த விவசாயத்தை கடந்த பத்து வருடங்களாக செய்து வருவதாகவும் கூறுகிறார்.

பயிரிடும் முறை மற்றும் அறுவடை

கண்வல்லி கிழங்கு விதையை இவர் ஆடி மாதத்தில் பயிரிடுவதாகவும் இது நான்கு மாதங்களில் வளர்ந்து அறுவடைக்கு வந்து விடும் எனவும் திரு ராஜா அவர்கள் கூறுகிறார்.

இந்த கண்வல்லி கிழங்கை இரண்டு முறையில் பயிரிடலாம் எனவும், அதில் முதல் வகை மண்ணில் குழிதோண்டி பாத்தி போன்ற அமைப்பை உருவாக்கி அதில் விதை விதைத்து செடி வளர்க்கலாம் எனவும், இந்த முறைக்கு பாசன முறையில் நீரை செடிகளுக்கு அளிக்கலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் இரண்டாவது  வகையானது மண்ணின் மேலேயே விதையை விதைத்து செடியை வளர்க்கலாம் எனவும், இந்த முறைக்கு சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் திரு ராஜா அவர்கள் கூறுகிறார்.

மேலும் ஒரு ஏக்கர் நிலத்தில் விதையை பயிரிடுவதற்கு 500 கிலோ கிழங்குகள் தேவைப்படும் எனவும், சரியான அளவில் நீரை அளித்து வந்தால் இந்த கண்வல்லி கிழங்கு விதை 10 நாட்களில் முளைத்து விடும் எனவும் கூறுகிறார்.

மேலும் திரு ராஜா அவர்கள் இந்த கண்வல்லி கிழங்கு சாகுபடியில் அதிக அளவில் காய்களை அறுவடை செய்து வருவதாகவும் இவ்வாறு அறுவடை செய்த காய்களை வெயிலில் காயவைத்து அதனுடைய விதைகளை எடுப்பதாகவும் கூறுகிறார்.

Fertilizer and drug application method

கண்வல்லி கிழங்கு செடியானது முளைத்து 30வது நாளில் புழுக்கள் தாக்கி விடும் எனவும் இவ்வாறு செடியில் புழு தாக்கும் போது அந்தச் செடியை பாதுகாப்பதற்கு மருந்துகளை அளிக்க வேண்டும் எனவும் திரு ராஜா அவர்கள் கூறுகிறார்.

கேப்டாக் மற்றும் இது போன்று பல மருந்துகள் செடிகளில் உள்ள புழு போன்ற உயிரினங்களை அழிப்பதற்கு பயன்படுத்துவார்கள் எனவும், இந்த மருந்தை வாரத்திற்கு ஒரு முறை செடிகளுக்கு அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த கண்வல்லி கிழங்கு செடி நல்ல முறையில் வளர்வதற்கு கலப்பு உரங்களை பயன்படுத்தலாம் எனவும், இவர் செயற்கை மருந்துகளையே இந்தச் செடிகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.

செடியை பராமரிக்கும் முறை மற்றும் நீர் அளிக்கும் முறை

கண்வல்லி கிழங்கு செடியானது வளர வளர தரையில் விழுந்து விடும் எனவும் அதனை நேராக நிற்க வைப்பதற்கு பந்தல் போன்ற அமைப்பை அமைக்க வேண்டும் எனவும் திரு ராஜா அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த பந்தலை கம்பிகளை கொண்டு அமைத்துக் கொள்ளலாம் எனவும், இவ்வாறு செடிகள் வளரும் போது இந்த பந்தலின் மீது படர்ந்து வளர்ந்தால் காய்கள் அதிக அளவில் காய்க்கும் எனவும் திரு ராஜா அவர்கள் கூறுகிறார்.

திரு ராஜா அவர்கள் இவருடைய தோட்டத்தில் உள்ள கண்வல்லி கிழங்கு செடிகளுக்கு சொட்டுநீர் பாசன முறையில் நீரினை செடிகளுக்கு அளித்து வருவதாகவும், நான்கு நாட்களுக்கு ஒரு முறை செடிகளுக்கு நீரினை அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் மழைக்காலங்களில் இந்த செடிகளுக்கு அதிக அளவில் நீரினை அளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், இந்த கண்வல்லி கிழங்கு சாகுபடியின் மூலம் நிறைந்த வருமானத்தை பெற முடியும் எனவும் திரு ராஜா அவர்கள் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

திரு ராஜா அவர்கள் கண்வல்லி கிழங்கு செடியிலிருந்து அறுவடை செய்யப்பட்ட காய்களை வெயிலில் காய வைத்து அந்த காய்களில் இருந்து கிடைக்கும் விதைகளை எடுத்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

ஒரு கிலோ கண்வல்லி கிழங்கின் விதையானது 2000 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாகவும், சென்ற வருடம் இந்த கிழங்கின் விலை ஒரு கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனையாகி வந்ததாகவும் கூறுகிறார்.

ஒரு கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதால் இந்த கண்வல்லி கிழங்கு சாகுபடியை நாம் செய்யும் போது அதில் இருந்து நமக்கு அதிக அளவு லாபம் கிடைக்கும் எனவும் திரு ராஜா அவர்கள் கூறுகிறார்.

திரு ராஜா அவர்கள் அதிகளவில் கண்வல்லி கிழங்குகளையே விற்பனை செய்து வருவதாகவும், ஏனெனில் கிழங்குகள் விரைவில் விளைந்து விடும் எனவும், இவ்வாறு இவைகள் விரைவில் விளைவதால் இதனை விற்பனை செய்வதன் மூலம் நமக்கு லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இதனுடைய விதைகளை விற்பனை செய்வது என்றால் செய்து கொள்ளலாம் எனவும்,விரைவில் லாபம் கிடைக்க வேண்டும் என்றால் கிழங்கினை விற்பனை செய்து அதன் மூலம் லாபத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் திரு ராஜா அவர்கள் கூறுகிறார்.

திரு ராஜா அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் கண்வல்லி கிழங்கு சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்கசிறப்பான முருங்கை விதை சாகுபடி.

Leave a Reply